Wednesday, May 5, 2010

என்னதான் நடந்தது ராஜபக்ச சகோதரர்களுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில்? பரபரப்பான தகவல்கள்












ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்ச‌ என்று அழைக்க‌ப்ப‌டும் ம‌கிந்த‌ பேர்சிவ‌ல் ராஜ‌ப‌க்ச‌ இல‌ங்கையின் ஜ‌னாதிப‌தியாக‌ 2005ம் ஆண்டு ந‌வ‌ம்ப‌ர் 18ம் திக‌தி தெரிவு செய்ய‌ப்ப‌ட்டார்.

அவ‌ர் அந்த‌ப் ப‌த‌விக்கு தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌தும் வரவிருந்த யுத்தத்தை கருத்தில் கொண்டு இர‌ண்டு மிக முக்கிய‌மான‌ நிய‌ம‌ன‌ங்க‌ளை வ‌ழ‌ங்கினார்.

ஒன்று த‌ன‌து இளைய‌ ச‌கோத‌ரனான கோத்தபய ராஜபக்சவை பாதுகாப்புச் செய‌லாள‌ராக்கிய‌து ம‌ற்றொன்று ச‌ர‌த் பொன்சேகாவை இராணுவ‌த் த‌ள‌ப‌தியாக்கிய‌து.

1971ல் இராணுவ‌த்தில் சேர்ந்த‌ கோத்தபய ராஜபக்ச 20 ஆண்டுக‌ள் க‌ட‌மையாற்றி 1991ல் இராணுவ‌த்தை விட்டு வில‌கி அமெரிக்க‌ லொத்த‌ர் ஒன்றின் மூல‌மாக‌ அமெரிக்கா சென்று க‌ணினி வ‌ல்லுந‌ராக‌ 14 ஆண்டுக‌ள் ப‌ணியாற்றிய‌வ‌ர். தன‌து ச‌கோத‌ர‌னுக்காக‌ இல‌ங்கை திரும்பிய‌ கோத்த‌ப‌ய‌ ராஜ‌ப‌க்ச‌ பாதுகாப்புச் செய‌லாளர் ப‌த‌வியை ஏற்றுக் கொண்டார்.

அவ‌ரின் க‌ட்ட‌ளையின் ப‌டியே ச‌ர‌த் பொன்சேகா இராணுவ‌த் த‌ள‌ப‌தியாக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டார். 2005 டிச‌ம்ப‌ர் 6ல் தனது 55ம் வயதில் ஓய்வு பெற‌விருந்தார் ச‌ர‌த் பொன்சேகா. ஆனால் கோத்த‌ப‌ய‌ ராஜ‌ப‌க்ச‌தான் த‌ன‌து மூத்த ச‌கோத‌ர‌னான‌ ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்ச‌வை வ‌ற்புறுத்தி ச‌ர‌த்தை இராணுவ‌த் த‌ள‌ப‌தியாக்கிய‌துட‌ன் தொட‌ர்ந்து ஐந்து ஆண்டுக‌ள் அவ‌ருக்கு ஓய்வு பெறும் வ‌ய‌தையும் தாண்டி ப‌த‌வி நீட்டிப்பு வ‌ழ‌ங்க‌ கார‌ண‌மாக‌விருந்தார்.

அப்போது இராணுவ‌த் த‌ள‌ப‌தியாக‌விருந்த‌ மேஜ‌ர் ஜென‌ர‌ல் சாந்த‌ கொட்ட‌கொட‌ பிரேசில் நாட்டுக்கு தூதுவ‌ராக‌ அனுப்ப‌ப்ப‌ட்டார். ச‌ர‌த் பொன்சேகா இராணுவ‌த் த‌ள‌ப‌தியாக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

ச‌ர‌த் பொன்சேகா ஒரு சிற‌ந்த‌ இராணுவ‌ வீர‌ன் என்பதிலும் சிற‌ந்த‌ திட்ட‌மிட‌ல் த‌ள‌ப‌தி என்ப‌திலும் எல்லோருக்கும் ஒற்றுமையான‌ க‌ருத்து இருந்த‌து. ஆனால் வேறு சில‌ விட‌ய‌ங்க‌ள் தான் அவ‌ர் இராணுவ‌த் த‌ள‌ப‌தியாக‌ முடியாம‌ல் த‌டுத்த‌ கார‌ண‌ங்க‌ளாக‌ இருந்த‌ன‌. மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

1 comment:

  1. ராஜபக்சேக்களை எதிர்க்கிறார் என்பதற்காக சரத்பொன்சேகா ஒன்றும் புனிதராகிவிட மாட்டார்..! அவரும் தமிழினத்தின் எதிரிதான்..!

    ReplyDelete