Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, July 22, 2010

ஈழப் போராட்ட வரலாறு - 6: 1953ஆம் ஆண்டின் மாபெரும் வேலை நிறுத்தம்














1952 இல் ஆட்சியமைத்த யு.என்பி.யின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் நியோ லிபரல் கொள்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தைக் கிளப்பியது. இலங்கையின் மாபெரும் வேலை நிறுத்தத்துக்கு வழிசமைத்த இந் நிதியமைச்சர் (பின்னை நாள் பிரதம மந்திரியும் ஜனாதிபதியும்) நாடு கண்ட மிக மோசமான வலதுசாரிகளிலொருவர். பொருளாதாரச் சரிவுவை ஏற்படுத்தியது, தொழிலாளர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்களை நிகழ்த்தியது, ஊழலை அதிகரித்தது, அரசியல் வன்முறைக் குழுக்களை வளர்த்தது, கோரமான இனவாதத்தை வளர்த்தது, தமிழ்பேசும் சிறுபான்மையருக்கு எதிரான கோர வன்முறையைத் தூண்டியது, யுத்தத்தை ஆரம்பித்தது என்று பல்வேறு அழிவுகளுக்கு வித்திட்ட நாசகார சக்திகளின் தலையாய பிரதிநிதியிவர்.


இடதுசாரிகள் மேல் இவர் காட்டிய காழ்ப்புணர்வும் வெறுப்பும் நாடறிந்தவொன்று. L.S.S.P யினர் பாராளுமன்றத்தில் அவருடன் அடிக்கடி சண்டை போட நேரிட்டது. L.S.S.P உறுப்பினர்கள் பேசும் போது ஒவ்வொரு முறையும் அத்துமீறிக் குறுக்கிட்டு அனாவசியமான தனிப்பட்ட தாக்குதல்களைச் செய்வதும் கிண்டல் கதைகள் பேசுவதும் இவர் வழக்கம். தமது அரசியல் நலனைத் தக்கவைக்க வன்முறைக் குழுக்களைத் தமக்குப் பின்னால் செயற்பட வைத்த யு.என்.பி தலைவர்களின் முன்னோடியிவர்.

ஏகாதிபத்தியம் சார் கொள்கைகளை மும்முரமாக அமுல் படுத்தியவர்களிலும் முதலிடத்தை இவருக்கு வழங்கலாம். அமெரிக்க வலதுசாரிப் பொருளாதாரவாதியான ஜோன் எக்சடரின் உதவியுடன் இலங்கையின் முதலாவது மத்திய வங்கியை உருவாக்கி அதற்கு ஜோன் எக்சடரையே கவர்னராகப் போட்டதும் இவரது கைங்கரியமே. மேற்கத்தேய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகளுடன் மிக நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டவர்களிலும் இவரே முதன்மையானவர். கொழும்பு விமானத்தளங்களை அமெரிக்கா பயன்படுத்த வழியேற்படுத்திக் கொடுத்தவருமாவார்.

தனது கொள்கைகளை நிறைவேற்ற இடதுசாரிகள் பெருந்தடையாக இருந்தமையால் அவர்களை இவர் மனதார வெறுத்தார். அதனால் தன்னால் முடிந்த எல்லாக் குறுக்கு வழிகளிலும் அவர்களைத் தாக்கினார். ஒரு சர்வாதிகாரியின் அனைத்துக் குணாம்சம்களையும் கொண்ட இந்த நிதியமைச்சர் தன் வர்க்க நலனுக்காக நாட்டைப் பொருளாதாரக் குழப்பத்துக்குள் தள்ளினார். 1952இல் UNP வென்ற கையுடன் விவசாயிகளுக்கான நிவாரணம் நிறுத்தப்பட்டது. வறியவர்களுக்கான உணவுச் சலுகைகள் குறைக்கப்பட்டன. பண்டங்களின் விலை உயர்த்தப்பட்டது. உள்நாட்டு உற்பத்தி குறைக்கப்பட்டு இறக்குமதி அதிகரிக்கப்பட்டமையால் வெளிநாட்டுச் சேமிப்பு நிதியம் வேகமாக வற்றத் தொடங்கியது. அமெரிக்க மேற்கத்தேய நியோலிபரல் கொள்கைகள் நடைமுறைக்கு வந்தன.

1950இல் தொடங்கிய கொரியா நாட்டு யுத்தத்தின் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி முடிவுக்கு வரத் தொடங்கயிருந்தது. பனியுத்தத்தின் காரணமாக இலங்கையின் மிகச்சிறந்த இயற்கைத் துறைமுகமான திருகோணமலைத் துறைமுகம் மிக முக்கியத்துவம் பெற்றது. இந்தியாவின், சோவியத் யூனியன் ஆதரவு காரணமாக அமெரிக்காவுக்குத் தெற்காசியாவில் இராணுவத்தளம் ஒன்றின் தேவை முக்கியமானது. இத்தருணத்தில் இலங்கை பண்டங்களுக்குக் கூடுதற் பணம் வழங்கிய சீனாவுடன் உறவை முறிக்கும்படி அமெரிக்கா, இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் வழங்கி வந்தது.

சில பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தி தமக்குச் சாதகமான கொள்கைகளை அமுல்படுத்தும்படி தூண்டியது. அவர்களுக்கு அடித்த அதிஷ்டமாக ஜே.ஆர் ஜெயவர்த்தனா அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகச்சிறந்த நண்பனாக இலங்கையைக் குதறிக் குலைக்க முன்வந்தார். பல அதிகாரங்களைச் ‘சுதந்திரத்துக்குப்’ பின்னும் தம் கைவசம் வைத்திருந்த இலங்கைக்கான பிரித்தானியக் கவர்னர் இடதுசாரிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படி தூண்டினார். அமெரிக்க- சோவியத் பனியுத்தம் இலங்கையிலும் தனது பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது இலாபகரமாக இருந்த போதும், அதை நிறுத்தி மேற்கிலிருந்து அதிகூடிய விலையில் பண்டங்களை இறக்குமதி செய்ய UNP அரசு முடிவு செய்தது. இலங்கைப் பொருளாதாரம் ஜெயவர்த்தனாவின் கையில் ‘குரங்கின் கை பூமாலையானது’. வறிய விவசாயிகளின் நிவாரணத்தை நிறுத்திய அதே தருணத்தில் அரசு தனியார் வியாபாரிகளுக்குச் சலுகைகளை வழங்கியது. திடமாக இருந்த இலங்கைப் பொருளாதாரம் ஒரு வருடத்திற்குள் தலைகீழானது.

ஆனால் ஆளும் வர்க்கம் இலங்கைத் தொழிலாளர்களின் சக்தியைக் குறைத்து மதிப்பிட்டு விட்டனர். அரிசி நிவாரணம் நிறுத்தப்பட்டமைக்கு எதிராக 1953ஆம் ஆண்டு யூலை 20இல் யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் பங்குபற்றினர். இக்கூட்டம் ஐந்து மணித்தியாலத்துக்கும் மேலாக நீடித்தது. அடுத்தநாள் 12 000 க்கும் மேற்பட்ட கொழும்புத் துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

23ஆம் திகதி யூலை வெள்ளவத்தை Spinning and waving தொழிலாளர்கள் அரைநாள் வேலை நிறுத்தத்தைக் கடைப்பிடித்தனர். கொண்டுவரப்பட இருக்கும் வரவுசெலவுத் திட்டத்திற்கெதிராக வாக்களிக்கும்படி 8760 பேர் கையெழுத்திட்ட பெட்டிசன் காங்கேசன்துறை பாராளுமன்ற உறுப்பினர் நடேசனிடம் கையளிக்கப்பட்டது. கண்டி, யாழ்ப்பாணம், கோப்பாய், ருவானவெல்ல என்று பல இடங்களில் பெரும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. வரும் ஆகஸ்ட் 6ம் திகதி பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் என்ற கோரிக்கை எல்லாக் கூட்டங்களிலும் நிறைவேற்றப்பட்டது.

இத்தருணத்தில் வலதுசாரி ஊடகங்கள் இடதுசாரிகளைத் தொடர்ந்து தாக்கின. ‘சிவப்புப்’ பயப்பீதி வதந்திகளைப் பரப்பினர். ஆகஸ்ட் 6ஆம் திகதி சோவியத்யூனியனின் தலைவர் தமது கொள்கை மாற்றம் பற்றி அறிவிக்க முடிவெடுத்திருக்கும் நாள் என்றும் அதனால் தான் இடதுசாரிகள் வேலை நிறுத்தத்துக்குத் தூண்டுகின்றனர் என்றும் வதந்திகள் பரப்பப்பட்டன. 1953 யூலை 26இல் சிலோன் வானொலியில் தொழிலாளர்களுக்குப் பின்வருமாறு ஒரு எச்சரிக்கை அனைத்து மொழிகளிலும் ஒலிபரப்பப்பட்டது. ‘ அரசுக்கெதிரான வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அல்லது அரசுக் கொள்கையை மாற்றக்கோரி ஊர்வலத்தில் , போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்கள் அனைவரும் தாமாகத் தம் வேலையிலிருந்து விலத்தி விட்டார்கள் என்று கருதப்படுவர்.

அவர்கள் மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டார்கள்’. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தடுக்க இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டது. ஆனால் இந்த மிரட்டலுக்கு அடிபணிய மறுத்த தொழிலாளர்கள் வலதுசாரி ஊடகங்களின் சிவப்பு பயப்பரப்பலைப் புறக்கணித்து வேலை நிறுத்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். இதை எதிர்க்க எல்லாக குறுக்கு வழிகளையும் நாடிய ஜெயவர்த்தனா ‘பொருளாதாரத்தின் பெரும்பகுதியை தமிழர்கள் எடுத்துக் கொள்வதால் தான் இந்தப் பிரச்சனை’ என்ற பிரச்சாரத்தையும் தூண்டிவிட்டார்.

வலதுசாரி வரலாற்றாசிரியர்கள் ஜெயவர்த்தனாவைப் புத்திசாலி என்று புளுகுவதையும் இலங்கைப் பாடப்புத்தகங்களில் அவர் மாபெரும் தலைவராகப் போற்றப்படுவதையும் நாமறிவோம். ஆனால் இலங்கைத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு ‘மாபெரும் முட்டாள்’. சமுதாயம் பற்றி ஒரு மண்ணும் தெரிந்திராத ‘மடையன்’. அவர்கள் 1953ஆம் ஆண்டு இதைத் தெட்டத் தெளிவாக ஜெயவர்த்தனவுக்கு விளங்கப்படுத்தினர்.

1947ஆம் ஆண்டு பொது வேலை நிறுத்தத்தை ஒடுக்கிய அதே வலதுசாரிக் குழு தான் இத்தருணம் ஆட்சியிலிருந்தது. வேலை நிறுத்தம் நடக்கும் பட்சத்தில் முன்பு போலவே இத்தருணமும் தாம் தொழிலாளர்களை முறியடிக்க முடியும் என்று அவர்கள் நம்பினர். இராணுவத்தைக் கொண்டு இலங்கைத் துறைமுகத்தைக் கைப்பற்றித் தொழிலாளர்களைப் பொலிஸ் பாதுகாப்பில் வேலைக்குக் கொண்டு செல்வதன் மூலம் பொது வேலை நிறுத்தத்தை முறியடிக்க அவர்கள் திட்டமிட்டனர்.

வேலை நிறுத்த முன்னெடுப்புகள் பலப்பட அதிகாரவர்க்கத்தின் பயமும் வலுப்படத் தொடங்கியது. அதன் பலனாக UNP க்குள் பல முரண்பாடுகள் வெடித்தது. ஆர்.பிரேமதாச போன்றவர்கள் ஜே.ஆரின் பொருளாதார மொக்குத்தனத்தை ஏற்றுக் கொண்டனர். இருப்பினும் பொருளாதாரப் பிரச்சனையை இடதுசாரிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர் என்று குற்றஞ் சாட்ட அவர் தயங்கவில்லை. போதாக்குறைக்கு அவர்கள், மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று மோசமான கேலிக்கிடமான வழி முறைகளைப் போதித்தனர்.

‘மக்கள் செலவற்ற மற்றும் ஆடம்பரமற்ற சாதாரண வாழ்க்கைக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று பிரேமதாசா கேட்டுக்கொண்டார்! விலைவாசி அதிகரிப்புக்குக் காரணமானவர்கள் தம் ‘மாளிகைகளில்’ ‘அனாவசிய செலவுகளில்’ ஈடுபட்டிருக்க வறிய மக்கள் செலவைக் குறைக்க வேண்டும் என்ற சில்லறைக் கோரிக்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் எடுபடவில்லை. பொது வேலைநிறுத்தத்துக்கு முதல்நாள் பிரேமதாச பின்வருமாறு ஒரு சவால் விட்டார்.

"இந்த ஆண்டின் மிகப்பெரிய பகிடியாக இந்தக் கர்த்தால் இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இந்தச் சிவப்புச் சட்டைகாரர்களுக்கு ஒன்றைத் துணிந்து சொல்வேன். உங்களின் கதையை மக்கள் செவிமடுக்கலாம் ஆனால் அவர்கள் நீங்கள் சொல்வதில் ஒரு சொட்டையும் நம்பப்போவதில்லை."

பிரேமதாசவின் இந்தத் ‘தீர்க்க தரிசனம்’ நிறைவேறவில்லை. அதற்கு மாறாக ஆயிரக்கணக்கில் மக்கள்-தொழிலாளர்கள் வந்தனர். செவிமடுத்தனர். செயலில் இறங்கினர். கம்யூனிச கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த சில தொழிற்சங்கங்களில் ஏற்பட்ட சிறு தாமதத்தின் பின் பொது வேலை நிறுத்தம் ஆகஸ்ட் 12இல் நிகழவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆகஸ்டு 12ல் நாடு முழுவதும் ஸ்தம்பித்தது.

தொழிலாளர்களின் ஒற்றுமையும் பலமும் LSSP தலைமைகளுக்குக் கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏராளமான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்குபற்றினர். போக்குவரத்தைத் தொடர அரசு இராணுவத்தை வரவழைத்து சாரதிகளாகப் பணியாற்ற விட்டது. கொழும்புத் துறைமுகத்தையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தது. இதையும் மீறி நாடு காணாத அளவில் பொது வேலை நிறுத்தம் எல்லா இடங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது. இந்தியப் பொதுத்தொழிலாளர் சங்கச் செயலாளரும் LSSPயின் முக்கிய தலைமை உறுப்பினருமான பாலத்தம்பு இந்த வேலை நிறுத்தத்தைப் பற்றி பின்வருமாறு எழுதியிருந்தார்.

‘முதலாளித்துவ அரசை எதிர்ப்பது மட்டுமல்ல அதை உடைத்து விழுத்த முடியும் என்ற பாடத்தை இந்தப் பொது வேலை நிறுத்தம் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வறிய மக்களுக்கும் கற்றுக்கொடுத்தது. தாம் நேரடி போராட்டத்தில் இறங்கும்போது ஆளும்வர்க்கத்தால் அவர்களை அசைக்க முடியாது என்பதை அவர்கள் நிரூபித்தனர். ஆகஸ்ட் 12 ஒரு மறக்க முடியாத நாள். மகரகாம, பேரளகாமுவ என்று பல இடங்களில் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நிகழ்ந்த நாளிது. பொலிஸ், இராணுவம் மட்டுமல்ல ஒட்டு மொத்த அதிகார வர்க்கமும் ஒன்றாகச் சேர்ந்து வந்தால் கூட அவர்கள் பலம் ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் பலத்துக்கு நிகராக முடியாது என்று நிறுவிய நாளது. வேலை நிறுத்தத்தைக் காப்பாற்ற இராணுவ-பொலிசை எதிர்கொள்ளவும் தொழிலாளர் தயாராகிய – அதற்கு உயிரைக் கொடுக்கக்கூட முன்வந்து ‘கர்த்தால் கதாநாயகர்களாக’ மாறத் தொழிலாளர்கள் தயாரான நாளது.

ஆனால் அதே நாள் வலதுசாரி ஊடகங்கள் கற்பனைக் கதைகளைப் பிரசுரித்தன. ‘வழமைபோல் தொழில் நடந்தேறியது’ என்று சிலோன் டெய்லி நியூஸ் தலையங்கம் எழுதியது. ‘வழமையான சூழல் நிலவியது’ என்ற தலைப்பில் அவர்களது ஆசிரியர் தலையங்கம் எவ்வாறு வேலை நிறுத்த நாள் ஒரு சாதாரண நாளாக இருந்தது என்று வர்ணித்தது. இந்தச் ‘சாதாரண நாளில்’ அசாதாரண முறையில் UNP அமைச்சரவை அவசர அவசரமாகக் கொழும்புத் துறைமுகத்தில் நின்ற HMS Newfound land கப்பலில் கூடியது! பயக்கெடுதியில் உடனடியாக அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்திய அமைச்சரவை, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் ஊரடங்குச் சட்டத்தையும் அமுலுக்குக் கொண்டு வந்தது.

வேலை நிறுத்த நாளைச் ‘சாதாரண நாள்’ என்று வர்ணித்த அதே பத்திரிகைகள் அடுத்த நாள் அவசர காலச் சட்டம் என்றால் என்ன என்று விளக்கவுரைகள் எழுதின. அடுத்தடுத்த நாட்களில் வலதுசாரி பத்திரிகைகள் முழுவதும் எவ்வாறு அவசரகாலச் சட்டத்தையும் மீறி நாடெங்கும் வேலை நிறுத்தம் தொடர்கிறது என்ற செய்திகளை வெளியிட்டன. வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தும் புறக்கணித்துப் பிரச்சாரம் செய்வது அவர்களுக்கு முடியாத காரியமாகிப்போனது.

வேறு வழியின்றி அரசு ஆகஸ்டு 15இல் இராணுவத்தின் முழு உதவியையும் நாடியது. வேலை நிறுத்த நாளைச் சாதாரண நாள் என்று தலையங்கம் எழுதிய அதே பத்திரிகை லண்டன் ரைம்சை மேற்கோள் காட்டி 19 ஆகஸ்டில் தொழிலாளர்களின் அதிருப்தியைச் சரியாக பாவித்த LSSP மிக வெற்றிகரமாக வேலை நிறுத்தத்தை ஒழுங்கமைத்திருந்தது’ என்று எழுதவேண்டியதாயிற்று.

- சேனன்

தொடரும்....

நன்றி : கீற்று

ஈழப் போராட்ட வரலாறு பற்றி மேலும் படிக்க...

Wednesday, July 14, 2010

சூடான் போன்று இலங்கை இனப்படுகொலை குறித்து விசாரணை நடக்குமா? - ஆய்வாளர்கள் கேள்வி















சர்வதேச நியமங்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களுக்கு எதிராக நீதி வழங்காமல் ஒரு நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த முடியாது என அமெரிக்க தேசியப் பாதுகாப்புச் சபையின் ஆலோசகர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். பொஸ்னியாவின் Srebrenica இனப்படுகொலையில் 15வது வருட நினைவை முன்னிட்டு அவர் பொஸ்னிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

அதேவேளை, சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பசீருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலையை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்;டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமது விடுதலைக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொலை செய்தமை, அதன் மூலம் அப்பகுதி மக்களை உளவியல் ரீதியாக அச்சத்தில் ஆழ்த்தியமை மற்றும் உரிமைகளுக்காக போராடியோர் மீது இராணுவ அடக்குமுறைகளைக் பிரயோகித்தமை போன்ற மூன்று குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டு இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த நாடான சூடானின் டார்பூர் பிரதேசத்தில் பழங்குடியின மலைவாழ் மக்களின் மீதே அந் நாட்டரசு இந்த இனப்படுகொலையை மேற்கொண்டிருந்தது.

பொது மக்கள் படுகொலை, பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள், வீடுகளுக்குத் தீ வைத்தல், உணவுப் பொருட்களை கொள்ளையிடுவதன் மூலம் அம் மக்களை பட்டினியால் சாகடித்தல் போன்ற குற்றச் செயல்களில் சூடான் அரசுக்கு ஆதரவான படையினர் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந் நிலையிலேயே, சூடான் அரசாங்கமும், படைத்தரப்பினரும் குறித்த பயங்கரவாதப் படையினருக்கு ஆதரவளித்து வருவதாக குற்றச்சாட்டப்பட்டு ஜனாதிபதி ஒமர் அல் பசீர் மீது நெதர்லாந்திலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து, இந்த இனப்படுகொலை வழக்குக் குறித்த விசாரணைகளை மேற்கொண்ட சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் மனிதாபிமானத்துக்கு எதிராக இனப்படுகொலைகளை மேற்கொண்டார் என்று குற்றம்வாட்டி சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பசீரை கைது செய்ய கடந்த வருடம் உத்தரவு பிறப்பித்தனர். இதனை எதிர்த்து ஜனாதிபதி ஒமர் அல் பசீரின் சார்பில் ஆஜரான அவரது சட்டத்தரணி நான்கு மாதங்களுக்கான முன்பிணை மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந் நிலையில், இவ் வழக்கினை கடந்த 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் குறித்த மனுவினை நிராகரித்ததுடன், ஜனாதிபதி ஒமர் அல் பசீரைக்; கைது செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.

இந் நிலையில், இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்படுமா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இப் போரில் சிறிலங்கா படைத்தரப்பினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.

இப் போரில் சிறிலங்கா படைத்தரப்பினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி, மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தன. அத்துடன், இப் போரின் இறுதி நாட்களில் சர்வதேச அனுசரணையுடன் வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களான நடேசன் மற்றும் பலித்தேவன் போன்றோர் சிறிலங்கா படைத்தரப்பின் உயரதிகாரியின் கட்டளையின் பேரில் சுட்டுக் கொன்றதாக களத்திலிருந்த படையதிகாரி ஒருவர் சனல் 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்திருந்தார்.

இந் நிலையில், இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்வதே இலங்கையில் நிரந்திர அமைதி ஏற்பட வழிவகுக்கும் என்பதை அமெரிக்க தேசியப் பாதுகாப்புச் சபையின் ஆலோசகர் சமந்தா பவர் தெரிவித்த கருத்து வலியுறுத்தி இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு...

Tuesday, July 13, 2010

தமிழரைக் காக்க இலங்கை செல்ல தமிழக இளைஞர்களை அனுமதிக்கத் தயாரா?















தமிழ் நாட்டிலோ, எங்கள் தொப்புள்கொடி உறவுகளான மீனவர்கள் இதுவரை 500க்கும் மேற்பட்டவரை சிங்களக் கடற்படை கொன்று குவிப்பதைக் கண்டித்தால் பிரிவினைவாதம் பேசுவதாகக் கூறி தமிழக முதலமைச்சர் தனது சட்ட அமைச்சர் துரைமுருகனை விட்டு, புதிய அடக்குமறைச் சட்டத்தை இயற்றியாவது எங்கள்மீது நடவடிக்கை எடுப்போமென மிரட்டுகிறார் என்றால் தமிழக அரசின்மீது எங்களுக்கு பல சந்தேகங்கள் இயல்பாக ஏற்படுகிறது என நாம் தமிழர் கட்சி, செந்தமிழன் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர் செல்லப்பன் மீன்பிடிக்கும் போது அடித்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும் இலங்கையில் 25,000 சீனக் கைதிகளை புனரமைப்புப் பணிகள் செய்ய அனுமதித்திருப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் மானத்திற்கும் உயிருக்கும் தீங்கு செய்யும் என்பதாலும், இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் குந்தகம் ஏற்படும் என்பதை தடுக்கக் கோரியும் 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்திட ஐ.நா.மன்றம் நியமித்த போர்க்குற்ற விசாரணைக் குழவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் 9-07-10 சனி அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

இதுவரை சுமார் 537 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டும், அடித்தும் கொன்றிருக்கிறது. பல்லாயிரக் கணக்கானோரை படுகாயப்படுத்தியிருக்கிறது. தமிழக மீனவர்களின் பல்லாயிரம் கோடி மூபாய் உடமைகளை அழித்து நாசப்படுத்தியிருக்கிறார்கள். நமது மீனவர்களை காக்க வேண்டிய இந்திய அரசும், தமிழக அரசும் கண்ணாமூச்சி விளையாட்டு போல் கடிதம் எழுதிக் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிவருகின்றனர்.

இதைக் கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் என் மீது பிரிவினை தூண்டினார், இறையாண்மைக்கு எதிராகப் பேசினார் என்றெல்லாம் பொய் வழக்கு போட்டு கைது செய்யத் துடிக்கிறது தமிழக அரசு.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட உலக நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.மன்றத்தின் பொதுச் செயலாளர் பான்.கி.மூன் அவர்களை தரங்கெட்ட வார்த்தைகளால் இழிவாக எழுதி வைத்து இலங்கையின் வீட்டு வசதித் துறை அமைச்சர் விமல் வீரவன்சே ஐ.நா. தூதரகத்தை முற்றுகையிட்டு, ஐ.நா. நியமித்த மர்சுகி தருஷ்மன் தலைமையிலான போர்க்குற்ற விசாரணைக் குழு இலங்கைக்குள் வர அனுமதிக்க மாட்டோம் என்று அடாவடித்தனமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்.

அதை இலங்கை அதிபர் இராஜபக்சேவும் ஆதரிக்கிறார். ஆனால் தமிழ் நாட்டிலோ, எங்கள் தொப்புள்கொடி உறவுகளான மீனவர்கள் இதுவரை 500க்கும் மேற்பட்டவரை சிங்களக் கடற்படை கொன்று குவிப்பதைக் கண்டித்தால் பிரிவினைவாதம் பேசுவதாகக் கூறி தமிழக முதலமைச்சர் தனது சட்ட அமைச்சர் துரைமுருகனை விட்டு, புதிய அடக்குமறைச் சட்டத்தை இயற்றியாவது எங்கள்மீது நடவடிக்கை எடுப்போமென மிரட்டுகிறார் என்றால் தமிழக அரசின்மீது எங்களுக்கு பல சந்தேகங்கள் இயல்பாக ஏற்படுகிறது.

இலங்கையில் ஈழத்தமிழரை இலட்சக் கணக்கில் இனப்படுகொலை செய்தது போதாதென்று இந்தியாவிலும் தமிழினத்தை அதாவது நம் மீனவர்களை இனப்படுகொலை செய்துவரும் சிங்கள இனவெறியர் அதிபர் இராஜபக்சே அரசை நாம் கண்டித்தால், தமிழக அரசுக்கும், இங்குள்ள அமைச்சர் துரைமுருகனுக்கும் கோபம் பொத்துக் கொண்டு வருவது ஏன்? இராஜபக்சே இவர்களுக்கு அண்ணனா, தம்பியா? மாமனா, மைத்துனரா? தமிழின விரோதியைத் திட்டினால் தமிழினக் காவலருக்கு கோபம் வருவதேன்? தமிழர்களின் உயிரென்றால் உங்களுக்கு துச்சமா? அல்லது இராஜபக்சே அரசுக்கு நீங்கள் என்ன அங்கமா?

ஈழத்தமிழரைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், 6வது திருத்தச் சட்டம் என அடக்குமுறைச் சட்டங்களைக் காட்டி மிரட்டுவதைப் போல், தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் இங்கேயும் அடக்குமறைச் சட்டம் போடுவோமென மிரட்டுகிறார் என்றால், இவர்கள் தமிழக மீனவர்களை காப்பாற்ற இலங்கைமீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டார்களாம்! ஆனால் அதைக் கண்டித்துப் பேசும் எங்களுக்குத் தான் வாய்ப்பூட்டுச் சட்டம் போடுவாராம்.! இவர் தமிழ் நாட்டு மக்களுக்கு அமைச்சரா? இல்லை இலங்கைக்கு அமைச்சரா?

உலகமே இன்றைக்கு இலங்கையின் இராஜபக்சே அரசு ஈழத்தமிழர்க்கெதிராக போர்க்குற்றம் புரிந்திருக்கிறதா, இல்லையா என ஆய்வுச் செய்திட ஐ.நா.மன்றம் மூலம் குழு அமைத்து ஆராயச் சொல்கிறது. ஆனால் இலங்கை அரசின் ஒரு அமைச்சர் விசாரணை நடத்த ஐ.நா. குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கமாட்டோமென மிரட்டுகிறார். சாகும்வரை உண்ணாவிரதமிருக்கிறார். அதை முடித்துவைப்பதற்கு இந்நாடகத்தின் சூத்திரதாரியான இராஜபக்சேவே செல்கிறார்.

இலங்கைப் பாதுகாப்புச் செயலாளரும், அதிபர் இராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபைய இராஜபக்சே விசாரணைக்கு முன்பே, அரசின் மீதும், இராணுவத்தின் மீதும் விசாரணை எதுவும் நடத்த மாட்டோமென்று ஐ.நா.குழு உறுதியளிக்க வேண்டுமென நிபந்தனை விதிக்கிறார். அதுமட்டுமன்றி சரத்பொன்சேகா ஐ.நா.குழவிற்கு சாட்சியமளித்தால் அவரைத் தூக்கிலிடுவோம் என பி.பி.சி.க்கு அளித்த நேர்காணலில் மிரட்டுகிறார். போர்க்குற்றம் செய்யாதவர்கள் என்றால் இப்படியெல்லாம் ஐ.நா.வை அவமானப்படுத்துவது ஏன்? விசாரணை நடத்த ஒத்துழைக்க மறுப்பதேன்? சுதந்திரமாகவும் நியாயமாகவும் விசாரணை நடத்த அனுமதித்தால் இலங்கை போர்க்குற்றவாளி நாடாக அறிவிக்கப்படும் என்ற அச்சத்தால் ஐ.நா. குழுவின் விசாரணைக்கு இவர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதுதானே உண்மை.

ஐ.நா.வின் பாதுகாப்பு அவையில் இடம்பெற முயற்சிக்கும் இந்தியா இதுவரை இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து வாய் திறக்காதது ஏன்? 2009 சனவரியில் காசா பகுதியில் சுமார் 1700 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்ட போது, அதே ஆண்டு ஏபரலில் ஐ.நா.மன்றம் அமைத்த போர்க்குற்ற விசாரணைக் குழுவை வரவேற்ற இந்திய அரசு, இலங்கையில் முள்ளிவாய்க்கால் போரில் சுமார் ஒரு இலட்சம் ஈழத்தமிழர்கள் கொத்துக் குண்டுகளாலும், பாஸ்பரஸ் குண்டுகளாலும் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு இதுவரை ஏன் கண்டிக்கவில்லை?

போர்க்குற்ற விசாரணை நடத்தச் செல்லும் ஐ.நா.குழுவை இந்தியாவும் தமிழக அரசும் ஆதரிக்கிறதா, இல்லை எதிர்க்கிறதா என்று சொல்லட்டும்.மிகச் சிறிய நாடான இலங்கை ஐ.நா.மன்றத்தையே அவமானப்படுத்தும்போது மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அதைக் கண்டிக்க அஞ்சுவது ஏன்? சீனக் கைதிகளை இலங்கை இறக்குமதி செய்திருப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக அமையும் என்று ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்திய அரசு இதைப்பற்றி சிறிதும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இலங்கை அனுமதித்துள்ள 25,000 சீனக்கைதிகளில் பயங்கர குற்றவாளிகளும், உளவாளிகளும் இருக்க மாட்டார்கள் என்று என்ன உறுதியிருக்கிறது? அப்படிபட்டவர்களால் இந்தியாவின் பாதுகாப்பு பகுதியாகவும் இராணுவத்தளங்கள் அமைக்க தகுதியான இடமாகவும் கருதப்படும் தென்னிந்தியாவிற்கு குந்தகம் விளையாதா?

இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், மாலத்தீவு போன்ற சார்க் நாடுகளில் இலங்கையைத் தவிர வேறு எந்த நாட்டு கடலோரப் படைகளும், தன் அண்டை நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் சுட்டுக்கொல்வது கிடையாது. கைது செய்து அந்தந்த நாட்டிற்கே அனுப்பிவைத்து விடுவதுதான் வழக்கம். ஆனால் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைக் கொன்ற சிங்கள அரசைத் தட்டிக்கேட்க துணிவு இல்லாவிட்டாலும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திலோ, ஐ.நா.மனித உரிமை ஆணையத்திடமோ முறையிட்டு இலங்கை அரசை, இந்தியா தண்டிக்கத் தவறியதேன்.

அரசு, ஆட்சி, அதிகாரம் எல்லாம் உங்கள் கைகளில் தானே இருக்கிறது! அவையெல்லாம் எதற்கு? இராஜபக்சேவிற்கு வெண்சாமரம் வீசுவதற்கா? மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி 168 இந்தியர்களை சுட்டுக் கொன்றதற்காக பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப மறுத்த இந்தியா முள்ளிவாய்க்கால் போரில் இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழர்கள் 15,000 பேர் 50,000 ஈழத்தமிழர்களோடு இனப்படுகொலை செய்யப்பட்டதையும் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இந்திய கடற்பகுதியிலேயே சிங்கள கடற்படை கொன்றதையும் உதாசீனப்படுத்திவிட்டு இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு இரண்டு முறை அனுப்புவது இந்திய ஒருமைப்பாட்டின் இலட்சணத்திற்கு இதுதான் அடையாளமா?

சிங்கள கடற்படையினரால் கொடூரமாகச் சுட்டும், அடித்தும் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் இந்தியர்களில்லையா? அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டா இல்லையா? எனக்கேட்டால், தன்னைத் தமிழன் என்று மார்த்தட்டிக் கொள்ளும் பொறுப்புள்ள ஒரு தமிழக முதலமைச்சர், "சூராதி சூரர்கள், சூரபத்ம பேரர்கள் இதோ புறப்பட்டுவிட்டது இலங்கைக்கு எங்கள் படை என்று கடற்படையை அனுப்பப் போகின்றார்களா?" என்றும் "கொழும்புக்கு கடலிலேயே நீந்திச் சென்று அங்குள்ள கோட்டைக் கொத்தளங்களை முற்றுகையிடப் போகிறார்களா?" என்றும் தமிழர்களைக் கேலி பேசி இருப்பது தமிழினத் தலைவருக்கு அடையாளமா?.

செம்மொழி மாநாடு நடத்தியவருக்கு பாவம் இராஜராஜ சோழன் காலத்தில், நந்திவர்ம பல்லவன் காலத்தில் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்று தமிழரிடம் வாலாட்டிய சிங்கள மன்னர்களின் கொட்டத்தை அடக்கிய வரலாறு தெரியாதென்று சொல்ல முடியாது. பதவிப்பித்தும், குடும்பச் சொத்தும் தமிழக முதல்வரைத் தமிழர் வீரத்தைப் பற்றியே கேலியும் கிண்டலும் செய்யத் தூண்டியிருக்கிறது. இதுதான் அண்ணா, பெரியார் உங்களுக்கு காட்டிய வழியா?

தமிழனுக்கு என்றொரு நாடோ, படையோ இன்றில்லாவிட்டாலும் முப்படைகளைக் கொண்டிருக்கும் இந்திய அரசில் தன்னை பங்காளி ஆக்கிக்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் கலைஞர் தன்னை எம்.ஜி.ஆரைப் போல் எண்ணிக்கொண்டு, சோனியா காந்தி தன்னை இந்திராகாந்தி போல் கருதிக்கொண்டு அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயதங்களும், பயிற்சியும், நிதியுதவியும் செய்தததைப் போல எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு உதவிகள்கூட செய்ய வேண்டாம். குறைந்தது எங்களைத் தடுத்து நிறுத்தாமல் இருக்க முடியுமா உங்களால்?

ஈழத்தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் காப்பாற்ற எத்தனை இலட்சம் தமிழர்கள் அணிவகுத்து புறப்படுகிறார்கள் என்று சோதித்து பார்க்க நீங்கள் தயாரா? குடிநாயகம் அனுமதிக்கும் பேச்சு சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்க தடைச்சட்டங்களிடம் தஞ்சம் புகும் நீங்களா தமிழக இளைஞர்களின் வீரத்தைப் பற்றி கேலி பேசுவது? நாங்கள் சூராதி சூரர்கள் என்று நிரூபிக்கத் தயார்! ஆனால் ஆட்சி அதிகாரத்தில் உள்ள உங்களைப் போன்றவர்கள் நந்தி போலிருந்து முட்டுக்கட்டை போடாமலிருக்கத் தயாரா?

ஈழத்தமிழர்கள் 2009ல் இனப்படுகொலை செய்யப்படும் போதுகூட, உங்கள் தயவால் நடந்து கொண்டிருந்த மத்திய அரசுக்கு ஒரு நெருக்கடி தந்து போரை நிறுத்தாமல் மூணுமணி நேர உண்ணாவிரத நாடகமெல்லாம் எங்களுக்கு நடத்தத் தெரியாது. பணமோ, பதவியோ ஏதுமற்ற ஏழைத்தமிழர்களான முத்துக்குமார் முதல் முருகதாசன் வரை 18 மானத்தமிழர்களால் தீக்குளித்துத் தங்கள் இன்னுயிரை மாய்க்கத்தான் தெரிந்தது. தமிழினத்தைக் காட்டிக்கொடுக்க அவர்களுக்குத் தெரியவில்லையே! வங்காளி என்ற இனப்பற்று இருந்ததால்தான் ஒரு மேற்குவங்க காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த சித்தார்த்த சங்கர் ரேயிக்கு வங்கதேசத்திற்கு விடுதலை பெற்றுத் தர முடிந்தது.

ஆனால் இந்தியாவையே வழிநடத்தும் முதலமைச்சரான கலைஞரால் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களும், 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களும் இனப்படுகொலை செய்யப்படுவதைக் கண்டு வேடிக்கைதானே பார்க்க முடிந்தது? மலேசியாவில் சுமார் 250 ஆந்திர மென்பொருள் பொறியாளர்களின் கடவுச்சீட்டைக் அந்நாட்டின் காவல்துறை கிழித்து அவமானப்படுத்தியபோது, ஆந்திர முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு கொதித்தெழுந்து பிரதமாயிருந்த வாஜபாய்க்கு நெருக்கடி தந்து உடணடியாகப் புதுக்கடவுச் சீட்டு வழங்கச் செய்ததோடு மலேசிய அரசுடனான சுமார் 65,000 கோடி ரூபாய் இந்திய வணிகத்தையே இரத்து செய்ய வைத்தார்.

ஆனால் உலகத் தமிழர்களுக்கெல்லாம் தலைவராக ஆசைப்படும் உங்களால் தமிழக மீனவர்களைக் காக்க நடுவன அரசுக்குக் கடிதம் விடு தூதுதான் நடத்த முடிகிறது என்பது பெருமைக்குரிய செய்தியா என்பதை சற்று எண்ணி பாருங்கள் ஹரியானா வம்சாவழி வந்த பிஜி நாட்டின் அதிபர் சவுத்ரி இராணுவப் புரட்சியால் தூக்கி எறியப்பட்டதற்கு, ஹரியானா முதல்வராக இருந்த சவுதாலாவின் வற்புறுத்தலை ஏற்று இந்திய அரசு பிஜி நாட்டுடனான அரச உறவுகளை துண்டித்துக் கொண்டதோடு தன்னாட்டு தூதுவரையும், பிஜியிலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டது.

ஆனால் தமிழக முதல்வரோ மகனுக்கும், பேரனுக்கும் நடுவணரசின் இலாபகரமான துறைகள் வேண்டி நெருக்கடி கொடுத்தாரே தவிர தமிழர்களைக் காக்க ஏன் எவ்வித நெருக்கடியும் தர மனமில்லாது போனது? கென்யா நாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் குஜராத்தியர்கள் பாதிக்கப்பட்டபோது, இந்தியாவில் உள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கென்யாவில் வாழும் குஜராத்தியர்கள் கடவுச்சீட்டு இல்லாமல் இந்தியா வரலாம். ஆவர்களை குஜராத் அரசு பாதுகாக்கும் என்று துணிவோடு பேசினார்.

ஆனால் தமிழக முதல்வர் கலைஞரோ, 83 வயதான உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற மலேசியாவிலிருந்து இந்தியா வந்த மாவீரன் பிரபாகரன் அவர்கிளின் தாயார் பார்வதி அம்மாளை இரக்கமில்லாமல் விமானதளத்திலிருந்தே திருப்பியனுப்பிய கருணைக்கடல் அல்லவா நீங்கள்? அதுமட்டுமல்லாமல் முள்ளிவாய்க்கால் போரின் போது அங்கிருந்து தப்பித்து தமிழகம் முயற்சி செய்த எண்ணற்ற தமிழ்க் குடும்பங்களை இரக்கமில்லாமல் இந்தியக் கடற்படையை வைத்து தடுத்து திருப்பியனுப்பியது போர்க்குற்றத்திற்கு உடந்தையான செயலல்லவா?

போர் முடிந்து ஒராண்டு ஆகியும் பல்லாயிரம் தமிழ் இளைஞர்களை வதைமுகாம்களில் வைத்தும் சுமார் 80,000க்கும் மேற்பட்ட தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடிப்படை வசதிகளின்றி கொடுமைப்படுத்தியும் வருகிறது சிங்கள அரசு. ஆனால் போர் எதுவும் இல்லாமலே தமிழ் நாட்டில் எவ்வித விசாரணையுமின்றி ஈழத்தமிழர்களை சிறப்பு முகாம் என்ற பெயரில் வதைமுகாம்களில் தடுத்து வைத்து இருக்கிறீர்கள் நீங்கள், அது நியாயம்தானா?

அண்மையில் கனடா அரசு, கைது செய்து வைத்திருந்த 86 ஈழத்தமிழர்களை 3 மாதத்திற்குள் விசாரித்து விடுதலை செய்தது மட்டுமன்றி அகதிகளாகவும் ஏற்றுக் கொள்கிறது. ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஐ.நாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதோடு ஈழத்தமிழர்களை அகதிகளாகவும் ஏற்று ஆதரிப்போம் என மனிதநேயத்தோடு அரசாணையும் பிறப்பித்திருக்கிறார்.

ஆனால் தமிழக முதல்வரோ, இந்திய பிரதமரோ அல்லது சோனியா காந்தியோ ஐ.நா மன்றம் இலங்கையின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த நியமித்த குழுவை இதுவரை ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என்று துணிவுடன் கூற முடியாதது ஏன்? குற்றமுள்ள நெஞ்சுகள்தானே குறுகுறுக்க வேண்டும்!உலகில் வாழும் 10 கோடி தமிழர்களும் ஐ.நா.மன்றம் இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆய்வு செய்யும் குழுவை நியமனம் செய்ததற்கு ஐ.நா.பொதுச்செயலாளர் பான்.கி.மூன் அவர்களுக்கும், இதற்கு பெருமுயற்சி எடுத்துக்கொண்ட ஐரோப்பிய, அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு நன்றிகள் செலுத்தி பாராட்டி வருகிறார்கள்.

இனப்படுகொலையை விசாரிக்க இவர்கள் எடுக்கும் நல்ல முயற்சிக்கு யார் தடையாய் இருக்க நினைத்தாலும் அதனை முறியடித்துக் காட்டும் ஆற்றல் உலகத் தமிழர்க்கு உண்டு எனவே ஈழத்தமிழரையும், தமிழக மீனவர்களையும் காத்திட ஆட்சியில் உள்ளவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தாங்கள், எங்களை இலங்கைக்குச் செல்ல தூண்டிவிடுவது போல், தமிழக இளைஞர்களை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வழியில் "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால், சங்காரம் நிஜமென சங்கே முழங்கு" என்கிற வழியில் எங்களை அனுமதிக்க நீங்கள் தயாரா?

எங்கள் மீது தமிழக அரசு போடும் பொய் வழக்குகளை நாங்கள் சட்டப்படி சந்திப்போமே தவிர ஒருபோதும் ஓடிஓளிய நாங்கள் ஒன்றும் கோழைகளல்ல என்பதை தமிழக அரசுக்குத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு

செந்தமிழன் சீமான்

மேலும் செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்..

Monday, July 12, 2010

சீமான் கைது -‍ தமிழ்த்தேச விடியலுக்கான புள்ளி















நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் மீது மீண்டும் ஒரு வழக்கினை பதிவு செய்து, கைது செய்துள்ளனர் காவல் துறையினர். தமிழ் இனத்தின் உரிமைக் குரலாய் ஒலிக்கின்ற சீமானின் ஆவேசம் ஆட்சியாளர்களை அச்சம் கொள்ள வைத்திருக்கிறது என்பதற்கான சான்றுகளாய் அமைகின்றன இத்தகைய அச்சுறுத்தல்கள். தாக்கப்பட்டு.. நிர்வாணப்படுத்தப்பட்டு.. மனித மாண்பிற்கு அப்பாற்பட்டு கொல்லப்பட்ட தன் எளிய மீனவ சகோதரனின் மரணத்திற்காக ஆற்றாமை வலியோடு கத்தித் தீர்த்த சீமானின் சினம், ஊழலும், துரோகமும் புரையோடிப் போன மூன்றாம் தர ஆட்சியாளர்களுக்கு சவாலாய் இருக்கிறது.

என் சகோதரனைக் கொல்லாதே.. அவனை நீ அடித்தால் நான் உன்னை அடிப்பேன் என்ற அறச் சீற்றம் சிங்களப் பேரினவாதத்தின் மீது மலர்ந்து விட்ட இந்தியாவின் கள்ளக் காதலுக்கு ஒவ்வாமையாக இருக்கிறது.

ஒரு மனிதனின் உணர்வு கொப்பளிக்கும் பேச்சு அதிகார உச்சங்களுக்கு அச்சுறுத்தலாய் விளைந்து, அசைக்க முடியாத அதிகாரத்தின் மாட மாளிகை, கூட கோபுரங்களை கவிழ்க்கும் பெரும் புயலாய் மாறுவது வரலாற்றில் புதிதல்ல. வரலாறு  எத்தனையோ ஆகச் சிறந்த பேச்சாளர்களை கண்டிருக்கிறது. திராவிட இயக்கங்கள் மாபெரும் பேச்சாளர்களையே தன் மூலதனமாகக் கொண்டு வளர்ந்தன.

கரகரத்த குரலால் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு தமிழ்நாட்டில் பாடை கட்டினார் அறிஞர் அண்ணா. இரண்டாம் உலகப் போரின்போது சரிந்து கிடந்த இங்கிலாந்தினை, சுருட்டு ஊதும் உதடுகளால் உரையாற்றி உசுப்பேற்றி உயிரூட்டியவர் சர்ச்சில். இந்திய விடுதலையில் அனலாய் தகித்த சுபாஷ் சந்திர போஸின் சொற்கள் இன்னமும் உலவுகின்றன இலட்சியங்களாய் உலகில்.
 
சொற்களின் வலிமை மிகப் பெரியது. சொற்கள் ஏந்தவைக்கும் துப்பாக்கிகள்தான் தேசங்களை உருவாக்குகின்றன. தோல்வியாலும்.. அடிமைத்தனத்தினாலும் சினம் கொண்ட மனநிலை சீறிப் பாய்ந்து உதிர்க்கும் சொற்கள் காற்றில்  மிதந்து.. கால்கள் முளைத்து.. சோம்பிக் கிடக்கும் விழிகளில் வெளிச்சத்தினைப் பாய்ச்சும் வல்லமை உடையன. சீமானின் சினமும் இத்தகையதுதான்.
 
ஒரு தேசிய இனத்தின் தன்னுரிமைப் போரில் தவிர்க்க இயலா இருள் ஒன்று சூழ்கையில் வெளிச்ச தெறிப்பாய் வெளியே வந்தார் சீமான். முற்போக்கு மேடைகளில் பெரியாரியலையும், பொதுவுடைமையும் , தமிழினச் சிறப்பினையும், பாடல்களோடும், நகைச்சுவையோடும் விவரித்த சீமான் தேசியத்தலைவர் பிரபாகரனின் சந்திப்பிற்குப் பிறகு ஒரு தேசிய இனத்தின் வலிமை மிக்க சொல்லாயுதமாய் மாறிப் போனார். ஈழம் என்பது இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கான நாடு மட்டுமல்ல.. உலகில் வாழும் 12 கோடி தமிழர்களுக்கான தேசம் என உரக்க அவர் முழுங்குகையில் தமிழர்களுக்கான நோக்கம் ஒர்மையானது.
 
இந்த இனத்திற்காக உண்மையாய் களத்தில் நிற்கிற போராளி சீமான் ஆட்சியாளர்களால் தேடப்படும் குற்றவாளியாக ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறார். இவர்கள் குற்றவாளிகளைத் தேடும் அழகினையும், அவர்களைப் பிடிக்கும் பாங்கினையும் நாம் சற்றே ஆராய்வோம். உலக நாடுகளால் போர்க்குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ராசபக்சே உல்லாசப் பயணம் போக இந்தியாவிற்கு வருகிறான். ஆனால் அவனுக்கு சிவப்பு கம்பள சிங்கார வரவேற்பு. போபால் விஷவாயு வழக்கில் முதன்மைக் குற்றவாளியான ஆண்டர்சனை அரசே விமானம் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்திருக்கிறது.

விமானத்தில் பாதுகாப்பாக ஆண்டர்சன் ஏறுகிறானா என்று பார்க்க அன்றைய மத்திய மந்திரி `புன்னகை புகழ்` நரசிம்மராவ் வேறு காவல் காத்த கதையும் இந்த நாட்டில் தான் நடந்திருக்கிறது. இந்திய நீதிமன்றங்களால் கொலை, கொள்ளை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக இருக்கின்ற டக்ளஸ் தேவானந்தா  இந்திய தலைநகருக்கே வந்து ராஜ உபச்சாரத்தோடு விருந்துண்டு போகிறான். கடமை உணர்வுமிக்க, கண்ணியம் மிக்க தமிழினத்தில் பிறந்த மத்திய மந்திரி ப.சிதம்பரம் டக்ளஸிடம் பணிவு காட்டுகிறார். மத்திய அரசு ஒரு கொலைக்குற்றவாளிக்கு விருந்து உபச்சாரம் செய்து கூத்தடிக்கிறது. தட்டிக் கேட்க வேண்டிய கருணாநிதியின் காவல்துறை வழக்கம் போல டெல்லி காவல் துறைக்கு கடிதம் எழுதுகிறது. யார் இதைக் கேட்பது..?

இன்று சீமானை பிடிக்க 6 தனிப்படைகள் வைத்து பாய்ந்து பாய்ந்து செயல்படும் தமிழக காவல்துறையின் வீரம் அன்று எங்கே போனது..?  இந்தியாவிற்கு வந்த டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்னமும் வாய்தாவிற்கு வாய்தா என நகர்ந்து நிலுவையில் இருக்கிறது. ஆனால் தனது சொந்த மீனவ சகோதரனின் கொலையினை சீமான் தட்டி கேட்கக் கூடாது.

ஏனென்றால் சிங்களனைத் தட்டிக் கேட்பது என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரான செயலாக மாற்றப்பட்டுவிட்டது. குற்றவாளி டக்ளஸ் தேவானந்தாவைப் பிடிக்க கடிதம் எழுதிய தமிழக காவல்துறை, இன்று தன் சொந்த சகோதரனின் கொலையில் வெகுண்டு பேசிய  சீமானைக் கைது செய்ய வாகனங்களை மறிக்கிறது. அலைபேசிகளை அலசுகிறது. போர்க்குற்றம் செய்த சிங்கள அதிபனைக் காக்கத் துடிக்கும் ஆர்வத்தினை நம் மீனவன் உயிரின் மீது மத்திய மாநில அரசுகள் காட்டினார்களா..? இல்லையே..

பேச்சுரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அரசியலைப்பின் வாயிலாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட இயக்கத்தினையும், அதன் தலைமையையும் ஆதரித்து பேசுவது குற்றமாகாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே சொல்லி இருக்கிறது.  இந்த நிலையில் தன் சொந்த காழ்ப்புணர்ச்சியினாலும்.. காங்கிரஸ் மீதான தன் விசுவாசத்தினை விவரிக்கும் ஆர்வத்தினாலும் மாநில அரசு சீமானைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இது போன்ற அடக்குமுறைகளால் ஒரு தேசிய இனத்தின் தன்னுரிமை தாகத்தினை முறியடித்து விடலாம் என்ற ஆட்சியாளர்களின் தவறான கணக்கு பிழையில் முடியப் போவதை எதிர்காலம் காட்டும்.
 
வீழ்ந்த இனம் இது போன்ற கைதுகளால் எழுவதற்கான… எழ வேண்டிய எத்தனிப்பிற்கான அவசியத்திற்கு தள்ளப்படுகிறது. காலம் நம்மை எந்தப் புள்ளியில் நகர்த்துகிறது என்பதை நாம் உணரத் துவங்குவோம். நம் தேசிய இனத்தின் ஒர்மைப்புள்ளியின் துவக்கமாக இதை நாம் கருதுவோம்.

- மணி.செந்தில் ( advmsk1@gmail.com)

நன்றி : கீற்று

மேலும் செய்திகள் படிக்க..

பயணம் ஒன்று .. பார்வை பல ...















அண்மையில் புலம்பெயர் நாடுகளிலிருந்து சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்ட ஒன்பதுபேர் பற்றிய செய்திகளே கடந்த‌ வாரம் தமிழ் வட்டாரங்களில் அதிகம் பேசப்பட்ட விடயமாக இருந்தது.

இச்செய்திகளில் பெரும்பாலானவை கொஞ்சம் உண்மை, கொஞ்சம் வசவு, கொஞ்சம் புனைவு என்பதாக அவரவர் தளத்தில் நின்று வெளியிடப்பட்ட கருத்துகளாகவே அமைந்திருந்தன.

வழமையாக முந்திக் கொண்டு செய்திவெளியிடும் இணையதளங்களில் சில, இச்செய்தியை சுயதணிக்கை செய்து தமது “ஊடக நேர்மையை” வெளிப்படுத்தின.

இந்நிலையில் இப்பயணத்தில் இணைந்து கொண்ட சிலரை தொடர்பு கொண்ட நாம் அவர்கள் தெரிவித்த தகவல்கள், இச்செய்தியின் பின்னணியாக அமைந்த சம்பவங்கள் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இச்செய்திக்கட்டுரையை வரைந்துள்ளோம்.

ருப்பினும் நாம் பெற்றுக்கொண்ட தகவல்கள், குறிப்பாக இலங்கைத்தீவில் இடம்பெற்ற சந்திப்புகள் பற்றிய, உண்மைத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் எமக்கு இருக்கவில்லை என்பதனை கவனத்திற் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

புலம்பெயர் நாடுகளில் இயங்கும் சிறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களை தம்மால் ஒழுங்கு செய்யப்பட்ட பயணங்களில் பங்கெடுக்கவைப்பதும்;, அவர்களை புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகளாகவும், புத்திசீவிகளாகவும் தரமுயர்த்தி தமக்குச் சாதகமான முறையில் பரப்புரைகளை மேற்கொள்வதும், சிறிலங்காவின் நன்கறிந்த தந்திரோபாயமாக இருந்து வருகிறது. இந்த வலையில் விருப்பத்துடன் விழுந்து கொள்பவர்களும் இருக்கிறார்கள், முட்டாள்த்தனமாக விழுபவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் இங்குள்ள யதார்த்தம்.

இந்தவகையில், புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்றின் பிரதிநிதிகள் சிலருக்கும் சிறிலங்கா தூதரக அதிகாரிளுக்குமிடையிலான ஒரு சந்திப்பு கடந்தவருடம் செப்ரெம்பர் மாதத்தில் நடைபெற்றதாக எமக்குத்  தெரியவந்தது. இச்ந்திப்பில் தமிழர் நலவாழ்வு அமைப்பினைச் (ரீ.எச்.ஒ) சேர்ந்த மருத்துவர் ஆறுமுகம் புவிநாதன், ஏ.விமலதாசன், சார்ல்ஸ் அந்தனிதாஸ் ஆகியோருடன் முன்னாள் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனும், லண்டனிலுள்ள சிறிலங்கா தூதரக அதிகாரி அம்சாவும் கலந்து கொண்டனர். இதே காலப்பகுதியில் சிறிலங்கா தூதரகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட முன்னாள் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரொபர்ட எவன்ஸ் மற்றும், ஹரோ உள்ளுராட்சிச்சபை உறுப்பினர் தயா இடைக்காடர் ஆகியோர் கொண்ட தொழிற்கட்சிக்குழு ஒன்றும் தனியாக சந்திப்புகளை நடாத்தினார்கள்.

இச்சந்திப்பு தொடர்பாக நாம் ரீ.எச்.ஓ குழுவினரிடம் வினவியபோது,  தாம் பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தித்துறை அமைச்சராக இருந்த, கரத் தோமஸ் அவர்களின் ஆலோசனைப்படியே சிறிலங்கா தூதரக அதிகாரியை சந்தித்ததாகத் தெரிவித்தனர். பிரித்தானிய தமிழர்பேரவையின் முக்கியஸ்தர்களான தொழிற்கட்சி ஆதரவாளர்கள் சிலரும் இச்சந்திப்பிற்கு தமது ஆதரவு வழங்கியிருந்தனர்.  இவற்றிலிருந்து தொழிற்கட்சி தரப்பில் “இனங்களுக்கிடையிலான நல்லிணகத்தை” ஏற்றபடுத்துதல் என்ற நோக்கத்துடன் இச்சந்திப்புகள் ஊக்குவிக்கப்பட்டமையை உணரக்கூடியதாகவிருந்தது.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்கும் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காகவும் தாம் சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படவிருப்பதாகவும் அதற்கென Relief and Rehabilitation Network (RRN) என்ற அமைப்பினை உருவாக்கி செயற்படவிருப்பதாகவும் ரி.எச்.ஒ. இன் இணைப்பாளர் புவிநாதன் எமக்குத் தெரிவித்திருந்தார். தமது தமிழர் நலவாழ்வு நிறுவனத்துடன் Standing Committee of Tamils,  ஆரோபணம் சிறுவர் அறக்கட்டளை ஆகியவையும் இணைந்து இவ்வமைப்பில் செயற்படவிருப்பதாகவும் அறிவித்தார். இது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக ஹரோ உள்ளுராட்சிச்சபை மண்டபத்தில் கடந்தவருடம் நொவெம்பர் மாதம் கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் மற்றய சமூக அமைப்புகளையும் தம்முடன் இணைத்து செயற்படவிருப்பதாகவும், ரொபர்ட் எவன்ஸ் இந்த அமைப்பின் தலைவராகச் செயற்படவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது

மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஆர். ஆர். என்இ  மற்றும் ரி.எச்.ஓ ஆகியவற்றுக்கும் சிறிலங்கா தூதரகத்திற்கும் இடையிலான தொடர்புகள் காரணமாக, மற்றய அமைப்புகள் இவர்களுடன் சேர்ந்தியங்க மறுத்தவிட்டார்கள். புவிநாதன் அங்கம் வகிக்கும் ஊர்ச்சங்கமான தென்மராட்சி அபிவிருத்திச்சபை (பிரித்தானியா) கூட இவர்களுடன் சேர்ந்தியங்க இணங்கவில்லை. இருப்பினும் சிறிலங்கா தூதரகத்துடனான தொடர்பினை இவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை.

இதன் நீட்சியாக ரி.எச்.ஓ வின் பிரதிநிதிகளாக வேலாயுதபிள்ளை அருட்குமார், ஏ.விமலதாசன், சார்ல்ஸ் அன்ரனிதாஸ் ஆகியோர் (ஜுன் 15-20) கொழும்புக்கு சென்றனர். இவர்களில் மருத்துவர் அருட்குமார் நலவாழ்வு நிறுவனத்தின் உறுப்பினர் அல்ல, இதில் வேடிக்கை என்னவெனில் சுகாதாரத்துறை சாராத மற்றய இருவரும் அதன் நிரந்தர அங்கத்தவர்கள். விமலதாசன், அதன் தலைவர். சார்ல்ஸ் அன்ரனிதாஸ், இந்தியசார்பு ரெலோ இயக்கத்தின் பிரித்தானியப் பிரதிநிதியாக இருந்தவர். பல்வேறு புலனாய்வு அமைப்புக்களுடன் நெருக்கமான தொடர்பினை பேணிவருபவர் எனப் பரவலாக பேசப்பட்டுவருகிறது.

இவர்களுடன் சிவனடியான் சிறிபதி (தீபம், பிரித்தானியா), பேரின்பநாயகம் அல்லது பெரின் இன்பம் (முன்னாள் நிதித்துறைச் செயற்பாட்டாளர் கனடா), சிவசக்தி(கனடா), கங்காதரன் (பத்மநாதனின் உறவினர், பிரான்ஸ்), உரூபமூர்த்தி(அவுஸ்திரேலியா), சந்திரா மோகன்ராஜ் (சுவிற்சலாந்து) ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் சிறிலங்காப் புலனாய்வாளர்களின் பாதுகாவலில் இருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் அழைப்பின்பேரில் சென்றிருந்தபோதிலும், ஒரு குழுவாக இணைந்து செய்யபடவில்லை எனத் தெரியவருகிறது.

ரி.எச்.ஓ. வின் பணிப்பாளர் புவிநாதனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பத்மநாதன், சிறிலங்காப்படைகளால் வெளித்தொடர்புகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்த வருமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதனைத் தாம் சிறிலங்கா தூதரக அதிகாரியுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தியபின் அங்கு சென்றதாக ரி.எச்.ஒ. பிரதிநிதிகள் எம்மிடம் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக பத்மநாதன் புலம்பெயர் நாடுகளிலுள்ள‌ தனது சகாக்களுடன் தொலைபேசி மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறார் என்ற செய்திகள் வெளிவந்தமையும் அதனை அவரது சகாக்கள் மறைத்து வந்தமையையும் இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தமானதாகவிருக்கும்.

இப்பயணத்தின்போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தாபாய இராஜபக்ச, இராணுவ புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கப்பில ஹெந்தவிதாராண, இராணுவத்தளபதி சவேந்தர் சில்வா. வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரைச் சந்தித்து “புனர்வாழ்வு” விடயங்கள் தொடர்பாக உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டது. அனைத்துச் சந்திப்புகளின் போதும் குமரன் பத்மநாதனும் உடனிருந்தததாக சார்ல்ஸ் எம்மிடம் தெரிவித்தார். சேலையணிந்த (அழகிய) இராணுவ புலனாய்வுத்துறையைச் சேர்ந்த சிங்களப் பெண்கள் சிலரும் தங்களைச் சந்தித்து உரையாடியதாகவும் குறிப்பிட்டார்.

சார்ல்ஸ், மேற்படி சந்திப்புகனையிட்டு திருப்தியடைந்துள்ளதாகத் தெரிகிறது. தமது சந்திப்பு தொடர்பாக பிபிசி இன் சந்தேசிய சிங்கள சேவைக்க வழங்கிய பேட்டியிலும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  சிறிலங்கா படையதிகாரிகளிடம் பத்மநாதன் பற்றிய மிகவும் உயர்வான எண்ணம் உள்ளதாகவும், அவரது மனங்கோணாமல் அவர்கள் பார்த்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பத்மநாதன் சிறிலங்கா அரசின் தாளத்திற்கு ஆடுவதை, அவர் வேறுவிதமாக இவ்விதம் குறிப்பிட்டிருக்ககூடும், ஏனெனில் தமிழ்நெற் இணையதளத்திற்கு மருத்துவர் அருட்குமார் வழங்கிய செவ்வியில், பத்மநாதன் சிறிலங்கா அரசிற்கேற்ப செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

வன்னியில் போராளிகளைத் தடுத்து வைத்திருக்கும் முகாம் ஒன்றுக்கு தங்களை அழைத்துச் சென்றதாகவும், அப்போது தங்களுடன் பத்மநாதனும் உடனிருந்ததாகவும் ரீ.எச்.ஓ பிரதிநிதிகள் தெரிவித்தனர். மேற்படி முகாமில் போரின் இறுதிக்காலகட்டத்தில் இணைந்த இளநிலைப்போராளிகளே தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், மூத்த போராளிகள் எவரையும் சந்திக்க தங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் செட்டிக்குளம் வலயம் நான்கிற்கு கூட தங்களை அழைத்துச் செல்லவில்லை என அருட்குமார் தெரிவித்திருந்தார். இதனை மறுதலித்த சார்ல்ஸ் அங்கு ஜெயந்தன் படையணியைச் சேர்ந்த போராளிகள் சிலருடன் தான் உரையாடியதாகக் கூறினார். இருப்பினும், பத்மநாதனுக்கோ தம்முடன் வந்த மற்றவர்களுக்கோ அவர்களை தெரிந்திருக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். இந்நிலையில் அவர்கள் எந்தப்படையணியை சேர்ந்தவர்கள் என்பதனை அவர் எப்படி உறுதிப்படுத்திக் கொண்டார் என்பதை அவரால் விளக்க முடியவில்லை.

குறுகிய நலன் அடிப்படையில், சிறிலங்கா அரசாங்கத்துடனும் அதன் ஆயுதப்படைகளுடனும் நட்புரீதியான சந்திப்புகள் நடாத்துவது அவர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை பாதிக்காதா என நாம் புவிநாதனிடம் வினவியவோது, தாங்கள் தனித்து புனர்வாழ்வு விடயங்களில் மட்டுமே அக்கறைப்படுவதாகவும், மனிதவுரிமை விடயங்களை பிரித்தானியத் தமிழர் பேரவை போன்ற மற்றய அமைப்புகள் பார்த்துக்கொள்ளும் எனப் பதிலளிளத்தார்.

அதுபோல் போர்க்குற்றவாளியாகக் கருதப்படும் கோத்தாபாய இராஜபக்சவுடனும், புலனாய்வு அதிகாரிகளுடனும்  சந்திப்புகளை நடாத்தியதைப்பற்றி கருத்துக்கூறுகையில்,  கோத்தாபாய போர்க்குற்றவாளி என்ற விடயத்தை தானும் ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் அங்கு செயற்படும் அரசுசாரா நிறுவனங்கள் (NGOs)  அவரது கட்டுபாட்டின் கீழ் வருவதால், அவரைச்சந்திப்பதைத் தவிர வேறுவழியில்லை எனத் தெரிவித்தார்.

மேற்படி சந்திப்புகள் தொடர்பாக மருத்துவர் அருட்குமார் தமிழ் நெற் இணயைதளத்திற்கு தெரிவித்திருக்கும் கருத்துகள் அங்குள்ள உண்மை நிலையை வெளிக்காட்டியிருக்கிறது. ஆனால் ஒரு பயணத்தை மேற்கொண்டபின்னர்தான் இவ்வாறான முடிவுக்கு வரவேண்டியுள்ளதா? சிறிலங்கா அரசின் உண்மை முகத்தை இத்தனை அழிவுகளுக்கு பின்னரும் புரிந்து கொள்ள முடியாத நிலையில்தான் நாம்  உள்ளோமா?  கற்றறிந்தவர்களின் நிலை இதுவென்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்? என்பவை அரசியல் விடயங்களில் அனுபவமுள்ளவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் கேட்கின்ற கேள்விகளாக இருக்கின்றன.

நன்றி: ஒரு பேப்பர்

மேலும் ஈழச் செய்திகளுக்கு...

Saturday, July 10, 2010

ஈழப் போராட்ட வரலாறு - 5: அதிகாரத்தை முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவரத் திணறிய வலதுசாரிகள்















இலங்கை வலதுசாரிகள் பலமான ஆளும்வர்க்கமாக வலுப்பெற்றிருக்காத காரணத்தால் இங்கிலாந்து ஏகாதிபத்தியத்தின் உதவியுடன் டி.எஸ்.சேனநாயக்கா ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியபோதும் அவர்களால் மிகவும் பலவீனமான ஆட்சியையே அமைக்க முடிந்தது. அவர்கள் தம் ஆட்சியை  நிலைநிறுத்தத் திண்டாடினார்கள். பலப்பட்டுவந்த தொழிலாளர் இயக்கம் அவர்களுக்குப் பெரிய சவாலாக இருந்தது. 1947இல் நடந்த முதலாவது தேர்தலின் முடிவுகள் அவர்களின் பயத்தை மேலும் அதிகரிக்க வைத்தது.

அத்தேர்தலில் LSSP பத்து ஆசனங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியது. நாடு முழுவதும் போட்டியிட வசதியற்ற காரணத்தால் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் போட்டியிட்ட இடதுசாரிகள் மொத்தமாகப் 19 ஆசனங்களைக் கைப்பற்றினர்.
 
ஆட்சி அமைக்கத் தடுமாறிக் கொண்டிருந்த வலதுசாரிச் ‘சிங்கள’ இனவாதிகளைக் காப்பாற்ற இத்தருணத்தில் தமிழ் வலதுசாரிக் காங்கிரஸ் கட்சியினர் ஓடி வந்தனர். ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையில் அவர்கள் யு.என்.பி அரசுடன் இணைந்தனர். டி.எஸ்.சேனநாயக்கா இலங்கையின் முதற் பிரதமரானார். ஐம்பதுக்கு ஜம்பது என்று முன்பு படம் காட்டியவர் தனக்குப் பதவி கிடைத்ததும் அக்கோரிக்கையைத் தூக்கிக் குப்பையில் எறிந்த காரணத்தால் தமிழ்க் காங்கிரசுக்குள் பிளவுகள் ஏற்பட்டன. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் 1949இல் பலர் காங்கிரசிலிருந்து பிரிந்து பிடரல் கட்சியை - இலங்கைத் தமிழரசுக் கட்சியை உருவாக்கினர்.

இத்தருணத்தில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிய சிலோன் இந்தியர் காங்கிரசும் யு.என்.பி.க்கு ஆதரவளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மை மலையக மக்கள் தமக்கெதிரான கொள்கைகளைக் கொண்டிருந்த யு.என்.பி க்கு வாக்களிக்க மறுத்திருந்தது இங்கு மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. பின்பு மலையக மக்களுக்கு வாக்குரிமையை மறுக்கும் சட்டத்தை யு.என்.பி கொண்டு வந்த போது அதனால் தமது வாக்கு வங்கிக்கு ஒரு ஆபத்தும் வரப்போவதில்லை என்பதையும் அவர்கள் அறிந்திருந்தமையை நாம் கவனிக்க வேண்டும். இத்தருணத்தில் மலையக மக்கள் மத்தியில் இடதுசாரிகளுக்கு ஆதரவு பெருகி வந்தது என்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
 
ஆட்சிக்கு வந்த கையுடன் சேனநாயக்கா செய்த முதல் வேலை இடதுசாரிகளைத் தாக்கியதே. வரிசையாக அடக்குமுறைச் சட்டங்களை அமுல்படுத்தத் தொடங்கினார் அவர். இடதுசாரிகளுக்கு மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலிருந்த ஆதரவை உடைக்கவும், தமக்குச் சார்பாகச் சிங்கள இனவாத்தைத் தூண்டவும் மலையக மக்களின்  உரிமைகளில் கைவைக்கத் தொடங்கினார். 1949ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சட்டம் மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்தது. இது தமிழ் பேசும் மக்களின் வாக்கு வீதத்தையும் கணிசமான அளவு குறைத்தது. பழைய கண்டிய பௌத்த முரண்பாடுகளை மீண்டும் தோண்டியெடுத்த சேனநாயக்கா ‘சிங்கள இனவாத’த்தை அறிமுகப்படுத்தினார். வளரும் தொழிலாளர் இயக்கத்தைத் துண்டாட எதையும் செய்யத் தயார் என்று சொன்னவரல்லவா அவர். ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கையை அவர் அப்படியே பின்பற்றினார்.
 
1947ஆம் ஆண்டு பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 1948ஆம் ஆண்டு தொழிற்சங்கச் சட்டம் முதலியனவும் தொழிலாளர் அமைப்புக்களின் முதுகெலும்பை உடைக்கும் நோக்கத்துக்காகவே உருவாக்கப்பட்டன. இவ்வகை உத்திகளும் தூண்டிவிடப்பட்ட சிங்கள பௌத்த பெரும்தேசியவாதமும் யு.என்.பிக்கு அடுத்த தேர்தலில் பெரும் வெற்றியீட்டிக் கொடுத்தது. அவர்கள் இவ்வாறு பலப்பட்டதற்குத் தமிழ் வலதுசாரிகள் முக்கிய பங்காற்றினர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாடு முழுவதும் வறிய மக்கள், தொழிலாளர்கள், மலையக மக்கள் என்று ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் யு.என்.பி செய்த அனைத்துத் தாக்குதல்களுக்கும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்த வலதுசாரிகள் தமது முழு ஆதரவும் வழங்கிவந்தனர். இதன் காரணமாக ஜி.ஜி. பொன்னம்பலம் போன்ற ‘தமிழ்த் தலைவர்களின்’ செல்வாக்கு மங்கத் தொடங்கியது.

அவர்கள் தொழிலாளர்களின் நம்பிக்கையை, குறிப்பாகச் சிங்களத் தொழிலாளர்களின் நம்பிக்கையை இழக்கத் தொடங்கினர். யு.என்.பி யுடன் இணைந்து தாக்கிய தமிழ்த் தலைவர்களுக்கெதிரான சிங்களத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பானது பின்பு அவர்கள் மத்தியில் சிங்கள இனவாதம் தூண்டப்பட உதவியது. செல்வாக்கு மங்கிய தமிழ்க் காங்கிரஸ் அடுத்த தேர்தலில் பல ஆசனங்களை இழந்தது. இதன்பின் மீண்டும் ஆதரவு தேட தமிழ்க் காங்கிரஸ் மோசமான பல குறுக்குவழிகளைத் தேடியது. எவ்வாறு வலது சாரிய யு.என்.பி சிங்கள பௌத்த இனவாத‌த்தைக் கையிலெடுத்ததோ, அதே போல் தமிழ்க் காங்கிரஸ் தமக்கு ஆதரவு சேர்க்க தமிழ் இந்துத்துவ இனவாத‌த்தைக் கையிலெடுத்தது.
 
யு.என்.பி தேர்தலில் வெற்றி பெற்ற போதும் கிராமப் பகுதிகளில் அவர்களின் செல்வாக்குக் குறைவாகவே இருந்தது. தொழிலாளர் சக்தியை உடைக்க அவர்கள் கையிலெடுத்த இனவாதம் அவர்களை நோக்கித் திரும்பும் அபாயத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. யு.என்.பி யின் பெரும்பான்மைத் தலைவர்கள் கொழும்பு மேற்குடியைச் சேர்ந்தவர்களாயும் சிங்கள மொழி சரியாகப் பேச முடியாதவர்களாயும் இருந்தனர். சிங்கள இனவாதம் உக்கிரமடைந்தால் தம்மால் அதற்குத் தலைமை தாங்க முடியாது என்பதை இவர்கள் நன்றாக அறிந்திருந்தனர். போதாக்குறைக்கு இவர்களின் மோசமான வலதுசாரியக் கொள்கைகளால் தொழிலாளர் மத்தியில் பெருகிவந்த ஆத்திரத்தையும் அவர்கள் கவனிக்காமலில்லை.

இந்த போக்குகளின் தொடர்ச்சியாக யு.என்.பி யின் ஒரு பகுதியினர் SWRD பண்டாரநாயக்கா தலைமையில் பிரிந்து சென்றனர். வளரும் இடதுசாரி ஆதரவைக் கவனித்த SWRD சிங்கள ஏழை மக்களுக்காகப் பேசுபவராகத் தம்மைக் காட்டிக் கொள்ள முயன்றார். 1952இல் சிறிலங்கா சுதந்திர கட்சியை (Sri lanka Freedom Party) ஆரம்பித்த அவர் அந்த ஆண்டு தேர்தலில் SWRD க்குச் சரி நிகராக 9 ஆசனங்களைத் தமது கட்சிக்கு வென்றார். தமிழ் மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட நிலையில் யு.என்.பி 54 ஆசனங்களை வென்றது. தமிழ் வலதுசாரி வாக்குகளும் யு.என்.பி க்கே சென்றது குறிப்பிடத்தக்கது. தமிழ்க் காங்கிரசால் 4 ஆசனங்களை மட்டுமே பெற முடிந்தது.
 
இத்தேர்தல் வெற்றி யு.என்.பி க்கும் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்த வளரும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பெரும் நிம்மதியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக தமிழ்-சிங்கள முதலாளித்துவ சக்திகளின் பலமான-தலையாய கட்சியாக யு.என்.பி தன்னை நிறுவியது.
 
இந்த வெற்றிக் கிறக்கத்தில் யு.என்.பி யினர் தாம் சார்ந்த வர்க்கத்துக்கு ஆதரவான கொள்கைகளை அமுல்படுத்துவதில் மும்முரமாக இறங்கினர்.
 
இதற்கு முன் தமது பலவீனமான அரசாங்கத்தின்போது ஏறத்தாழ 50 வீத அரச செலவுகளைப் பொதுச்சேவை (welfare) சார்ந்து செலவிட வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்தனர். தாம் பலமான ஆட்சியை ஏற்படுத்திய கையுடன் பொதுச் சொத்தைத் தனியார் வியாபாரிகளுக்காகக் கொள்ளைபோடும் கொள்கைகளை அறிமுகப்படுத்தத் தொடங்கினர். ஆத்தருணம் ஏற்பட்டிருந்த பொருளாதாரப் பின்னடைவைக் காரணங் காட்டிப் பொதுச் சேவைக்கான செலவுகளைக் குறைக்கத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை, குறிப்பாக உணவுப் பண்டங்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. உணவுப் பண்டங்களின் விலைகள் இருமடங்காகிப் பலமடங்காகிக் கூரையைப் பிய்த்துக் கொண்டு செல்லத் தொடங்கின. கடந்த வருடங்களில் பொது வேலை நிறுத்தம் உட்படப் பல்வேறு வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டிருந்த இலங்கைத் தொழிலாள வர்க்கம் மீண்டும் தமது பலத்தைக் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது!
 
யு.என்.பி பெரும் வெற்றி பெற்ற ஒரு வருடத்துக்குள் இலங்கையின் மாபெரும் வேலை நிறுத்தம் நடந்தேறியது.

- சேனன் ( senann@hotmail.com )

நன்றி : கீற்று

மேலும் ஈழச்செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்...

Thursday, July 8, 2010

ஈழம், நேபாளம் - இரு மகத்தான போராட்டங்களின் படிப்பினைகள்















இந்திய நிலவியலரசியல் (Geopolitics) எல்லைக்குட்பட்ட இவ்விரு பகுதிகளிலும் இரு மகத்தான போராட்டங்கள் நடைபெற்றன. ஒன்று நேபாளத்தில் தேசிய சனநாயகத்திற்கான போராட்டம். மற்றொன்று ஈழத்தில் தேசிய விடுதலைக்கான போராட்டம். நம்மை சாட்சியாகக் கொண்டு நடைபெற்ற இப்போராட்டங்களில் நேபாளம் 250 ஆண்டுகளாக மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி வெற்றி கண்டது; ஈழம் சிங்கள இனவெறி அரச பயங்கரவாதத்திடம் வரலாறு காணாத தோல்வியைத் தழுவியது. இவ்விரண்டு வெற்றி தோல்விகளையும் நமது வெற்றி தோல்விகளாகக் கருதி படிப்பினைகளைப் பெறுவதே அவற்றின் விலைமதிப்பற்ற தியாகத்திற்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும். இரண்டையும் ஒப்பிடுவதற்கான ஒரே காரணம் அவை இந்திய விரிவாதிக்க அரசின் ஆதிக்க பரப்புக்குள் உள்ளன என்பதும் இந்திய அரசின் தலையீட்டால் அவை வெவ்வேறு முடிவுகளை எட்டியுள்ளன என்பதும்தான்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்..

முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது















கரும்புலிகள் என்பது தற்கொடைப்பிரிவைச்  சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப்  புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை  முன்னெடுக்கும் எல்லோருமே தன்னுடைய  அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு  எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர். இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சயனைட்  குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு  இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில்  எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை  பாதிப்படைய விடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள்  எத்தனையோ பேர்.

ஆனாலும் கரும்புலிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அரிதாக, மிக அரிதாக அவர்கள் தப்பி திரும்பி வரும் சந்தர்ப்பங்களும் உண்டு.

எப்படியிருந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பர். இப்படியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் முதலில் வீரச்சாவடைந்த கப்டன் மில்லரால் நடாத்தி முடிக்கப்பட்ட தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை பற்றி சற்றுப் பார்போம்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

Friday, July 2, 2010

ஈழப் போராட்ட வரலாறு - 4: சூரியமால் இயக்கம்















கொழும்பு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சூரியமால் இயக்கம் மிகப்பெரிய –புகழ்வாய்ந்த இயக்கமாக ‍ இடதுசாரி மாணவர்கள் முன்னெடுத்த முதலாவது பெரிய இயக்கமாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்து இராணுவத்தில் காயமுற்றவர்கள் மற்றும் இறந்தோர் குடும்பங்களுக்கு உதவும் முகமாக பொப்பி நிதியம்(Poppy fund) என்ற நிதியம் உருவாக்கப்பட்டு வருடா வருடம் நிதி சேகரிக்கப்பட்டு வந்தது.

பொப்பி மலரை விற்று நிதி சேகரிக்கப்பட்டதால் பொப்பி நிதியம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இச்சேமிப்புக்கு அக்காலத்தில் உலகிலேயே அதிகளவு பணத்தை இலங்கை வழங்கி வந்தது. மாணவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக சூரிய காந்தி மலரை விற்று வறிய மக்களுக்கு நிதி சேகரிக்கும் முறையை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் சேர்க்கப்பட்ட பணம் வறுமையில் வாடிய மக்களுக்கு உதவவும் அவர்தம் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கும் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சூரிய காந்தி இயக்கம் (சூரிய காந்தி சிங்களத்தில் சூரியமால் என்றழைக்கப்பட்டது) வேகமாகப் பற்றிப் பரவியது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

Thursday, July 1, 2010

இலங்கை பாராளுமன்றத்தில் தூங்கி வழிந்த அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள்















பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் தூங்குவது தொடர்பில் சுவாரஸ்யமான விவாதமொன்று ஏற்பட்டதால் சபையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அரச, எதிர்க்கட்சித் தரப்பு உறுப்பினர்கள் பலர் தமது ஆசனங்களில் மெய்மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், பிரதியமைச்சர் டிலான் பெரேரா உரையாற்றிக் கொண்டிருந்த போது நன்றாக தூங்கிக் கொண்டிருந்த எதிர்க்கட்சி பிரதம கொறடா ஜோன் அமரதுங்க திடீரென எழுந்து அங்குமிங்கும் பார்த்து விட்டு ஏதோ சொல்வதற்கு எழுந்தார். அப்போது டிலான் பெரேரா நீங்கள் இப்போதுதான் தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளீர்கள். எனது பேச்சை முழுமையாகக் கேட்டிருக்க மாட்டீர்கள். அதனால் ஒன்றையும் கூறாதீர்கள் என்றார்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

ஈழப் போராட்ட வரலாறு – 3: இந்தியாவுக்கும் இலங்கைக்குமான வித்தியாசம்















மதவெறி பிடித்த மதத்தலைவர்கள் மதப்பிரச்சாரம் மூலமாக மக்களைத் திரட்டினாலும் பெரும் மக்கள் இயக்கத்தை வழிநடத்த முடியாதளவு குறுகிய பார்வை கொண்டவர்களாக இருந்தமையால் அவர்களின் செல்வாக்கு மங்கி, காலனியாதிக்கத்துக்கு எதிரான மதம்சார் இயக்கம் மடியத்தொடங்கியது. இவர்தம் வன்முறை நடவடிக்கைகளைக் காரணம் காட்டி காலனித்துவ ஆளும் வர்க்கம் இவர்களை இலகுவாக ஒடுக்கக் கூடியதாகவும் இருந்தது. இந்தியாவிலும் இந்துமதம் சார்ந்த குறுகிய அரசியல் செய்து வந்த இந்திய காங்கிரஸ் கட்சி பெரும் மக்கள் கட்சியாக வடிவெடுக்க முடியாமல் திணறியது. இதை மாற்றியமைத்தவர்களில் மகாத்மா காந்தி முக்கியமானவர். காங்கிரஸ் கட்சியை பெருமக்கள் இயக்கத்துக்கு தலைமை தாங்கும் கட்சியாக அகில இந்தியக் கட்சியாக மாற்றியமைக்க காந்தி உட்படப் பல புதிய காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு உத்திகளைக் கையாண்டனர்.

பிரித்தானியக் காலனியாதிக்கம் இத்தருணம் இந்தியாவில் எதிர்கொண்ட நெருக்கடியை இலங்கையில் எதிர்கொள்ளவில்லை. காந்தி இந்தியாவில் ஏற்படுத்திக் கொண்டிருந்த மாற்றத்தை ஒரு சொட்டும் காப்பியடிக்க வக்கற்ற நிலையிலேயே இலங்கை மதம்சார் உயர்வர்க்கம் இருந்தது. அவர்கள் பிரித்தானியக் காலனியாதிக்கத்தைச் சந்தோசமாக ஏற்றுக்கொண்டு தமது விசுவாசத்தைக் காட்ட முண்டியடித்தனர்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

ஈழப் போராட்ட வரலாறு - 2: தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் வருகை















பிரித்தானிய ஏகாதிபத்தியம் ஏன் தோட்ட வேலைகளுக்காக இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து தொழிலாளர்களைக் – குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதியினரைக் கொண்டு சென்றார்கள் அல்லது அடிமைகளைப் போல கூட்டிச் சென்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ள பிரித்தானிய ஏகாதிபத்தியம் அக்காலப்பகுதியில் சந்திக்க நேர்ந்த நெருக்கடிகள் பற்றி நாம் சுருக்கமாகப் பார்த்தல் அவசியம்.

இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து கிடைத்த பெரும் இலாபம், ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தனது கட்டுப்பாட்டை அங்கே தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள மிக முக்கிய காரணமாக இருந்தது. உலகெங்கும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கிளர்ச்சிகள் வெடிக்கத் தொடங்கியிருந்த காலப் பகுதியது.

1789ல் வெடித்த பிரெஞ்சுப் புரட்சி நிலப்பிரபுத்துவ காலத்துக்கு முடிவுகட்டி உலகெங்கும் இருந்த அதிகார மையங்களுக்குப் பெருங் கிலியை உருவாக்கியது. வறிய பிரெஞ்சு மக்களும் சான் குளோட்டுகளும் (sans culottes) சம உரிமைகளைக் கோரி பிரெஞ்சு அரசை ஒரு உலுப்பு உலுப்பினர். பிரான்சில் வெடித்த புரட்சி பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஆட்சியின் கீழிருந்த கரீபியன் நாடுகளிலும் எதிரொலித்தது. மார்ட்டினிக், கோடலூப், டொபாகோ ஆகிய நாடுகளில் அடிமைகளாக வேலை வாங்கப்பட்ட ஆப்பிரிக்கர்களும் கலப்பினத்தவர்களும் கிளர்ச்சிகளில் இறங்கினர். விடுதலை, சகோதரத்துவம், சமத்துவம் (Liberty,Fraternity,Equality) என்ற பிரெஞ்சுப் புரட்சியின் முழக்கங்களாற் கவரப்பட்ட அடிமைத் தொழிலாளர்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். 1791ல் சென்.டொமினிக்கில் அடிமைகளின் புரட்சி வெடித்தது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

ஈழப் போராட்ட வரலாறு - 1















ஆயிரக்கணக்கில் தமிழ்பேசும் மக்களை இலங்கை இனவாத அரசு படுகொலை செய்ததைத் தொடர்ந்து உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் இளையோர் பலர் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைய முன்வந்துள்ளனர். இந்த போராட்ட உணர்வை தமக்கு சாதகமாகப் பாவித்து பலம்பெற முயற்சிக்கின்றன இந்திய-இலங்கை வலது சாரிக் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் பல. இது மீண்டும் ஒடுக்குமுறைக்கு எதிரான பலம்பொருந்திய சக்தி உருவாகுவதைத் தடுக்கும் முயற்சி. ஆனால் இதை நாம் ஒரு வசனத்திற் சொல்லி இளையோருக்குப் புரியவைத்துவிட முடியாது. அதிகாரம் சார்ந்து இயங்குபவர்களை சரியானபடி எதிர்கொள்ள நாம் பல்வேறு விவாதங்களை பொதுத் தளத்தில் நிகழ்த்தி போராட முன்வருபவர்களின் அறிதலை-தேடலை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

Monday, June 7, 2010

இன்று தாவீதுகளால் முடிந்தது அன்று கோலியாத்துகளால் முடியாமற் போனது ஏன்?















`புலி ஆதரவாளர்கள் சிலர் எமது அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்`

இந்த வார்த்தையைக்கூறி வருந்தியிருப்பவர் வேறு யாரும் அல்ல சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த இராஜபக்சவேதான். மகிந்தவின் இந்த வருத்தத்தினை ஏன் வரிந்து கட்டி இழுக்கிறேன் என நீங்கள் நினைப்பது எனக்குத் தெரிகிறது. நேரடியாக விடயத்திற்கே வருகிறேன்.

வன்னியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை சிங்கள அரசு படுகொலை செய்து கொண்டிருந்த காலத்திலும் அதற்கெதிராக புலம்பெயர் நாடுகளில் தொடர் போராட்டங்கள் நிகழ்ந்த காலத்திலும் மகிந்தர் இந்த கருத்தை இவ்வளவு மனம் நொந்து தெரிவிக்கவில்லை. ஆனால் அப்போது இல்லாத அழுத்தம் இப்போது வந்திருப்பதாக அவர் கூறுவதே இக்கட்டுரையின் ஆய்வுமையம்.

அதாவது சந்தர்ப்பம் பார்த்து இந்தியாவின் திரை உலகத்தையே ஒரு சில சிறிய இயக்கங்களும் (நாம் தமிழர் இயக்கம், மே 17 இயக்கம்) சில உணர்வாளர்களும் தமிழ்த் திரையுலகமும் முடக்கி அதன்மூலம் மகிந்த அரசிற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்றால் மத்திய அரசில் பலம் கொண்ட தமிழ்நாட்டு அரசால் அப்போது ஏன் அது முடியாமல் போனது?

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

தனி ஈழமே தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு : லீ க்வான் யு















இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது. தனி ஈழம் ஒன்றே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்று கூறியுள்ளார் சிங்கப்பூரின் முதல் பிரதமரான் லீ க்வான் யு.

சர்வதேச அளவில் மிகவும் மதிக்கப்படும் தலைவர்களில் லீ க்வான் யுவும் ஒருவர். இவரது மகன்தான் தற்போதைய சிங்கப்பூரின் பிரதமர். மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்த பிறகு, எந்த இயற்கை வளமும், குடிநீர் வசதியும் கூட இல்லாமல் தவித்த சிங்கப்பூரை பெரும் வர்த்தக மையமாக மாற்றியவர். வல்லரசுகளுக்கு இணையாக உருவாக்கியவர் என புகழப்படுபவர்.

இன்றும் சிங்கப்பூர் அரசில், அமைச்சர்களின் வழிகாட்டி (Ministers Mentor) என மூத்த அமைச்சர் பொறுப்பை வகிக்கிறார் லீ.

லீ குவான் யுடனான உரையாடல்கள் என்ற தலைப்பில் சமீபத்தில் ‘Citizen Singapore: How To Build A Nation – Conversations with ’ என்றக நூல் வடிவில் வெளியாகியுள்ளது.

அந்த நூலில் இலங்கை இனப் பிரச்சினை குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் லீ குவான் யு விரிவாக விளக்கியுள்ளார்.

இலங்கைப் பிரச்சினை குறித்து அவர் இப்படி கூறியுள்ளார்:

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

கொலைகாரன் வீட்டில் விருந்துண்ணும் இ(ஹி)ந்தியத் திரைத்துறை















வேறு எங்குமே பார்க்க முடியாது, இப்படிப்பட்ட திணவெடுத்த மூளைகளை. ஹிந்தியத் திரைத்துறையினர் ஒரு தனி உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உலகம் இது அல்ல. அவர்கள் இந்திய சூழ்நிலையில் வாழவில்லை. அவர்களுக்கு இங்கு என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றே புரியவில்லை. கடைசியில் அவர்கள் தங்கள் முட்டாள்தனத்தை, அறிவுகெட்டத்தனத்தை நிறைவேற்றியே விட்டார்கள்.

தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி, இலங்கையில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியத் திரைத்துறையினர் கலந்து கொண்டார்கள் என்பது இரண்டாம் பட்சம். அவர்கள் தங்கள் சொந்த மான உணர்வை எங்கு கொண்டு போய் அடகு வைத்தார்கள்? தன் நாட்டு மக்களைக் கொன்றவன் நாட்டில், தன் நாட்டுப் பெண்களை கற்பழித்தவன் வீட்டில் விருந்துண்ணும் மடத்தனம் வேறு எந்த நாட்டிலும் நடக்காது. அவர்கள் அனைவரிடமும் சில கேள்விகள் நிச்சயமாக கேட்கப்பட வேண்டும்.

1.     20 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக சில வாரங்களில் கொல்லப்பட்ட விஷயம் தெரியுமா? தெரியாதா?

மேலும் படிக்க இங்கே படிக்கவும்

Sunday, June 6, 2010

ஈழத்தமிழர்கள் வாழ்வு செய்தியாகவே முடியவேண்டாம்















ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரம் எப்படி ஆகிக்கொண்டிருக்கிறது. என்பது பற்றிய செய்தி. எவ்வளவு இருக்கிறதோ, அதை விட பலமடங்கு ஈழத்தைப் பற்றிய அதிர்ச்சி செய்திகள் உலகம் முழுவதும் சென்று, செய்தியாகவே முடிந்துகொண்டிருக்கிறது.

கிளிநொச்சி, கணேசபுரத்தில் அடுத்தடுத்து மனித புதைகுழிகள் தோண்டப்படுகின்றன, அதன் மூலத்தை அறிந்து உண்மையை வெளிக்கொண்டுவர எவராலும் எந்த நாட்டாலும் முடியவில்லை, எந்த விடயத்தை தொட்டு செய்தி வந்ததோ அந்த விடயத்தை அப்படியே விட்டுவிட்டு, செய்தியை மட்டும் செய்தியாகவே உலகம் கை கழுவிக்கொண்டிருக்கிறது. தமிழனின் இன்றைய செய்தி நாளை மறக்கப்படுகிறது, அல்லது மறக்கடிக்கப்படுகிறது. நாளை வேறு ஒரு செய்தி பெரிதாகி முந்தய செய்தி அதற்குள் புதைந்து மறைந்து விடுகிறது, இதுதான் ஈழத்தமிழனின் யதார்த்த வாழ்க்கை நிலை.

இந்த நிலை தொடருமானால் பாழாய்ப்போன தமிழனின் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும், இதற்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டுமாயின் உலகம் காரணத்தை ஆராய்ந்து மனிதாபிமானமான நீதியான தீர்வின் மூலம் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பங்கள் சாதகமாக வந்தாலும் எவரும் ஒற்றுமையுடன் அதை தீர்த்து வைப்பதற்கான முனைப்பை இதுவரை காட்டி நிற்கவில்லை, ஈழப்பிரச்சினையை எவராவது தீர்த்து வைக்காத பட்சத்தில் அது விபரீதமான ஒரு முடிவை நோக்கிச் சென்று தானாக ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Saturday, June 5, 2010

புலி விரைவில் உறுமும் - நரிகள் ஓடி ஒளியும் சுவிசு இதழுக்கு பழ. நெடுமாறன் அளித்த நேர்காணல்















தமிழக அரசியலில் மூன்றாவது மையப்புள்ளியாக உருவாகியிருக்கிறார் நெடுமாறன். இலங்கைத் தமிழர் பாத காப்பு இயக்கம் மூலம் போர் நிறுத்தம் கேட்டு அவர் முன்னெடுத்த போராட்டங்கள் மத்திய மாநில அரசுகளின் அச்சாணிகளையே அசைத்துப் பார்த்தன. கடும் ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் சமரசமற்ற போராட்டக்காரனின் வாழ் வாக நீண்டு கொண்டிருக்கும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பெரியவர் நெடுமாறனை சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் அவரது அலுவலகத்தில் ஆதவன் இதழுக்காகச் சந்தித்தோம்....

பார்வதியம்மாளை வரவேற்க நீங்களும் வைகோவும் ஏன் தனியாகச் சென்றீர்கள்? ஆயிரக்கணக்கான தமிழுணர் வாளர்களைத் திரட்டி அவரை வரவேற்கச் சென்றிருக்கலாமே?

பார்வதியம்மாள் உடல் நலம் நலிந்த நிலையில் இருக்கிறார். கூட்டம் கூடி பரபரப்புச் செய்து அவரை வரவேற்பது என்பது அவரது உடல் நலத்திற்கு உகந்ததல்ல, அவருக்கு மருத்துவ சிகிச்சையை விட மனரீதியான சிகிச்சை அவசியமாக இருந்தது. கணவரை இழந்து கடந்த ஏழு மாதங்களாக அவர் இராணுவ முகாமுக்குள் அனுபவித்த கொடுமைகள் எல்லாம் சேர்ந்து அவர் மனம் நைந்து போன நிலையில் மலேசி யாவில் இருந்து வருகிறார். அவர் யார் யாருடன் நெருங்கிப் பழகினாரோ அவர் களுடன் அவரைச் சில காலம் தங்க வைத்திருந்தால் அவரது உடல் நிலை யையும் மன நிலையையும் கொஞ்சம் ஆரோக்கியப்படுத்த முடியும் என நாங் கள் நினைத்தோம். அவர் எனது குடும் பத்தாருடனும் வைகோ குடும்பத்தாருட னும் நெருங்கிப் பழகியவர்கள்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

தியாகி சிவகுமாரன்















(பொன்னுத்துரை சிவகுமாரன்,
உரும்பிராய், யாழ்ப்பாணம்,
26/08/1950 -‍ 05/06/1974)

யாழ் மாவட்டம் உரும்பிராயை சேர்ந்த‌  பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளுக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். அவர்களுக்கு மூன்றாவது மகவாக 1950ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26 அன்று ஒரு ஆண் குழந்தை பிறந்த போது அவர்கள் அப்பிள்ளைக்கு சிவகுமாரன் என்று வாஞ்சையோடு பெயர் வைத்தனர்.

உரும்பிராய் பகுதியானது தமிழர் விடுதலைப் போராட்டத்தோடு மிகவும் பிண்ணிப் பிணைந்த ஒரு பகுதி. பல புரட்சியாளர்களையும் போராளிகளையும் பல்வேறு விடுதலைப் போராட்டக் குழுக்களுக்கு தாராளமாக அள்ளி வழங்கிய ஒரு பிரதேசம் அது. ஆகவே அப்பகுதியில் பிறந்த சிவகுமாரன் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியாக மாறியதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை.

இவரது பெற்றோர் இருவரும் தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் மட்டுமல்லாது அதன் உறுப்பினர்களும் ஆவர். அதே போன்று தமிழர் விடுதலைக் கூட்டணியோடும் அவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது.

சிறு பராயத்திலிருந்தே அநீதிகளைக் கண்டு கொதித்தெழுகின்ற, அவற்றைத் தட்டிக்கேட்கின்ற இயல்புடையவராக இருந்தார் சிவகுமாரன்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

தமிழீழத்தின் முதல் தற்கொடையாளர் பொன்.சிவகுமாரன் வீரவணக்க நாள் இன்று















பொன். சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.

சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார்.

தமிழீழ மக்கள் மனங்களில் விடுதலைத் தீப்பொறியை இட்டுச்சென்ற அம்மாவீரனின் நினைவு நாள் இன்று யூன் 5.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்