Tuesday, May 25, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியாக வேண்டாம்













வன்னியில் நடந்து முடிந்துபோன படுகொலைப்போரில் இறந்து போன போராளிகளின் நினைவாக எந்த ஒருவரும் அஞ்சலிகளையோ நினைவு ஒன்று கூடல்களையோ நடத்தக்கூடாது. என்று கடுமையான கட்டளையை பிறப்பித்து , யுத்தத்தின்போது கொல்லப்பட்ட சாதாரண மக்களின் முதலாம் ஆண்டு திவசத்தைக்கூட அனுஷ்ட்டிக்க விடாமல் அச்சுறுத்தியிருக்கிறார், ஸ்ரீலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல.

அவர் மேலும் கூறியவை,

அரசாங்கம் இந்த விடயத்தில் மிகவும் கடுமையாகவும் கவனமாகவும் செயல்ப்பட இருக்கிறது, மீறி எவராவது ஈடுபடுவார்களாக இருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.

மாண்டுபோன மாவீரர்களுக்கான நிகழ்வுகளையோ, தமிழ் கலாசார வழக்கான நெருங்கிய உறவினர்களுக்கான ஆண்டு திவஷத்தைக் கூட எவரும் நினைவு கூரமுடியாமலும் கோவில்களில் விளக்கேற்றக்கூட முடியாமல் மக்கள் வன்னியிலும் பிற இடங்களிலும் புழுங்கி அழுதிருக்கின்றனர்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment