Friday, May 14, 2010

பார்வதி அம்மாள் - சிறையா? சிகிச்சையா?













கடந்த காலங்களில் நாம் வாசித்தறிந்த வரலாற்றுக் கேவலங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, நாகரீகம், மாந்தநேயம் ஆகியவை கொல்லப்பட்டு இன்று அவை குற்றுயிராய் கிடக்கும் நிலை வளர்ந்து கொண்டிருக்கிறது. அரசியல் என்பது மக்களுக்கு பணியாற்ற கிடைத்த வாய்ப்பு என்ற அடிப்படை நிலைப்பாடு சிதைந்து, அழிக்கப்பட்டுவிட்டது.

மாறாக, அவை வெள்ளை உடையும், வெள்ளை பணமுமான சொர்க்கமாக இன்று உருமாறி நிற்கிறது. பதவி வெறி யார், என்ன நிலைக்குப் போனாலும் பரவாயில்லை, எம்மைவிட்டு நாம் எமது பதவியை விட்டொழிப்பதில்லை என்கின்ற ஒரு குறுகிய நிலைத்தன்மையை அடைந்திருக்கிறது.

ஒரு காலத்தில் மக்கள் பணி ஆற்றுவதற்காக அணி அணியாக பலர் அரசியல் களத்திற்கு வந்தார்கள். மாந்தகுல விடுதலை, மக்களின் எதிர்கால வாழ்வு, அவர்களின் மகிழ்ச்சிகான உத்திரவாதம், அவர்களின் உணவு, உறைவிடம், உடை போன்றவற்றிற்கான உரிமைகள் இவைகள் குறித்து தான் அரசியலின் பண்பு படரத் தொடங்கியது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment