Showing posts with label அனுப‌வம். Show all posts
Showing posts with label அனுப‌வம். Show all posts

Thursday, July 22, 2010

ஈழப் போராட்ட வரலாறு - 6: 1953ஆம் ஆண்டின் மாபெரும் வேலை நிறுத்தம்














1952 இல் ஆட்சியமைத்த யு.என்பி.யின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் நியோ லிபரல் கொள்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தைக் கிளப்பியது. இலங்கையின் மாபெரும் வேலை நிறுத்தத்துக்கு வழிசமைத்த இந் நிதியமைச்சர் (பின்னை நாள் பிரதம மந்திரியும் ஜனாதிபதியும்) நாடு கண்ட மிக மோசமான வலதுசாரிகளிலொருவர். பொருளாதாரச் சரிவுவை ஏற்படுத்தியது, தொழிலாளர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்களை நிகழ்த்தியது, ஊழலை அதிகரித்தது, அரசியல் வன்முறைக் குழுக்களை வளர்த்தது, கோரமான இனவாதத்தை வளர்த்தது, தமிழ்பேசும் சிறுபான்மையருக்கு எதிரான கோர வன்முறையைத் தூண்டியது, யுத்தத்தை ஆரம்பித்தது என்று பல்வேறு அழிவுகளுக்கு வித்திட்ட நாசகார சக்திகளின் தலையாய பிரதிநிதியிவர்.


இடதுசாரிகள் மேல் இவர் காட்டிய காழ்ப்புணர்வும் வெறுப்பும் நாடறிந்தவொன்று. L.S.S.P யினர் பாராளுமன்றத்தில் அவருடன் அடிக்கடி சண்டை போட நேரிட்டது. L.S.S.P உறுப்பினர்கள் பேசும் போது ஒவ்வொரு முறையும் அத்துமீறிக் குறுக்கிட்டு அனாவசியமான தனிப்பட்ட தாக்குதல்களைச் செய்வதும் கிண்டல் கதைகள் பேசுவதும் இவர் வழக்கம். தமது அரசியல் நலனைத் தக்கவைக்க வன்முறைக் குழுக்களைத் தமக்குப் பின்னால் செயற்பட வைத்த யு.என்.பி தலைவர்களின் முன்னோடியிவர்.

ஏகாதிபத்தியம் சார் கொள்கைகளை மும்முரமாக அமுல் படுத்தியவர்களிலும் முதலிடத்தை இவருக்கு வழங்கலாம். அமெரிக்க வலதுசாரிப் பொருளாதாரவாதியான ஜோன் எக்சடரின் உதவியுடன் இலங்கையின் முதலாவது மத்திய வங்கியை உருவாக்கி அதற்கு ஜோன் எக்சடரையே கவர்னராகப் போட்டதும் இவரது கைங்கரியமே. மேற்கத்தேய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகளுடன் மிக நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டவர்களிலும் இவரே முதன்மையானவர். கொழும்பு விமானத்தளங்களை அமெரிக்கா பயன்படுத்த வழியேற்படுத்திக் கொடுத்தவருமாவார்.

தனது கொள்கைகளை நிறைவேற்ற இடதுசாரிகள் பெருந்தடையாக இருந்தமையால் அவர்களை இவர் மனதார வெறுத்தார். அதனால் தன்னால் முடிந்த எல்லாக் குறுக்கு வழிகளிலும் அவர்களைத் தாக்கினார். ஒரு சர்வாதிகாரியின் அனைத்துக் குணாம்சம்களையும் கொண்ட இந்த நிதியமைச்சர் தன் வர்க்க நலனுக்காக நாட்டைப் பொருளாதாரக் குழப்பத்துக்குள் தள்ளினார். 1952இல் UNP வென்ற கையுடன் விவசாயிகளுக்கான நிவாரணம் நிறுத்தப்பட்டது. வறியவர்களுக்கான உணவுச் சலுகைகள் குறைக்கப்பட்டன. பண்டங்களின் விலை உயர்த்தப்பட்டது. உள்நாட்டு உற்பத்தி குறைக்கப்பட்டு இறக்குமதி அதிகரிக்கப்பட்டமையால் வெளிநாட்டுச் சேமிப்பு நிதியம் வேகமாக வற்றத் தொடங்கியது. அமெரிக்க மேற்கத்தேய நியோலிபரல் கொள்கைகள் நடைமுறைக்கு வந்தன.

1950இல் தொடங்கிய கொரியா நாட்டு யுத்தத்தின் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி முடிவுக்கு வரத் தொடங்கயிருந்தது. பனியுத்தத்தின் காரணமாக இலங்கையின் மிகச்சிறந்த இயற்கைத் துறைமுகமான திருகோணமலைத் துறைமுகம் மிக முக்கியத்துவம் பெற்றது. இந்தியாவின், சோவியத் யூனியன் ஆதரவு காரணமாக அமெரிக்காவுக்குத் தெற்காசியாவில் இராணுவத்தளம் ஒன்றின் தேவை முக்கியமானது. இத்தருணத்தில் இலங்கை பண்டங்களுக்குக் கூடுதற் பணம் வழங்கிய சீனாவுடன் உறவை முறிக்கும்படி அமெரிக்கா, இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் வழங்கி வந்தது.

சில பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தி தமக்குச் சாதகமான கொள்கைகளை அமுல்படுத்தும்படி தூண்டியது. அவர்களுக்கு அடித்த அதிஷ்டமாக ஜே.ஆர் ஜெயவர்த்தனா அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகச்சிறந்த நண்பனாக இலங்கையைக் குதறிக் குலைக்க முன்வந்தார். பல அதிகாரங்களைச் ‘சுதந்திரத்துக்குப்’ பின்னும் தம் கைவசம் வைத்திருந்த இலங்கைக்கான பிரித்தானியக் கவர்னர் இடதுசாரிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படி தூண்டினார். அமெரிக்க- சோவியத் பனியுத்தம் இலங்கையிலும் தனது பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது இலாபகரமாக இருந்த போதும், அதை நிறுத்தி மேற்கிலிருந்து அதிகூடிய விலையில் பண்டங்களை இறக்குமதி செய்ய UNP அரசு முடிவு செய்தது. இலங்கைப் பொருளாதாரம் ஜெயவர்த்தனாவின் கையில் ‘குரங்கின் கை பூமாலையானது’. வறிய விவசாயிகளின் நிவாரணத்தை நிறுத்திய அதே தருணத்தில் அரசு தனியார் வியாபாரிகளுக்குச் சலுகைகளை வழங்கியது. திடமாக இருந்த இலங்கைப் பொருளாதாரம் ஒரு வருடத்திற்குள் தலைகீழானது.

ஆனால் ஆளும் வர்க்கம் இலங்கைத் தொழிலாளர்களின் சக்தியைக் குறைத்து மதிப்பிட்டு விட்டனர். அரிசி நிவாரணம் நிறுத்தப்பட்டமைக்கு எதிராக 1953ஆம் ஆண்டு யூலை 20இல் யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் பங்குபற்றினர். இக்கூட்டம் ஐந்து மணித்தியாலத்துக்கும் மேலாக நீடித்தது. அடுத்தநாள் 12 000 க்கும் மேற்பட்ட கொழும்புத் துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

23ஆம் திகதி யூலை வெள்ளவத்தை Spinning and waving தொழிலாளர்கள் அரைநாள் வேலை நிறுத்தத்தைக் கடைப்பிடித்தனர். கொண்டுவரப்பட இருக்கும் வரவுசெலவுத் திட்டத்திற்கெதிராக வாக்களிக்கும்படி 8760 பேர் கையெழுத்திட்ட பெட்டிசன் காங்கேசன்துறை பாராளுமன்ற உறுப்பினர் நடேசனிடம் கையளிக்கப்பட்டது. கண்டி, யாழ்ப்பாணம், கோப்பாய், ருவானவெல்ல என்று பல இடங்களில் பெரும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. வரும் ஆகஸ்ட் 6ம் திகதி பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் என்ற கோரிக்கை எல்லாக் கூட்டங்களிலும் நிறைவேற்றப்பட்டது.

இத்தருணத்தில் வலதுசாரி ஊடகங்கள் இடதுசாரிகளைத் தொடர்ந்து தாக்கின. ‘சிவப்புப்’ பயப்பீதி வதந்திகளைப் பரப்பினர். ஆகஸ்ட் 6ஆம் திகதி சோவியத்யூனியனின் தலைவர் தமது கொள்கை மாற்றம் பற்றி அறிவிக்க முடிவெடுத்திருக்கும் நாள் என்றும் அதனால் தான் இடதுசாரிகள் வேலை நிறுத்தத்துக்குத் தூண்டுகின்றனர் என்றும் வதந்திகள் பரப்பப்பட்டன. 1953 யூலை 26இல் சிலோன் வானொலியில் தொழிலாளர்களுக்குப் பின்வருமாறு ஒரு எச்சரிக்கை அனைத்து மொழிகளிலும் ஒலிபரப்பப்பட்டது. ‘ அரசுக்கெதிரான வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அல்லது அரசுக் கொள்கையை மாற்றக்கோரி ஊர்வலத்தில் , போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்கள் அனைவரும் தாமாகத் தம் வேலையிலிருந்து விலத்தி விட்டார்கள் என்று கருதப்படுவர்.

அவர்கள் மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டார்கள்’. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தடுக்க இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டது. ஆனால் இந்த மிரட்டலுக்கு அடிபணிய மறுத்த தொழிலாளர்கள் வலதுசாரி ஊடகங்களின் சிவப்பு பயப்பரப்பலைப் புறக்கணித்து வேலை நிறுத்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். இதை எதிர்க்க எல்லாக குறுக்கு வழிகளையும் நாடிய ஜெயவர்த்தனா ‘பொருளாதாரத்தின் பெரும்பகுதியை தமிழர்கள் எடுத்துக் கொள்வதால் தான் இந்தப் பிரச்சனை’ என்ற பிரச்சாரத்தையும் தூண்டிவிட்டார்.

வலதுசாரி வரலாற்றாசிரியர்கள் ஜெயவர்த்தனாவைப் புத்திசாலி என்று புளுகுவதையும் இலங்கைப் பாடப்புத்தகங்களில் அவர் மாபெரும் தலைவராகப் போற்றப்படுவதையும் நாமறிவோம். ஆனால் இலங்கைத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு ‘மாபெரும் முட்டாள்’. சமுதாயம் பற்றி ஒரு மண்ணும் தெரிந்திராத ‘மடையன்’. அவர்கள் 1953ஆம் ஆண்டு இதைத் தெட்டத் தெளிவாக ஜெயவர்த்தனவுக்கு விளங்கப்படுத்தினர்.

1947ஆம் ஆண்டு பொது வேலை நிறுத்தத்தை ஒடுக்கிய அதே வலதுசாரிக் குழு தான் இத்தருணம் ஆட்சியிலிருந்தது. வேலை நிறுத்தம் நடக்கும் பட்சத்தில் முன்பு போலவே இத்தருணமும் தாம் தொழிலாளர்களை முறியடிக்க முடியும் என்று அவர்கள் நம்பினர். இராணுவத்தைக் கொண்டு இலங்கைத் துறைமுகத்தைக் கைப்பற்றித் தொழிலாளர்களைப் பொலிஸ் பாதுகாப்பில் வேலைக்குக் கொண்டு செல்வதன் மூலம் பொது வேலை நிறுத்தத்தை முறியடிக்க அவர்கள் திட்டமிட்டனர்.

வேலை நிறுத்த முன்னெடுப்புகள் பலப்பட அதிகாரவர்க்கத்தின் பயமும் வலுப்படத் தொடங்கியது. அதன் பலனாக UNP க்குள் பல முரண்பாடுகள் வெடித்தது. ஆர்.பிரேமதாச போன்றவர்கள் ஜே.ஆரின் பொருளாதார மொக்குத்தனத்தை ஏற்றுக் கொண்டனர். இருப்பினும் பொருளாதாரப் பிரச்சனையை இடதுசாரிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர் என்று குற்றஞ் சாட்ட அவர் தயங்கவில்லை. போதாக்குறைக்கு அவர்கள், மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று மோசமான கேலிக்கிடமான வழி முறைகளைப் போதித்தனர்.

‘மக்கள் செலவற்ற மற்றும் ஆடம்பரமற்ற சாதாரண வாழ்க்கைக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று பிரேமதாசா கேட்டுக்கொண்டார்! விலைவாசி அதிகரிப்புக்குக் காரணமானவர்கள் தம் ‘மாளிகைகளில்’ ‘அனாவசிய செலவுகளில்’ ஈடுபட்டிருக்க வறிய மக்கள் செலவைக் குறைக்க வேண்டும் என்ற சில்லறைக் கோரிக்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் எடுபடவில்லை. பொது வேலைநிறுத்தத்துக்கு முதல்நாள் பிரேமதாச பின்வருமாறு ஒரு சவால் விட்டார்.

"இந்த ஆண்டின் மிகப்பெரிய பகிடியாக இந்தக் கர்த்தால் இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இந்தச் சிவப்புச் சட்டைகாரர்களுக்கு ஒன்றைத் துணிந்து சொல்வேன். உங்களின் கதையை மக்கள் செவிமடுக்கலாம் ஆனால் அவர்கள் நீங்கள் சொல்வதில் ஒரு சொட்டையும் நம்பப்போவதில்லை."

பிரேமதாசவின் இந்தத் ‘தீர்க்க தரிசனம்’ நிறைவேறவில்லை. அதற்கு மாறாக ஆயிரக்கணக்கில் மக்கள்-தொழிலாளர்கள் வந்தனர். செவிமடுத்தனர். செயலில் இறங்கினர். கம்யூனிச கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த சில தொழிற்சங்கங்களில் ஏற்பட்ட சிறு தாமதத்தின் பின் பொது வேலை நிறுத்தம் ஆகஸ்ட் 12இல் நிகழவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆகஸ்டு 12ல் நாடு முழுவதும் ஸ்தம்பித்தது.

தொழிலாளர்களின் ஒற்றுமையும் பலமும் LSSP தலைமைகளுக்குக் கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏராளமான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்குபற்றினர். போக்குவரத்தைத் தொடர அரசு இராணுவத்தை வரவழைத்து சாரதிகளாகப் பணியாற்ற விட்டது. கொழும்புத் துறைமுகத்தையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தது. இதையும் மீறி நாடு காணாத அளவில் பொது வேலை நிறுத்தம் எல்லா இடங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது. இந்தியப் பொதுத்தொழிலாளர் சங்கச் செயலாளரும் LSSPயின் முக்கிய தலைமை உறுப்பினருமான பாலத்தம்பு இந்த வேலை நிறுத்தத்தைப் பற்றி பின்வருமாறு எழுதியிருந்தார்.

‘முதலாளித்துவ அரசை எதிர்ப்பது மட்டுமல்ல அதை உடைத்து விழுத்த முடியும் என்ற பாடத்தை இந்தப் பொது வேலை நிறுத்தம் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வறிய மக்களுக்கும் கற்றுக்கொடுத்தது. தாம் நேரடி போராட்டத்தில் இறங்கும்போது ஆளும்வர்க்கத்தால் அவர்களை அசைக்க முடியாது என்பதை அவர்கள் நிரூபித்தனர். ஆகஸ்ட் 12 ஒரு மறக்க முடியாத நாள். மகரகாம, பேரளகாமுவ என்று பல இடங்களில் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நிகழ்ந்த நாளிது. பொலிஸ், இராணுவம் மட்டுமல்ல ஒட்டு மொத்த அதிகார வர்க்கமும் ஒன்றாகச் சேர்ந்து வந்தால் கூட அவர்கள் பலம் ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் பலத்துக்கு நிகராக முடியாது என்று நிறுவிய நாளது. வேலை நிறுத்தத்தைக் காப்பாற்ற இராணுவ-பொலிசை எதிர்கொள்ளவும் தொழிலாளர் தயாராகிய – அதற்கு உயிரைக் கொடுக்கக்கூட முன்வந்து ‘கர்த்தால் கதாநாயகர்களாக’ மாறத் தொழிலாளர்கள் தயாரான நாளது.

ஆனால் அதே நாள் வலதுசாரி ஊடகங்கள் கற்பனைக் கதைகளைப் பிரசுரித்தன. ‘வழமைபோல் தொழில் நடந்தேறியது’ என்று சிலோன் டெய்லி நியூஸ் தலையங்கம் எழுதியது. ‘வழமையான சூழல் நிலவியது’ என்ற தலைப்பில் அவர்களது ஆசிரியர் தலையங்கம் எவ்வாறு வேலை நிறுத்த நாள் ஒரு சாதாரண நாளாக இருந்தது என்று வர்ணித்தது. இந்தச் ‘சாதாரண நாளில்’ அசாதாரண முறையில் UNP அமைச்சரவை அவசர அவசரமாகக் கொழும்புத் துறைமுகத்தில் நின்ற HMS Newfound land கப்பலில் கூடியது! பயக்கெடுதியில் உடனடியாக அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்திய அமைச்சரவை, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் ஊரடங்குச் சட்டத்தையும் அமுலுக்குக் கொண்டு வந்தது.

வேலை நிறுத்த நாளைச் ‘சாதாரண நாள்’ என்று வர்ணித்த அதே பத்திரிகைகள் அடுத்த நாள் அவசர காலச் சட்டம் என்றால் என்ன என்று விளக்கவுரைகள் எழுதின. அடுத்தடுத்த நாட்களில் வலதுசாரி பத்திரிகைகள் முழுவதும் எவ்வாறு அவசரகாலச் சட்டத்தையும் மீறி நாடெங்கும் வேலை நிறுத்தம் தொடர்கிறது என்ற செய்திகளை வெளியிட்டன. வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தும் புறக்கணித்துப் பிரச்சாரம் செய்வது அவர்களுக்கு முடியாத காரியமாகிப்போனது.

வேறு வழியின்றி அரசு ஆகஸ்டு 15இல் இராணுவத்தின் முழு உதவியையும் நாடியது. வேலை நிறுத்த நாளைச் சாதாரண நாள் என்று தலையங்கம் எழுதிய அதே பத்திரிகை லண்டன் ரைம்சை மேற்கோள் காட்டி 19 ஆகஸ்டில் தொழிலாளர்களின் அதிருப்தியைச் சரியாக பாவித்த LSSP மிக வெற்றிகரமாக வேலை நிறுத்தத்தை ஒழுங்கமைத்திருந்தது’ என்று எழுதவேண்டியதாயிற்று.

- சேனன்

தொடரும்....

நன்றி : கீற்று

ஈழப் போராட்ட வரலாறு பற்றி மேலும் படிக்க...

Thursday, July 1, 2010

டிவிட்டரில் இணைந்த அமீர் கான், இரண்டு மணி நேரத்தில் 47,019 விசிறிகள்


பாலிவுட் நடிகரான அமீர் கான் இன்று அதிகாரபூர்வமாக டிவிட்டரில் இணைந்தார்.

டிவிட்டரில் இணைந்த இரண்டு மணி நேரத்தில் அவர் 47,019 விசிறிகளை சம்பாதித்துக் கொண்டார். இது அமிதாப்பச்சனின் இரண்டு மணி நேர சாதனையைவிட அதிகமாகும்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்..

விஜய்யின் வேலாயுதம் படத்தை தொடக்கி வைக்கும் ஜாக்கி சாண்


தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஏற்கனவே தசாவதாரம் படத்தை ஜாக்கி சாண் மூலம் தொடங்கி வைத்தது நினைவிருக்கலாம்.

அவர் தற்போது விஜய்யை வைத்து தயாரிக்கும் வேலாயுதம் படத்தையும் ஜாக்கி சாண் தொடங்கி வைக்கிறார்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்..

Sunday, June 6, 2010

ஈழத்தமிழர்கள் வாழ்வு செய்தியாகவே முடியவேண்டாம்















ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரம் எப்படி ஆகிக்கொண்டிருக்கிறது. என்பது பற்றிய செய்தி. எவ்வளவு இருக்கிறதோ, அதை விட பலமடங்கு ஈழத்தைப் பற்றிய அதிர்ச்சி செய்திகள் உலகம் முழுவதும் சென்று, செய்தியாகவே முடிந்துகொண்டிருக்கிறது.

கிளிநொச்சி, கணேசபுரத்தில் அடுத்தடுத்து மனித புதைகுழிகள் தோண்டப்படுகின்றன, அதன் மூலத்தை அறிந்து உண்மையை வெளிக்கொண்டுவர எவராலும் எந்த நாட்டாலும் முடியவில்லை, எந்த விடயத்தை தொட்டு செய்தி வந்ததோ அந்த விடயத்தை அப்படியே விட்டுவிட்டு, செய்தியை மட்டும் செய்தியாகவே உலகம் கை கழுவிக்கொண்டிருக்கிறது. தமிழனின் இன்றைய செய்தி நாளை மறக்கப்படுகிறது, அல்லது மறக்கடிக்கப்படுகிறது. நாளை வேறு ஒரு செய்தி பெரிதாகி முந்தய செய்தி அதற்குள் புதைந்து மறைந்து விடுகிறது, இதுதான் ஈழத்தமிழனின் யதார்த்த வாழ்க்கை நிலை.

இந்த நிலை தொடருமானால் பாழாய்ப்போன தமிழனின் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும், இதற்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டுமாயின் உலகம் காரணத்தை ஆராய்ந்து மனிதாபிமானமான நீதியான தீர்வின் மூலம் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பங்கள் சாதகமாக வந்தாலும் எவரும் ஒற்றுமையுடன் அதை தீர்த்து வைப்பதற்கான முனைப்பை இதுவரை காட்டி நிற்கவில்லை, ஈழப்பிரச்சினையை எவராவது தீர்த்து வைக்காத பட்சத்தில் அது விபரீதமான ஒரு முடிவை நோக்கிச் சென்று தானாக ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Friday, May 14, 2010

பார்வதியம்மாள் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை உண்மையில் எழுதியது யார்..? – உண்மை அம்பலம்













மலேசியாவில் இருந்து பார்வதியம்மாள் தனது சிகிச்சைக்காக கலைஞருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதனை தமிழக அரசு வெளியிட்டது.. ஆனால் அந்தக் கடிதம் பார்வதியம்மாளால் எழுதப்பட்டோ அல்லது தெரிவிக்கப்பட்டோ வெளியிடப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார் வைகோ.

சென்னையில் மே 11-ம் தேதி ம.தி.மு.க.வின் இலக்கிய அணி சார்பில் பாவேந்தர் விழா நடந்தது. அதில் பேசிய வைகோ, “மாவீரனைப் பெற்றெடுத்த தாய் எழுதியதாக கடிதம் ஒன்று வெளியிடப்பட்டதே.. அதை யார் தயாரித்தது..? நான் திருச்சியில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்து தரும்படி அன்போடு வேண்டுகிறேன்.. தங்கள் உதவியை என்றும் மறக்க மாட்டேன். நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன். நன்றியுடன்.. உங்கள் உடன்பிறப்பு.. திருவேங்கிடம் வேலுப்பிள்ளை பார்வதி என்று இருக்கிறதே..

பார்வதியம்மாள் என்ன தி.மு.க. வட்டச் செயலாளரா..? அவர் உடன்பிறப்பு என்று எழுதுவாரா..? இக்கடிதத்தை இங்கே தயாரித்தது யார்..? சில காரணங்களுக்காக நான் இதற்கு மேல் இது பற்றி பேச விரும்பவில்லை” என்றார்.

ஆனாலும் இது தொடர்பாக விசாரித்ததில் கிடைத்தத் தகவல்கள் வருமாறு :

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Saturday, May 8, 2010

“தீவிரவாதிகளை தூக்கலிடக் கூடாது. உயிருடன் வைத்திருந்து சித்ரவதை செய்ய வேண்டும்” – நடிகை மீனாட்சி ஆவேசம்..!


“நாட்டில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகளை உடனேயே தூக்கில் போட்டு விடக்கூடாது.. அவர்களை உயிருடன் வைத்திருந்து சிறுகச் சிறுகச் சித்ரவதை செய்ய வேண்டும்” என்று நடிகை மீனாட்சி கருத்து தெரிவித்துள்ளார்.




‘கருப்பசாமி குத்தகைதாரர்’, ‘டாக்ஸி நம்பர் த.நா.4777’, ‘ராஜாதிராஜா’, ‘அகம்புறம்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை மீனாட்சி. தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் ‘மந்திரப்புன்னகை’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மும்பையில் கடந்தாண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின்போது உயிருடன் பிடிபட்ட கசாப்பிற்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து தனது `பேஸ்புக்` பக்கத்தில் மீனாட்சி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, May 5, 2010

பிறந்த நாள் பார்ட்டி – கலக்கல் காக்டெயிலுடன் கொண்டாடினார் த்ரிஷா..!

தனது பிறந்த நாளை காலையில் ஒருவிதமாகவும், மாலையில் வேறொரு விதமாகவும் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் நடிகை த்ரிஷா.


நடிகை த்ரிஷாவுக்கு நேற்றுதான் பிறந்த நாள். இந்த பிறந்த நாளை மிகவும் வித்தியாசமாகக் கொண்டாடியுள்ளார். சாதாரணமாக வெயில் காலத்தில் மழையடித்தால்கூட பார்ட்டி வைக்கும் கலாச்சாரத்தில் திளைப்பவர் த்ரிஷா. பிறந்த நாள் என்றால் விட்டுவிடுவாரா என்ன..?

நள்ளிரவே, வீட்டை அலங்கரித்து, பெரிய கேக் ஆர்டர் செய்து நண்பர்கள் மற்றும் தாயார் உமாவின் முன்னிலையில் நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி மகிழ்ந்தாராம்.

பொழுது விடிந்ததும், உதவும் கரங்கள் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கும் போய், அங்கிருக்கும் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிட்டுள்ளார்.

மாலை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் ஆடம்பரமான கலக்கல் காக்டெயில் பார்ட்டிக்கு த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன், அவருடைய தங்கை வினயா கிருஷ்ணன், காஸ்ட்யூம் டிஸைனர் ப்ரியாமணிகண்டன், த்ரிஷாவின் நீண்ட நாள் பாய்பிரெண்ட் சிட்னி ஸ்லேடன் என்று த்ரிஷாவுக்கு நெருக்கமான நண்பர்கள், திரையுலகப் புள்ளிகள் பங்கேற்றுள்ளனர்.

பிறந்த நாள் குறித்து த்ரிஷா கூறுகையில், "வாழ்க்கையில் மறக்க முடியாத பிறந்த நாள் இது. 400 குழந்தைகளுடன் பயனுள்ள முறையில் இந்த நாளைக் கொண்டாடினேன். அதற்கு முன்பு என் அம்மா செய்த பிறந்த நாள் விழா ஏற்பாடுகளில் ஒரு இளவரசியைப் போல உணர்ந்தேன்.

இந்தப் பிறந்த நாள் பல வகையிலும் விசேஷமானது. தொடர்ச்சியான வெற்றிகள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் எனது முதல் இந்திப் படம் வெளியாகிறது. இதெல்லாவற்றுக்கும் மேல் கமல்ஹாஸனுடன் எனது முதல் படம் விரைவில் துவங்க உள்ளது...", என்றார்.

த்ரிஷாவுக்கு நமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம்..!

Tuesday, May 4, 2010

விஜய் டிவி சீரியலில் நதியா..!


தமிழகத்தில் ஒரு காலத்தில் சேலை, புடவை, ஜிமிக்கி, தோடு, மூக்குத்தி என்று சகலத்திலும் தனது பெயரை பதிய வைத்துவிட்டு குடும்பப் பெண்ணுக்குரிய அடையாளமாகத் திகழ்ந்த நதியா தற்போது தொலைக்காட்சி மூலம் அதே பெண்களை நோக்கி வருகிறாராம்..!

கடைசியாக நதியா நடித்த ‘பட்டாளம்’ திரைப்படம் சரியாகப் போகவில்லையென்றாலும், அதன் பின் நதியாவுக்கு அவருக்கு பிடித்தாற்போன வேடங்கள் வரவில்லையென்பதால் நடிக்காமல் இருந்தார். தொடர்ந்து படிக்க இங்கே அழுத்தவும்.

நயன்தாரா பிரபுதேவாவுக்கு காதல் பரிசாக அளித்த 1 கோடி ரூபாய்..!



இப்போதெல்லாம் லைப் பார்ட்னர் என்கிற வார்த்தைக்கு நிஜ பார்ட்னர்களாக இருப்பவர்களே மதிப்பதில்லை. அப்படியிருக்கும்போது கோயிங் ஸ்டெடியில் இருப்பவர்களிடம் நிஜமான காதலை எதிர்பார்க்க முடியுமா என்ன..?

முடியும் என்றிருக்கிறார் நயன்தாரா. எந்த முடிவை எடுத்தாலும் அதில் உறுதியாக இருப்பதில் உறுதியானவராக இருக்கிறார் நயன்தாரா. எத்தனை எதிர்ப்புகள், பேச்சுக்கள் வந்தபோதிலும் பிரபுதேவாவை லவ்வியதில் அவர் காட்டிய உறுதியைப் பார்த்து சக நடிகைகளே ஆச்சரியப்பட்டுவிட்டார்கள்.

தனது காதல் வெறுமனே ஸ்டண்டுக்காக மட்டுமே இல்லை என்று சொல்லும்படியாக தற்போது ஒரு நல்ல காரியத்தை பிரபுதேவாவுக்காக செய்திருக்கிறாராம் நயன்ஸ். தொடர்ந்து படிக்க இங்கே அழுத்தவும்

Thursday, April 29, 2010

குஷ்பூ வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் முழு விபரம்..!

நடிகை குஷ்புவுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, “திருமணத்துக்கு முந்தைய `செக்ஸ்' உறவு சட்டபூர்வ குற்றம் அல்ல” என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

திருமணத்துக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பான `செக்ஸ்' உறவு கொள்வது தவறு இல்லை என்று, பிரபல நடிகை குஷ்பு கருத்து தெரிவித்து இருந்தார். கடந்த 2005-ம் ஆண்டில் வெளியான குஷ்புவின் இந்த கருத்து தமிழ்நாட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.



அவருக்கு எதிராக பல்வேறு கோர்ட்டுகளில் 22 வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. அந்த வழக்குகளை தள்ளுபடி செய்யவேண்டும் என்ற குஷ்புவின் கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து குஷ்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் தீபக்வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகியோரைக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து நேற்று முன் தினம் தீர்ப்பு கூறியது. குஷ்புவுக்கு எதிராக தொடரப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

"பேட்டி ஒன்றில் குஷ்பு தெரிவித்த சொந்த கருத்துக்கு எதிராக கோர்ட்டில் கிரிமினல் வழக்கு தொடருவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தனிப்பட்ட முறையில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குஷ்புவின் கருத்து அமையவில்லை. இந்த வழக்குகள் உள்நோக்கம் கொண்டவை'' என்று, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தனர்.

3 நீதிபதிகள் கொண்ட `சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச்'சுக்காக நீதிபதி சவுகான் தீர்ப்பை எழுதி இருந்தார். தீர்ப்பு முழு விவரம் வருமாறு-

"திருமணத்துக்கு பிறகே `செக்ஸ்' உறவு என்பது நமது சமுதாயத்தின் பிரதான கருத்தாகும். அதே நேரத்தில், திருமணம் ஆகாமலேயே பரஸ்பரம் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி கிரிமினல் குற்றம் அல்ல என்று, இந்திய தண்டனை சட்டம் 497-வது பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

சாதாரணமாக தனது கருத்துக்களை வெளியிடும் ஒருவரை தண்டிப்பது குற்றவியல் சட்டத்தின் பணி அல்ல. அது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாகும். சட்டபூர்வமான குற்றம் இழைத்ததற்கான ஆதாரங்களை புகார்தாரர்கள் தாக்கல் செய்தால் மட்டுமே, வழக்கு தொடர்வதற்கான நடைமுறைகளை மாஜிஸ்திரேட்டுகள் தொடங்க வேண்டும்.

தவறான, சாரமற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுமை இழைப்பதாகிவிடும். நடிகை குஷ்புவுக்கு எதிரான புகார்கள், உள்நோக்கத்துடன் அரசியல் கட்சி நிர்வாகிகள் சார்பில் கூறப்பட்டு இருப்பதால், குற்றவியல் நடைமுறை சட்ட அமைப்பை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

ஆங்கில பத்திரிகைக்கு குஷ்பு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துகள் ஆபாசமானவையோ நற்பண்புகளுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவோ இல்லை. திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார், அவ்வளவுதான்.

எந்த ஒரு தனி மனிதருக்கோ, கூட்டாக பலருக்கோ அல்லது ஒரு அமைப்புக்கோ அந்த கருத்தை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடும் நோக்கில் அதை அவர் தெரிவிக்கவில்லை. அவதூறு வழக்கு சட்ட பிரிவின் கீழும் அவருடைய கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.

அதே நேரத்தில் குஷ்புவின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது உண்மைதான். திருமணத்துக்கு முந்தைய உறவு, சேர்ந்து வாழ்வது போன்ற சர்ச்சைகள் எழும்போது அதுபற்றி வெளிப்படையாக விவாதிக்கும் கலாசாரம் வேண்டும்.

திருமண பந்தம் என்பது இந்தியாவில் முக்கியமான சமூக சம்பிரதாயம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அதேபோல் சில தனி நபர்கள் மற்றும் அமைப்பினர் அதற்கு எதிரான கருத்துக்களையும் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். தனிநபர் சுதந்திரத்தில் குற்றவியல் சட்டத்தை அவசியமின்றி பயன்படுத்த முடியாது.

குஷ்புவின் கருத்தில் புகார்தாரர்களுக்கு ஆட்சேபனை இருந்தால், அதே வழியில் அவர்களும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மூலம் தங்கள் பதில் கருத்துக்களை தெரிவித்து இருக்கலாம். அதற்காக கிரிமினல் வழக்கு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இல்லை. குஷ்புவின் கருத்து இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டிவிடும் என்ற வாதத்தை ஏற்க முடியாது.

"திருமணத்துக்கு முந்தைய உறவுகள் அதிகரித்து வருவதால், இருவருடைய சம்மதத்துடன் நடைபெறும் அத்தகைய உறவுகளை சமூகரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் குஷ்புவின் கருத்தே தவிர, எல்லா வகையான `செக்ஸ்' தொடர்புகளுக்கும் அவர் பகிரங்கமாக ஆதரவு தெரிவிப்பதாக அர்த்தம் அல்ல.

குஷ்புவின் கருத்தை அப்படி தவறாக கருத வேண்டும் என்றால், `செக்ஸ்' தொடர்பாக வெளியிடப்படும் பல்வேறு செய்தி, கட்டுரைகளுக்காக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களையெல்லாம் கிரிமினல் குற்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும். இதை அமல்படுத்தவது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல.

ஒரு வாதத்திற்காக, குஷ்புவின் கருத்து, திருமணத்துக்கு முன்பு உறவு கொள்ள சில இளைஞர்களை தூண்டுவதாக கருதினாலும், அந்த செயல் கிரிமினல் குற்றம் அல்ல என்பதால் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது''.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

நடிகை குஷ்பு வழக்கு விசாரணையின்போது, திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வது குறித்து நீதிபதிகள் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

அந்த கருத்துக்களை நீதிபதிகளின் உத்தரவு என்று கருதி, அதற்கு எதிராக ஏராளமான பொதுமக்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு கடிதங்களை அனுப்பினார்கள். சிலர் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி கோரி இருந்தனர். சில கடிதங்களில், பாரதத்தின் புராண இலக்கியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தன.

தீர்ப்பில் இந்த தகவலை வெளியிட்ட நீதிபதிகள், பத்திரிகை மற்றும் டி.வி. ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்துப் இந்த கடிதங்களை பொதுமக்கள் எழுதி இருப்பதாக தெரிவித்தனர். எனவே, “இது போன்ற செய்திகளை வெளியிடும்போது பத்திரிகை மற்றும் ஊடகங்கள், மேலும் கவனமாகவும், பொறுப்பு - எச்சரிக்கை உணர்வோடும் வெளியிட வேண்டும்” என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

Wednesday, April 21, 2010

பார்வதி அம்மாளின் வலியை புரிந்து கொள்ளாத கருணாநிதியும் மன்மோகனும்














86 வயதில் முதுகுத்தண்டு வலிக்கு இராமச்சந்திராவில் படுத்து உயர்தர சிகிச்சை பெற்றுக்கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் , அனைத்திந்திய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுத்து உயர்தர சிகிச்சை பெற்ற 78 வயது இந்தியப் பிரதமர் மன்மோகனுக்கும் தெரியாதா முதுமையில் வரும் உடல் உபாதையின் வலியும், அந்நேரத்து மருத்துவத்தின் அவசியமும் ?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற ஒரே காரணத்துக்காக 80 வயது முதியவர் பார்வதியம்மாளை கொஞ்சமும் இரக்கமின்றி இந்த இருவரும் தலைமை ஏற்று இருக்கும் அரசுகளும் திருப்பியனுப்பியது எந்த விதத்தில் (அரசியல் லாபம் தவிர்த்து) நியாயம் என்று புரியவில்லை.

உங்களின் பார்வையில் பிரபாகரன் ஒரு தீவிரவாத இயக்கத்தின் தலைவர் என்றாலும் கூட, அவரை பெற்று எடுத்ததை தவிர பார்வதியம்மாள் என்ன தவறு செய்தார்? பிரபாகரன் பார்வதிய‌ம்மாளின் கருவில் இருந்தபோதே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவைராகவா இருந்தார்? அல்லது இப்படி ஒரு இயக்கம் வரும் , அதற்கு தலைமை ஏற்க ஒருவர் வேண்டும் என்பதற்காகவே கருவுற்று பார்வதியம்மாள் பிரபாகரனை பெற்றெடுத்தாரா?

ராஜிவின் கொலை , தமிழீழ விடுதலைப் புலிகள் , பிரபாகரனின் தாயார், சோனியாவின் ஆசை, அரசியல் லாபம் என்பதெல்லாம் விடுங்கள். ஒரு 80 வயது முதியவர், இராணுவ முகாமில் அடைக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டவர், கணவனை இழந்து வாடுபவர், உடலாலும் , உள்ளத்தாலும் சோர்ந்து போனவர் என்ற ஏதாவது காரணத்தை பார்த்தாவது அந்த அம்மையாருக்கு இங்கே சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதி கொடுத்திருக்கலாமே, நீங்கள் மனிதாபிமானம் உள்ளவர்களாக இருந்திருந்தால்.

உங்கள் பார்வையில் தவறு செய்தவர் குடும்பத்தை சேர்ந்த எவருக்கும் மன்னிப்பு கிடையாது, உதவி கிடையாது என்றால், இன்றைய அரசியல்வாதிகளில் 99 % பேரின் குடும்ப உறுப்பினர்கள் நாடு கடத்தப்பட்டிருக்க வேண்டும், குறைந்தப்பட்சம் மாநிலமாவது கடத்தப்பட வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து போயிருக்கவேண்டும். ஒரு பிரதமரை கொன்ற தவறை காட்டிலும், பல இலட்சம் மக்களை தினம் தினம் ஏதாவது ஒரு விதத்தில் அணு அணுவாக கொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் தவறு எந்த வகையில் சிறியது ?

86 வயதிலும் உங்களை ஆட்சி பொறுப்பில் அமர்த்தி இருக்கிறோமே கலைஞர் அவர்களே, உங்கள் மேல் பல விஷயங்களில் கருத்து வேற்றுமை இருந்தாலும், உங்களின் பல செய்கைகளில் உடன்பாடு இல்லாவிட்டாலும், உங்களை நடு இரவில் கைது செய்த போது எங்கள் மனம் பதைத்த‌தே, அரசியல் ரீதியாக உங்களை கடுமையாக எதிர்த்த பலரும் அப்போது உங்கள் பக்கம் நின்றது நிச்சயம் உங்கள் நினைவில் இருக்கும். உங்களின் நினைவாற்றலை அறிந்தவர்கள் நாங்கள். நீங்கள் உடல்நலமின்றி பெரிய மருத்துவமனைகளில் படுத்த போதும் கூட நீங்கள் உடல்நலம் பெற்று வரவேண்டும் என்று தானே நினைத்தோம். அப்போதெல்லாம் சொல்லப்பட்ட வாக்கியம் என்ன தெரியுமா ? "என்ன இருந்தாலும் பாவம் அந்த‌ வயது தாண்டிய முதியவர்.. " .

அரசியலில், ஆட்சியில் தவறு செய்தவர் என்ற போதிலும், உங்களுக்காக ஏன் எங்கள் மனம் பதைத்தது? மனிதாபிமானம் தானே காரணம். முதியர் ஒருவர் இப்படி அலைக்கழிக்க படுகின்றாரே என்ற வருத்தம் தானே காரணம்? அந்த பதைபதைப்பு உங்களுக்கு இப்போது இருக்க வேண்டாமா?

சரி, நீங்கள் திருப்பியனுப்பவில்லை. நம்புகிறோம். இது முழுக்க முழுக்க மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்டது.. இந்த விஷயத்தில் மத்திய அரசு மாநில அரசுக்கு தகவல் தரவேண்டியதில்லை என்பதெல்லாம் சரி. ஆனாலும் உளவுத்துறையின் மூலம் ஒரு மாநில முதல்வருக்கு இந்த விஷயம் தெரியாமல் இருக்க முடியுமா? ஒருவேளை நீங்கள் சொல்வது போல , இந்த விஷயமே உங்களுக்கு மறுநாள் பத்திரிகை பார்த்து தான் தெரிந்தது என்றால், உளவுத்துறையில் இருக்கும் ஓட்டையை அடைக்கும் வேலையை முதலில் பாருங்கள்.

தேர்தல் நேரத்தில் இதைவிட பெரிய பிரச்சனையை நீங்கள் சந்திக்க வேண்டி வரும்..

அவர் வருவதும் , திருப்பி அனுப்பபடுகிறார் என்பதும் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இரண்டு காரணங்களுக்காக மட்டுமே நீங்கள் மௌனம் காத்திருக்க / அல்லது அமைச்சர் பதவிக்கு கொடுத்ததை போன்ற அழுத்தத்தை மத்திய அரசுக்கு தராமல் விட்டிருக்கவேண்டும்.

காரணம் 1. சோனியா , மத்திய அரசுடனான கூட்டு, தமிழக காங்கிரஸ் ஆதரவு

காரணம் 2. அந்த அம்மையார் வர ஏற்பாடுகள் செய்தது வைகோவும் , பழ நெடுமாறனும்

இந்த காரணங்களுக்காக மௌனம் சாதித்துவிட்டு பின்னர் சமாளித்து ஆகவேண்டுமே என்று , இரவு தான் தெரியும் , காலை தான் தெரியும் என்று அறிக்கை வாசிக்கின்றீர்கள் என்பது தெளிவாகவே புரிகிறது கலைஞரே.

இப்போதும் கெட்டுவிடவில்லை . அவர் கோரிக்கை வைத்தால், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக சட்டசபையில் சொல்லியதும், டி ஆர் பாலு அவர்களை பாராளுமன்றத்தில் பேச வைத்தது மட்டும் போதாது. நீங்களும் ஒரு முதியவர் என்ற வகையில் அவரின் வலியை உணருங்கள். அவர் கோரிக்கை வைக்க வேண்டும் என்று நீங்கள் காத்திருக்கலாம், ஆனால் அவரின் பக்கவாதம் காத்திருக்காது. உங்களின் இரவு கைதின் போது தங்கள் கண்டனங்களை தெரிவித்தவர்கள் உங்களின் கோரிக்கைக்கு காத்திருந்தார்களா?

2003 ல் முதல்வராக இருந்த அம்மையார் செய்துவிட்டு போன ஒரு தவறை திருத்தும் வாய்ப்பு இது. மத்திய அரசுக்கு நீங்களே கோரிக்கை விடுங்கள். 2009 ல் போரை நிறுத்துங்கள் என்று விளையாட்டு பிள்ளையாக வைத்த கோரிக்கையாக அல்லாமல், தி மு க விற்கு இன்னுமொரு மத்திய அமைச்சர் பதவி தரும் வாய்ப்பிருந்தால் , அதற்கு எப்படி , எந்த விதத்தில் , எவ்வளவு அழுத்தமாக "கோரிக்கை" வைப்பீர்களோ அதுபோல வையுங்கள். அந்த அம்மையாரின் பெயரை மட்டுமாவது முன்னால் முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய "ப்லாக் லிஸ்ட்" ல் இருந்து எடுத்திட வையுங்கள். குறைந்த பட்சம் இந்த சிகிச்சைக்காக மட்டும் பார்வதியம்மாள் வந்து போக அனுமதி வாங்கி கொடுங்கள்.

உங்களின் 1 ரூ அரிசியை விட, வண்ண தொலைகாட்சியை விட, காப்பிட்டு திட்டத்தை விட, இந்த விஷயத்தில் நீங்கள் வாங்கி தரும் அனுமதி எங்கள் உள்ளங்களில் நிலைத்து நிற்கும், பல காலம் உங்கள் பெயரை சொல்லும்.

அன்றைய இரவில் பார்வதியம்மாளுக்கு விமானத்தில் நடந்தது என்ன..?














பக்கவாதம், மறதி, உடல் சோர்வு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட வியாதிகளால் பார்வதி அம்மாளுக்கு மலேசியாவிலேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்கே சென்னையில் உள்ள மருத்துவ வசதிகளை சுட்டிக்காட்டி செல்லும்படி வலியுறுத்தியுள்ளார்கள்.

அதனால்தான் மலேசியாவில் இருக்கும் ஈழத் தமிழர்கள் சிலர், சிவாஜிலிங்கத்தின் உறவினர்களோடு பேசி, அவரைச் சென்னைக்கு அனுப்ப முடிவு செய்தார்களாம்.. பார்வதி அம்மாளைத் தாங்கிய விமானம் சென்னை வந்திறங்கிய உடனேயே அவரை விமானத்தில் இருந்து கீழே இறங்க விடாதபடி அதிகாரிகள் கெடுபிடி செய்ய..

அந்த அம்மாளின் உதவிக்காக உடன் வந்திருந்த விஜயலட்சுமி என்ற பெண், “எதற்காக அனுமதி மறுக்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார். “பார்வதி அம்மாள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்” என்றார்களாம் விமான நிலைய அதிகாரிகள். அதோடு அதே விமானத்தில் பார்வதி அம்மாளை திருப்பியனுப்பும் முடிவை அவர்கள் சொல்ல..

பயணக் களைப்பில் இருந்த அந்த மூதாட்டி, “செத்த நேரம் ஓய்வு எடுக்கணுமே?” என்றாராம். அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

மலேசியாவில் பார்வதி அம்மாளுக்கு வழங்கப்பட்ட விசாவின் காலக்கெடுவும் அன்றோடு முடிந்திருந்த நிலையில், அங்கே திரும்பிச் செல்வதும் சாத்தியமற்றதாக.. விமான நிலைய அதிகாரிகளிடம், “புலிகள் இயக்கத்தில் பார்வதி அம்மாள் உறுப்பினராக இல்லை என்பதை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் ஏற்கெனவே விசாரித்துவிட்டது. அதன் பிறகே அங்கிருந்து வெளியே செல்ல ஆறு மாத விசா கிடைத்தது. இதற்கிடையில் மலேசிய விசாவும் கிடைத்துவிட்டது. அதனால் பார்வதி அம்மாள் வேறு எந்த நாட்டுக்குமே போக முடியாது” என்று சொல்லி மறுபடியும் அனுமதிக்காகப் போராடியிருக்கிறார் விஜயலட்சுமி.

அதற்கும் அசைந்து கொடுக்காமல், பார்வதி அம்மாளை நள்ளிரவில் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பியிருக்கின்றனர் விமான நிலைய அதிகாரிகள்.

பார்வதி அம்மாள் போன வேகத்தில் திரும்பி வந்ததைக் கண்ட மலேசிய அரசு அவசர கதியில் அவருக்கு ஒரு மாத கால விசாவை வழங்கியுள்ளது. அங்கு போய் இறங்கியதுமே அவருக்கு மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட்டது.

“ஐயா.. ஐயா..” என தன் கணவர் வேலுப்பிள்ளை நினைவாகவே புலம்பிக் கொண்டிருந்தாராம் பார்வதி அம்மாள். “சென்னைக்குப் போகலையா..? என்னை எப்போ சென்னைக்கு அழைச்சுட்டுப் போகப் போறீங்க..?” என கேட்டிருக்கிறார்.

சென்னை போய் திரும்பி வந்ததே அவருக்கு முழுமையாகப் பதிவாகவில்லையாம். அதை மெதுவாக எடுத்துச் சொன்னதுமே, “எதுக்கு அனுப்புனாங்க.. அப்படி நாங்க என்ன பாவம் செஞ்சோம்.. அவருக்கு என்ன பண்ணிட்டோம்..?” என கலங்கியிருக்கிறார்.