Friday, May 14, 2010

பார்வதி அம்மாவின் சிகிச்சையில் உள்ளூர் அரசியல் வேண்டாம் : சுப.வீரபாண்டியன்













தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மா அவர்களை, மருத்துவ உதவிக்காகச் சென்னைக்கு அழைத்துவர வேண்டும் என்ற கோரிக்கை மனுவுடன், திராவிடர் கழகத் தலைவர் அய்யா வீரமணி அவர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் ஆகிய நானும், 26.04.2010 இரவு 8 மணிக்குத் தமிழக முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

ஏறத்தாழ ஒரு மணி நேரம் அவரோடு கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற்றோம். அச்சந்திப்பின்போது துணை முதல்வர் அவர்களும், சட்டத்துறை அமைச்சர் துரை முருகன் அவர்களும் உடன் இருந்தனர். அச்சந்திப்பையும், அதன்பின் நடைபெற்ற செயல்பாடுகளையும் பதிவு செய்ய வேண்டியமை, காலத்தின் தேவையாக உள்ளது.

மனுவைப் படித்துப் பார்த்த முதல்வர் “இதுல எனக்கு என்ன இருக்கு? அவுங்களை நான் ஏன் தடுக்கப் போறேன்? நான்தான் சட்டமன்றத்திலேயே சொன்னேனே... அவுங்ககிட்ட இருந்து கடிதம் வந்தா, உடனே பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அனுப்பி, அவுங்களை வர வைக்கலாம்” என்றார். எங்கள் மூவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. வீரமணி அய்யா, கலைஞரின் அருகில் சென்று, “அப்ப கடிதம் வந்தா, உடனே டெல்லிக்கு அனுப்பிடலாம் இல்லையா?” என்று கேட்க, “அடுத்த நிமிடமே அனுப்பிடலாம்” என்று சொல்லி முதலமைச்சர் சிரித்தார்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment