Wednesday, May 19, 2010

வன்னிப் போரில் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன?; விளக்குகிறது சனல் - 4













வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது சிறிலங்கா படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகொலைசெய்யப்பட்ட காணொலியை வெளியிட்ட சனல் - 4 தொலைக்காட்சி, அவ்வாறு இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது. இந்த புகைப்படங்கள் சிறிலங்கா இராணுவ சிப்பாய் ஒருவரினால் எடுக்கப்பட்டவை என்று சனல் - 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசத்தினுள் கண்மூடித்தனமான - அகோர - எறிகணை மற்றும் விமான தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொண்டதை அடுத்து, அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகாயங்களுடன் திக்குத்திசை தெரியாது ஓடினர். இதன்போது, இராணுவத்தினரால் பெருந்தொகையானவர்கள் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர்.


மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment