Sunday, May 9, 2010

கருணாநிதியிடம் கருணை இல்லை; நிதி மட்டுமே இருக்கிறது : ஈழவேந்தன்













கடந்த 2ம் திகதி நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் கனடாவிலிருந்து வெற்றி பெற்றுள்ள திரு. ஈழவேந்தன் அவர்களை ஈழம்வெப் இணையத் தளத்திற்காக பேட்டி கண்டோம். தேர்தல் வெற்றி, அடுத்த கட்ட நடவடிக்கைகள், இந்திய நிலைப்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் அவர் தெரிவித்த கருத்துக்கள் இவை:

உங்கள் வெற்றி குறித்து உங்கள் கருத்து

மிகக் குறுகிய காலமாகக் கனடாவில் வாழும் என் மீது அன்பைப் பொழிந்து எனது கருத்துக்களிலும் கொள்கையிலும் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கே இந்த வெற்றி சென்றடைய வேண்டும். என்மீது நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ் மக்களின் பிரதிநிதியாய் பணி செய்வேன். நான் பணி செய்யும் காலத்தில் கூர்மையாக இருந்தால் பாவிக்கலாம், என்னை மொட்டையெனக் கருதினால் தீட்டிப் பயன்படுத்தலாம், கறள் என்றால் தூக்கி வீசலாம் என என் வாக்காளார்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

நாடு கடந்த அரசின் முன்னால் இருக்கும் முக்கிய பணிகள் பற்றி…

நாடு கடந்த அரசின் முன்னால் உள்ள பணிகளைப் பற்றிக் கதைக்க முன்னர் நாடு கடந்த அரசு அமைக்கப்பட்டுள்ளது என்பதே ஒரு பெரிய வெற்றி எனக் கருதுகிறேன்.மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment