Monday, May 31, 2010

இந்திய திரைப்பட விழா கொழும்பில் நடத்தப்படும் பின்னணி என்ன?













உலகம் போற்றும் பாலிவுட் திரை நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் விழா மேடையில் தோன்றி சிங்கள மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க இருக்கிறார்கள். இன்றைய சூழலில் இந்த விருது வழங்கும் விழா கொழும்பில் நடத்தப்படும் பின்னணி என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

உலகம் போற்றும் பாலிவுட் திரை நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலரும் விழாமேடையில் தோன்றி சிங்கள மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க இருக்கிறார்கள். இதன் மூலம் இவர்கள் இலங்கையை அற்புதமான நாடு, அமைதியான நாடு என்று உலகிற்கு சொல்ல இருக்கிறார்கள்.

இது உண்மையானதுதானா?

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

நாளைய ஈழமும் இந்திய வல்லரசும்













ஓராண்டு கடந்துவிட்டது... வன்னியில் எழுதப்பட்ட நம் வீரவரலாறு ரத்தம் தோய்ந்த ஈழமண் கூப்பிடும் தூரத்தில்தான் கேட்டது மரண ஓலம். உயிரை ஆயுதமாக்கிய முத்துக்குமரன்களின் இறுதியாத்திரை இந்திய அரசியலில் ஒரு துரும்பையும் அசைக்கமுடியவில்லை. வாசனைத் தைலமிட்டு சீவிச்சிங்காரித்து மலர்ச்சூடி மனிதனின் தலையில் இருப்பதால் அதுக்கு கூட மதிப்புண்டு கேட்டுபாருங்கள் கோவிலுண்டியலில் பணமாக மாறும் அதன் வித்தையை! சே என்னடா இது தமிழன் அதுவாகக் கூட இல்லையே என்று எவனுக்கும் வருத்தமில்லை.

இந்தியத்தமிழன்

ஈழத்தமிழர்கள் குறித்து போட்டிப்போட்டுக்கொண்டு அறிக்கை யுத்தங்கள் நடத்திய நம் அரசியல் தலைவர்கள், அவர்களுக்குஎந்த வகையிலும் குறையாமல் உலகத் தமிழர்கள் அனுப்பிய விசாவில் உலகமெல்லாம் சுற்றிவரும் நம் தமிழினத் தலைவர்கள்,.. அடிக்கடி எங்களுக்கும் தமிழ்ப்பற்று இருக்கிறது நாங்களும் தமிழர்கள்தான் என்று தமிழ் ரசிகர்களுக்கு நினைவுப்படுத்த கூடிக் கலைந்து மீண்டும் கூடிக் கலைந்து... நேரடியாக வீரவசனங்களை உதிர்த்து கலைகின்ற நம் திரைப்பட வெள்ளித்திரை சின்னத்திரை நாயக நாயகியர் கவிஞர்கள் குழாம் இயக்குநர் சிகரங்கள் வரிசை, ஒப்பாரிக்கவிதைகள் பாடி அரித்துக்கொண்டிருக்கும் மன உணர்வுகளைச் சொரிந்துக் கொண்டு யாருக்குச் சொரிந்துவிட்டால் யாருக்கு லாபம் ? என்ற கணக்கில் குழுச்சண்டைகளைத் தொடரும் மேன்மைமிகு இலக்கிய அறிவுஜீவிகள் இப்படியாக ஈழப்போராட்டத்தில் இன்று வெளிப்படையாகத் தெரியும் எவராலும் ஈழமக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிட முடியாது என்பது மிகவும் வெளிப்படையான உண்மை.

இலவசங்களில் தமிழன் சோரம்போகி ஆண்டுகள் பலவாகிவிட்டது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

புலிகளின் கதை இன்னும் முடியவில்லை?: ஜ‌னாதிபதி மகிந்த "ரைம்ஸ் ஒவ் இந்தியா" விற்கு அளித்த பேட்டி













பொலிஸ் அதிகாரங்கள் எப்போதும் மத்திய அரசிடமே இருக்கவேண்டும். மாகாணங்களுக்கு வழங்கப்படக்கூடாது. இதில் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. அண்மையில் மும்பையில் நடந்த தாக்குதலைக் கவனியுங்கள். எத்தனையோ தடைகளையும் கடந்து இராணுவ கொமாண்டோக்கள் பல மணிநேரப் போராட்டத்தின் பின் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இவ்வாறு "ரைம்ஸ் ஒவ் இந்தியா`வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

புலிகளுடனான போராட்டத்தில் பெற்ற வெற்றியின் முதலாவது ஆண்டு நிறை வையொட்டி "ரைம்ஸ் ஒவ் இந்தியா`வுக்கு ஜனாதிபதி இந்தப் பேட்டியை வழங்கி இருந்தார்.

பேட்டியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளவை வருமாறு:

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Sunday, May 30, 2010

மக்களின் பாதுகாப்புதான் முக்கியம்; ரப்பர் ஸ்டாம்புகளின் வெட்டி பந்தா அல்ல!













மக்களுக்காகத்தான் அரசுகள்… அரசுகளுக்காக மக்கள் அல்ல. தேர்தல் முடிந்து பதவி நாற்காலியில் அமர்ந்த கையோடு, இந்த அடிப்படை உண்மையை மறந்துவிடுகிறார்கள் அரசியல்வாதிகள்

ஒரு தலைவன் உயிர்வாழ பல நூறு மக்கள் செத்தாலும் பரவாயில்லை என்ற சைக்கோ மனப்பான்மையில்தான் இன்றைய ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் உள்ளனர்.

அதற்கு இதோ இன்னுமொரு உதாரணம்…

விமானத்தில் எரிபொருள் காலியாகிவிட்ட நிலையிலும் 3 விமானங்களை வானில் வட்டமடிக்கவிட்டு ஒன்றல்ல இரண்டல்ல 500 பயணிகளின் உயிரோடு விளையாடியுள்ளது டெல்லி விமான நிலையம்.

மங்களூர் விமான விபத்து நடந்த மூன்றே நாட்களில் கடந்த புதன்கிழமை நடந்த அதிரவைக்கும் சம்பவம் இது.

சரி… இதற்குக் காரணம் என்ன?

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

கிளிநொச்சியில் மலக்குழியிலிருந்து 5 பெண்களின் ச‌டலங்கள் மீட்பு













நேற்று கணேசபுரத்தில் மலக்குழி ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட உடலங்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. முன்னர் விடுதலைப்புலிகளின் நிர்வாகம் இருந்த போது கிளிநொச்சி கணேசபுரத்தில் ஐ.நா அலுவலகம் அமைந்திருந்த காணிக்கு மிக அருகாக உள்ள ஒரு காணி ஒன்றின் மலக்குழி ஒன்றிலேயே இவ் உடலங்கள் காணப்படுகின்றன.

கிளிநொச்சி நகரில் உள்ள கந்தசாமி கோவிலுக்கு முன்வீதியில் உள்ள வீட்டு வளவிற்குள் உள்ள மலசலகூடத்துக்கு அருகாமையில் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மலக்குழியினை துப்புரவு செய்ய முற்பட்டவேளை சந்தேகத்துக்கிடமாக மணல் பரவப்பட்டு அது நிரவப்பட்டிருந்த மணலினை வெளியெடுத்திருக்கின்றனர்.

4 முதல் 5 அடி ஆழத்தில் கிண்டியபோது, குறித்த குழியினுள் கறுத்தப் பைகளால் முடிக்கட்டப்பட்ட நிலையில் பொதிகள் காணப்பட்டுள்ளன. அவற்றினை பிரித்துப் பார்த்தபோது துர்நாற்றத்துடன் பெண்களின் உடலங்கள் காணப்பட்டிருக்கின்றன.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Saturday, May 29, 2010

நீதி கேட்டுப் போராடும் சுரேஷிற்கு உதவுங்கள்













இன்னலுறும் தனது இனத்துக்கு மனிதாபிமான முறையில் உண்மையாக உழைத்த ஒரு இளைஞனின் வாழ்வை இருட்டிலிருந்து காக்க நேயமுள்ள உங்களின் உதவி கோருகிறோம்

எமது அன்பிற்குரிய தமிழ் உறவுகளே!,

இந்த வேண்டுகோள் மனிதாபிமான உதவி கேட்டு வரையப்படுகிறது. இதைப் படித்த பின்னர் சுரேஷ் யார்? அவருக்கு என்ன உதவி வேண்டும்? என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.

கல்வியில் சாதனை

சுரேஷ் ஈழத்திலிருந்து ஒன்பதாவது அகவையில் கனடாவுக்கு ஏதிலியாக வந்தவர். புலம்பெயர் நாட்டில் மிகுந்த அக்கறையோடு படித்துப் பல்கலைக் கழகம் புகுந்தார். பள்ளிகளில் படிக்கும் போது புலமைப் பரிசில்களையும் விருதுகளையும் பெற்றார். இக்காலத்தில் அவர் ஒரு கெட்டிக்கார மாணவன் என்று பெயர் எடுத்ததோடு சமூக அக்கறை கொண்ட மாணவனாகவும் விளங்கினார். இவரது அறிவுத்தேடலும் அயராத முயற்சியும் இவரைத் தனது பதினெட்டாவது அகவையிலேயே ஓர் கணனி நிறுவனத்திற்குச் சொந்தக்காரராக்கியது. சுரேஷ் 2006 ஆம் ஆண்டு Waterloo பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியல் துறையில் (Electrical Engineering) இளமானிப் பட்டத்தையும், 2008 இல் கலைத்துறையில் இளமானிப் பட்டத்தையும் (Bachelor of Arts), Waterloo Wilfrid Laurier பல்கலைக் கழகத்தில் வணிக முகாமைத்துவ முதுமானிப் பட்டத்தையும் (MBA) பெற்றார். இவர் Microsoft, Amazon, NVIDIA, RIM போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்தார். இவர் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற காலங்களில் Microsoft நிறுவனத்திற்காக மாணவர்களை தெரிவு செய்யும் பொறுப்பும், பணியும் கூட இவரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

ராஜபக்சே இயக்கத்தில் டூப்ளிகேட் புலி..! – தயாராகும் துரோகச் சினிமா..!













தமிழ் உணர்வாளர்களின் நெற்றியில் மிகப் பெரிய ராமநாமம் போட்டுப் பார்க்கிறது ஒரு கும்பல். “கிளம்பிட்டார்ல எங்க ஆளு” என்று ஒரு பிரிவும், “இதுக்குப் பின்னால பெரிய சதி இருக்குங்க” என்று இன்னொரு குழுவும் சொல்ல.. ஈழ விவகாரத்தில் இன்னொரு விவகாரமாகக் கிளம்பியிருக்கிறார் கேணல் ராம்.

“நான்காம் கட்ட ஈழப் போரில் எங்கள் படையணி ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தது. முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு போராட்டத்தின் தேவையை உணர்ந்த நாங்கள் சிதறிக் கிடந்த புலிகளை ஒன்றிணைக்கும் பொறுப்பை மேற்கொண்டோம். கடந்த ஓராண்டாக நாங்கள் ஓடிக் கொண்டிருக்கிறோம். என்னைக் குறி வைத்து 15 முறை சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தியது. நீண்ட போர்க்கள அனுபவத்தின் காரணமாகவே நான் தப்பித்து வருகிறேன்.

எங்கள் படையணியினரின் வீரமும், மன உறுதியும், தாய் நாட்டின் விடுதலை வேட்கையும்தான் எங்களை இயங்க வைக்கிறது. சிங்கள இராணுவத்துக்கு நாங்கள் சவாலாக இருந்து வருகிறோம்..” என்று தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புதிய தளபதியாகத் தன்னைத்தானே பிரகடனப்படுத்தி வரும் கேணல் ராம் என்பவர் அறிவித்திருக்கிறார்.

இவரைப் பார்த்து யாருமே அதிர்ச்சியடையவில்லை. ஆனால் இவருக்குப் பின்னால் யார் என்ற சந்தேகம் மட்டுமே மிச்சமாகியிருக்கிறது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Friday, May 28, 2010

ஐயோ! என்ர தங்கச்சி குடும்பம் முழுக்கச் சரி!













இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு பெப்ரவரி எட்டாம் தேதி என நினைக்கிறேன். எனது பத்திரிகைப் பணிக்கான கட்டுரையை எழுதுவதற்காகப் பதுங்கு குழிக்குள் அமர்ந்து கொண்டேன். காதைச் செவிடாக்கும் எறிகணை மழைக்குள் உயர்ந்த பட்சம் உயிக்காப்பை மேற்கொண்டு பணிசெய்ய எனக்கு ஆதாரமாக இருந்தது அந்தப் பதுங்கு குழி மாத்திரமே.

பாதுகாப்பு வலயமாக அரசால் அறிவிக்கப்பட்ட மாத்தளன் கடற்கரைக்குச் சமீபமாக இருந்த பனைமரங்கள் நிறைந்த அந்தப் பகுதியே எனது அப்போதய இருப்பிடம். தரப்பாளால் அமைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான குடில்களில் ஒன்று. அதற்குள் அமைத்திருந்த பதுங்கு குழிக்குள் அமர்ந்தவாறே அன்றைய படுகொலைகள் தொடர்பாகக் கிடைத்த தகவல்களை வைத்து கட்டுரை எழதத் தொடங்கியிருந்தேன்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Thursday, May 27, 2010

கேமராவைப் பார்த்தாலே கூச்சமா இருக்கு..! – அமலாவின் அழகுத் தமிழ் பேட்டி..!













“வா வா வா கண்ணா வா..” பாட்டில் பார்த்தோமே அதே அமலாதான். முகத்திலும், தோற்றத்திலும் எந்த வித்தியாசமும் இல்லை. ‘நச்’சென்று சில்வர் ஸ்பூன் போல ஸ்லிம்மாக இருக்கிறார். பேச்சில் சிணுங்குகிறது செந்தமிழ்..! வார்த்தை பிசகாமல் அழகு தமிழில் உரையாடுகிறார்.

தமிழை எப்படி மறக்க முடியும்..? என் மனசுக்குப் பக்கத்துல இருக்குற மொழியாச்சே..? வளர்ந்தது, படிச்சது எல்லாம் சென்னையில்தான். எனக்கு ‘திக்’ பிரெண்ட்ஸ் அதிகமா இருக்குற ஊரும் சென்னைதானே..?

முகத்துல சின்ன சேஞ்ச்கூட இல்லையே? எப்படி..?

எல்லாருமே இப்படித்தான் கேட்குறாங்க. என்னோட லைஃபை எனக்குப் பிடிச்ச மாதிரி வாழுறதுகூட இதுக்குக் காரணமா இருக்கலாம். தினமும் யோகா பண்றேன்.. ரிலாக்ஸா மைண்ட்டை வைச்சுக்குறேன்..

உங்க பையன் அதிரடி அறிமுகமாகிற அளவுக்கு வளர்ந்துட்டான்..? நினைத்துப் பார்க்கும்போது எப்படி இருக்கு..?

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

மாயைகளை தகர்த்து பாய்ந்த ஒளிக்கீற்று - ஜாஸ்மின்













பணத்தைக் கொட்டிக் கொடுத்து, தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும் என்ற மாயை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வாழும் மக்களின் மனங்களில் படிந்திருக்கிறது. மாயை நீண்ட காலத்திற்கு நிலைக்காது என்ற உண்மை இந்த ஆண்டு வெளியாகியுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் இருந்து மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

பொதுபுத்தியில் மக்களின் மனவெளியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மாயையை நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின் தகர்ந்தெறிந்திருக்கிறார். ”கறுப்பு வானில்’’ வெள்ளி மீனாய் வெளிப்பட்டு ஜொலிக்கும் இந்த ஜாஸ்மின் வாழ்ந்திருக்கும் வாழ்வையும், அவரது குடும்பச் சூழலையும், அவர் நிகழ்த்திருக்கும் சாதனையையும் ஒருசேர வைத்துப் பார்த்தால் சமூகத்தில் புரையோடி கிடக்கும் பல வினாக்களுக்கு அவர் விடையளித்திருக்கிறார்.

ஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பு தேர்வு நடக்கும், மாணவர்கள் எழுதுவார்கள், அதில் ஒருவர் முதலிடம் பிடிப்பார். இது ஆண்டுதோறும் நடப்பதுதானே?

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, May 26, 2010

“படப்பிடிப்புக்காக இலங்கைக்குச் செல்ல வேண்டாம்” – தமிழ்த் திரையுலகத்தினருக்கு கவிஞர் தாமரை













சர்வதேச இந்தியத் திரைத்துறை அகாடமியான ஐஃபா விருது விழா இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஜூன் முதல் வாரம் நடக்க இருக்கிறது. இதைத் தமிழ்த் திரையுலகம் புறக்கணித்திருக்கிறது. இதற்குப் பின்னணியில் இருந்த முக்கியமானவர்களில் ஒருவர் கவிஞர் தாமரை. அது பற்றிய முழு விபரங்களை அறிய அவரைச் சந்தித்தோம்..!

கொழும்பு விழாவைக் கண்டித்து கடந்த 23-ம் தேதி கமலஹாசனின் அலுவலகம் முன்பு மே 17 இயக்கத்தினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். தமிழ்த் திரையுலகில் என்னதான் நடக்கிறது..?

தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரையில் இனப்படுகொலை செய்த சிங்கள அரசின் மீது கடும் கோபத்தில் இருக்கிறோம். தமிழீழத்தில் போர்க்குற்றத்தைச் செய்தவனைத் தண்டித்தே ஆக வேண்டும் என்ற நிலையில், அங்கு சர்வதேச இந்தியத் திரை விருது விழா நடத்துவதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.

பெப்ஸி தலைவர் குகநாதன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம.நாராயணன், நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோரிடமும் வெளிநாட்டில் இருந்து திரும்பிய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடமும் பேசினேன். அவர்களும் அதே உணர்வுடன் கூட்டம் நடத்தி கடுமையான வாசகங்களுடன் கண்டனத் தீர்மானம் இயற்றினர். அதோடு, வட இந்தியத் திரையுலகமும் இந்த விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என அவர்களுக்கு முறைப்படி கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, May 25, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியாக வேண்டாம்













வன்னியில் நடந்து முடிந்துபோன படுகொலைப்போரில் இறந்து போன போராளிகளின் நினைவாக எந்த ஒருவரும் அஞ்சலிகளையோ நினைவு ஒன்று கூடல்களையோ நடத்தக்கூடாது. என்று கடுமையான கட்டளையை பிறப்பித்து , யுத்தத்தின்போது கொல்லப்பட்ட சாதாரண மக்களின் முதலாம் ஆண்டு திவசத்தைக்கூட அனுஷ்ட்டிக்க விடாமல் அச்சுறுத்தியிருக்கிறார், ஸ்ரீலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல.

அவர் மேலும் கூறியவை,

அரசாங்கம் இந்த விடயத்தில் மிகவும் கடுமையாகவும் கவனமாகவும் செயல்ப்பட இருக்கிறது, மீறி எவராவது ஈடுபடுவார்களாக இருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.

மாண்டுபோன மாவீரர்களுக்கான நிகழ்வுகளையோ, தமிழ் கலாசார வழக்கான நெருங்கிய உறவினர்களுக்கான ஆண்டு திவஷத்தைக் கூட எவரும் நினைவு கூரமுடியாமலும் கோவில்களில் விளக்கேற்றக்கூட முடியாமல் மக்கள் வன்னியிலும் பிற இடங்களிலும் புழுங்கி அழுதிருக்கின்றனர்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

சிறீலங்கா காட்டுமிராண்டி அரசும் அதன் பாதுகாப்பு படைகளும்; மற்றொரு போர்க்குற்ற ஆதாரம் வெளியாகியது













யுத்தகாலத்தில் ஊடகவியலாளர் முதல் தாமல்லாத அனைவரையும் யுத்தப் பிரதேசத்தில் இருந்து முற்றாக அகற்றியிருந்தது சிறிலங்கா அரசு. தான் கொலைசெய்வது வெளி உலகுக்கு தெரியக்கூடாது என்பதே, அதன் மைய நோக்கம்.

எந்த வழியிலும், புலிகளை கொல்லுகின்றோம் என்ற போர்வையில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கான சாட்சிகளான‌ காணொளிகள் வெளி வராதவாறு மூடிமறைக்க விரும்பியது. இந்த வகையில், அரசு வெளியிட்ட யுத்தக்காட்சிகள் என்பது, உண்மைகளைத் குழிதோண்டிப் புதைப்பதாக இருந்தது. இப்படி அரசு வெளியிட்ட யுத்தக் காட்சிகள், மற்றும் அவர்களின் யுத்த ஆவணங்கள், அரச‌ தரப்பு உண்மைகளை குழிதோண்டி புதைப்பதை அடிப்படையாக கொண்டு தங்கள் சொந்தப் பிரச்சாரத்துக்காக அதை வெளியிட்டனர்.

உண்மைகளோ இதற்கு வெளியில் இருந்தது. அந்தக் காட்சிகள் வெளிவரவில்லை. சாட்சிகள் முன்வைக்கப்படவில்லை. ஆனால் தனிப்பட்ட நபர்கள் மூலம், அவை சிறியளவில் கசிந்து வெளிவருகின்றது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சட்டவிரோதமானதாம்; இந்திய‌ மத்திய அரசு அறிவிப்பு













தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை, சட்டவிரோத அமைப்பாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவசர அரசாணை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை சட்டவிரோதமாக அறிவித்திருப்பதற்குக் காரணம், புலிகளை ஆதரிக்கும் பத்திரிகைகள், அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் அமைப்புகளை மத்திய, மாநில அரசுகள் முழுமையாகக் கட்டுப்படுத்தவே என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய மத்திய உள்துறை இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா சார்பில் நாடு முழுவதும் முக்கிய பத்திரிக்கைகளி்ல் வெளியிடப்பட்டுள்ள அவசர‌ அரசாணையில்(எமர்ஜென்சி கெஜட் அறிவிப்பு) கூறப்பட்டுள்ளதாவது:


மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

மீதித் தமிழனும் மெள்ளச் சாவான்! – இதயத்தைப் பிளக்கும் ஈழத் தமிழரின் இன்றைய நிலை













முள்ளிவாய்க்கால் பயங்கரம் முடிந்து ஓராண்டான பிறகும் கூட, வடக்கு இலங்கையின் முல்லைத் தீவு பகுதிக்குள் யாரையும் அனுமதிக்க மறுத்து வருகிறது இலங்கை. இன்று பத்திரிகையாளர்களுக்கு அனுமதியில்லை. ஆனால் இந்தப் பகுதிகளில் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்று வெளியுலகுக்கு வேஷம் போட்டு வருகிறது சிங்கள அரசு.

வடக்கு இலங்கையில், இறுதிப் போர் நடந்த பகுதிகளில் இன்றைய உண்மையான நிலவரம் என்ன?

பல்லாயிரம் தமிழர்களின் மனதை அறுக்கும் இந்தக் கேள்விக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தந்துள்ள விளக்கமான பதிலை ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ளது.

அவரது பேட்டியை முழுமையாக இங்கே தருகிறோம்:

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Friday, May 21, 2010

மீளக்குடியேறியோர் வீடுகளை அமைக்க 10 தகரங்கள், 6 தடிகள் முல்லைத்தீவுக்கு சென்ற தமிழ்க் கூட்டமைப்பினர் அதிர்ச்சி













முல்லைத்தீவுப் பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் சொல்லொணாத் துயரத்தின் மத்தியில் இருப்பதாகவும் 10 தகரங்களும் 6 தடிகளுமே அவர்களுக்கு குடியிருப்புகளை நிர்மாணிக்கவென வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஆழ்ந்த கவலையையும் கடும் விசனத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

வட,கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 14 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் 12 பேர் சம்பந்தன் தலைமையில் வன்னிப் பயணத்தை மேற்கொண்டனர்.

தமது பயணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தாங்கள் கண்டு, கேட்டு, அறிந்தவற்றை திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கமும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கூறியதாவது;


மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம் தீ பிடித்து எரிந்தது ; 160 பேர் பலி













துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், மங்களூர் விமான நிலையத்தில் தரை இறங்கும்போது, ஓடு தளத்தில் நிலை தடுமாறி ஓடி விபத்திற்குள்ளானது.

உடனே விமானம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. விமானத்தில் 169 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் பலர் உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இக்கோரவிபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிகிறது.போயிங் 737 என்ற இந்த விமானம் 169 பயணிகள் மற்றும் சிப்பந்திகளைக் கொண்டிருந்தது.

விமானத்தில் நான்கு குழந்தைகளும் இருந்துள்ளனர். 9 பேர் வரையானோர் உயிர் பிழைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தலத்துக்கு விரைந்த 25 வரையான‌ நோயாளர் காவு வண்டிகளும் தீயணைப்பு வண்டிகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

மேலதிக தகவல்கள் எதிபார்க்கப்படுகின்றன...

Thursday, May 20, 2010

“டிஸ்கஷன் அழைப்புகள் எனக்கு வந்தன..!” – நடிகை நந்தகியின் ஒப்புதல் வாக்குமூலம்..!













சினிமாவில் நுழைய விரும்பும் புதுமுக நடிகைகள் அதிகம் சந்திக்கின்ற பிரச்சினை ‘டிஸ்கஷன்’ என்று சொல்லப்படும் அவர்களை படுக்கைக்கு அழைக்கும் விஷயந்தான்..!

சில டுபாக்கூர், உப்புமா தயாரிப்பாளர்கள் இதற்காகவே வெறும் லெட்டர் பேடு கம்பெனிகளை உருவாக்கி சினிமாவில் நடிக்க விரும்பி ஆர்வத்துடன் வரும் பெண்களிடம் தங்கள் கை வரிசையைக் காட்டிவிடுவதால் இந்த ‘உவ்வே’ விஷயத்தைக் கேட்டு முகம் சுழித்த நிலையில் பல பெண்கள் சினிமாத் துறைக்குள் பிரவேசிக்க முடியாமல் வெளியேறி விடுகிறார்கள்.

ஆனால் இதைப் பற்றி எந்தப் பெண்ணும் வெளிப்படையாகச் சொல்லாமல் இருப்பதால்தான், இந்த ‘டிஸ்கஷன்’ செய்யும் சினிமா பிரபலங்கள் இன்னமும் இங்கே இருக்க முடிகிறது.


மேலும் படிக்க இங்கெ அழுத்தவும்

தமிழ் உறவுகளே, நம்புங்கள்! நாளை தமிழீழம் பிறக்கும்













தமிழீழத் தேசியத்தலைவர் ஈழ மக்களின் இதயங்களை வென்ற கதாநாயகனாக மூன்று தசாப்தமாக இருந்து வந்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கான பல காரணங்கள் முன்வைக்கலாம். எனினும் சுறுக்கமான விளக்கம் என்று சொன்னால் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்து சென்ற ஆண்டுகள் அனைத்திலுமே சிறந்த ஒரு வெற்றிக் கதாநாயகனாகத்தான் வாழ்ந்திருக்கிறார்.. எந்த ஒரு காலத்திலும் ஒருசில பின்னடைவுகளை தவிர தோல்வியென்று எதுவும் அவரை நெருங்கியதில்லை.

அதனால்தான் இன்றும்கூட விடுதலைப் புலிகளின் முழுமையான அழிவு என்று வர்ணிக்கப்படும் காலத்தின் பின்னும் தலைவர் அவர்களின் மரணம் சம்ப‌ந்தமான அறிக்கை முன்னுக்கும் பின் முரணான செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது. இறுதிகால வன்னி யுத்தத்தின் போது, இந்தியப் புலனாய்வுத் துறையினால் ஐம்பதுக்கு மேற்பட்ட "றோ" உளவாளிகள் இயக்கப்பட்டு வந்ததும் யாவராளும் அறிய முடிந்தது. அப்படியான ஒரு திறமை மிக்க இந்தியப் புலனாய்வுதுறையினரால் இன்று வரை கூட தமிழீழத் தேசியத்தலைவருக்கு இறுதி நேரத்தில் என்ன நடந்தது என்பதை அறியமுடியாது போயிற்று. அதனால்தான் " இதோ இப்போது முடிகிறது ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்று இருந்த கதை போய் இந்திய தினத்தந்திப் பத்திரிக்கையில் வரும் சிந்துபாத் கன்னித்தீவு போன்று நீண்டு கொண்டே போகிறது.

அரக்க குணம் கொண்ட இலங்கை அரசுக்கு, விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக எத்தனையோ விதமான தொழில்நுட்ப சாதனங்களையும். காட்டிக் கொடுப்புக்களையும் செய்து கொடுத்த இந்திய புனலாய்வுத்துறை இப்போது கொஞ்சம் தல்லாடத்தொடங்கியிருப்பது என்பதுதான் உண்மை. இல்லையேல் ஆயிரம் மையில்களுக்கு அப்பால் நின்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பலுக்கு கண் வைத்தவர்கள், இறுதி நேர ஐந்நூறு மீட்டர் சதுரப்பரப்பில் நடந்தது என்னவென்று தெரியாமல் ஏன் தலையை சொறிய வேண்டும். தலைவரின் தீர்க்கதரிசனம் பற்றி எலுத புறப்பட்டால் பந்தி பந்தியாக எழுதலாம். அவைகளில் ஒன்றிரண்டினைக் குறிப்பிடலாம் என விரும்புகிறேன்.


மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

"நடிகை குஷ்பு சொல்வது நொண்டிச்சாக்கு" – கொதிக்கிறார் திருமாவளவன்













தான் தி.மு.க.வில் சேர்ந்ததற்கு காரணமே விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியினரும் தன் மீது போட்ட பொய் வழக்குகள்தான்..” என்று நடிகை குஷ்பு கூறியிருப்பதற்கு விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பும், பாட்டாளி மக்கள் கட்சியும் கடுமையாக ஆட்சேபித்துள்ளது.

இது பற்றி பேட்டியளித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன், “நடிகை குஷ்பு ஓர் அரசியல்வாதியாகப் பரிணமித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இது அவரின் துணிச்சலான முடிவு. பெண்கள் பொதுவாழ்வில் ஈடுபடுவது மிகவும் அவசியமானது. ஆனால் தன் அரசியல் பிரவேசத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், பா.ம.க.வும் போட்ட பொய் வழக்குகள்தான் காரணம் என்று அவர் கூறியிருக்கிறார்.

இதில் ஓர் உண்மையைச் சொல்லியாக வேண்டும். குஷ்பு மீதான இந்த வழக்குகளில் ஒன்றிரண்டுதான் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தொடுத்தவை. மற்ற அனைத்து வழக்குகளுமே கட்சி சாராத தனி நபர்களால் தொடுக்கப்பட்டவைதான். இது தொடர்பாக என் கவனத்துக்கு வந்தபோது, இத்தகைய நடவடிக்கைகளில் சிறுத்தைகள் யாரும் ஈடுபட வேண்டாம் என்று தடுத்தேன்.

அரசியலில் அடியெடுத்து வைத்ததுமே குஷ்பு முழு அரசியல்வாதியைப் போல பேசத் தொடங்கியிருக்கிறார். அரசியலில் அவர் வெற்றிகரமாகச் செயல்படுவார் என்று இதன் மூலம் தெரிகிறது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

பிரிகேடியர் சொர்ணம்













(சூசைப்பிள்ளை ஜோசப் அன்ரனிதாஸ்,
திருகோணமலை,
08.04.1964 - 15.05.2009)

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த‌ ஜோசப் தம்பதிகளின் இரண்டாவது மகவாக 1964ம் ஆண்டு பிறந்தார் அன்ரனிதாஸ். ஆனால் அன்ரனிதாஸின் மூதாதையர்கள் யாழ் மாவட்டம் மானிப்பாயிலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள்.

பிறப்பால் கிறித்தவராக இருந்தபோதும் சிறு வயது அன்ரனிதாஸுக்கு முற்போக்கு சிந்தனைகள் அதிகம். ஜாதியும் மதமும் மக்களை வேறுபடுத்திப் பார்ப்பதற்காக பயன்படுகிறதே என்று வருத்தப்படுவதுண்டாம் அவர்.

திருகோணமலையில் திட்டமிட்ட வகையில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்கள் பாதிக்கப்படுவது கண்டு கொதித்துப் போயிருந்தார் இளைஞனாகவிருந்த அவர். புலிகள் இயக்கத்தில் சேர‌ விரும்பினார் ஆனாலும் குடும்ப நிலமை தடுத்தது.தகுந்த சந்தர்ப்பம் ஒன்றுக்காக காத்திருந்த அவருக்கு 1983ல் இடம்பெற்ற இனக்கலவரம் நல்ல சாக்காக அமைந்தது. அவ்வளவுதான் குடும்ப பந்தங்களை அறுத்தெரிந்து புலிகள் இயக்கத்துடன் இணைந்து கொண்டார்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று













பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு முதுநிலைத் தளபதியாவார்.

தமிழீழத்தின் பல போர்க்களங்களை வழிநடத்தியவர். 1983 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு தொடக்கம் 1993 ஆம் ஆண்டு வரையும் பின்னர் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரையும் விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியாக அப்படையணியை வழிநடத்தியவர்.

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற‌வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனையிறவுச் சமரில் முக்கிய பங்காற்றினார்.


மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

பிரபாகரனின் இளைய மகன் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் – சிங்கள இராணுவ வீரர் ஒப்பதல் வாக்குமூலம்














விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகனை உயிருடன் பிடித்து கொடூரமாக சித்திரவதை செய்து, பிரபாகரன் இருப்பிடத்தை அறிந்து கொண்ட பின்னர் அந்த சின்னஞ் சிறுவனையும் மிகக் கொடூரமாக ராணுவம் சுட்டுக் கொன்றதாக சிங்கள ராணுவ வீரர் ஒருவர் சானல் 4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட வீடியோவை சானல் 4 தொலைக்காட்சி முன்பே வெளியிட்டிருந்தது.

கண்களையும், கைகளையும் கட்டிய நிலையில் பின்னாலிருந்து மிருகத்தனமாக தலையில் சுட்டு அந்தத் தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். இது உண்மையான வீடியோதான் என பின்னர் நிரூபிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அந்த வீடியோ தொடர்பாக மேலும் ஆதாரங்களை பெறும் வகையில் அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை ராணுவ சிப்பாய் மற்றும் போர் முனையில் இருந்த ராணுவ தளபதிகளில் ஒருவருடைய பேட்டியை தற்போது சானல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

மேலும், தமிழ் இளைஞர்களின் கைகளையும், கண்களையும் கட்டி துப்பாக்கிகளால் பின்னாலிருந்து கொடூரமாக ராணுவத்தினர் சுட்டுக் கொன்ற காட்சிகளை இந்த ராணுவ வீரர்தான் படம் பிடித்து தங்களுக்கு அளித்ததாக சானல் 4 தெரிவித்துள்ளது.

பேட்டியில் அந்த ராணுவ வீரர் கூறுகையில்,

மேலும் படிக்க இங்கே படிக்கவும்

Wednesday, May 19, 2010

'தனி ஈழம்தான் இந்தியாவுக்கு அரண்' : அமெரிக்க பேராசிரியர் பிரான்சிஸ் பாயில்













பேராசிரியர் பிரான்சிஸ் பாயில் அமெரிக்காவின் மிகப் பிரபலமான சட்ட மேதை. சிகாகோவில் உள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர். மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தனிமனித உரிமை, அரசியலமைப்பு சட்டங்களில் கீர்த்தி வாய்ந்தவர். அவர் தமிழக தமிழ் சஞ்சிகையான ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு எதிராக 60 ஆண்டுகளாகப் போராடிவரும் பாலஸ்தீன அரசின் சட்ட ஆலோசகரான பாயில், அதன் அரசியலமைப்பு மற்றும் அரசியல் சட்டம் போன்ற அயல் நாட்டு உறவுகளுக்கு ஆலோசனை தருகிறார். சில ஆண்டுகளாக ஈழத்தமிழர் பிரச்சினைகளில் முழுமூச்சாக ஈடுபட்டு, சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்ஷே அரசின் மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை பெற்றுத்தரப் பாடுபடுபவர்.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைய ருத்திரகுமாரனுக்கு ஆலோசனை கூறி வருகிறார். சமீபத்தில், நடைபெற்ற நாடு கடந்த தமிழீழத் தேர்தலில், தேர்தல் குழுவின் முக்கிய உறுப்பினரான இவரது ஆலோசனையின் பேரில்தான் தேர்தலே நடைபெற்றது.

கடந்த ஆண்டு சென்னை உட்படப் பல்வேறு நகரங்களுக்குச் சென்று தமிழீழ ஆர்வலர்களை சந்தித்து கருத்துகளைக் கேட்டார்.

அவருடன் ஜூ.வி-க்காக ஒரு பிரத்யேக பேட்டி!

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

இலங்கை திரைப்பட விழாவை புறக்கணிக்க வேண்டும் - தமிழ்த் திரையுலகம் கூட்டறிக்கை














``இலங்கையில் நடைபெறும் திரைப்பட விழாவை, ஒட்டு மொத்த திரையுலகமும் புறக்கணிக்க வேண்டும்`` என்று தமிழ் திரையுலகம் கூட்டறிக்கை விடுத்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் ஆகிய அமைப்புகள் கூட்டாக ஒரு அறிக்கை விடுத்துள்ளன.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

ஈழ மண்ணில் சுதந்திரக் காற்று வீசும் என்ற நம்பிக்கை இன்னமும் அற்றுப் போய்விடவில்லை













ஈழ மண்ணில் சுதந் திரக் காற்று வீசும் என்ற நம்பிக்கை இன்னமும் அற்றுப் போய்விடவில் லை. கிழக்கு மாகாணக் காடுகளில் உள்ள மரங்களுடன் சேர்ந்து அந்த நம்பிக்கை உயர்ந்து நிற்கிறது. ""முள்ளி வாய்க்கால் கொடூரத்தின் ஓராண்டு நிறைவில், உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழத் துயர நினைவுகளில் மூழ்கி யிருக்கும் நிலையில், விடுதலை நம்பிக்கை வீழ்ந்துவிடவில்லை`` என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பாண்டி யன். அரசியல் பத்திரிகை வட்டாரங்களில் அறியப் பட்டவரான இவர், கடந்த 15 நாட்களுக்கு முன் இலங்கைக்குப் பயணம் செய்தவர்.

2009 மே 17-க்குப் பிறகு, ஈழமக்களின் வாழ்வையும் விடு தலைப் போராட்ட நிலவரத்தையும் இலங்கை ராணுவக் கட்டுப்பாட்டை மீறி அறிந்து வந்து சொல்வதற்கான வாய்ப்பு கள் இல்லாததால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பரிதவிப்போடு இருந்தார்கள் என் கிற பத்திரிகையாளர் பாண்டியன், ""ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் முக்கிய தளபதியாக விளங் கும் சங்கீதன்தான் எனக்கு அழைப்பு விடுத்தார். ஈழ நிலவரத்தை நேரில் அறிந்துவர எனக்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தெரிவித்த சங்கீதன், கொழும்புக்குப் பயணம் மேற்கொள் ளும்படி அறிவுறுத்தினார்`` என்கிறார்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

ஒரு புலனாய்வுப் போராளியின் உருக்கமான வேண்டுகோள்













அன்புக்குரிய தமிழ்த்தேசிய உணர்வாளர்களே! தமிழீழ மக்களே!

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற மிகக்கொடூரமான போரின் இறுதிக்கணம்வரை சகல விடயங்களையும் அறிந்தவன் என்ற வகையில் உங்களோடு சில விடயங்களை பகிர விரும்பும் போராளி.

காலமும் உலகமும் சேர்ந்து எமக்கெழுதிய தீர்ப்பு இன்றுவரை எமது மக்களுக்கு உண்டான அவலங்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவில்லை. இந்த மடலூடாக சில உண்மைகளை வெளிப்படுத்த விரும்புகிறேன்.

எதிரிகளின் கூட்டணி ஐந்தாம்கட்ட ஈழப்போரை மிகத் தந்திரமாக ஆரம்பித்துள்ளது. இது முற்றுமுழுதான உளவியற்போரும், புலனாய்வுப்போரும் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டு உருவாகியுள்ள களமுனையாகும். இக்களமுனைகளை புலம்பெயர்தேசமெங்கும் இன்னும் உணர்வோடு விடுதலையை வேண்டிநிற்கும் மக்களை இலக்காகக் கொண்ட ஒரு சாணக்கிய நகர்வாகும். கடந்த நான்கு கட்ட ஈழப்போர்களோடு ஒப்பிடுமிடத்து இந்தப்போர் தாக்குதிறன் அதிகமானது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

வன்னிப் போரில் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன?; விளக்குகிறது சனல் - 4













வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது சிறிலங்கா படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகொலைசெய்யப்பட்ட காணொலியை வெளியிட்ட சனல் - 4 தொலைக்காட்சி, அவ்வாறு இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது. இந்த புகைப்படங்கள் சிறிலங்கா இராணுவ சிப்பாய் ஒருவரினால் எடுக்கப்பட்டவை என்று சனல் - 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசத்தினுள் கண்மூடித்தனமான - அகோர - எறிகணை மற்றும் விமான தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொண்டதை அடுத்து, அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகாயங்களுடன் திக்குத்திசை தெரியாது ஓடினர். இதன்போது, இராணுவத்தினரால் பெருந்தொகையானவர்கள் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர்.


மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, May 18, 2010

குருதி பிசுபிசுக்கும் கொலைகளத்தில் கூத்து, கும்மாளமா? தடுக்க வேண்டும் தமிழ்த்திரையுலகம் : தாமரை













குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதை பழையது. குழியில் போட்டுப் புதைத்துவிட்டு மேலே ஏறிக் கூத்தாடும் கதை புதியது. வருகின்ற ஜுலை 3,4,5 தேதிகளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இதுதான் அரங்கேறப்போகிறது. ஆம். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்களை மொத்தமாய்க் கொன்று புதைத்தவர்கள் கும்மாளமிடத்தான் அய்ஃபா (IIFA) விருது வழங்கும் விழாவைக் கொழும்புவுக்கு மாற்றியுள்ளனர்.

தென்கொரியத் தலைநகர் சியோலில் நடப்பதாக இருந்த சர்வதேச இந்தியத் திரைப்படக்கழக விருது விழாவை சந்தடியின்றிக் கொழும்புக்கு மாற்றியதில் இந்திய அரசுக்கு ஒரு நோக்கம் உள்ளது. கொழும்பின் கையில் படிந்துள்ள தமிழனின் ரத்தக்கறையைத் துடைத்து தன் பாவத்தையும் மறைத்துக்கொள்வதே அது! இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI) இந்த விழாவில் வைத்து புதிய ஆதாய வாசல்களைத் திறக்கவும், இலங்கைச் சந்தையில் விரிவாக வலைவீசவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழர் பகுதிகளில் மறுநிர்மாணம் என்ற பெயரில் கிடைக்கப் போகும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ‘கான்ட்ராக்டுகள்’ மீது குறி வைத்துள்ளது. புதிய செல்பேசி சந்தைக்காகவும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மூன்று நாள் விழாவில் ஒரு நாள் படங்காட்டுவதற்காம்! ஒருநாள் வணிக ஒப்பந்தங்களுக்காம்! ஒருநாள் 20-20 கிரிக்கெட் கேளிக்கைக்காம்! எல்லாவற்றிலும் கவர்ச்சிக்குக் குறைவைக்காமல் இந்திய திரைப்படத் தாரகைகளின் ஆட்டம் பாட்டம் இருக்குமாம்!

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

புலத்தின் வெடிப்பு ஈழத்தின் நிலப்பரப்பை சுருக்க வழி கோலிவிடும்













தமிழர்களின் விடுதலைப்போராட்டம் தொடங்கப்படு அண்ணளவாக 34 வருடங்கள் முடிந்து விட்டது, இந்த நீண்ட வரலாற்றில் எத்தனையோ விடுதலை போராட்ட இயக்கங்கள் மேலான நோக்கோடும் சுதந்திர வேட்கையோடும் உருவெடுத்திருந்தன அவை சிலவற்றின் சரியான திட்டமிடலும் வழி நடத்தலும் இல்லாததாலோ, வேறு காரணங்களினாலோ, கரையேறமுடியாமல் போன வரலாறுகள் பதிவாகியிருக்கின்றன.

1976 ம் ஆண்டளவில் தலைவர் மேதகு திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தொடங்கப்பட்ட "தமிழீழ விடுதலைப்புலிகள்" இயக்கம் ஒன்றுமட்டும் தான் எவ்வளவோ நெருக்கடிகளையும் உயிர் இழப்புகளையும் தன்னகத்தே கொண்டு தளர்வில்லா உறுதியுடன் முப்படைகளையும் கொண்டு, ஒன்பது விதமான போர் உத்திகளையும் மதிப்பிட முடியாத வியக்கத்தகு ஆற்றலை தன்னகத்தே கொண்டு மக்கள் மனங்களிலும் உலகச்சரித்திரத்திலும் இடம்பிடித்து மாபெரும் சக்தியாக 2009 மே மாதம் வரை இலங்கை அரசாங்கத்தையும் உலக நாடுகளையும் தனது காலடிவரை இழுத்து வரக்கூடிய‌ தகுதியைப்பெற்றிருந்தது(இந்த காலம் முழுவதும் சில நூறு தமிழர்களைத்தவிர உலக்த்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இருந்தது வரலாற்று அதிசயமாக காணலாம்).

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Monday, May 17, 2010

ஆம் முத்துக்குமார் தீவிரவாதிதான்













முத்துக்குமாருக்கு சிலை திறப்பாம்
கொளுத்திக்கொண்டவனுக்கு எவ்வளவு திமிர்
காதல் தோல்வியால் தற்கொலை
வேலை கிடைக்காதவிரக்தியில் தற்கொலை
சம்பளம் பத்தாமல் தற்கொலை
சொல்லியிருப்போம் ஆயிரம் கதை

நாசமாப்போனவன்
கடிதம் எழுதிக்கொடுத்து விட்டு
கொளுத்திக்கொண்டான் திமிர் பிடித்தவன்
கடிதம் எழுதிய பொறம்போக்கு
பாப்பாத்தியை பற்றி மட்டும்
எழுதிவிட்டுப்போக வேண்டியது தானே
ஐம்பது ஆண்டுகாலம் கட்டியெழுப்பிய
தமிழ் இனத்தலைவனையும்
காட்டிக்கொடுத்துவிட்டானே

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

பார்வதி அம்மாவின் காலைத் தொட்டு கும்பிடும் சிங்கள‌ ஊடகவியலாளர்கள்













சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காகத்தான் நான் தமிழ்நாட்டுக்குச் சென்றேன். ஆனால் கலைஞர் அய்யா ஏன் என்னைத் திருப்பி அனுப்பினார்?" என்று வேதனையுடன் கேட்டு்ள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள்.

தன்னைப் பார்க்க வந்த தமிழ்நெட் ஆங்கில‌ இணையதள செய்தியாளரிடம் இவ்வாறு அவர் கேட்டுள்ளார்.

மிகவும் உடல் நலிவுற்ற நிலையில் அவரை வல்வெட்டித்துறையில் உள்ள ஆதார வைத்தியசாலையில் சேர்த்து சி்கிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Saturday, May 15, 2010

நெஞ்சம் நடுங்கும் மே-16,17,18













உரிமையை இழந்தோம், உடமைகள் இழந்தோம், கொத்துக்கொத்தாய் உயிர்களையும் இழந்தோம். பல்லாயிரக் கணக்கில் நம் தமிழ் ஈழ உறவுகள் அழிக்கப்பட்ட அந்த கொடிய நாட்களைத் தாண்டி நாம் ஓராண்டு காலம் பயணித்து விட்டோம். கால ஓட்டத்திலும் கூட கரையாத குருதிக் கறைகள் நம் நெஞ்ச மெங்கும் அப்பிக்கிடக்கின்றன.

முன்னும் பின்னும் உலகம் பார்த்திராத வகையில் முப்படைகளையும் கொண்டு விளங்கியது நம்தமிழ் ஈழப் புலிப்படை. எந்த ஒரு விடுதலைப் போராட்டத்தையும் குறைத்து மதிப்பிடுவது நம் நோக்கமன்று. எனினும் சோவியத்தில், கியூபாவில், வியட்நாமில், பாலஸ்தீனத்தில் என உலகின்எந்த ஒரு மூலையிலும் முப்படை அமைத்துப் போராடிய விடுதலை அணிகள் இருந்ததில்லை. ஆனால் இந்த வலிமையே உலகின் கண்களை உறுத்தத்தொடங்கிற்று.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

தலைவனே உன் பாதம் பட்ட இடத்தில் நிற்கின்றேன்













செல்லரித்துப்போய் இருண்டு கிடக்கின்ற
என் வீட்டு முற்றத்தில்.
காட்டுப்பன்றிகளும் கரடிகளும்
இனந்தெரியாத வேறு பல விலங்குகளும்
மேச்சல் காடாக்கி
மலம் சலம் கழித்துக்கொண்டிருக்கின்றன,

என் உணவுக்கான ஆதாரங்கள்
அவைகளின் ஆக்கிரமிப்பால்
காலடிகளில் மிதிபட்டு
அழிந்து போகின்றன,

நேற்றுவரை
நீ எங்களோடு எங்களில் ஒருவனாக
பாதுகாவலனாக ஒன்றிக்கிடந்த தருணத்தில்
என் குழந்தைகள்
முற்றத்தில் விழையாடிக்கொண்டிருந்தபோது
ஒன்றிரண்டு காகங்கள் மட்டுமே
எச்சம் போட முடிந்தது,

அது கூட அவமானமென
அவ்வளவு கோபப்பட்ட நீ,
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக நான் சொல்லவேயில்லை : நடிகை குஷ்பு













“காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக நான் எப்போதும் சொல்லவில்லை” என்று திமுகவில் இணைந்துள்ள நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி முன்னணியில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணி அளவில் நடிகை குஷ்பு திமுகவில் இணைந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “என்னுடைய கொள்கைகளுக்கும், கருத்துக்களுக்கும் ஏற்ற கட்சியாக திமுக இருக்கிறது. திமுக மேல் எனக்கு மரியாதை உண்டு. கலைஞர் மீதும் மரியாதை உண்டு. பெண்கள் முன்னேற்றத்திற்காக திமுக பாடுபடும். திமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சியும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதில்லை” என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

கேள்வி: கற்பு குறித்து நீங்கள் கூறிய கருத்துக்களுக்கு பலத்த எதிர்ப்பு வந்தது. பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அப்போது எந்தக் கட்சிகளும் உங்களுக்க துணை நிற்கவில்லையே?
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

அவுஸ்திரேலியக் கடலில் காணாமல் போன ஐவர் தொடர்பான‌ தகவல்களை அறியத்தருமாறு இலங்கை கோரிக்கை













சட்டவிரோதமாக கடல்வழியாக அவுஸ்திரேலியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த படகு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்து காணாமல் போன ஐந்து இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை அறிவிக்குமாறு அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் கோரியிருப்பதாக அங்குள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு, குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் சேனக்க வலகம்பாய தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

பார்வதி அம்மாளை போட்டிபோட்டுப் பராமரிக்கும் மருத்துவமனைப் பணியாளர்கள்













மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பார்வதி அம்மாள் தற்போது வல்வெட்டித்துறை அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர்மீது தமது பணியாளர்கள் சிறப்புக் கவனம் எடுத்து மிகவும் அக்கறையாகப் பராமரித்து வருவதாக வல்வெட்டித்துறை அரச மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ அதிகாரியாகக் கடமையாற்றும் மயிலேறும்பெருமாள் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை மாலையில் பார்வதி அம்மாள் அங்கு அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர் மயிலேறும்பெருமாள் கூறும்போது,

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Friday, May 14, 2010

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீடித்தது இந்தியா













தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்படுவதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் போர் முடிவடைந்து ஒரு வருடத்தை தொடவுள்ள நிலையில் இந்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் நீடித்துள்ளது.

இந்திய உள்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை இன்று முதல் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தடை நீடிப்புக்கான காரணத்தை மத்திய அரசு அறிவிக்கவில்லை.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

பிரபாவின் சிறு மற்றும் இளமைப் ப‌ராயம் பாகம் இரண்டு













பிரபாவின் தாய் மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை பிரபாவின் வாழ்வைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான‌ நபர்.

பிரபா தனது 17வது வயதில் தனது குடும்பத்துடனான எல்லா உறவுகளையும் முறித்துக் கொண்டார். தனது புகைப்படமோ அல்லது புகைப்படத் தொகுப்போ வீட்டில் இல்லாதவாறு எல்லாவற்றையும் அகற்றினார் பிரபா. பிரபாவை தேடிய பொலிஸார் வைத்திருந்த ஒரே புகைப்பட ஆதாரம் அஞ்சலக அடையாள அட்டை ஒன்று மட்டுமே.

பிரபாவின் போராட்ட வாழ்விற்கு அவரது தகப்பனாரிடமிருந்து எந்தவிதமான உதவியோ ஆதரவோ கிடைக்கவில்லை. ஆனால் உதவிக்கரம் கொடுத்தவர்கள் வல்லிபுரம் வேலுப்பிள்ளையும் மூத்த சகோதரி ஜெகதீஸ்வரியின் கணவரும் மச்சினனுமாகிய மதியாபரணம் ஆகியோர்தான்.

பிரபா பிறந்ததன் பிற்பாடு திருவேங்கடம் வேலுப்பிள்ளை குடும்பத்துக்கும் வல்லிபுரம் வேலுப்பிள்ளை குடும்பத்துக்கும் எழுதப்படாத உடன்பாடு ஒன்று இருந்தது. அது என்னவென்றால் பிரபாவுக்கு தாய் மாமன் மகள்களில் ஒருவரை மணம் முடித்து வைப்பது. ஆனால் பிற்காலத்தில் பிரபா மதிவதனி ஈரம்பு மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்து கொண்டபோது தனது சங்கடங்களுக்கு நடுவிலும் பிரபாவிடம் தாலி எடுத்துக் கொடுத்ததும் இதே தாய் மாமன் வேலுப்பிள்ளை தான்.

1984 அக்டோபர் 1 அன்று திருப்போரூர் முருகன் கோயிலில் நடந்த அந்தத் திருமணத்திற்கு திருவேங்கடம் வேலுப்பிள்ளை வரவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

பார்வதியம்மாள் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை உண்மையில் எழுதியது யார்..? – உண்மை அம்பலம்













மலேசியாவில் இருந்து பார்வதியம்மாள் தனது சிகிச்சைக்காக கலைஞருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதனை தமிழக அரசு வெளியிட்டது.. ஆனால் அந்தக் கடிதம் பார்வதியம்மாளால் எழுதப்பட்டோ அல்லது தெரிவிக்கப்பட்டோ வெளியிடப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார் வைகோ.

சென்னையில் மே 11-ம் தேதி ம.தி.மு.க.வின் இலக்கிய அணி சார்பில் பாவேந்தர் விழா நடந்தது. அதில் பேசிய வைகோ, “மாவீரனைப் பெற்றெடுத்த தாய் எழுதியதாக கடிதம் ஒன்று வெளியிடப்பட்டதே.. அதை யார் தயாரித்தது..? நான் திருச்சியில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்து தரும்படி அன்போடு வேண்டுகிறேன்.. தங்கள் உதவியை என்றும் மறக்க மாட்டேன். நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன். நன்றியுடன்.. உங்கள் உடன்பிறப்பு.. திருவேங்கிடம் வேலுப்பிள்ளை பார்வதி என்று இருக்கிறதே..

பார்வதியம்மாள் என்ன தி.மு.க. வட்டச் செயலாளரா..? அவர் உடன்பிறப்பு என்று எழுதுவாரா..? இக்கடிதத்தை இங்கே தயாரித்தது யார்..? சில காரணங்களுக்காக நான் இதற்கு மேல் இது பற்றி பேச விரும்பவில்லை” என்றார்.

ஆனாலும் இது தொடர்பாக விசாரித்ததில் கிடைத்தத் தகவல்கள் வருமாறு :

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

பார்வதி அம்மாவின் சிகிச்சையில் உள்ளூர் அரசியல் வேண்டாம் : சுப.வீரபாண்டியன்













தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மா அவர்களை, மருத்துவ உதவிக்காகச் சென்னைக்கு அழைத்துவர வேண்டும் என்ற கோரிக்கை மனுவுடன், திராவிடர் கழகத் தலைவர் அய்யா வீரமணி அவர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் ஆகிய நானும், 26.04.2010 இரவு 8 மணிக்குத் தமிழக முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

ஏறத்தாழ ஒரு மணி நேரம் அவரோடு கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற்றோம். அச்சந்திப்பின்போது துணை முதல்வர் அவர்களும், சட்டத்துறை அமைச்சர் துரை முருகன் அவர்களும் உடன் இருந்தனர். அச்சந்திப்பையும், அதன்பின் நடைபெற்ற செயல்பாடுகளையும் பதிவு செய்ய வேண்டியமை, காலத்தின் தேவையாக உள்ளது.

மனுவைப் படித்துப் பார்த்த முதல்வர் “இதுல எனக்கு என்ன இருக்கு? அவுங்களை நான் ஏன் தடுக்கப் போறேன்? நான்தான் சட்டமன்றத்திலேயே சொன்னேனே... அவுங்ககிட்ட இருந்து கடிதம் வந்தா, உடனே பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அனுப்பி, அவுங்களை வர வைக்கலாம்” என்றார். எங்கள் மூவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. வீரமணி அய்யா, கலைஞரின் அருகில் சென்று, “அப்ப கடிதம் வந்தா, உடனே டெல்லிக்கு அனுப்பிடலாம் இல்லையா?” என்று கேட்க, “அடுத்த நிமிடமே அனுப்பிடலாம்” என்று சொல்லி முதலமைச்சர் சிரித்தார்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

பார்வதி அம்மாள் - சிறையா? சிகிச்சையா?













கடந்த காலங்களில் நாம் வாசித்தறிந்த வரலாற்றுக் கேவலங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, நாகரீகம், மாந்தநேயம் ஆகியவை கொல்லப்பட்டு இன்று அவை குற்றுயிராய் கிடக்கும் நிலை வளர்ந்து கொண்டிருக்கிறது. அரசியல் என்பது மக்களுக்கு பணியாற்ற கிடைத்த வாய்ப்பு என்ற அடிப்படை நிலைப்பாடு சிதைந்து, அழிக்கப்பட்டுவிட்டது.

மாறாக, அவை வெள்ளை உடையும், வெள்ளை பணமுமான சொர்க்கமாக இன்று உருமாறி நிற்கிறது. பதவி வெறி யார், என்ன நிலைக்குப் போனாலும் பரவாயில்லை, எம்மைவிட்டு நாம் எமது பதவியை விட்டொழிப்பதில்லை என்கின்ற ஒரு குறுகிய நிலைத்தன்மையை அடைந்திருக்கிறது.

ஒரு காலத்தில் மக்கள் பணி ஆற்றுவதற்காக அணி அணியாக பலர் அரசியல் களத்திற்கு வந்தார்கள். மாந்தகுல விடுதலை, மக்களின் எதிர்கால வாழ்வு, அவர்களின் மகிழ்ச்சிகான உத்திரவாதம், அவர்களின் உணவு, உறைவிடம், உடை போன்றவற்றிற்கான உரிமைகள் இவைகள் குறித்து தான் அரசியலின் பண்பு படரத் தொடங்கியது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Thursday, May 13, 2010

இன்று மாலை தி.மு.க.வில் சேர்கிறார் குஷ்பூ













நடிகை குஷ்பு இன்று மாலை திமுகவில் இணைகிறார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தனக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டிருந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய குஷ்பு தனக்கு அரசியல் ஆசை இருப்பதாகவும், விரைவில் நேரடி அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

கூடவே சோனியா, ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை பிடிக்கும் என்றும், காங்கிரஸ் கொள்கைகளில் ஈடுபாடு என்றும் குஷ்பு கூறியிருந்ததால் விரைவில் காங்கிரசில் சேரப்போகவதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

இந்தியா விடுதலைப்புலிகளுக்கு மட்டுமல்ல: ஈழத்தமிழர்களுக்கும் எதிரானதே; தினமணி குற்றச்சாட்டு













இலங்கையில் போர் முடிவடைந்து ஓராண்டு பூர்த்தியாகவுள்ள நிலையில், அங்கு தமிழர்களின் இருப்பையே அடியோடு பிடுங்கி எறியும்வகையில் காரியங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்கூட, இந்திய அரசு இது அன்னிய நாட்டு விவகாரம் என்று தலையிடாமல் தவிர்ப்பது ஏன் என்பதும், அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படத் தயங்குவது ஏன் என்பதும் புதிராக இருக்கிறது. “விடுதலைப் புலிகளைத்தான் எதிர்க்கிறோம். அப்பாவி ஈழத் தமிழர்களை அல்ல’ என்று சொன்னதெல்லாம் பொய்தானே?

இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறது தமிழகத்திலிருந்து வெளியாகும் தினமணி நாளிதழ். அந்த நாளிதழின் இன்றைய பதிப்பில் வெளியான ஆசிரியர் தலையங்கத்தில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் மேலும் எழுதப்பட்டிருப்பதாவது:

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்













(அன்ரன் ஸ்டானிஸ்லாஸ் பாலசிங்கம்
கரவெட்டி, யாழ்ப்பாணம்
மார்ச் 4, 1938 - டிசம்பர் 14, 2006)

பாலா அண்ணையின் வரலாற்றை ஒரு பகுதிக்குள் அடக்க முடியாது. ஆகவே போராட்ட வழ்வுக்கு முன்னரான காலம் பின்னரான காலம் என்று இரண்டாகப் பிரித்துத் தரப்படுகிறது. இது போராட்ட வாழ்வுக்கு முந்திய பகுதி. இனி அதைப் பார்ப்போம்:

மட்டக்களப்பு மாவட்ட இந்துவான அப்பாவுக்கும் யாழ் மாவட்ட கிறித்தவரான அம்மாவுக்கும் இரண்டாவது பிள்ளையாகப் பிற‌ந்தார் பாலா அண்ணை அவர்கள்.

மட்டக்கள‌ப்பு ஆதார வைத்தியசாலையில் மின்சார பொறியியலாளராக வேலை பார்த்த இவரின் அப்பாவும் அதே மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக வேலை பார்த்த அம்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவருக்கு மூத்தது ஒரு சகோதரியாவார்.

பாலா அண்ணையின் தாத்தா மட்டக்களப்பு மண்டூரில் சைவ‌க் குருக்களாக இருந்தவர். தாய் யாழ்ப்பாணத்தில் மார்டின்ஸ் வீதியில் வசித்து வந்தவர்.

பிற்காலத்தில் தந்தை இறந்த பிறகு இவர் தனது தாயுடனும் சகோதரியுடனும் யாழ் வடமராட்சிப் பிரதேசத்தின் கரவெட்டியில் வசிக்கத் தொடங்கினார்.

பாலா அண்ணை தனது ஆரம்பக் கல்வியை கரவெட்டி புனித இருதயக் கல்லூரியிலும் பின்னர் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் பயின்றார்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

வல்வை வைத்தியசாலையில் பார்வதியம்மா அனுமதி; பின்னணியில் நடந்த சம்பவங்கள் என்ன?













விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதியம்மா, இந்தியாவுக்குள் நுழைய அனுமதிப்பதற்காக இந்திய அரசு விதித்த நிபந்தனைகளை நிராகரித்துவிட்டு கொழும்பிலிருந்து ஏ9 வீதியூடாக நேற்று மாலை யாழ்ப்பாணம் வந்துசேர்ந்தார். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் துணையுடன் நேற்றுக் காலை கொழும்பிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு அம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்ட அவர் வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அரசின் கோரிக்கைகளை நிராகரித்தமை, கொழும்பிலிருந்து பார்வதியம்மா யாழ்ப்பாணம் அழைத்துவரப்பட் டமை என்பவை தொடர்பாக எம். கே.சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கும்போது:

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பக்கவாத நோயால் பார்வதியம்மா பரிதவித்து வருகிறார். எனினும், எவ்வித மனிதாபிமானமுமற்று இந்திய மத்திய அரசு அவர் சிகிச்சை பெறுவதற்குக் கடும் நிபந்தனைகளை விதித்தது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

பார்வதி அம்மாளை நிபந்தனையின்றி இந்தியாவுக்கு அழைத்து வரவேண்டும்; சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு













பார்வதி அம்மாளை நிபந்தனையின்றி தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என்றும், அவருக்கு அரசு செலவில் சிகிக்சை அளிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள், தமிழகத்தில் தங்கி சிகிச்சை பெற விரும்புவதாக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று தமிழக அரசு பரிந்துரை செய்ததால் மத்திய அரசும் பார்வதி அம்மாள் தமிழகம் வர அனுமதி அளித்தது.

தமிழகத்தில் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் மட்டும் தங்கி இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. வேறு சில நிபந்தனைகளும் கூறப்பட்டன.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

உண்மையிலேயே சபிக்கப்பட்ட இனமா ஈழத்தமிழினம்?













அகதிகளாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஈழத்தமிழ் மக்களின் படகு ஒன்று பழுதடைந்ததால் அதில் இருந்த 5 தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அவுஸ்திரேலியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அவுஸ்திரேலியாவை நோக்கி சென்ற ஈழத் தமிழ் மக்களின் அகதிகள் படகு ஒன்று கடந்த வாரம் நடுக்கடலில் பழுதடைந்திருந்தது. அதனை தொடர்ந்து அதில் இருந்து கடலில் குதித்த ஐந்து தமிழர்களை தேடிக் கண்டறிவதற்கு அவுஸ்திரேலியா படையினர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அவை கைவிடப்பட்டுள்ளன.

15 சிறுவர்கள் உட்பட 60 பேர் பயணம் செய்த படகில் அவர்கள் பயணித்திருந்தனர். அவர்களின் படகு கொக்கொஸ் தீவுகளுக்கு அண்மையில் கண்டறியப்பட்டது. இயந்திரம் பழுதடைந்ததால் அங்கு தத்தளித்த அந்த படகில் இருந்து உயிர்க்காப்பு அங்கிகளை அணிந்த ஐந்து தமிழ் மக்கள் உதவி கோரி கடலில் குதித்ததாக படகில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்த களத்தில் இந்திய இராணும்?














கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரில் சிறீலங்கா இராணுவத்தினருக்கு இந்தியப்படைகள் களத்தில் நின்று கட்டளைகளையும் நெறிப்பபடுத்தல்களையும் வழங்கியமைக்கு தகுந்த சாட்சியாக இந்திய ஊடகவியலாளர் நிக்கில் கோக்கலே தனது அனுபவப்பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வன்னியில் இந்திய படைகளும் ஆயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்டமைக்கு ஆதாரமாக இந்திய இராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் தீபக் கபூர் அங்கு களமுனை பணிகளில் ஈடுபட்டிருந்தமை நிக்கல் கோக்கலேயின் பத்தியொன்றில் வெளியாகியிருக்கின்றது.

போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த கடந்த மே மாத நடுப்பகுதியில் வன்னிப்பகுதி நேரடியாக சென்று செய்தி சேகரித்தவர் என்ற வகையில் அந்த அனுபவங்களை பகிர்ந்துள்ள இந்தியாவின் புதுடில்லி தொலைக்காட்சியின் பாதுகாப்புத்துறை நிருபரும் முன்னாள் அவுட் லுக் சஞ்சிகை நிருபருமான நிக்கல் கோக்கலே தனது பத்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்