Thursday, May 13, 2010
வல்வை வைத்தியசாலையில் பார்வதியம்மா அனுமதி; பின்னணியில் நடந்த சம்பவங்கள் என்ன?
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதியம்மா, இந்தியாவுக்குள் நுழைய அனுமதிப்பதற்காக இந்திய அரசு விதித்த நிபந்தனைகளை நிராகரித்துவிட்டு கொழும்பிலிருந்து ஏ9 வீதியூடாக நேற்று மாலை யாழ்ப்பாணம் வந்துசேர்ந்தார். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் துணையுடன் நேற்றுக் காலை கொழும்பிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு அம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்ட அவர் வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அரசின் கோரிக்கைகளை நிராகரித்தமை, கொழும்பிலிருந்து பார்வதியம்மா யாழ்ப்பாணம் அழைத்துவரப்பட் டமை என்பவை தொடர்பாக எம். கே.சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கும்போது:
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பக்கவாத நோயால் பார்வதியம்மா பரிதவித்து வருகிறார். எனினும், எவ்வித மனிதாபிமானமுமற்று இந்திய மத்திய அரசு அவர் சிகிச்சை பெறுவதற்குக் கடும் நிபந்தனைகளை விதித்தது.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
Labels:
அரசியல்,
அனுபவம்,
பார்வதி அம்மாள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment