Saturday, May 15, 2010

நெஞ்சம் நடுங்கும் மே-16,17,18













உரிமையை இழந்தோம், உடமைகள் இழந்தோம், கொத்துக்கொத்தாய் உயிர்களையும் இழந்தோம். பல்லாயிரக் கணக்கில் நம் தமிழ் ஈழ உறவுகள் அழிக்கப்பட்ட அந்த கொடிய நாட்களைத் தாண்டி நாம் ஓராண்டு காலம் பயணித்து விட்டோம். கால ஓட்டத்திலும் கூட கரையாத குருதிக் கறைகள் நம் நெஞ்ச மெங்கும் அப்பிக்கிடக்கின்றன.

முன்னும் பின்னும் உலகம் பார்த்திராத வகையில் முப்படைகளையும் கொண்டு விளங்கியது நம்தமிழ் ஈழப் புலிப்படை. எந்த ஒரு விடுதலைப் போராட்டத்தையும் குறைத்து மதிப்பிடுவது நம் நோக்கமன்று. எனினும் சோவியத்தில், கியூபாவில், வியட்நாமில், பாலஸ்தீனத்தில் என உலகின்எந்த ஒரு மூலையிலும் முப்படை அமைத்துப் போராடிய விடுதலை அணிகள் இருந்ததில்லை. ஆனால் இந்த வலிமையே உலகின் கண்களை உறுத்தத்தொடங்கிற்று.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment