Tuesday, May 11, 2010

சே.ஜெயானந்தமூர்த்தி அவர்களுக்கு ஒரு திறந்தமடல்













தமிழீழத்தின் மீன்பாடும் தேனாட்டின் மைந்தனே!

சிங்கத்தின் நாடாளுமன்றக் குகையில் நின்று சீறிய சிறுத்தையே!

வணக்கம்!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் வடமேற்கு இலண்டனில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நீங்கள் வெற்றியீட்டிய செய்திகேட்டு அகமகிழ்ந்தோம்.

அதற்கு மேலாக தமிழீழ மக்களின் விடிவிற்காக அயராது உழைப்பதற்கு திடசங்கற்பம்பூண்டு நீங்கள் விடுத்த அறிக்கை கண்டு உள்ளம் பூரித்தோம்.

தமிழீழ தேசியம் என்ற பாசறையில் வளர்ந்த சிறுத்தை நீங்கள். கருணா என்ற பெயரில் பிரதேசவாதப் பூதம் கிளம்பிய பொழுது அதனை எதிர்த்து மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களோடு தோள்கொடுத்துக் கிளர்ந்தவர் நீங்கள்.

தமிழீழ தேசியத்தின்பால் நின்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் சந்தித்த சோதனைகளுக்கு கையெறி குண்டுகளால் தகர்க்கப்பட்ட உங்கள் வீட்டின் கற்களே சாட்சி. உங்கள் முற்றமே ஆவணம். விடுதலைக்காக உடன்பிறப்பை உயிர்ப்பலியாகப் பறிகொடுத்தவர் நீங்கள். மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட உங்களுக்கு விடுதலையின் விலை நன்கு தெரியும்.

அதை நியூயோர்க்கின் உப்பரிகை மாளிகையில் ஒய்யாரமாய் சஞ்சாரம் செய்பவர்களால் விளக்கிவிட முடியாது என்பது உண்மைதான். அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது என்பதும் மெய்மைதான்.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment