Thursday, May 20, 2010

பிரபாகரனின் இளைய மகன் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் – சிங்கள இராணுவ வீரர் ஒப்பதல் வாக்குமூலம்














விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகனை உயிருடன் பிடித்து கொடூரமாக சித்திரவதை செய்து, பிரபாகரன் இருப்பிடத்தை அறிந்து கொண்ட பின்னர் அந்த சின்னஞ் சிறுவனையும் மிகக் கொடூரமாக ராணுவம் சுட்டுக் கொன்றதாக சிங்கள ராணுவ வீரர் ஒருவர் சானல் 4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட வீடியோவை சானல் 4 தொலைக்காட்சி முன்பே வெளியிட்டிருந்தது.

கண்களையும், கைகளையும் கட்டிய நிலையில் பின்னாலிருந்து மிருகத்தனமாக தலையில் சுட்டு அந்தத் தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். இது உண்மையான வீடியோதான் என பின்னர் நிரூபிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அந்த வீடியோ தொடர்பாக மேலும் ஆதாரங்களை பெறும் வகையில் அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை ராணுவ சிப்பாய் மற்றும் போர் முனையில் இருந்த ராணுவ தளபதிகளில் ஒருவருடைய பேட்டியை தற்போது சானல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

மேலும், தமிழ் இளைஞர்களின் கைகளையும், கண்களையும் கட்டி துப்பாக்கிகளால் பின்னாலிருந்து கொடூரமாக ராணுவத்தினர் சுட்டுக் கொன்ற காட்சிகளை இந்த ராணுவ வீரர்தான் படம் பிடித்து தங்களுக்கு அளித்ததாக சானல் 4 தெரிவித்துள்ளது.

பேட்டியில் அந்த ராணுவ வீரர் கூறுகையில்,

மேலும் படிக்க இங்கே படிக்கவும்

No comments:

Post a Comment