Friday, May 14, 2010

பார்வதியம்மாள் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை உண்மையில் எழுதியது யார்..? – உண்மை அம்பலம்













மலேசியாவில் இருந்து பார்வதியம்மாள் தனது சிகிச்சைக்காக கலைஞருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதனை தமிழக அரசு வெளியிட்டது.. ஆனால் அந்தக் கடிதம் பார்வதியம்மாளால் எழுதப்பட்டோ அல்லது தெரிவிக்கப்பட்டோ வெளியிடப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார் வைகோ.

சென்னையில் மே 11-ம் தேதி ம.தி.மு.க.வின் இலக்கிய அணி சார்பில் பாவேந்தர் விழா நடந்தது. அதில் பேசிய வைகோ, “மாவீரனைப் பெற்றெடுத்த தாய் எழுதியதாக கடிதம் ஒன்று வெளியிடப்பட்டதே.. அதை யார் தயாரித்தது..? நான் திருச்சியில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்து தரும்படி அன்போடு வேண்டுகிறேன்.. தங்கள் உதவியை என்றும் மறக்க மாட்டேன். நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன். நன்றியுடன்.. உங்கள் உடன்பிறப்பு.. திருவேங்கிடம் வேலுப்பிள்ளை பார்வதி என்று இருக்கிறதே..

பார்வதியம்மாள் என்ன தி.மு.க. வட்டச் செயலாளரா..? அவர் உடன்பிறப்பு என்று எழுதுவாரா..? இக்கடிதத்தை இங்கே தயாரித்தது யார்..? சில காரணங்களுக்காக நான் இதற்கு மேல் இது பற்றி பேச விரும்பவில்லை” என்றார்.

ஆனாலும் இது தொடர்பாக விசாரித்ததில் கிடைத்தத் தகவல்கள் வருமாறு :

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

1 comment:

  1. இதுவே அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவராயிருந்தால் முக்கால் பக்கத்தில் மூக்கால் அழுது கவிதை பாடி முரசொலியை நாறடித்திருப்பார் கருணாநிதி..!

    ReplyDelete