Showing posts with label குஷ்பூ. Show all posts
Showing posts with label குஷ்பூ. Show all posts

Thursday, May 20, 2010

"நடிகை குஷ்பு சொல்வது நொண்டிச்சாக்கு" – கொதிக்கிறார் திருமாவளவன்













தான் தி.மு.க.வில் சேர்ந்ததற்கு காரணமே விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியினரும் தன் மீது போட்ட பொய் வழக்குகள்தான்..” என்று நடிகை குஷ்பு கூறியிருப்பதற்கு விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பும், பாட்டாளி மக்கள் கட்சியும் கடுமையாக ஆட்சேபித்துள்ளது.

இது பற்றி பேட்டியளித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன், “நடிகை குஷ்பு ஓர் அரசியல்வாதியாகப் பரிணமித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இது அவரின் துணிச்சலான முடிவு. பெண்கள் பொதுவாழ்வில் ஈடுபடுவது மிகவும் அவசியமானது. ஆனால் தன் அரசியல் பிரவேசத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், பா.ம.க.வும் போட்ட பொய் வழக்குகள்தான் காரணம் என்று அவர் கூறியிருக்கிறார்.

இதில் ஓர் உண்மையைச் சொல்லியாக வேண்டும். குஷ்பு மீதான இந்த வழக்குகளில் ஒன்றிரண்டுதான் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தொடுத்தவை. மற்ற அனைத்து வழக்குகளுமே கட்சி சாராத தனி நபர்களால் தொடுக்கப்பட்டவைதான். இது தொடர்பாக என் கவனத்துக்கு வந்தபோது, இத்தகைய நடவடிக்கைகளில் சிறுத்தைகள் யாரும் ஈடுபட வேண்டாம் என்று தடுத்தேன்.

அரசியலில் அடியெடுத்து வைத்ததுமே குஷ்பு முழு அரசியல்வாதியைப் போல பேசத் தொடங்கியிருக்கிறார். அரசியலில் அவர் வெற்றிகரமாகச் செயல்படுவார் என்று இதன் மூலம் தெரிகிறது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Saturday, May 15, 2010

காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக நான் சொல்லவேயில்லை : நடிகை குஷ்பு













“காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக நான் எப்போதும் சொல்லவில்லை” என்று திமுகவில் இணைந்துள்ள நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி முன்னணியில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணி அளவில் நடிகை குஷ்பு திமுகவில் இணைந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “என்னுடைய கொள்கைகளுக்கும், கருத்துக்களுக்கும் ஏற்ற கட்சியாக திமுக இருக்கிறது. திமுக மேல் எனக்கு மரியாதை உண்டு. கலைஞர் மீதும் மரியாதை உண்டு. பெண்கள் முன்னேற்றத்திற்காக திமுக பாடுபடும். திமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சியும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதில்லை” என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

கேள்வி: கற்பு குறித்து நீங்கள் கூறிய கருத்துக்களுக்கு பலத்த எதிர்ப்பு வந்தது. பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அப்போது எந்தக் கட்சிகளும் உங்களுக்க துணை நிற்கவில்லையே?
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Thursday, May 13, 2010

இன்று மாலை தி.மு.க.வில் சேர்கிறார் குஷ்பூ













நடிகை குஷ்பு இன்று மாலை திமுகவில் இணைகிறார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தனக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டிருந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய குஷ்பு தனக்கு அரசியல் ஆசை இருப்பதாகவும், விரைவில் நேரடி அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

கூடவே சோனியா, ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை பிடிக்கும் என்றும், காங்கிரஸ் கொள்கைகளில் ஈடுபாடு என்றும் குஷ்பு கூறியிருந்ததால் விரைவில் காங்கிரசில் சேரப்போகவதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Thursday, April 29, 2010

குஷ்பூ வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் முழு விபரம்..!

நடிகை குஷ்புவுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, “திருமணத்துக்கு முந்தைய `செக்ஸ்' உறவு சட்டபூர்வ குற்றம் அல்ல” என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

திருமணத்துக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பான `செக்ஸ்' உறவு கொள்வது தவறு இல்லை என்று, பிரபல நடிகை குஷ்பு கருத்து தெரிவித்து இருந்தார். கடந்த 2005-ம் ஆண்டில் வெளியான குஷ்புவின் இந்த கருத்து தமிழ்நாட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.



அவருக்கு எதிராக பல்வேறு கோர்ட்டுகளில் 22 வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. அந்த வழக்குகளை தள்ளுபடி செய்யவேண்டும் என்ற குஷ்புவின் கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து குஷ்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் தீபக்வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகியோரைக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து நேற்று முன் தினம் தீர்ப்பு கூறியது. குஷ்புவுக்கு எதிராக தொடரப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

"பேட்டி ஒன்றில் குஷ்பு தெரிவித்த சொந்த கருத்துக்கு எதிராக கோர்ட்டில் கிரிமினல் வழக்கு தொடருவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தனிப்பட்ட முறையில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குஷ்புவின் கருத்து அமையவில்லை. இந்த வழக்குகள் உள்நோக்கம் கொண்டவை'' என்று, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தனர்.

3 நீதிபதிகள் கொண்ட `சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச்'சுக்காக நீதிபதி சவுகான் தீர்ப்பை எழுதி இருந்தார். தீர்ப்பு முழு விவரம் வருமாறு-

"திருமணத்துக்கு பிறகே `செக்ஸ்' உறவு என்பது நமது சமுதாயத்தின் பிரதான கருத்தாகும். அதே நேரத்தில், திருமணம் ஆகாமலேயே பரஸ்பரம் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி கிரிமினல் குற்றம் அல்ல என்று, இந்திய தண்டனை சட்டம் 497-வது பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

சாதாரணமாக தனது கருத்துக்களை வெளியிடும் ஒருவரை தண்டிப்பது குற்றவியல் சட்டத்தின் பணி அல்ல. அது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாகும். சட்டபூர்வமான குற்றம் இழைத்ததற்கான ஆதாரங்களை புகார்தாரர்கள் தாக்கல் செய்தால் மட்டுமே, வழக்கு தொடர்வதற்கான நடைமுறைகளை மாஜிஸ்திரேட்டுகள் தொடங்க வேண்டும்.

தவறான, சாரமற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுமை இழைப்பதாகிவிடும். நடிகை குஷ்புவுக்கு எதிரான புகார்கள், உள்நோக்கத்துடன் அரசியல் கட்சி நிர்வாகிகள் சார்பில் கூறப்பட்டு இருப்பதால், குற்றவியல் நடைமுறை சட்ட அமைப்பை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

ஆங்கில பத்திரிகைக்கு குஷ்பு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துகள் ஆபாசமானவையோ நற்பண்புகளுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவோ இல்லை. திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார், அவ்வளவுதான்.

எந்த ஒரு தனி மனிதருக்கோ, கூட்டாக பலருக்கோ அல்லது ஒரு அமைப்புக்கோ அந்த கருத்தை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடும் நோக்கில் அதை அவர் தெரிவிக்கவில்லை. அவதூறு வழக்கு சட்ட பிரிவின் கீழும் அவருடைய கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.

அதே நேரத்தில் குஷ்புவின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது உண்மைதான். திருமணத்துக்கு முந்தைய உறவு, சேர்ந்து வாழ்வது போன்ற சர்ச்சைகள் எழும்போது அதுபற்றி வெளிப்படையாக விவாதிக்கும் கலாசாரம் வேண்டும்.

திருமண பந்தம் என்பது இந்தியாவில் முக்கியமான சமூக சம்பிரதாயம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அதேபோல் சில தனி நபர்கள் மற்றும் அமைப்பினர் அதற்கு எதிரான கருத்துக்களையும் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். தனிநபர் சுதந்திரத்தில் குற்றவியல் சட்டத்தை அவசியமின்றி பயன்படுத்த முடியாது.

குஷ்புவின் கருத்தில் புகார்தாரர்களுக்கு ஆட்சேபனை இருந்தால், அதே வழியில் அவர்களும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மூலம் தங்கள் பதில் கருத்துக்களை தெரிவித்து இருக்கலாம். அதற்காக கிரிமினல் வழக்கு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இல்லை. குஷ்புவின் கருத்து இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டிவிடும் என்ற வாதத்தை ஏற்க முடியாது.

"திருமணத்துக்கு முந்தைய உறவுகள் அதிகரித்து வருவதால், இருவருடைய சம்மதத்துடன் நடைபெறும் அத்தகைய உறவுகளை சமூகரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் குஷ்புவின் கருத்தே தவிர, எல்லா வகையான `செக்ஸ்' தொடர்புகளுக்கும் அவர் பகிரங்கமாக ஆதரவு தெரிவிப்பதாக அர்த்தம் அல்ல.

குஷ்புவின் கருத்தை அப்படி தவறாக கருத வேண்டும் என்றால், `செக்ஸ்' தொடர்பாக வெளியிடப்படும் பல்வேறு செய்தி, கட்டுரைகளுக்காக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களையெல்லாம் கிரிமினல் குற்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும். இதை அமல்படுத்தவது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல.

ஒரு வாதத்திற்காக, குஷ்புவின் கருத்து, திருமணத்துக்கு முன்பு உறவு கொள்ள சில இளைஞர்களை தூண்டுவதாக கருதினாலும், அந்த செயல் கிரிமினல் குற்றம் அல்ல என்பதால் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது''.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

நடிகை குஷ்பு வழக்கு விசாரணையின்போது, திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வது குறித்து நீதிபதிகள் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

அந்த கருத்துக்களை நீதிபதிகளின் உத்தரவு என்று கருதி, அதற்கு எதிராக ஏராளமான பொதுமக்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு கடிதங்களை அனுப்பினார்கள். சிலர் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி கோரி இருந்தனர். சில கடிதங்களில், பாரதத்தின் புராண இலக்கியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தன.

தீர்ப்பில் இந்த தகவலை வெளியிட்ட நீதிபதிகள், பத்திரிகை மற்றும் டி.வி. ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்துப் இந்த கடிதங்களை பொதுமக்கள் எழுதி இருப்பதாக தெரிவித்தனர். எனவே, “இது போன்ற செய்திகளை வெளியிடும்போது பத்திரிகை மற்றும் ஊடகங்கள், மேலும் கவனமாகவும், பொறுப்பு - எச்சரிக்கை உணர்வோடும் வெளியிட வேண்டும்” என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

Tuesday, April 27, 2010

குஷ்பூ மீதான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு














திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது, சேர்ந்து வாழ்வது ஆகியவை குறித்து தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து தமிழகத்தில் நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட 22 வழக்குகளும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை அளித்துள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை குஷ்பு, தமிழ் பெண்களின் கற்பு குறித்து தனது கருத்தை தெரிவித்தார். திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தவறல்ல. சேர்ந்து வாழ்வதும் தவறல்ல. பாதுகாப்பான முறையில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். இன்று தமிழகத்தில் எத்தனை பேர் கற்புடன் உள்ளனர் என்றெல்லாம் கூறியிருந்தார்.

அவரது கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குஷ்புவின் பேச்சைக் கண்டித்து அவரது வீட்டை பெண்கள் அமைப்பினர் செருப்பு, துடைப்பம் உள்ளிட்டவற்றுடன் முற்றுகையிட்டனர். இதையடுத்து டிவியில் தோன்றிய குஷ்பு கண்ணீர் விட்டு அழுதபடி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து குஷ்பு மீது 22 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் மேட்டூர் கோர்ட்டில் மட்டும் குஷ்பு ஆஜரானார்.

மேலும் தன் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வந்தது. கடந்த மாதம் இறுதி விவாதம் நடந்தது. அப்போது தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் இந்து அமைப்புகளின் கடும் கண்டனத்தை பெற்றன.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் தீபக்வர்மா, செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட 22 கிரிமினல் வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தீர்ப்பு குறித்து நடிகை குஷ்பு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நான் தூங்கிக் கொண்டிருந்தபோது எனது வக்கீல் தொலைபேசி மூலம் என்னை எழுப்பி இந்த செய்தியைக் கூறினார். இது எனக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அளித்துள்ளது. ஒரு பெண் வெற்றிகரமாக போராடுவது என்பது மிக லேசானதல்ல. நான் வெற்றி பெற்றுள்ளேன். உண்மையில் நான் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு குறித்து கருத்து தெரிவிக்கவே இல்லை” என்றார் குஷ்பு.

Saturday, April 24, 2010

‘ரெட்டச்சுழி’யில் இமிடேட் கேரக்டர்..! கோபத்தில் குஷ்பூ














நடிகை குஷ்பூ திருமணத்திற்கு முந்தைய உறவுகள் பற்றியும், கற்பு பற்றியும் எடுத்துவிட்ட அறிக்கைகளினாலும், பேச்சினாலும் கொந்தளித்த சூழலை தமிழ்நாட்டில் யாரும் மறந்திருக்க முடியாது..

இன்னமும் அது பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இந்தச் சூழலில் இதனை அடையாளப்படுத்தியே ஒரு திரைப்படத்தில் சூட்டைக் கிளப்பியிருக்கிறார்கள்.

சிகரமும், இயக்கமும் ரெட்டச்சுழி படத்தில் நடிகை குஷ்பூவை இமிடேட் செய்து ஒரு சிறுமியின் கேரக்டர் வருகிறது.

அந்தச் சிறுமியின் பெயரே குஷ்பூதான். பேசுகின்ற பேச்சுக்களெல்லாம் பெரிய குஷ்பூவை போலவே இருப்பதை தியேட்டரில் ரசிகர்கள் பெருமளவு ரசிக்கிறார்களாம்..

“குஷ்பூ நீ வாயைத் தொறக்காத.. நீ என்ன பேசினாலும் பிரச்சினையாயிரும்..!”

“குஷ்பூ செருப்பை வாசல்லயே கழட்டி வைச்சிட்டு வா.. அப்புறம் யாராவது ஏதாவது பிரச்சினையைக் கிளப்பிருவாங்க..!”

இப்படி குஷ்பூ சம்பந்தப்பட்ட டாபிக்குகளே டயலாக்குகளாகவும் வர இந்தக் காட்சிகளில் தியேட்டரே அதிர்கிறதாம்..

தற்போது தனது குழந்தைகளுடன் லண்டனில் ஹாலிடேயில் இருக்கும் குஷ்பூவிடம் இதை யாரோ போட்டுக் கொடுத்திருக்க.. கர்புர்ரென்றாகி விட்டாராம்.

“படத்தைப் பார்த்துட்டு அப்புறமா பேசிக்கிறேன்” என்று இப்போதைக்கு சொல்லியிருக்கிறார்.

30-ம் தேதிதான் குஷ்பூ நாடு திரும்புகிறார்.. அதுக்கப்புறம்..?