Showing posts with label விடுதலைப்புலிகள். Show all posts
Showing posts with label விடுதலைப்புலிகள். Show all posts

Monday, May 31, 2010

புலிகளின் கதை இன்னும் முடியவில்லை?: ஜ‌னாதிபதி மகிந்த "ரைம்ஸ் ஒவ் இந்தியா" விற்கு அளித்த பேட்டி













பொலிஸ் அதிகாரங்கள் எப்போதும் மத்திய அரசிடமே இருக்கவேண்டும். மாகாணங்களுக்கு வழங்கப்படக்கூடாது. இதில் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. அண்மையில் மும்பையில் நடந்த தாக்குதலைக் கவனியுங்கள். எத்தனையோ தடைகளையும் கடந்து இராணுவ கொமாண்டோக்கள் பல மணிநேரப் போராட்டத்தின் பின் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இவ்வாறு "ரைம்ஸ் ஒவ் இந்தியா`வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

புலிகளுடனான போராட்டத்தில் பெற்ற வெற்றியின் முதலாவது ஆண்டு நிறை வையொட்டி "ரைம்ஸ் ஒவ் இந்தியா`வுக்கு ஜனாதிபதி இந்தப் பேட்டியை வழங்கி இருந்தார்.

பேட்டியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளவை வருமாறு:

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, May 25, 2010

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சட்டவிரோதமானதாம்; இந்திய‌ மத்திய அரசு அறிவிப்பு













தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை, சட்டவிரோத அமைப்பாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவசர அரசாணை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை சட்டவிரோதமாக அறிவித்திருப்பதற்குக் காரணம், புலிகளை ஆதரிக்கும் பத்திரிகைகள், அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் அமைப்புகளை மத்திய, மாநில அரசுகள் முழுமையாகக் கட்டுப்படுத்தவே என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய மத்திய உள்துறை இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா சார்பில் நாடு முழுவதும் முக்கிய பத்திரிக்கைகளி்ல் வெளியிடப்பட்டுள்ள அவசர‌ அரசாணையில்(எமர்ஜென்சி கெஜட் அறிவிப்பு) கூறப்பட்டுள்ளதாவது:


மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, May 19, 2010

ஈழ மண்ணில் சுதந்திரக் காற்று வீசும் என்ற நம்பிக்கை இன்னமும் அற்றுப் போய்விடவில்லை













ஈழ மண்ணில் சுதந் திரக் காற்று வீசும் என்ற நம்பிக்கை இன்னமும் அற்றுப் போய்விடவில் லை. கிழக்கு மாகாணக் காடுகளில் உள்ள மரங்களுடன் சேர்ந்து அந்த நம்பிக்கை உயர்ந்து நிற்கிறது. ""முள்ளி வாய்க்கால் கொடூரத்தின் ஓராண்டு நிறைவில், உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழத் துயர நினைவுகளில் மூழ்கி யிருக்கும் நிலையில், விடுதலை நம்பிக்கை வீழ்ந்துவிடவில்லை`` என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பாண்டி யன். அரசியல் பத்திரிகை வட்டாரங்களில் அறியப் பட்டவரான இவர், கடந்த 15 நாட்களுக்கு முன் இலங்கைக்குப் பயணம் செய்தவர்.

2009 மே 17-க்குப் பிறகு, ஈழமக்களின் வாழ்வையும் விடு தலைப் போராட்ட நிலவரத்தையும் இலங்கை ராணுவக் கட்டுப்பாட்டை மீறி அறிந்து வந்து சொல்வதற்கான வாய்ப்பு கள் இல்லாததால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பரிதவிப்போடு இருந்தார்கள் என் கிற பத்திரிகையாளர் பாண்டியன், ""ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் முக்கிய தளபதியாக விளங் கும் சங்கீதன்தான் எனக்கு அழைப்பு விடுத்தார். ஈழ நிலவரத்தை நேரில் அறிந்துவர எனக்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தெரிவித்த சங்கீதன், கொழும்புக்குப் பயணம் மேற்கொள் ளும்படி அறிவுறுத்தினார்`` என்கிறார்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Friday, May 14, 2010

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீடித்தது இந்தியா













தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்படுவதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் போர் முடிவடைந்து ஒரு வருடத்தை தொடவுள்ள நிலையில் இந்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் நீடித்துள்ளது.

இந்திய உள்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை இன்று முதல் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தடை நீடிப்புக்கான காரணத்தை மத்திய அரசு அறிவிக்கவில்லை.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

பிரபாவின் சிறு மற்றும் இளமைப் ப‌ராயம் பாகம் இரண்டு













பிரபாவின் தாய் மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை பிரபாவின் வாழ்வைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான‌ நபர்.

பிரபா தனது 17வது வயதில் தனது குடும்பத்துடனான எல்லா உறவுகளையும் முறித்துக் கொண்டார். தனது புகைப்படமோ அல்லது புகைப்படத் தொகுப்போ வீட்டில் இல்லாதவாறு எல்லாவற்றையும் அகற்றினார் பிரபா. பிரபாவை தேடிய பொலிஸார் வைத்திருந்த ஒரே புகைப்பட ஆதாரம் அஞ்சலக அடையாள அட்டை ஒன்று மட்டுமே.

பிரபாவின் போராட்ட வாழ்விற்கு அவரது தகப்பனாரிடமிருந்து எந்தவிதமான உதவியோ ஆதரவோ கிடைக்கவில்லை. ஆனால் உதவிக்கரம் கொடுத்தவர்கள் வல்லிபுரம் வேலுப்பிள்ளையும் மூத்த சகோதரி ஜெகதீஸ்வரியின் கணவரும் மச்சினனுமாகிய மதியாபரணம் ஆகியோர்தான்.

பிரபா பிறந்ததன் பிற்பாடு திருவேங்கடம் வேலுப்பிள்ளை குடும்பத்துக்கும் வல்லிபுரம் வேலுப்பிள்ளை குடும்பத்துக்கும் எழுதப்படாத உடன்பாடு ஒன்று இருந்தது. அது என்னவென்றால் பிரபாவுக்கு தாய் மாமன் மகள்களில் ஒருவரை மணம் முடித்து வைப்பது. ஆனால் பிற்காலத்தில் பிரபா மதிவதனி ஈரம்பு மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்து கொண்டபோது தனது சங்கடங்களுக்கு நடுவிலும் பிரபாவிடம் தாலி எடுத்துக் கொடுத்ததும் இதே தாய் மாமன் வேலுப்பிள்ளை தான்.

1984 அக்டோபர் 1 அன்று திருப்போரூர் முருகன் கோயிலில் நடந்த அந்தத் திருமணத்திற்கு திருவேங்கடம் வேலுப்பிள்ளை வரவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Thursday, May 13, 2010

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்த களத்தில் இந்திய இராணும்?














கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரில் சிறீலங்கா இராணுவத்தினருக்கு இந்தியப்படைகள் களத்தில் நின்று கட்டளைகளையும் நெறிப்பபடுத்தல்களையும் வழங்கியமைக்கு தகுந்த சாட்சியாக இந்திய ஊடகவியலாளர் நிக்கில் கோக்கலே தனது அனுபவப்பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வன்னியில் இந்திய படைகளும் ஆயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்டமைக்கு ஆதாரமாக இந்திய இராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் தீபக் கபூர் அங்கு களமுனை பணிகளில் ஈடுபட்டிருந்தமை நிக்கல் கோக்கலேயின் பத்தியொன்றில் வெளியாகியிருக்கின்றது.

போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த கடந்த மே மாத நடுப்பகுதியில் வன்னிப்பகுதி நேரடியாக சென்று செய்தி சேகரித்தவர் என்ற வகையில் அந்த அனுபவங்களை பகிர்ந்துள்ள இந்தியாவின் புதுடில்லி தொலைக்காட்சியின் பாதுகாப்புத்துறை நிருபரும் முன்னாள் அவுட் லுக் சஞ்சிகை நிருபருமான நிக்கல் கோக்கலே தனது பத்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Thursday, May 6, 2010

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தனது 38-வது அகவையைத் தொட்டது













தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களை தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு கடந்த மே 5-ம் தேதியன்று 38-வது அகவையில் கால் பதித்தது. 1972-ம் ஆண்டு மே 5-ம் தேதிதான், புலிகள் இயக்கம் தொடங்கப்பட்டது.

தமிழர்களிற்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின்போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதரணமாகத் திகழ்ந்தவர்கள்.

உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் ஓயாத அலைகள் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

அத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின்படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில் தமக்கெனத் தனி அங்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள்.

அத்தோடு பல முறியடிப்புச் சமர்கள் குறிப்பாக யாழ். தேவி முறியடிப்புச் சமர், சூரியக்கிரன முறியடிப்புச் சமர், ஜெயசிக்குறு எதிர்ச்சமர், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல முறியடிப்புச் சமர்களின் மூலம் தமது தற்காத்தல் போராட்ட முறையை உலகிற்குப் பாடவிதானமாக்கிய விடுதலைப்புலிகளின் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் 18 மாதங்களாக நீடித்த ஒரு பாரிய சமராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

முப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அவற்றிற்கான தனிச்சீருடைகள், முகாம்கள் என அவற்றைப் பராமரித்ததோடு அவற்றின் சண்டையிடும் திறன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்கே படைபல அச்சமேற்படுத்தும் படையணிகளாக அவற்றை சிறீலங்கா மற்றும் அவற்றின் நேச நாடுகள் நோக்குமளிவிற்குப் பேணிப் பாதுகாத்தனர்.

இராணுவப் படைக் கட்டுமாணத்தின் கீழ் பல சிறப்புப் படையணிகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சார்லஸ் அன்ரணிப் படையணி, மோட்டார்ப் படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என இன்ன பல பிரிவுகளையும் திறம்படச் செயற்படுத்தி வந்தனர்.

குறிப்பாக ஈழப் போர் நான்கில் தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வான்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியாக தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது.

போராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்த தமிழீழ விடுலைப்புலிகளின் போராட்ட வரலாற்றின் பின்னடைவிற்கான காரணகர்த்தாவாக பேச்சுவார்த்தைக் காலத்திலான சர்வதேச மயப்படுத்தலும். உள்ளக சதிகளும் இடம்பெற்றிருந்தன.

ஆயுதங்களை மௌனிப்பதாக முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் அறிவிக்கும்வரை கொண்ட கொள்கை மீதான பற்றுறுதியுடன் போராடிய தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகும்.

ஒரு சாமானியத் தமிழனின் மனம் திறந்த மடல்













இலங்கையில் சிங்கள இனவெறி அரசின் கொடுந்தாக்குதல்களுக்கு ஆளாகி ஈழத் தமிழ் மக்கள் கடந்த பல்லாண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வரும் சொல்லொணாத் துயரங்களையும் எதிர்கொண்டு வரும் இன்னல்களையும் நாடறியும். தாங்களும் அறிவீர்கள்.

தமிழகத்தில் இச்சிக்கல் குறித்து அக்கறையுடைய அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் அவ்வப்போது நடத்திய போராட்டங்கள், அனுப்பிய கடிதங்கள், மனுக்கள், இவை எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக சட்டமன்றமே அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு ஒரு மனதோடு நிறைவேற்றி அனுப்பி வைத்த தீர்மானங்களும் தங்களின் மேலான பார்வைக்கு வந்திருக்கும் என நம்புகிறோம்.

எனினும், இலங்கையில் இன ஒழிப்புத் தாக்குதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ள இந்த நிலையிலும் தாங்கள் இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்யக் கோரவில்லை என்பதும், அளித்து வரும் ராணுவ உதவிகளையும் படைப் பயிற்சிகளையும் நிறுத்தவில்லை, ஏற்கெனவே அனுப்பி வைத்துள்ள படைக் கருவிகளையும் பயிற்சியாளர்களையும் திரும்பப் பெறவில்லை என்பதும், மாறாக இலங்கை அரசின் தமிழின அழிப்புப் போரை ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்பதாகச் சித்தரித்து இப்போர் தொடரும் என அறிவித்திருப்பதும் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கிறது.

தென்னாப்பிரிக்க வெள்ளை நிறவெறி அரசுக்கு எதிரான கருப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்த இந்திய அரசு, பாலஸ்தீன விடுதலையை, அங்கோலா நமீபிய விடுதலையை, ஏன் இந்தியத் துணைக் கண்டத்துக்குள்ளேயே பாகிஸ்தானுக்கு எதிரான பங்களாதேச விடுதலையை ஆதரித்த இந்திய அரசு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை மட்டும் ஆதரிக்க மறுப்பது ஏன், ஆதரிக்க மறுப்பதோடு மட்டுமல்ல, மாறாக, அப்போராட்டத்துக்கு எதிராகச் செயல் பட்டு தமிழின அழிப்புப் போரை நடத்தி வரும் சிங்கள அரசுக்கு உதவி வருகிறதே இந்த அளவுக்கு ஈழ மக்கள் செய்த பாவம்தான் என்ன என்கிற கேள்வியையும் உணர்வுள்ள தமிழக மக்கள் ஒவ்வொருவர் மத்தியிலும் எழுப்பி வருகிறது.மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Saturday, April 17, 2010

இன்றைய தேவைகளையும் - நீண்டகால நலன்களையும் முன்னிறுத்தி செயற்பட வாருங்கள்














கடந்த 2010 ஏப்பிரல் 08 ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் விட்டுக்கொடுக்க முடியாத அடிப்படை அரசியல் கொள்கைகள் தொடர்பாக பரவலான விழிப்பினை ஏற்படுத்தும் நோக்குடனும், வளர்ச்சி பெற்று வந்த தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டினைப் பலவீனப்படுத்திட முற்பட்ட சில அரசியல் சக்திகள் தொடர்பில் எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் நோக்குடனும் திருமலை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் போட்டியிட்ட எமக்கு வாக்களித்த மக்களுக்கும், எமது பொதுக்கூட்டங்கள் - கலந்துரையாடல்கள் - சந்திப்புக்களில் பங்கேற்ற மாணவர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், ஊடகத்துறையினர் மற்றும் அனைத்துத்தரப்பு மக்களிற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன், எமது கொள்கைகளை முழுமையாக ஆதரித்து குரல் கொடுத்த புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், புலம்பெயர் ஊடகத்துறையினர் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

இந்தத் தேர்தலானது தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டு, இறுதிப் போரின் போது இடம் பெற்ற பெரும் மனித அவலங்களின் தாக்கத்திலிருந்து மக்கள் மீண்டிடாத காலகட்டத்தில் எம் மீது திணிக்கப்பட்டுவிட்டது. அனைத்துவித சனநாயக நடவடிக்கைகளும் தோல்வியடைந்து, ஆயுதம் தரித்த உரிமைப் போராக அது மாற்றங் கண்ட வரலாற்றினைக் கொண்டிருந்த எமது தேசம் மீளவும் சிறீலங்காவின் சனநாயக அமைவுக்குள் நம்பிக்கை வைப்பதற்கான எதுவித நியாயமான காரணங்களும் இல்லாத காலகட்டத்தில் இந்தத் தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ளது.

இது பெருமளவு மக்கள் தேர்தல் நடவடிக்கைகளினையும், தேர்தலினையும் புறக்கணித்ததன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு முன்னோக்கி செல்வதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முடியாத சூழல் ஏற்பட்டது.

அதிகாரப்பகிர்வு, மிகவும் பலவீனமான சமஸ்டி ஆட்சி என்கின்ற நிலைப்பாடுகளின் தோல்வியே எமது மக்களை 1977 பொதுத்தேர்தலில் தமிழீழத் தனியரசு என்கின்ற அரசியல் இலக்கிற்கு வாக்களிக்கும் நிலைமைக்குத் தள்ளிமையும் - தொடர்ச்சியாக இடைக்கால தன்னாட்சி அதிகார சபை நிலைப்பாட்டிற்கான 2004 பொதுத் தேர்தல் ஆணையும் எம் முன்னே உள்ள கொள்கை வழிகாட்டல்களாகும்.

இந்தப் பின்னணியில் மீளவும் நாங்கள் 1977ற்கு முற்பட்ட நிலைப்பாட்டிற்குச் செல்வது மிகவும் ஆபத்தான - தற்கொலைக்கொப்பான அரசியல் பாதை என்பதை வலியுறுத்தியே நாங்கள் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை நிறுவினோம். நாங்கள் இந்தத் தேர்தல்களை பாரளுமன்றத்திற்கான ஆசனங்களைப் கைப்பற்றுதல் எனும் குறுகிய நோக்குடன் அணுகவில்லை என்பதை நாங்கள் ஆரம்பம் முதலே தெளிவாக சொல்லி வந்தோம்.

தமிழ் மக்களின் நீண்டகால நலன்களும், பாதுகாப்பும் இன்று ஏற்பட்டுள்ள குறுங்கால அச்ச நிலையினால் தோற்கடிக்கப்படாது இருப்பதற்கான விழிப்பினை ஏற்படுத்துவதே எமது முதன்மை நோக்கமாக இருந்தது. எமது தேர்தல் விஞ்ஞாபனம் இந்த அடிப்படையிலேயே எழுதப்பட்டது. தமிழர் தேசம் எனும் நிலைப்பாட்டினை தெளிவாகவும், துணிச்சலுடனும் நாங்கள் வரைவு செய்தோம்.

இந்த தமிழ்த்தேசம் சிங்கள தேசத்துடன் இணைந்து கூட்டாக செயற்படுவதற்கான நவீனத்துவமான வழிமுறைகள் பற்றி நாங்கள் விவாதித்தோம். எங்களால் இயன்றவரை திருமலை மற்றும் யாழ் மாவட்டங்களில் நாங்கள் பொதுக் கூட்டங்கள் வாயிலாகவும், சந்திப்புக்கள் வாயிலாகவும் இவற்றினை தெளிவுபடுத்தி வந்துள்ளோம். நாம் இத்தேர்தல்களில் பலத்த சவால்களைச் சந்தித்தோம். எமது கருத்துக்கள் மக்களைச் சென்றடைவதற்கான ஊடக சூழல் யாழ் மற்றும் திருமலை மாவட்டங்களில் நிலவவில்லை.

அதனை மீறி மக்களை நேரிடையாக சென்றடைவதற்கான கால அவகாசமோ, வளங்களோ எமக்குக் கிடைக்கவில்லை. அத்துடன், சில பகுதிகளுக்குச் சென்று நாங்கள் கருத்துக்களை கூறுவதற்கான வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டன. எனினும், நாங்கள் தேசம் என்பது தொடர்பான சிந்தனைகளையும், இலங்கைத் தீவின் அரசு, சிங்கள - தமிழ்த் தேசங்களின் கூட்டாக இருக்கும் வகைகள் பற்றிய எண்ண ஓட்டங்களையும் இயன்றளவு மாணவர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் தேசியப்பற்றுக் கொண்ட செயற்பாட்டாளர்கள் முன்பாக வைத்துள்ளோம்.

மேலும், புதிய இளம்வீச்சுக்கொண்ட ஆர்வலர்களையும் நாங்கள் இந்ததத் தேர்தல் மேடைகளைப் பயன்படுத்தி மக்கள் முன்பாக அறிமுகம் செய்துள்ளோம். இந்தத் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்ற மக்களின் வெளிப்படையான கருத்துக்களைக் கேட்டதன் மூலமும், தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்காத மக்களின் மௌனமான சமிக்கைகளை புரிந்து கொண்டதன் அடிப்படையிலும் நாங்கள் எமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை வடிவமைத்துச் செயற்படுத்தவுள்ளோம்.

எங்கள் நடவடிக்கைகள் அடுத்துவரும் காலகட்டங்களில் மக்களின் குறுங்கால மனிதாபிமான நலன்களை பிரதிபலிக்கும் அதேவேளையில் தமிழ் மக்களின் நீண்டகால நலன்களைப் பாதுகாப்பாதற்கான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலும் அமையும். தமிழர் தாயகத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் விரிவுபட்ட மக்கள் கட்டமைப்புக்களை நிறுவுவதையும், மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை அதிகரிப்பதையும் எம்முன்னுள்ள அவசர உடனடிப் பணிகளாக கருதுகின்றோம்.

இதற்கான ஆதரவினை அனைத்துத் தரப்பிடமிருந்தும் எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள், கற்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் துணிச்சலுடன் எம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு அழைக்கின்றோம். அத்துடன் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்டமைப்புக்களும் புலம்பெயர் ஊடகங்களும் தொடர்ந்தும் எம்முடன் கரம்கோர்த்து செயற்பட வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம்.

அதே வேளை நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல. 150000 திற்கும் அதிகமான மக்களும் 40000 திற்கும் அதிகமான இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்து வலிமை பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கொள்கை நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேர்மையாக முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென நாம் விரும்புகின்றோம்.

அவ்வாறான ஓர் சூழ் நிலை ஏற்படும் பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராக உள்ளோம். அத்துடன் ‘தனித்துவமான இறைமை கொண்ட தமிழ்த் தேசம்` என்ற நிலைப்பாட்டை உறுதியாக முன்னெடுத்துச் செல்லும் சகல தரப்புக்களுடனும் எதிர்காலத்தில் இணைந்து செயற்பட நாம் தயாராகவே உள்ளோம்.

நன்றி

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி

17.04.2010

பார்வதியம்மாள் திருப்பி அனுப்பபட்டமையும் சில கசப்பான உண்மைகளும்













தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தாயார் திருமதி பார்வதியம்மாள் வேலுப்பிள்ளை அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வானூர்தி மூலம், நேற்று(16.04.2010) இரவு மலேசியாவிலிருந்து, தமிழகம் வந்திருந்தார். அவரை தரையிறங்க விடாமல், அதே விமானத்தில் இந்திய அரசு திருப்பி அனுப்பியமை மிகவும் கண்டனத்திற்குரிய மனிதத் தன்மையற்ற செயலாகும்.

திருமதி பார்வதியம்மாள் அவர்களை திருப்பி அனுப்பும் முடிவு இந்திய அரசு எடுத்திருந்த முடிவு என்றாலும், அதில் தமிழக அரசிற்கு பங்கிருப்பதை தட்டிக் கழிக்க முடியவில்லை. இவ்வாறு, தொடர்ந்து தமிழினத்திற்கு எதிராக மனித நேயமற்ற செயல்களை இந்திய அரசு செய்து வருவதை உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டு கண்டிக்க வேண்டும்.

இந்திய, தமிழக அரசுகளை கண்டிப்பதோடு நின்று விடாமல், இந்த சம்பவத்திற்கான முழுக் காரணிகளையும் நாம் ஆய்வுக்கு உட்படுத்தியாக வேண்டும். இந்த ஆய்வின் முடிவுகள், உணர்வாளர்கள் தம்மை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதோடு அல்லாமல் சமரசவாதத்தையும் சுட்டிக் காட்டுகின்றது.

முறைப்படி இந்திய அரசுக்கு விண்ணப்பித்து, விசா பெற்று தமிழகம் வந்திருந்த அவரை, வந்த விமானத்திலிருந்து கூட கீழே இறங்க விடாமல் செய்த செயல் மனித நேயமற்றதாகும். ஏற்கெனவே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் தொடர்ந்து விமானப் பயணத்தை மேற்கொள்ளவதில் உள்ள சிரமங்களைக் கணக்கில் கொள்ளாமல், அதே விமானத்தில் அவரை வைத்திருந்துள்ளனர், இந்திய அரசின் குடியுறவுத் துறை அதிகாரிகள்.

சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்று இப்போது கூச்சலிடுகின்ற அரசு, அவரது விண்ணப்ப விசாவை தொடக்க நிலையிலேயே மறுத்திருந்தால், நோயுற்ற வயதான அப்பெண்மணி நெடுந் தொலைவிலிருந்து இங்கு வந்திருக்க வேண்டிய தேவை எழுந்திருக்காது. ஆனால், அவரை அங்கிருந்து வரவழைத்து ‘அனுமதியில்லை’ என்று திருப்பி அனுப்பி, ஏற்கெனவே நோயுற்ற அவருக்கு மன உளைச்சலையும், தேவையற்ற உடற்ச்சோர்வையும் ஏற்படுத்தும் வகையில் இந்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டுள்ளது. இதே போல், சென்னையில் தங்கி சிகிச்சை பெறுவதற்காக வந்த இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் அவர்களையும், சில தினங்களுக்கு முன்பு இந்திய அரசு திருப்பி அனுப்பியதையும் நாம் அறிவோம்.

திருமதி. பார்வதியம்மாள் சிகிச்சைக்காக தமிழகம் வரும் செய்தி, மிகவும் கமுக்கமாக வைக்கப்பட்டிருந்தது தவறு. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு.பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களுக்கும், காவல்துறையினருக்கும் மட்டுமே தெரிந்த இந்த கமுக்கமான தகவல் பரவலாக உணர்வாளர்களுக்குத் தெரிவிக்கப்படாததால், உணர்வாளர்கள் விமான நிலையத்தில் உரிய நேரத்தில் கூடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பதே கசப்பான உண்மை. ஓரளவு திரண்ட உணர்வாளர்களை வைத்துக் கொண்டு கூட எவ்வித போராட்டங்களையும் முன்னெடுக்காமல், இத்தலைவர்கள் பேட்டி மட்டும் கொடுத்து விட்டு கலைந்து சென்றதும் வருத்தமளிக்கிறது.

திருமதி பார்வதியம்மாள் தமிழகம் வருவது குறித்து தகவல் தெரிவிக்க முடியாமல் போயிருந்தாலும், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள தகவலாவது உரிய நேரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தால், பெருந்திரளான உணர்வாளர்களைக் கொண்டு விமான நிலையத்திலேயே போராட்டங்களை நடத்தி திருமதி பார்வதியம்மாள் அவர்களுக்கு தரையிறங்க அனுமதியைப் பெற்றுத் தந்திருக்க முடியும். ஆனால் அதற்கான வாய்ப்பு நேற்று தட்டிப்பறிக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.

சிலர் கருதுவது போல், உணர்வாளர்கள் மிகுதியாக வந்திருந்தால், திருமதி பார்வதியம்மாள் அவர்களுக்கு பாதுகாப்பாகத்தான் இருந்திருக்குமே அன்றி பாதகமாக இருந்திருக்காது என்பதை இத்தலைவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. திருமதி பார்வதியம்மாள் செல்கின்ற வாகனத்தை உணர்வாளர்கள் மறித்திருப்பார்கள் என இத்தலைவர்கள் கருதுகின்றனரா என்பதும் விளங்கவில்லை.

புதிய இயக்கமாக இருந்தாலும் சமரசவாதங்கள் தமிழக அரசியலை எவ்வாறு சீரழித்தன என்பதை இளந்தமிழர் இயக்கம் நன்கு உணர்ந்திருக்கிறது. கமுக்கமாக பேச்சுவார்த்தை நடத்தி காரியம் சாதிக்கும் வழியை, தமிழீழ தேசியத் தலைவரும் மாவீரன் முத்துக்குமாரும் நமக்குக் காட்டவில்லை என்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். போராடி நம் உரிமைகளைப் பெறும் வழியையே நமக்கு அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். நாமும் அவ்வழியில் போராட வேண்டும் என்பதே நமது விருப்பம். நேற்று அவ்வாறு போராடியிருந்தால், நம்மால் நிச்சயம் வென்றிருக்கவும் முடியும்.

தோழமையுடன்

க.அருணபாரதி

ஒருங்கிணைப்பாளர் - இளந்தமிழர் இயக்கம்

Sunday, April 4, 2010

ஆனந்தபுரம் துக்கபுரமான நாளின் முதலாமாண்டு நினைவு இன்று













தமிழீழ விடுதலைப் புலிகளின் 33 ஆண்டு கால போராட்ட வரலாற்றில் அவர்கள் எத்தனையோ பின்னடைவுகளையும் பாரிய இழப்புக‌ளையும் சந்தித்திருக்கிறார்கள்.

ஆனால் கடந்த ஆண்டு இதே தினத்தில் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் அவர்களுக்கு ஏற்ப்பட்ட இழப்பு விடுதலைப்போராட்டத்தின் போக்கையே மாற்றியது என்றால் அது மிகையாகாது.

விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் 4ம் நாள் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியின் ஆனந்தபுரம் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.

உண்மையில் மார்ச் 31 ல் தொடங்கி ஏப்ரல் 6 வரையான ஒரு வார‌ காலப்பகுதியில் புலிகள் இழந்த தளபதிக‌ளினதும் போராளிகளினதும் எண்ணிக்கை வேறு எந்தக் காலத்திலும் நடந்ததில்லை என்று உறுதியாகக் கூறலாம்.

மார்ச் 31 அன்றுதான் விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியான கோபித், முதலாவது கட்டளைத் தளபதியான அமுதாப் ஆகியோர் வீரச்சாடைந்திருந்தனர்.

மறுநாள்(ஏப்ரல் 1) ஆனந்தபுரத்தில் பல படையணித் தளபதிகளும் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டனர்.

ஆனால் இராணுவத்தின் 53ம் மற்றும் 58ம் படைப்பிரிவின் எதிர்பாராத விதமான நகர்வொன்றின் மூலம் பல தளபதிகளும் போராளிகளும் தமது இறுதிக் களத்தில் மிகப் பொருந்தாத ஆட்பல ஆயுதபல‌ நெருக்கடியான களத்தில் வீராவேசத்தோடு பொருதினர்.

அப்போர்க்களத்தில் தமது இறுதி அத்தியாயத்தை எழுதிய தளபதிகள் விபரம் வருமாறு:

1)பிரிகேடியர் பால்ராஜ் மறைவின் பின்னர் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படாத புலிகளின் 2ம் நிலைத் தலைவரும் கேணலுமான‌ தீபன்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்). இவர் பின்னர் தலைவரினால் வலைஞர்மடம் பகுதியில் ந‌டைபெற்ற ஒரு நிகழ்வில் பிரிகேடியராகத் தரமுயர்த்தப் பட்டார். உண்மையில் தலைவர் அவர்கள் பிரிதொரு நிகழ்வில் தீபன் அம்மானுக்கு மேஜர் ஜெனரல் தரம் வழங்கவே விரும்பியிருந்தார் என்கின்றன விடுதலைப் புலிகள் தரப்பு வட்டாரங்கள். ஆனால் யுத்தத்தின் தீவிரம் அதற்கு இடமளிக்கவில்லை என்றே கூறலாம்.

2) கேணல் விதுஷா, மாலதி படையணி சிறப்புத் தளபதி. இவரும் பிரிகேடியராகத் தரமுயர்த்தப் பட்டார்.

3) கேணல் துர்க்கா, சோதியா படையணி சிறப்புத் தளபதி. இவரும் பிரிகேடியராகத் தரமுயர்த்தப் பட்டார்.

4)கேணல் கடாபி, புலிகளின் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர்.  இவரும் பிரிகேடியராகத் தரமுயர்த்தப் பட்டார்.

5)கேணல் மணிவண்ணண், கிட்டு பீரங்கிப் படையணியின் தளபதி. இவரும் பிரிகேடியராகத் தரமுயர்த்தப் பட்டார்.

6)மாலதி படையணி கட்டளைத் தளபதி கமலினி.

7)சோதியா படையணி கட்டளைத் தளபதி மோகனா.

8)ஜெயந்தன் படையணி சிறப்புத் தளபதி கீர்த்தி.

9)ஜெயந்தன் படையணி கட்டளைத் தளபதி நாகேஷ்.

10)ராதா விமான எதிர்புப் படையணி சிறப்புத் தளபதி சிலம்பரசன்.

11)ராதா விமான எதிர்புப் படையணி கட்டளைத் தளபதி அன்பு.

12)குட்டிசிறி மோட்டார் படையணி தளபதி கோபால்.

13)பொன்னம்மான் கண்ணிவெடி மற்றும் மிதிவெடி பிரிவுத் தளபதி அஸ்மி.

இவர்கள் தவிர மேலும் பல தளபதிகளும் போராளிகளும் வீரச் சமராடி களப்பலியாகினர்.

அவர்களது முதலாமாண்டு நினைவு தினம் இன்று. அவர்களுக்கு கண்ணீர் சிந்தி வீர வணக்கம் செலுத்துகிறோம்.

மாவீரர்களே நீங்கள் கண்ட கனவான தமிழீழம் மலர தமிழருக்கு துணையும் ஆசியும் வழங்குங்களேன்.


"இப்பூமியில் உள்ள மனிதர் அனைவருக்கும்
சாவு விரைவாகவோ தாமதமாகவோ வருகிறது

ஆனால் சிறப்பாக சாவது யார் என்றால்
மிக நெருக்கடியான களங்களில்

தன் தந்தைக்காக, மண்ணுக்காக, மக்களுக்காக‌
போரிட்டவர் மட்டுமே"

- சாணக்கியன்

Saturday, April 3, 2010

சிவதீபனுக்கோர் சபதம் கேள்













வன்னித் தீவின் தளபதியே
நெஞ்சுக் கூடெரித்து நஞ்சுண்ட தீபமே
ஆணையிரவில் ஆணையிட்டு -
புலிக்கொடி நாட்டிய பகிரதா – கேட்கிறதா???

எல்லி நகைத்தவரிடம்
சொல்லி அடித்த வீரமே
இருபத்தைந்து ஆண்டில்
புலிகளின் வளர்ச்சியோடு வளர்ந்த போர்புயலே – கேட்கிறதா???

சிங்களனாயிரம் சங்கருத்து
முல்லைத் தீவுபிடித்து
புலித்தலைவனின் படைக்கு மீண்டுமிரண்டு
பீரங்கி பரிசளித்த சிவதீபமே – கேட்கிறதா???

ஈழ கனவு சுமந்து
போராட்ட நெருப்பு குழைத்து
வீரமறவர் குருதிகளந்த மண் அணை கட்டி
கிளிநொச்சியை காத்த மாவீரா – கேட்கிறதா???

அர்ப்பணிப்பு, வீரம், உறுதிக்கு வலு கூட்ட
வடப்போர் முனையில் நின்று
பரிசளிப்பு விழா நடத்தி – வீரர்களின் நெஞ்சுக்கு
பேச்சுரம் பாய்ச்சிய கட்டளை தளபதியே – கேட்கிறதா???

அறுபதாண்டு காலம் ஈழம் சுமந்த
விடுதலையென்னும் ஒற்றை வார்த்தையை
இருபத்தைந்தாண்டு காலம் நீ சுமந்து
திருப்பித் தருகையில் உயிரையும் தந்த தீபனே;

இதயம் முழுதும் ரத்தமின்றி
பெற்ற உற்ற உறவுகளின்றி
ஒற்றை மரமாகவேனும் நிற்போம்,

நினைவில் எமை மறந்தும் ஒழிப்போம் -
உனை மறவோம் கேள்;

ஈழமுள்ளவரை நீயிருப்பாய்
உன் நினைவற்று போகும் முன்
ஈழம் படைப்போம்!

வெள்ளையப் படைக்கு சிக்குண்டு மாய்ந்த
இந்திய மரணங்களை மறந்து
ஈழத்தில் – அடிமை சங்கிலி பூட்ட புகுந்த
அமைதிப் படையென்ன -

ஆயிரம் படை வரட்டும்;
எப்படை வரினும் எம் படை வெல்லும் தினம்
உனக்கே உனக்கே உரித்த-தெம் சபதம் கேள்!!!
———————————————————————-
—- வித்யாசாகர்

———————————————————————–

நன்றி : மீனகம்

Friday, April 2, 2010

கேணல் கிட்டு














கேணல் கிட்டு
(சதாசிவம் கிருஷ்ண‌குமார்,
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்,
02/01/1960 - 16/01/1993)

யாழ். மாவட்டம் வடமராட்சியின் கடற்கரைப் பிரதேசமான வல்வெட்டித்துறையில் சதாசிவம் ராஜலக்ஷ்மி தம்பதிகளின் இரண்டாவது மகனான கிருஷ்ண‌குமார் பிறந்தது 1960 ஜனவரி 2ல்.

இவருடைய அப்பாவான சதாசிவம் நெல்லியடியில் பத்திரிகை அச்சகம் ஒன்று வைத்திருந்து அச்சுத்தொழிலில் ஈடுபட்டிருந்தார்.

அரசியலில் ஈடுபாடு கொண்ட அவருடைய அம்மா ராஜலக்ஷ்மி தந்தை செல்வா தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சியின் தீவிர ஆதரவாளர் ஆவார். கிட்டு குழந்தையாக இருந்த சமயம் 1961ல் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்திலும் கலந்துகொன்டவர்.

கிருஷ்ண‌குமார்  தனது கல்வியை வல்வெட்டித்துறையில் அமைந்திருந்த சிதம்பரா கல்லூரியில் பயின்றார். இதே கல்லூரியில்தான் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் முன்னால் பிரதி தலைவர் கோபாலசாமி மகேந்திரராஜா(மாத்தையா)வும் கல்வி கற்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.ஒரே பள்ளியில் பயின்றதால் தலைவரின் நண்பனான‌ கிருஷ்ண‌குமார் ஏற்கனவே தலைவரின் உறவினருமாவார்.

கிருஷ்ண‌குமார் 18 வயது இளைஞனாக இருந்தபோது புலிகளுடன் இணைந்துகொண்டார். அவரை புலிகள் இயக்கத்தில் இணைத்தது சாட்சாத் வேலுப்பிள்ளை பிரபாகரனேதான். கிருஷ்ண‌குமார் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.

கிட்டுவும், இன்னும் சில தோழர்களும் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இராணுவப் பயிற்சி பெற்றனர். கிட்டுவின் துடிப்பும் வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது. எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களை, சிந்தனைகளை, மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தை, தலைவரின் அருகில் இருந்த கிட்டு அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன. தன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு காத்திருக்கிறார்.

1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக சென்ற விடுதலைப் புலிகளின் அணியில் கிட்டுவும் ஒருவர். வீதியில் நிலக் கண்ணிவெடிகளை பொருத்திவிட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணிவெடிகளை கையாளும் போதியளவு செயற்திறன் போராளிகளுக்கு இல்லாத காலம் அது. இராணுவ வாகனங்கள் இலக்காக அண்மிக்கும் நேரத்தில் துரதிஸ்டவசமாக வாகனங்களைக் கண்டு மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் கால்கள் பட்டு கண்ணிவெடிகள் வெடிக்க போராளிகள் நிலை குலைந்து போகிறார்கள். துப்பாக்கி ரவைகளைக் கக்கியவாறு இரு இராணுவ கவச வாகனங்கள் போராளிகளை நெருங்கிவர பின்வாங்கிச் செல்வதைத்தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் கிட்டு மட்டும் எதிரியை எதிர்கொள்ளும் சாதகமற்ற களநிலையைக் கருத்திற்கொள்ளாது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜுத்திறி (g-3) துப்பாக்கியால் இராணுவ கவசவாக னத்தை நோக்கிச் சுடுகிறார். இலக்குத் தவறவில்லை. சாரதி காயப்பட வாகனம் செயலற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கையை மெய்ப்பித்த மகிழ்ச்சியோடு கிட்டு களம் விட்டு அகன்றார். அவரின் முதல் களமே தனி மனித சாதனையாக ஆரம்பமாகிறது.

1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல், ஜுலை 23ல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலி கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார்.

1983இன் இறுதிக் காலத்தில் இந்தியாவுக்குப் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவில் கிட்டு இடம்பெற்றார். முதலாவது பயிற்சி பாச‌றையின் பொறுப்பாளராக‌ பொன்னம்மானும் இரண்டாவது பொறுப்பாளராக கிட்டுவும் நியமிக்கப்பட்டனர். விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா,பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் 100 போராளிகளுடன் பயிற்சி எடுத்துக்கொண்டார்

கிட்டுவுக்கு வழங்கப்பட்ட தொடர்பாடல் குறிப்பு பெயர் கிலோ டெல்டா. பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். அதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார்.

யாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. யாழ். கோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாக, மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார். மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங்கள், நூலகங்கள், மலிவுவிலைக் கடைகள், பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார். இவவாறாகக் கிட்டுவின் சமூகப்பணிகள் விரிவடைய, அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார்.

தமிழீழ மக்கள் மனங்களில் மாத்திரமல்ல, எல்லைகடந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவருமே கிட்டுவின் வீரசாதனைகளை அறிந்து பெருமிதம் அடைந்தார்கள். விடுதலைப் புலிகளால் மன்னாரில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட இரு சிங்களச் சிப்பாய்களின் விடுவிப்பு தொடர்பாக 1986 நவம்பர் 10இல் சிங்கள இராணுவத் தளபதியான கேணல் ஆனந்த வீரசேகரா, கப்டன் ஜெயனாத் கொத்தலாவை ஆகியோரை தனது இடத்திற்கு அழைத்துச் சந்தித்ததன் மூலம் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்தது. அதே போன்று ஒக்டோபர் 1986ல் சந்திரிக்கா அம்மையாரின் கணவரான விஜய குமாரதுங்காவை யாழ்ப்பாணத்தில் சந்தித்தார். அத்துடன் டெசம்பரில் இலங்கை அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அரசாங்கக் குழுவை வரவேற்றதும் கிட்டுதான்.

1987 மார்ச் 13 அன்று தேசத்துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இரு கால்களிலும் காயம்பட்ட‌ கிட்டுவின் வலது கால் அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. காலை இழந்த போதும் தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும், திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார். இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில், இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொணர பெரிதும் பாடுபட்டார். இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களர், கலைஞர்கள், பேராசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்து, எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைத்தார். எமது தியாக வரலாறுகளை பல வெளியீடுகள் மூலம் இந்திய மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார். இவவாறான நிலையில் கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தேவி இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார். சிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை விடுதலை செய்தது. விடுதலை பெற்ற கிட்டு வன்னிக் காட்டில் தலைவரைச் சந்தித்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போருக்கு இறுதிவரை முகங் கொடுத்தார்.

இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989 இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்கு ஒக்டோபர் இறுதியில் பயணமானார்.

கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார். களத்தில், எரிமலை` எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு,விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார். விடுதலை உணர்வையும், தாய் மண்ணின் பற்றுறுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது. அவர் தலைவரை, தாயகத்தை, தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார்.

1993ல் கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள். யாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பா, புலேந்திரன், திலீபன், ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாது, 1993 ஜனவரி 16ல் தமிழீழத்தை, தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள்.

கிட்டுவின் இழப்பு தலைவனின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழினத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடித்தனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு கிட்டுவின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப்புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக்கிக் கொள்ளும் தலைவர், கிட்டுவின் இழப்பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றார். "கிட்டு நீ சாகவில்லை, ஒரு புதிய மூச்சாக பிறந்திருக்கிறாய்" எனக்கூறி தனக்குள் ஒரு வீரசபதம் எடுத்துக்கொள்கிறார்.

இன்றைய உலகில், தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் கிட்டுவின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறிவாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் கிட்டு வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும். அந்தநிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில் கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்களென்றால் அது கிட்டுவால் அன்று விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன.

கெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக்கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரனின் பெயரிலே, பின்னர் தமிழீழ தாயகத்தில் உருவாக்கப்பட்ட‌ கனரக ஆயுதங்களைக் கொண்ட மிகப்பெரிய படையணி தனது சாதனைகளால் உலகத்தை வியக்கவைத்த‌து. போரியல் நுணுக்கமும் போரிடும் திறனும் கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணி எண்ணிலடங்கா சமர்க்களங்களில் ஈட்டிய பெரும் வெற்றிகள் மூலம், தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக்கொண்டது. நவீன போரியற்கலையில் தமிழனின் தேசியப்படை முன்னேறிய‌ற்கு கிட்டுவின் கனவும் ஒரு காரணம்.

ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண்டும் என்பதில் கிட்டு அதிக அக்கறை காட்டினார். தமிழினத்தின் நியாயப் போராட்டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்துநிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும்.  தமிழீழத்திலும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் உண்மை முகத் தோற்றத்தை உணரக்கூடிய விதத்தில் தமிழ் ஊடகத்துறை பெற்ற அபரிமிதமான வளர்ச்சிக்கு கிட்டுவின் எண்ணங்களின் தாக்கமும் ஒரு காரணம்.

எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் கிட்டு என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழினத்தின் ஆன்மாவில் அழிக்கமுடியாததோர் இடம் அவருக்கு என்றுமுண்டு. எல்லையற்ற திறமைகளாலும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த உண்மையான பாசத்தினாலும் தமிழினத்தில் நீங்காத நினைவுகளை அவர் பதித்துச் சென்றிருக்கின்றார். இறுதிமூச்சுவரை தமிழினத்தின் தன்மானம் காத்து தமிழினத் தலைவனுக்குப் பெருமையைச் சேர்த்த அந்த ஒப்பற்ற வீரனை எந்நாளும் எவராலும் மறக்கமுடியாது.

கிட்டு மறைந்தபோது தலைவர் வே.பிரபாகரன் சொன்ன வார்த்தகைகள் இவை,

"கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்,
நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும்
எமது விடுதலை வரலாற்றின்
ஒரு காலத்தின் பதிவு"

- சாணக்கியன்


























































































































































பிரிகேடியர் தீபன்(தாங்கோ பாப்பா)












பிரிகேடியர் தீபன்(தாங்கோ பாப்பா)
(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்
கண்டாவளை, கிளிநொச்சி
08/01/1966 ‍‍ 04/04/2009)

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையைச் சேர்ந்த வேலாயுதபிள்ளை தம்பதிகளுக்கு 1966 ஜனவரி 8ல் ஒரு மகன் பிறந்த போது அவனுக்கு பகீரதகுமார் என்று பெயரிட்டனர் அவரின் பெற்றோர். இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணிதான் தீபனின் பூர்வீகமாகும்.

சங்கத்தானை ‌சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.

தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் - கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.

தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.

1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் "தாங்கோ பாப்பா" ஆகும்.

இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.

1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.

1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.

இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.

பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.

1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.

தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.

தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி‍ 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.

இந்த‌ இரண்டு ரி‍ 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.

1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.

1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.

1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.

யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்‍ மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.

தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.

ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.

இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.

1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.

1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.

ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.

இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.

குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன்.

2001 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.

அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான `L` வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன்.

கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக் குண்டுத் தாக்குதலில் வீரகாவியமானார்.

25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.

சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை "என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்."

தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும்.

-சாணக்கியன்
























































































பிரிகேடியர் தினேஷ்(தமிழ்ச்செல்வன்)











பிரிகேடியர் தினேஷ்(தமிழ்ச்செல்வன்)
(சுப்பையா பரமு தமிழ்ச்செல்வன்
மட்டுவில், யாழ்ப்பாணம்
29/8/1967 ‍‍ 2/11/2007)

யாழ் மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தில் வயல்கள் நிறைந்த பிரதேசமான மட்டுவிலில் பரமு விசாலாட்சி தம்பதிகளுக்கு ஆறு பிள்ளைகள். 5 ஆண் பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை. அவர்களில் 5வது பிள்ளையாக அவதரித்த ஆண் மகனுக்கு தமிழ்ச்செல்வன் என்று பெயரிட்டனர் பெற்றோர்.

முடி திருத்தும் தொழில் செய்தவரான பரமு தனது பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக தனது பிள்ளைகள் யாரையும் அத்தொழிலில் ஈடுபடுத்தவில்லை.

தமிழ்ச்செல்வன் தன்னுடைய ஆரம்ப கல்வியை மட்டுவில் மகா வித்தியால‌யத்திலும் உயர் கல்வியை சாவகச்சேரி இந்து கல்லூரியிலும்
பயின்றார்.

1983ல் நடைபெற்ற இனக்கலவரத்தின் பின்னர் தன்னை விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைத்துக்கொண்டார்  தமிழ்ச்செல்வன். அப்போது அவருக்கு வயது பதினாறு.

ஆனால் தமிழ்ச்செல்வன் பயிற்சிக்காக இந்தியா சென்றது ஜூன் 13 1984ல் என்று தெரியவருகிறது. புலிகளின் நான்காவது பயிற்சி பாசறையில் திருமலை திண்டுக்கல் முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்று தினேஷ் ஆனார்.

பயிற்சிகளின் பின்பு தினேஷ் அக்காலத்தில் தமிழகத்தில் தங்கியிருந்த தேசிய‌த்தலைவர் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார். தலைவரது மெய்ப்பாதுகாப்பு அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

1987 ஜனவரி 5ல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு போய் களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்ட வேண்டியிருந்தது. அத்துடன் அப்போது யாழ் மாவட்ட தளபதியாகவிருந்த கிட்டுவிற்கும் தகவல் போய்ச் சேர வேண்டும்

களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டும் பொறுப்பும் கிட்டுவிற்கு தகவல் சொல்லும் பொறுப்பும் தலைவரின் நம்பிக்கைக்குரியவர்களான‌‌ இம்ரான், பாண்டியன், தினேஷ் ஆகிய மூவரிடமும் ஒப்படைக்கப்பட்டது அவர்களும் அவ்வேலைகளை செவ்வனே செய்து முடித்த‌னர். மூவரும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பின‌ர்.

தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸ் 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் வீரச்சாவடைந்தார். பின்னர் அப்பிரதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்படவிருந்த அப்துல்லா ஒக்டோபர் 5 1987ல் குமரப்பா, புலேந்திரன் ஆகியோருடன் சயனைட் உட்கொண்டு வீரமரணமடைந்தார்.

அதனால் 1987 ஒக்டோபரில் தமிழ்ச்செல்வன் தென்மராட்சி பிரதேசதின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.பாப்பா அவரின் உதவியாளராக நியமிக்கப்பாட்டார்.

1991ல் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கிட்டு வெளிநாடு செல்லவே  தமிழ்ச்செல்வன் யாழ் மாவட்ட தளபதியாகவும் அதன் பிறகு சிறப்பு தளபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

1991ல் ஆனையிறவை கைப்பற்றும் நோக்கில் நடைபெற்ற ஆகாய கடல்வெளி சமரிலும் பின்னர் 1993ல் தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையிலும்
மிக மோசமான காயங்களுக்கு உள்ளானார். தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் தமிழ்ச்செல்வன் கிட்டதட்ட உயிர் இழந்திருப்பார். ஆனால் அதிசயத்தக்க விதத்தில் தப்பித்துக்கொண்டார்.

அவருடைய காலில் இருந்த சதை முழுவதும் இழக்கப்பட்டது. அதன் பின்னர் ஊன்றுகோளின் உதவியுடனேயே நடக்க வேண்டி வந்தது.

யாழ்தேவி நடவடிக்கை சிலாவத்துறை முகாம் மீதான தாக்குதல் காரைநகர் மற்றும் தச்சன் காடு முகாம்கள் மீதான புலிகளின் தாக்குதலிலும் பங்குபற்றினார்.

1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார். அம்முகாம் மீது கரும்புலித்தாக்குதல் நடத்திய கரும்புலி மேஜர் டாம்போவை வழியனுப்பி வைத்தார்.

1994ல் அரசியல் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.

1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.அப்போது பாலபட்டபென்டி தலைமையிலான அரசாங்க சாமாதானக்குழுவை வரவேற்றது தமிழ்ச்செல்வன் தான்.

“ஒயாத அலைகள் - 03″ நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.

2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.

அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.

தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.

அமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.

மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்

சமாதானப் பேச்சுவார்த்தைகள் 2006ல் முறிவடைந்த பின்பு பரந்தன் பூநகரி பல்லவராயன்கட்டு பகுதிகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.

இப்படியாக தான் இருந்த துறையில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழ்ச்செல்வன் 2007 நவம்பர் 2 காலை ஆறு மணியளவில் லெப். கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப். ஆட்சிவேல், லெப். வாகைக்குமரன் ஆகியோருடன் சேர்ந்து சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.

அவர் நித்திரையில் இருந்த சமயம் அவர் தூங்கிக் கொண்டிருந்த திருவையாறுப் பகுதி பதுங்குகுழித் தொகுதி மீது கிபிர் மற்றும் மிக் விமானங்கள் நடத்திய 900 கிலோ எடை கொண்ட  பதுங்குகுழி அழிக்கும் திறன் கொண்ட `பங்கர் பஸ்டர்` குண்டுகள் பதுங்குகுழியின் மீது நேரடியாக விழுந்ததினால் பதுங்குகுழி நிர்மூலமாகிப் போனது. தமிழ்ச் செல்வனுக்கு பெரிதாக எதுவும் காய்ங்கள் இல்லையெனினும் நித்திரையில் பதுங்குகுழி மூடியதாலேயே மரணம் சம்பவித்தது.

தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா(இசைச்செல்வி) ஒரு முன்னாள் பெண் போராளியாவார். இவர்களது திருமணத்தை முன்னின்று நடத்தியது தலைவர் பிரபாகரன் தம்பதியும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் தம்பதியுமாகும். தமிழ்ச்செல்வனுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த‌வர் அலைமகள்(8) இரண்டாமவர் ஒளிவேந்தன்(4).

நித்திய புன்னகை அழகனான தமிழ்செல்வன் மறைந்தது புலிகளுக்கு ஒரு பெரும் இழப்பாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

-சாணக்கியன்