Wednesday, May 12, 2010

பார்வதியம்மாள் மீது தினமலர் அவதூறு; கண்டனத்தைப் பதிவு செய்யுங்கள்













காலையில் தினமலர் செய்தித் தாளைப் பிரித்ததும் எனக்கேற்பட்ட உணர்வுகளை என்னவென்று சொல்வது! தினமலரின் வக்கிரத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பார்வதியம்மாள் வருகைக்கு நிபந்தனைகள் விதிக்கவில்லை (அடப்பாவிகளா?) என்ற ரீதியில் முதல்வர் கருணாநிதி பேரவையில் பேசிய செய்தி வெளியாகியிருந்தது. அந்தச் செய்தியில் தலைப்பு முதற்கொண்டு செய்தியில் எல்லா இடத்திலும் ‘பார்வதி‘ என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

அதுவும் கருணாநிதி பேச்சிலும் பேர‌வை உறுப்பின‌ர்கள் பேசியதாக வெளியான கருத்துகளிலும் ‘பார்வதி’ என்றே குறிப்பிட்டிருந்தார்களாம் என்று சப்பை கட்டு கட்டுகிறது தினமலர். உண்மையில் அவர்கள் அப்படி சொல்லவில்லை. பார்வதியம்மாள் என்றுதான் குறிப்பிட்டார்கள்.

‘பார்வதி என்ற குறிப்பிட்டால் போதும் அம்மாள் என்று குறிப்பிட அவறொன்றும் நமக்கெல்லாம் அம்மா இல்லை’ என்ற ரீதியில் தினமலர் நிர்வாகம் நிருபர்களுக்கு உத்தரவிட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை (எல்லாம் அங்கிருப்பவர்கள் சொல்லும் தகவல்கள்தான்).

ஒருவருடைய பெயரை மாற்றி குறிப்பிடும் அளவுக்கு அவர் மீது வெறுப்பு இருக்கும் பட்சத்தில் அவரைப் பற்றிய செய்தியை வெளியிட வேண்டிய அவசியம் என்ன வந்தது?
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment