சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அவரை கவுரவப் படுத்த கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் சினிமாஸ் ரஜினி திரைத் திருவிழாவை நடத்துகிறது.
இது தொடர்பாக ஏஜிஎஸ் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பு:
ரஜினிகாந்த்-
அறிமுகம் தேவையில்லாத அதிசயப் பிறவி அவர்.
இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார், தனது ஸ்டைல் மற்றும் வித்தியாசமான நடிப்பால் நான்கு தசாப்தங்களாக இந்திய சினிமாவில் ஆட்சி செலுத்தும் பாக்ஸ் ஆபீஸ் ‘பாட்ஷா’ !
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்..
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts
Thursday, September 23, 2010
Wednesday, August 11, 2010
ஈழக்கேள்விக்கு விடை சொல்லும் பச்சை என்கிற காத்து திரைப்படம்

"தமிழு.." மற்றும் "வதை" ஆகிய குரும்படங்களால் பரவலான வரவேற்பை பெற்றவர் கீரா. பல சிறு கதைகளைப் படைத்தவர். இவர் தங்கர்பச்சானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ஈழத்தமிழர் அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டவர். பச்சை என்கிற காத்துப் அடத்தின் மூலம் இயக்குநர் ஆகியிருக்கும் அவரைச் சந்தித்தோம். உற்சாகத்துடன் பேசினார்.
குரும்படம்
"பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறேன். ஒரு பாலியல் தொழிலாளியின் நிஜ வாழ்க்கையை "தமிழு" என்ற குரும்படமாக்கினேன். அது போலவே ஈழத்தமிழ்பெண் ஒருத்தியின் கதையை "வதை" குரும்படமாக உருவாக்கினேன். இரண்டு குரும்படங்களும் எனக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. அதுதான் தற்போது நான் இயக்குனர் அவதாரம் எடுப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறது.
பச்சை என்கிற காத்து
திருச்சி அருகில் மணப்பாறையில் வாழ்ந்த ஒரு அரசியல் தொண்டனின் வாழ்க்கையில் ஒருநாளில் நடந்த நிகழ்வுகளைத்தான் திரைக்கதையாக்கி பச்சை என்கிற காத்து என்ற படமாக்கி இருக்கிறேன். போலித்தனமான அரசியலால் தனது வாழ்க்கையை அழித்துக்கொண்ட ஒரு சாதாரண தொண்டனின் கதையைத்தான் படமாகப் படைத்திருக்கிறேன்.
வாசகர்
எனது உதவி இயக்குநர் வாசகர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். புதிய இசையமைப்பாளர் இசையில் பல வித்தைகளைச் செய்து இருக்கிறார். எனது தயாரிப்பாளர் அசோக் தனது கருத்துக்களைத் திணிக்காமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார். இவரைப் போன்ற தயாரிப்பாளர்கள் நிறையப் பேர் வந்தால் தமிழில் நல்ல படங்கள் உருவாகும்.
பதில்
தமிழ் ஈழத்தின் தேசியத்தலைவர் பிரபாகரனின் இருப்பு பற்றிய கேள்விகளுக்கான பதில் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. " தீயே தீயே" மற்றும் "அண்ணன் வாரான்" ஆகிய இரு பாடல்களும் அக்கேள்விக்கு பதில் கூறுவதாக அமையும். ஈழத்தமிழ் பெண் ஒருவரையும் அறிமுகம் செய்துள்ளேன். இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்பட்ட அரசியலில் இருந்து வேறுபட்டதாக பச்சை என்கிற காத்து படம் இருக்கிறது.
பெண்
இந்தப்படத்தில் மட்டுமில்லாமல் எந்தப்படத்திலும் தமிழ்ப் பெண்கள்தான் நடிக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஆனால் பல முயற்சிகள் செய்தும் தமிழ்ப் பெண்கள் யாரும் நடிக்க முன் வராததால் சேர நிலத்துப் பெண்ணை நடிக்க வைத்துள்ளேன்.
கற்பு
தமிழ்ப்பெண்களிடம் சினிமாத்துறையைப் பற்றிய தவறான கருத்துக்கள் மிகுதியாக இருப்பதால்தான் நடிப்பதற்க்கு தயங்குகிறார்கள். உண்மையில் அவர்கள் நினைப்பதைப்போல் சினிமாத்துறையில் தவறாக எதுவும் கிடையாது. நடிப்பதும் அலுவலம் சென்று வருவது போல ஒரு வேலைதான். தமிழ்ப் பெண்களின் மனதில் கற்பு பற்றிய தவறான கருத்துக்கள் ஆழமாகப் பதிந்து இருப்பதும் ஒரு காரணம் அதனால்தான் தயங்குகிறார்கள்" என்றார் கீரா.
Thursday, August 5, 2010
மங்காத்தா : பூஜைப் படங்கள்

அசல் படத்தின் மாபெரும் வெற்றியைத்(?!!!) தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் 50-வது படத்திற்கு "மங்காத்தா" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழ்ப்படம், வாரணம்ஆயிரம், பையா ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து விரைவில் வெளிவர இருக்கும் நான் மகான் அல்ல படத்தை தொடர்ந்து கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கவிருக்கும் இந்தப் படத்தை சென்னை-600028, சரோஜா, கோவா ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கட்பிரபு இயக்குகிறார்.
அப்படத்தின் பூஜை போடப்பட்ட படங்களை இங்கே காண்க
உத்தமபுத்திரன் : புதிய படங்களின் தொகுப்பு

யாரடி நீ மோகினி, குட்டி படங்களை அடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கும் படம் உத்தமபுத்திரன். தெலுங்கு ரெடியின் ரீமேக்கான இந்தப் படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தனுஷ், ஜெனிலியா நடித்துள்ள இப்படத்தின் புகைப்படத்தொகுப்பை இங்கே காணவும்.
Wednesday, August 4, 2010
எந்திரன் : புத்தம் புதிய படங்கள்

சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யா ராய் அகீயோர் நடிப்பில் வெளிவரக் காத்திருக்கும் எந்திரன் திரைப்படத்தின் கண்கவர் வண்ணப்படங்களின் புகைப்படத்தொகுப்பு. மொத்தம் 20 படங்கள். எளிதில் காணக்கிடைக்காத புகைப்படங்கள் அவை. இங்கே அழுத்துவதன் மூலம் அவற்றை நீங்கள் காணலாம்
Tuesday, August 3, 2010
எந்திரன் நாயகி ஐஸ்வர்யா ராய் பச்சன் வால்பேப்பர்கள்
எந்திரன் படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜோடி கட்டும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் படங்கள் அழகான வால்பேப்பர்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் இங்கே காணலாம் மற்றும் தரவிறக்கம் செய்யலாம்.
இணையத்தள அறிமுகம் : நெடுந்தீவுவெப்
நெடுந்தீவு (Neduntheevu) இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று. ஒல்லாந்தர் இத்தீவை டெல்வ்ற் (Delft) என்று பெயரிட்டு அழைத்தார்கள். இன்றும் ஆங்கிலத்தில் இத்தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகின்றது.
இணையத்தளத்தைக் காண இங்கு அழுத்தவும்..
இணையத்தளத்தைக் காண இங்கு அழுத்தவும்..
தெலுங்குப் படத்தயாரிப்பாளர்களை அலர வைக்கும் எந்திரன்

மேலும் படிக்க...
Monday, August 2, 2010
ஆன்லைன் விற்பனையில் சாதனை படைக்கும் எந்திரன் பாடல்கள்

இந்திய சினிமா சரித்திரத்தில் காணாத அளவு, விற்பனையில் பெரும் சாதனை படைத்து வருகின்றன எந்திரன் இசைத்தட்டுகள்.
அதேபோல ஆன்லைன் ஸ்டோர்களில் உலக அளவில் அதிகம் வாங்கப்பட்ட இசை எந்திரன்தான். இதனை ஆப்பிள் நிறுவனத்தின் ஐடியூன்ஸ் வெளியிட்டுள்ளது. இதுவரை எந்த தமிழ்-இந்திய படத்துக்கும் கிடைத்திராத சிறப்பு இது.
விபரமாகப் பார்க்க இங்கே அழுத்தவும்...
எந்திரன் படத்தின் உத்தியோகபூர்வ டிரைலர்

எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழாவின் அசத்தல் படங்கள்

Saturday, July 31, 2010
எந்திரன் திரைப்படத்தின் அசத்தல் டிரைலர்கள்

எந்திரன் படம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த டிரைலரும் வந்ததில்லை. மலேசியாவில் நேற்று ஆடியோ வெளியிடப்பட்டபோது டிரைலர்களும் சேர்த்தே வெளியிடப்பட்டது. அவற்றை நீங்கள் கீழே காணலாம்.
எந்திரன் படத்தின் கண்கவர் வால்பேப்பர்கள்
எந்திரன் திரைப்படத்தின் எமக்குக் கிடைத்த அட்டகாச ஸ்டில்களை நாங்கள் வண்ணமிகு வால்பேப்பர்களாக மாற்றியுள்ளோம். அவற்றைக் காண இங்கே அழுத்தவும். நீங்கள் அவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மலேசியாவில் ரஜினி!

எந்திரன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு மலேசியா விமானநிலையத்தில் இறங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடன் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யாவும் வந்துள்ளனர்.
இயக்குநர் ஷங்கர் தனது குடும்பத்துடன் மலேசியா வந்துள்ளார்.
இந்திய திரை வரலாறு காணாத பிரமாண்ட முறையில் எந்திரன் இசை இன்று இரவு மலேசியாவில் வெளியாகிறது. இதில் பல இந்திய திரைப் பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.
ரஜினியின் வருகை மலேசிய தமிழ் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கெனவே இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் பெரும் விலைக்கு விற்றுத் தீர்ந்துள்ளன. மலேசியாவில் எந்திரன் ஆடியோ உரிமையை லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.
தமிழ் நாளிதழ்கள் இந்த நிகழ்வுக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்துள்ளன. மக்கள் ஓசை நாளிதழில் ரஜினியின் வருகைதான் முதல்பக்கச் செய்தி.
மேலும் சினிமா செய்திகளுக்கு..
விறு விறு விற்பனையில் எந்திரன் பாடல்கள்…

சொன்னது போலவே சனிக்கிழமை காலையே விற்பனைக்கு வந்துவிட்டது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் இசைத் தட்டுகள். இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் கடைகளில் கிடைத்தது எந்திரன் ஆடியோ சிடிக்கள்.
சர்வதேச அளவில் சனிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு பாடல் சிடிக்கள் விற்பனைக்கு கிடைக்கும் என திங்க் மியூசிக் அறிவித்துள்ளது.
சென்னையில் ரேடியோ மார்க்கெட் எனப்படும் ரிச்சி தெரு, பர்மா பஜார், தி நகர் மற்றும் வட பழனி பகுதிகளில் பெரும் வரவேற்புக்கிடையே எந்திரன் ஆடியோ சிடி விற்பனை துவங்கியது.
புற நகர் பகுதிகளில் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எந்திரன் ஆடியோ சிடிக்களை வாங்கிச் சென்றனர்.
திங்க் மியூசிக் வெளியிட்டு இந்த சிடியின் விலை ரூ. 125. மொத்தம் 7 பாடல்கள்.
பாடல்கல் அனைத்துமே கேட்ட மாத்திரத்தில் ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொள்ளும் ரகமாக அமைந்துள்ளன. குறிப்பாக ‘கிளிமாஞ்சாரோ…’ பாட்டு பட்டையைக் கிளப்ப ஆரம்பித்துள்ளது.
எந்திரன் பாடல் சிடியுடன், பாடல் வரிகள் அடங்கிய ஒரு அட்டகாச புக்லெட்டும் வெளியிடப்பட்டுள்ளது. பாடல் விமர்சனம் விரைவில்…
மேலும் சினிமா செய்திகளுக்கு..
Friday, July 30, 2010
எந்திரன்… புத்தம் புதிய அட்டகாச ஸ்டில்கள்!

பொழுதுபோக்கு சினிமாவின் உச்சம் என்று அனைவராலும் குறிப்பிடப்படும் எந்திரன் திரைப்படத்தின் அதிரடி ஸ்டில்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஸ்டில்லும் ரசிகர்களைப் புதிய பரவசத்துக்கு உள்ளாக்கும் வண்ணம் உள்ளன. எதிர்ப்ப்பார்ப்பு என்ற சொல்லின் உச்சத்தைத் தாண்டிய நிலையில் ரசிகர்கள் படத்துக்காக ஏங்கத் துவங்கியுள்ளனர்.
இன்று வெளியாகியுள்ள புகைப்படங்களில் ரோபோ சிங்கக் குட்டிகளைப் பிடித்துக் கொண்டு எந்திரன் ரஜினி கம்பீர நடைபோட்டு வரும் ஸ்டில் ஒன்று போதும்… ரசிகனின் நாடி நரம்புகளை முறுக்கேற்ற!
ரஜினிக்கு ஜோடியாக எப்பேர்ப்பட்ட உலக அழகி நடித்தாலும், ரசிகர்களுக்கு அது இரண்டாம்பட்சம்தான். ரஜினியின் தோற்றம், அவரது ஸ்டைல்தான் முக்கியம். எம்ஜிஆருக்குப் பிறகு, திரையில் ஒரு ஆணின் அழகு, கம்பீரம் பற்றி ஆண் ரசிகர்களே அதிசயத்துப் பேசுவது ரஜினி விஷயத்தில்தான்!
இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஐஸ்வர்யா ராய் தனது அழகிய தோற்றத்தில் ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக அசத்தியிருந்தாலும், வசீகரன் – எந்திரனின் கம்பீரம்தான் கண்களை நிறைக்கிறது!
புகைப்படங்களைக் காண இங்கே அழுத்தவும்...
கவுண்டமணி - 25
நகைச்சுவையின் தன்னிகரில்லா கலைஞரான கவுண்டமணி பற்றி விகடன் வெளியிட்டுள்ள சில சுவாரஸ்யமான குறிப்புகள்:
கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ்
சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே…
* ‘சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்!
* கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். ‘பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்!
* பாரதிராஜாதான் ‘கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். ‘16 வயதினிலே’தான் அறிமுகப் படம்!
* அம்மாவை ‘ஆத்தா’ என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!
* கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது ‘மிஸ்டர் பெல்’ என்று. கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்துத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!
* மிகப் பிரபலமான கவுண்டமணி – செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!
* இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.
* கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு. எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட ‘சரி’ என்பார். ‘இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!’ என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்-கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!
* உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு. ‘பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா’ என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!
* திருப்பதி ஏழுமலையான்தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டர்!
* சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!
* கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!
* புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி!
* ஓஷோவின் புத்தகங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து, நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசும் செய்வார்!
* கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!
* கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. ‘என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!’ என்பார்.
* ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!
* ஷூட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்!
* கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். ‘நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது… ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்’ என்பார்!
* எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது!
* டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார். ‘மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்திரிப்பது ஏமாற்றுவேலை’ என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!
* கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘நடிகன்’. ‘அட… என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு’ என சுய எள்ளலும் செய்துகொள்வார்!
* ‘மறக்க வேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை’ என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!
* சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருத்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!
* ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!
-நன்றி: விகடன்
மேலும் செய்திகளுக்கு....

எந்திரன் படத்தின் கதை?

எந்திரன் படத்தின் கதை அரசல் புரசலாக வெளியாகியுள்ளது. நமக்கு கிடைத்த தகவல்களின்படி விஞ்ஞானியான கலாநிதி ரஜினி தன்னைப் போலவே உருவ ஒற்றுமை உள்ள ஒரு இயந்திர மனிதனை(ரோபோவை) உருவாக்குகிறார். அந்த இயந்திர மனிதன் கொஞ்ச நாட்களில் சாதாரண மனிதனைப் போன்று பழக ஆரம்பித்து ஐஸ்வர்யாவைக் காதலிக்கிறது....
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்..
Thursday, July 29, 2010
எந்திரன்… முதல் அதிகாரப்பூர்வ விளம்பரம்!

எந்திரன் படம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளம்பரமும் வந்ததில்லை. இப்போதுதான் ஆடியோ வெளியீடு தொடர்பாக அனைத்து தமிழ், ஆங்கில நாளிதழ்களிலும் அசத்தலான, மிரட்டலான முதல் விளம்பரம் வந்துள்ளது.
ரஜினியின் ஸ்டில்லைப் போட்டு, படத்தின் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் இல்லாமல் வெறுமனே ‘இசை வெளியீடு 31.07.2010′ என்ற சின்ன அறிவிப்புடன் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. தலைவர் முகத்தைக் காட்டினாலே போதும்… அது என்ன படம், என்ன விவரம் என்று ரசிகர்களுக்குத் தெரிந்துவிடும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்!
நாளையும் நாளை மறுநாளும் இன்னும் விதவிதமான விளம்பரங்கள் வெளியாகக் கூடும்.
ரோபோ ரஜினி இடம்பெற்றுள்ள இந்த ஸ்டில்லைப் பார்க்கும்போதே இதன் சர்வதேசத் தரம் மற்றும் அசத்தல் உருவாக்கம் கண்முன் விரிகிறது.
அடுத்து நாளை எந்திரன் ஸ்பெஷல் ஸ்டில்கள் வெளியாகவிருக்கின்றன, தினகரனில். பிரிண்ட் ஆர்டர் இப்போதே எகிறிவிட்டதாம்!
இசைதான் என் சுவாசம்..!

தமிழ்த் திரையுலகில் `தா` என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஸ்ரீவிஜய். இவர் இலங்கைத் தமிழர். பூர்வீகம் யாழ்ப்பாணம். வசித்தது கொழும்புவில். தற்போது சென்னையில் குடும்பத்துடன் இருக்கிறார். அவரைச் சந்தித்தோம்.
“எனது தந்தை கர்நாடக சங்கீதக் கலைஞர். இதனால் சிறு வயதில் இருந்தே குடும்பத்தில் பலருக்கும் பாடும் திறமை உண்டு. சிறு பிராயத்தில் இருந்தே ரத்தத்தில் பாட்டு கலந்து விட்டது. எனது சகோதரர்களும், தங்கையும் இசையில் ஆர்வம் உடையவர்கள்தான். இலங்கையில் கொழும்புவில் இருந்தபோது சென்னை டூ கொழும்பு இசை ஆல்பத்தை வெளியிட்டேன். அதற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த ஆல்பத்தில் பாடல்கள் எழுதி நானே இசையமைத்தேன். இலங்கையைப் பொறுத்தவரையில் இசை என்றால் தமிழ் இசை ஆல்பங்கள்தான்.
அப்போதுதான் ஒரு நண்பர் மூலமாக `தா` படத்தின் இயக்குநர் அறிமுகம் கிடைத்தது. எனது இசை ஆல்பத்தை கேட்டதும், அந்த இடத்திலேயே, `எனது படத்தில் நீங்கள்தான் இசை அமைக்கிறீர்கள்` என்று கூறினார். என் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற வேண்டும் என்பதற்காகவும் உழைத்தேன். படத்தில் பாடல்களும், இசையும் சிறப்பாக வந்திருக்கின்றன. பாடல்கள் தமிழ் ரசிகர்களிடம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
இந்தப் படத்தில் 11 புதிய பாடகர்களை அறிமுகம் செய்துள்ளோம். பல புதிய குரல்கள் தேவைப்பட்டதால் இந்தப் படத்தில் 11 புதிய பாடகர்களை அறிமுகம் செய்துள்ளோம். நானும், எனது தங்கையும், சகோதரரும் பாடியிருக்கிறோம். படத்தின் பாடல்களை இயக்குநர் எழுதியிருக்கிறார். பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. நல்ல இசையை ரசிகர்களுக்குத் தொடர்ந்து தர வேண்டும் என்றே விரும்புகிறேன். இசையைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது. இசைதான் எனக்கு வாழ்க்கை.
தமிழ்த் திரையுலகம் ஈழத் தமிழர்களை புறக்கணிக்கிறது என்பது சரியானதல்ல. திறமையும், உரிய உழைப்பையும் கொடுத்தால் இங்கு ஜெயிக்கலாம். கோலிவுட்டில் வாய்ப்பு தேடுகின்றவர்கள் இங்கு வந்து முயற்சி செய்ய வேண்டும். பிற நாடுகளில் இருந்து கொண்டு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று கூறுவது தவறு. நான் தமிழன் என்றாலும், வேறு நாட்டைச் சேர்ந்தவர். அப்படியிருந்தாலும் எந்தவொரு பேதமும் இல்லாமல் என்னிடம் பழகுகிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள். மேலும் ஒரு படத்தில் இசை அமைக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ்த் திரையுலகில் உள்ள எல்லா இசைக் கலைஞர்களும் ஒவ்வொரு வகையில் ரசிக்க வைக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்" என்கிறார் ஸ்ரீவிஜய்.
Subscribe to:
Posts (Atom)