Monday, May 3, 2010

“நான் படித்த பள்ளி இதுவரை என்னை கெளரவிக்கவில்லை” – இயக்குநர் பாரதிராஜாவின் வருத்தம்..!

“நான் படித்த பள்ளி இதுவரையில் என்னை அழைத்து கெளரவிக்கவில்லை” என்று இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.



வருடந்தோறும் தொழிலாளர் தினமான மே 1-ம் தேதியன்று பெப்ஸி என்றழைக்கப்படும் திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு சினிமா துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பது வழக்கம்.

அந்த வரிசையில் இந்தாண்டுக்கான சாதனையாளர் விருதினை இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு வழங்கியது பெப்ஸி அமைப்பு. இதற்கான விழா கடந்த 1-ம் தேதியன்று தி.நகர், நடிகர் சங்கத்தில் நடந்தது.

அப்போது விருதை பெற்றுக் கொண்டு பேசிய பாரதிராஜா, “நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.. என் வாழ்க்கையில் இது போன்ற மகிழ்ச்சியான நாள் இதுவரையிலும் இருந்ததில்லை. சினிமாவின் அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய பெப்ஸி அமைப்பு எனக்கு அளித்துள்ள இந்த விருதை நான் இதுவரையில் பெற்றுள்ள விருதுகளில் முதல் விருதாக நினைக்கிறேன்..

நான் திரையுலகில் இத்தனை ஆண்டுகள் நீடித்து பல நல்ல திரைப்படங்களைக் கொடுத்து, சமூகத்தில் ஒரு நல்ல அந்தஸ்தில் பெயர் சொல்லும்படியாக இருந்தும் நான் பிறந்து வாழ்ந்த மண்ணில், எனக்கு கல்வியறிவு கொடுத்த நான் படித்த பள்ளி மட்டும் இன்றுவரையிலும் என்னை அழைத்து கெளரவப்படுத்தியதில்லை.

அதனால் தொழிலாளர்களாகிய நீங்கள் சாதனையாளர் என்று கருதி எனக்களித்துள்ள இந்த விருதை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்..” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்

2 comments:

  1. ஏன் ? என்ன காரணம்?

    ReplyDelete
  2. // எனக்கு கல்வியறிவு கொடுத்த நான் படித்த பள்ளி மட்டும் இன்றுவரையிலும் என்னை அழைத்து கெளரவப்படுத்தியதில்லை.//

    அந்தப் பள்ளிக்கு ஒரு கழிப்பிடமாவது கட்டிக் கொடுங்கள். கண்டிப்பாக அழைத்து கவுரவிப்பார்கள்.

    அதற்கேற்ற பணவசதி கண்டிப்பாக உங்களிடம் இருக்கும் என்று நினைக்கிறேன்.


    முடிந்தால் சில வகுப்பறைகள் சுற்றுச் சுவர், அங்கு படிக்கும் மிக ஏழ்மையான சில மாணவர்களின் மேற்படிப்புச் செலவுகள் கூட ஏற்றுக் கொள்ளலாம். மனமிருந்தால் மார்க்கமுண்டு

    ReplyDelete