Saturday, May 29, 2010

ராஜபக்சே இயக்கத்தில் டூப்ளிகேட் புலி..! – தயாராகும் துரோகச் சினிமா..!













தமிழ் உணர்வாளர்களின் நெற்றியில் மிகப் பெரிய ராமநாமம் போட்டுப் பார்க்கிறது ஒரு கும்பல். “கிளம்பிட்டார்ல எங்க ஆளு” என்று ஒரு பிரிவும், “இதுக்குப் பின்னால பெரிய சதி இருக்குங்க” என்று இன்னொரு குழுவும் சொல்ல.. ஈழ விவகாரத்தில் இன்னொரு விவகாரமாகக் கிளம்பியிருக்கிறார் கேணல் ராம்.

“நான்காம் கட்ட ஈழப் போரில் எங்கள் படையணி ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தது. முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு போராட்டத்தின் தேவையை உணர்ந்த நாங்கள் சிதறிக் கிடந்த புலிகளை ஒன்றிணைக்கும் பொறுப்பை மேற்கொண்டோம். கடந்த ஓராண்டாக நாங்கள் ஓடிக் கொண்டிருக்கிறோம். என்னைக் குறி வைத்து 15 முறை சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தியது. நீண்ட போர்க்கள அனுபவத்தின் காரணமாகவே நான் தப்பித்து வருகிறேன்.

எங்கள் படையணியினரின் வீரமும், மன உறுதியும், தாய் நாட்டின் விடுதலை வேட்கையும்தான் எங்களை இயங்க வைக்கிறது. சிங்கள இராணுவத்துக்கு நாங்கள் சவாலாக இருந்து வருகிறோம்..” என்று தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புதிய தளபதியாகத் தன்னைத்தானே பிரகடனப்படுத்தி வரும் கேணல் ராம் என்பவர் அறிவித்திருக்கிறார்.

இவரைப் பார்த்து யாருமே அதிர்ச்சியடையவில்லை. ஆனால் இவருக்குப் பின்னால் யார் என்ற சந்தேகம் மட்டுமே மிச்சமாகியிருக்கிறது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

1 comment:

  1. நக்கீரனில் வரும்போதே தெரியவில்லையா இது டூப்பு என்று..!

    ReplyDelete