Tuesday, May 11, 2010
தேர்தலில் இருந்து விலகியது நாடு கடந்த தமிழீழ அரசின் நன்மைக்கே : வைத்தியர் மூர்த்தி
நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலிலிருந்து விலகிக் கொண்டுள்ள போதிலும் அதன் செயற்பாட்டிற்கும் நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் இங்கிலாந்தில் போட்டியிட்டு பின் அதிலிருந்து விலகிக் கொண்டவரும் வெண்புறா அமைப்பின் தலைவருமான மருத்துவர் திரு. நமசிவாயம் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் தமிழ் ஸ்டார் வானொலிக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேட்டியின் விபரம் வருமாறு:
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் இருந்து நீங்கள் விலகிக் கொண்டதற்கான காரணங்களைக் கூறுவீர்களா?
மீண்டும் ஒரு முறை இந்தத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்படக் கூடிய பணச் செலவைக் கருத்தில் கொண்டும் இதன் காரணமாக மக்கள் மத்தியில் இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து எழக் கூடிய அவநம்பிக்கையைத் தவிர்ப்பதற்காகவும் இந்த மீள் தேர்தல் சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தக் கூடிய பாதகமான கண்ணோட்டத்தையும் தவிர்ப்பதற்காகவே இந்தத் தேர்தலிலிருந்து விலகிக் கொள்வதென நான் தீர்மானித்தேன்.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment