இன்னலுறும் தனது இனத்துக்கு மனிதாபிமான முறையில் உண்மையாக உழைத்த ஒரு இளைஞனின் வாழ்வை இருட்டிலிருந்து காக்க நேயமுள்ள உங்களின் உதவி கோருகிறோம்
எமது அன்பிற்குரிய தமிழ் உறவுகளே!,
இந்த வேண்டுகோள் மனிதாபிமான உதவி கேட்டு வரையப்படுகிறது. இதைப் படித்த பின்னர் சுரேஷ் யார்? அவருக்கு என்ன உதவி வேண்டும்? என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.
கல்வியில் சாதனை
சுரேஷ் ஈழத்திலிருந்து ஒன்பதாவது அகவையில் கனடாவுக்கு ஏதிலியாக வந்தவர். புலம்பெயர் நாட்டில் மிகுந்த அக்கறையோடு படித்துப் பல்கலைக் கழகம் புகுந்தார். பள்ளிகளில் படிக்கும் போது புலமைப் பரிசில்களையும் விருதுகளையும் பெற்றார். இக்காலத்தில் அவர் ஒரு கெட்டிக்கார மாணவன் என்று பெயர் எடுத்ததோடு சமூக அக்கறை கொண்ட மாணவனாகவும் விளங்கினார். இவரது அறிவுத்தேடலும் அயராத முயற்சியும் இவரைத் தனது பதினெட்டாவது அகவையிலேயே ஓர் கணனி நிறுவனத்திற்குச் சொந்தக்காரராக்கியது. சுரேஷ் 2006 ஆம் ஆண்டு Waterloo பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியல் துறையில் (Electrical Engineering) இளமானிப் பட்டத்தையும், 2008 இல் கலைத்துறையில் இளமானிப் பட்டத்தையும் (Bachelor of Arts), Waterloo Wilfrid Laurier பல்கலைக் கழகத்தில் வணிக முகாமைத்துவ முதுமானிப் பட்டத்தையும் (MBA) பெற்றார். இவர் Microsoft, Amazon, NVIDIA, RIM போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்தார். இவர் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற காலங்களில் Microsoft நிறுவனத்திற்காக மாணவர்களை தெரிவு செய்யும் பொறுப்பும், பணியும் கூட இவரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment