Thursday, May 20, 2010
தமிழ் உறவுகளே, நம்புங்கள்! நாளை தமிழீழம் பிறக்கும்
தமிழீழத் தேசியத்தலைவர் ஈழ மக்களின் இதயங்களை வென்ற கதாநாயகனாக மூன்று தசாப்தமாக இருந்து வந்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கான பல காரணங்கள் முன்வைக்கலாம். எனினும் சுறுக்கமான விளக்கம் என்று சொன்னால் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்து சென்ற ஆண்டுகள் அனைத்திலுமே சிறந்த ஒரு வெற்றிக் கதாநாயகனாகத்தான் வாழ்ந்திருக்கிறார்.. எந்த ஒரு காலத்திலும் ஒருசில பின்னடைவுகளை தவிர தோல்வியென்று எதுவும் அவரை நெருங்கியதில்லை.
அதனால்தான் இன்றும்கூட விடுதலைப் புலிகளின் முழுமையான அழிவு என்று வர்ணிக்கப்படும் காலத்தின் பின்னும் தலைவர் அவர்களின் மரணம் சம்பந்தமான அறிக்கை முன்னுக்கும் பின் முரணான செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது. இறுதிகால வன்னி யுத்தத்தின் போது, இந்தியப் புலனாய்வுத் துறையினால் ஐம்பதுக்கு மேற்பட்ட "றோ" உளவாளிகள் இயக்கப்பட்டு வந்ததும் யாவராளும் அறிய முடிந்தது. அப்படியான ஒரு திறமை மிக்க இந்தியப் புலனாய்வுதுறையினரால் இன்று வரை கூட தமிழீழத் தேசியத்தலைவருக்கு இறுதி நேரத்தில் என்ன நடந்தது என்பதை அறியமுடியாது போயிற்று. அதனால்தான் " இதோ இப்போது முடிகிறது ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்று இருந்த கதை போய் இந்திய தினத்தந்திப் பத்திரிக்கையில் வரும் சிந்துபாத் கன்னித்தீவு போன்று நீண்டு கொண்டே போகிறது.
அரக்க குணம் கொண்ட இலங்கை அரசுக்கு, விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக எத்தனையோ விதமான தொழில்நுட்ப சாதனங்களையும். காட்டிக் கொடுப்புக்களையும் செய்து கொடுத்த இந்திய புனலாய்வுத்துறை இப்போது கொஞ்சம் தல்லாடத்தொடங்கியிருப்பது என்பதுதான் உண்மை. இல்லையேல் ஆயிரம் மையில்களுக்கு அப்பால் நின்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பலுக்கு கண் வைத்தவர்கள், இறுதி நேர ஐந்நூறு மீட்டர் சதுரப்பரப்பில் நடந்தது என்னவென்று தெரியாமல் ஏன் தலையை சொறிய வேண்டும். தலைவரின் தீர்க்கதரிசனம் பற்றி எலுத புறப்பட்டால் பந்தி பந்தியாக எழுதலாம். அவைகளில் ஒன்றிரண்டினைக் குறிப்பிடலாம் என விரும்புகிறேன்.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment