Saturday, May 8, 2010

8000 பேரை பலி கொண்ட போபால் கொடுமையும் ராஜீவ் மரணமும்












ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தாயார் 80 ஆவது வயதில் கடும் நோயால் பாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு சிகிச்சைக்கு வந்தால் ‘விடமாட்டோம்’ என்கிறார்கள். தமிழ்நாடு என்ன, கண்டவர்கள் நுழையும் ‘தர்ம சத்திரமா’ என்று பார்ப்பனத் திமிரோடு கேள்வி கேட்கிறார், சுப்ரமணியசாமி. இந்த எதிர்ப்புகளுக்கு முன் வைக்கப்படும் காரணம் என்ன? ராஜீவ் கொலை!

ஈழ விடுதலைப் போராட்டத்தையே ராணுவத்தால் ஒடுக்கிட அனைத்து உதவிகளையும் செய்தது சோனியா, மன்மோகன் ஆட்சி! காரணம் என்ன சொல்லப்பட்டது? அதே ராஜீவ் சாவுதான்! 19 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்த பிறகும் நளினியை விடுதலை செய்யக் கூடாது. அவர் மரணத்தை சந்திக்கும் வரை சிறைக்குள்தான் இருக்க வேண்டும் என்று டெல்லி சோனியா வட்டாரமும், தமிழக போலி கதர்ச்சட்டை ‘கனபாடிகளும்’ கூப்பாடு போடுகிறார்கள். கலைஞர் கருணாநிதியின் தி.மு.க. ஆட்சி அதற்கு தண்டனிட்டு பணிந்து போய் கிடக்கிறது. சொல்லப்படும் காரணம் என்ன? ராஜீவ் கொலை செய்யப்பட்டார் என்பதுதான்!

ராஜீவ் கொலை 1991 ஆம் ஆண்டு நடந்தது. 20 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ராஜீவ் ஈழத்துக்கு அனுப்பி வைத்த இந்திய ராணுவம், அங்கே பல்லாயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது. ராஜீவ் அனுப்பிய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களும் ராஜீவ் உயிரைப் போல் முக்கியமானதுதான். ராஜீவ் மரணத்துக்குப் பிறகு அவரது மனைவி சோனியா, இந்தியாவின் அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டார். ராஜீவின் மகனை அடுத்த பிரதமர் பதவிக்கு தயார் செய்து வருகிறார்.

ராஜீவ் கால காங்கிரசில்கூட அவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பு அணிகள் இருந்தது உண்டு. சோனியாவோ ராஜீவையும் மிஞ்சி தனது கட்சியை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். அமைச்சரவை முடிவுகள் ஏதுமின்றியே தன்னிச்சையாக தனது ஆணைக்குட்பட்ட ‘மலையாள அதிகாரக் கும்பல்’ ஒன்றை அமைத்துக் கொண்டு, அதன் வழியாக ஈழத்தில் இனப்படுகொலைகளுக்கு திட்டம் தீட்டித் தந்து ஒரு விடுதலைப் போராட்டத்தையே சீரழித்து விட்டார். கேட்டால் ராஜீவ் கொலை செய்யப்பட்டாரே என்று கூறுகிறார்கள்.

ஆனால், இதே காங்கிரஸ் ஆட்சியில், போபாலில் என்ன நடந்தது? யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க நிறுவனத்தின் ரசாயன தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய விஷவாயுவால் பல்லாயிரம் மக்கள் பிணமானார்களே; லட்சக்கணக்கான மக்கள் உடல் ஊனமானார்களே; அவர்களின் கதி என்ன? ராஜீவ் உயிருக்காக மட்டும் குடம் குடமாக 20 ஆண்டுகளாக கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ் கட்சி, பாதிக்கப்பட்ட அந்த ஏழை எளிய மக்களுக்கு, 25 ஆண்டுகாலத்துக்குப் பிறகாவது நிவாரண உதவிகளைப் பெற்றுத் தந்ததா? ராஜீவ் உயிர் மட்டும்தான் உயிரா? மற்ற மனித உயிர்கள் எல்லாம் இவர்களுக்கு மயிருக்குச் சமமா? மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment