Showing posts with label பிரபாகரன். Show all posts
Showing posts with label பிரபாகரன். Show all posts

Wednesday, July 14, 2010

அடேல் பாலசிங்கம் பார்வையில் திரு.பிரபாகரன்















எமது வீட்டிற்கு திரு.பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வார். உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரது விஜயம் அமையும். அவர் தனியே தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் வருவார். மற்றும் சமயங்களில், தனது குடும்பத்தினருடன் வருவார்.

அப்பொழுது 1998ம் ஆண்டின் மத்திய காலம்,

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நாயகனான திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனை அறிந்து பழகி, சேர்ந்து வாழ்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த நீண்ட காலகட்டத்தில், தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் கொண்டிருந்த உறவும், அதனால் அவருடன் சேர்ந்து பகிர்ந்த ஆழமான அனுபவங்களும் அவரைப் புரிந்து கொள்ள ஏதுவாக அமைந்தன. அதாவது, இலங்கைத் தீவின் அரசியற் தலைவிதியை நிர்ணயிக்கும் வல்லாற்றலுடைய ஒரு மாமனிதனின் மிகவும் சிக்கலான ஆளுமையை புரியக் கூடியதாக இருந்தது. இந்த இருபது ஆண்டுகால உறவு, தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு சகாப்தம் எனச் சொல்லலாம்.

இந்த சகாப்தத்தில், அவரது அரசியல் வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் ஏற்பட்ட இன்ப துன்பங்களிலும், சரிவு நிமிர்வுகளிலும், இடர்களை மீண்ட வெற்றிகளிலும் நாம் ஒன்றாகவே பயணித்தோம். இந்த நீண்ட பயணத்தின்போது, ஒரு இளம் தீவிரவாதியின் விடுதலை இலட்சியங்கள், முன்னேற்றப் பாதையில் படிப்படியாக மெய்வடிவம் பெற்றுவந்துள்ளதை நாம் காணக்கூடியதாக இருந்தது. தனது மக்களின் விடுதலைப்பாதையில் வெற்றிநடை போட்டுச் செல்லும் அதேவேளை, தேசிய சுதந்திரத்தின் உயிர்ச் சின்னமாகவும் திரு. பிரபாகரன் உருவகம் பெற்றார். அத்தோடு, ஒடுக்கப்படும் அவரது மக்கள் மத்தியில் போற்றிப் பூசிக்கப்படும் புனிதராகவும் அவர் வளர்ச்சி பெற்றார். தனது சொந்த பாதுகாப்பு காரணத்திற்காக திரு.பிரபாகரன் ஒதுங்கி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இதனைச் சிலர் தப்பாகக் கருதி அவரைத் தனித்து வாழும் துறவியாக சித்தரிக்க முயன்றனர். தொடரும் போர்ச்சூழல் புறநிலையால் ஒதுங்கி வாழ நேர்ந்ததாலும் ஊடகவியலாளர்களை தவிர்த்து வந்ததாலும் அவரை உலகம் புரிந்து கொள்ளவில்லை. அதனால் இன்றைய நவின யுகத்தில் அவர் மிகவும் புரியப்படாத மனிதராக, அச்சத்திற்குரிய கெரில்லாத் தலைவராகவும் கருதப்பட்டு வருகின்றார். ஆயினும் அவரது அலாதியான இராணுவ வெற்றிகள் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தன. போர்க் கலையில் பிரபாகரன் காட்டிவரும் திறனாற்றல் உலக இராணுவ நிபுணர்களையே திகைப்பூட்டி வருகிறது.

ஒருபுறம் தனது மக்களின் ஆழமான அன்பையும், மறுபுறம் உலகத்தாரின் வசைப் பெயரையும் பெற்றுள்ள இந்த உயரம் குறைந்த, கட்டமைப்பான, தூய்மையான மனிதனுக்கு இவற்றைத் தேடிக் கொடுத்தது என்ன? சொந்த மக்கள் மத்தியில் ஒரு பார்வையும், உலகத்தார் மத்தியில் இன்னொரு பார்வையுமாக இரு முரண்பட்ட கண்ணோட்டங்கள் ஏற்பட்டதன் காரணம் என்ன? 1954ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி, யாழ் குடாநாட்டின் கரையோரக் கிராமமாகிய வல்வெட்டித்துறையில் பிறந்த திரு பிரபாகரன் தனது 16 வயதுப் பிராயத்தில் ஆயுதம் ஏந்தி, அரசியற் போராட்டத்தில் குதித்தார். இன்றைய மொழியில் சொல்லப்போனால் அவர் ஒரு ‘குழந்தைப்` போர்வீரனாகவே களத்தில் இறங்கினார்.

சிறுபிராயத்திலிருந்தே அவர் சாதாரண வாழ்க்கையை வாழவில்லை.

அவரது இலட்சியப்பற்று தீவிரமாகியதை அடுத்து, தம்மோடு ஒத்த கருத்துள்ள தீவிரவாத இளைஞர்களை அணிதிரட்டி ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்கினார். இது ஒர் தலைமறைவு - கெரில்லா இயக்கமாக உருவகம் பெற்று ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. பிரபாகரனது துணிச்சலான ஆயுதப் போராட்ட நடவடிக்கைகள் அரச அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தன. இதன் விளைவாக அவர் ஒரு ‘தேடப்படும் நபராக` மாற்றப்பட்டு யாழ்ப்பாணத்தில் தலைமறைவு வாழ்க்கையைத் தழுவவேண்டி நேர்ந்தது. பலம்மிக்க சிங்கள அரசுக்கு பிரபாகரன் விடுத்த துணிகரமான சவால் அவரைத் தமிழ் மக்கள் மத்தியில் மரியாதைக்கு உரியவராகப் பிரபல்யப்படுத்தியது.

காலப் போக்கில், மக்களிடையே ஒரு மாவீரனாக, சரித்திர நாயகனாக அவர் போற்றப்பட்டார். மிகவும் நுட்பமாக, புத்திகூர்மையுடன் அரசுக்கு சவால் விடுத்து அவர் ஈட்டிய சாதனைகளை தமது வெற்றிகளாகவே கருதி தமிழ் மக்கள் பெருமைகொண்டனர். தமது அடையாளத்தையும், தேசிய கௌரவத்தையும் மேம்பாடு செய்யும் சாதனைகளாகவும் இதனை மக்கள் கருதினர். அரச அடக்குமுறை அதிகரித்துச் சென்றபோது பிரபாகரனின் ஆயுதப் போராட்டமும் தொடர்ச்சியான வெற்றிகளையீட்டி முன்னேறியது. இந்த வெற்றிகரமான விடுதலைப் போரின் விளைவாக திரு. பிரபாகரன் தமிழீழ மக்களின் தேசியத் தலைவன் என்ற உன்னத இடத்தை தனதாக்கிக்கொண்டார்.

தமிழீழ மக்களின் தேசிய சுதந்திரம் அவரது இலட்சிய வேட்கையாக, தணியாத ஆன்மீக தாகமாக உருப்பெற்றது. விடுதலைப் போராட்டமே அவரது வாழ்க்கையாகவும், அவரது வாழ்க்கையே விடுதலைப் போராட்டமாகவும் மாறியது. ஒரு தத்துவ ஆசிரியராகவோ, அல்லது சித்தாந்தவாதியாகவோ திரு. பிரபாகரன் என்றுமே பாசாங்கு செய்ததில்லை. அவரது அரசியல் இலட்சியத்தினை ஆழமாகப் பார்த்தால் அவரை ஒரு நாட்டுப் பற்றுடைய தேசியவாதியாகவே கருதமுடியும். சில சிங்கள அரசியல் விமர்சகர்கள் வாதிடுவதுபோல பிரபாகரனின் தேசியவாதம் தமிழ் இனவெறியைப் பிரதிபலிக்கவில்லை. தமிழ் மக்களை இனரீதியாக அழித்தொழிக்க வேண்டுமென்ற சிங்கள இனவாத ஒடுக்குமுறையை முறியடிக்க வேண்டுமென்பதில் திரு.பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டு நிற்கின்றார்.

இந்த திடசங்கற்பத்திலிருந்து பிறந்ததுதான் பிரபாகரனின் தமிழ்த் தேசியப் பற்று. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் சிங்கள அரசின் இனவெறிக் கொள்கைதான் பிரபாகரனை ஒரு தீவிர நாட்டுப்பற்றாளனாக மாற்றியது எனலாம். தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள ஆழமான பாசமும், அவர்களது பண்பாடு மீதும், குறிப்பாக தமிழ்மொழி மீது கொண்டுள்ள தீராத காதலும் பிரபாகரனின் விடுதலை வேட்கைக்கு ஆதாரமாக அமைகின்றன. அரசியற் சித்தாந்தங்கள், கோட்பாடுகள் பற்றி பிரபாகரன் பெரிதும் அலட்டிக் கொள்வதில்லை. அவரைப் பொறுத்தவரை தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை, சிக்கல்கள் நிறைந்த பூடகமான விடயம் அல்ல. தமிழரின் பிரச்சினையை அவர் மிகவும் தெளிவானதாகவே நோக்குகின்றார். அத்துடன் தமிழரின் போராட்டத்தையும் நியாயமானதாகவே அவர் கருதுகிறார்.

தமிழீழம் என்கிற தாயக மண்ணில்தான் பிரபாகரனின் ஆழ்மனம் ஆழவேரோடி நிற்கிறது. தமிழ் மக்கள் தமது வரலாற்று ரீதியிலான தாயக மண்ணில் சமாதானமாக, கௌரவமாக, ஒத்திசைவாக வாழ்வதற்கு உரித்தானவர்கள் என்பதில் பிரபாகரனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. பிரபாகரனின் தமிழீழக் கொள்கையில் பிரிவினைவாதமோ விரிவாக்க நோக்கமோ இருக்கவில்லை. தமிழீழம் தமிழீழ மக்களுக்கே சொந்தமானது, தமிழீழ சொந்த மாநிலம் மீது தமிழீழ மக்களுக்கே இறையாட்சி உரிமையுண்டு என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு. சிங்கள மக்களது பாரம்பரியப் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதோ, அபகரிப்பதோ பிரபாகரனின் நோக்கமல்ல. அவரது சிந்தனையிலும் செயற்பாட்டிலும் இத்தகைய நோக்கத்தைக் காணமுடியாது.

சில இந்திய அரசியல் விமர்சகர்கள் சொல்வதுபோன்று தமிழீழத்தை அகன்ற ஈழமாக விரிவாக்கம் செய்யும் கனவு கூட அவர் கண்டதில்லை. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை நெறிப்படுத்துவதில் பிரபாகரன் எப்பொழுதுமே தனித்துவத்தையும், தனிவழியையும் கடைப்பிடித்து வந்திருக்கிறார். உலக விடுதலைப் போராட்டங்களின் வரலாறு பற்றியும், மற்றைய நாடுகளின் சுதந்திர இயக்கங்கள் பற்றியும் நன்கு அறிந்தபோதும் அந்நிய போராட்ட வடிவங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்ற பிரபாகரன் விரும்பியதில்லை. எந்த விடுதலைப் போராட்டமும் அந்தந்த வரலாற்றுச் சூழலுக்கும், யதார்த்த புறநிலைகளுக்கும் ஏதுவானதாக வளர்ச்சிநிலை காணவேண்டும் என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு. தனது மக்களின் போராட்ட புறநிலைகளுக்கும் தேவைகளுக்கும் இசைவாகவே அவர் தனது போர் முறைகளை நெறிப்படுத்தினார்.

அவரது சில போர்த் தந்திரோபாயங்களும் உத்திகளும் பலத்த கண்டனங்களுக்கு, குறிப்பாக சிங்கள அரசியல் இராணுவ ஆய்வாளர்களின் கண்டனங்களுக்கு ஆளாவதுண்டு. மிகவும் பலம்வாய்ந்த, சக்திமிக்க, ஈவிரக்கமற்ற எதிரியிடமிருந்து மிகவும் பலவீனமான, சிறிய தேசிய இன மக்களைப் பாதுகாப்பதற்கு ஈவிரக்கமற்ற உத்திகளை கையாள வேண்டியது அவசியம் என தனது போர் நடவடிக்கைகளுக்கு நியாயம் கூறுவார் பிரபாகரன்.பிரபாகரன் ஒரு கரும வீரர். செயலில் நம்பிக்கை உடையவர். மனித செயற்பாடுதான் வரலாற்றை இயக்கும் உந்து சக்தி என்பதில் அவருக்கு அசையாத நம்பிக்கை உண்டு. பூடகமான தத்துவார்த்த கோட்பாடுகள் மூலம் பிரச்சினைகளை அலசிப் பார்க்காமல், ஆக்கமான செயற்பாட்டில் நம்பிக்கை கொண்டிருப்பது காரணமாகவே அவர் தனது விடுதலை இயக்கத்தை முன்னேற்றப் பாதையில் முன் நடத்திச் சென்றார்.

தமிழ் அரசியல்வாதிகளின் வார்த்தை ஜாலங்களில் ஏமாந்து விரக்தியடைந்த புரட்சிகர இளைஞர் சமுதாயத்தை பிரபாகரனின் செயற்திறன்மிக்க போராட்டப் பாதை வெகுவாகக் கவர்ந்து இழுத்தது. இதன் காரணமாக, எத்தனையோ இடர்களுக்கும் மத்தியில், இளம் சமூகத்தை அணிதிரட்டி, சிங்கள அரச இயந்திரத்தை எதிர்த்துப் போராடும் வலுவுடைய ஒரு தேசிய விடுதலை இராணுவத்தை அவரால் கட்டியெழுப்ப முடிந்தது. தனது போராட்ட இலட்சியத்தை பிரபாகரன் இன்னும் அடையவில்லை என்பது உண்மைதான். ஆயினும், பிரபாகரனது மதிநுட்பமான போர் திட்டங்களும், அவற்றைத் திறம்பட நிறைவு செய்யும் அபாரமான ஆற்றலும் காரணமாகவே, இருபத்தைந்து ஆண்டு காலத்திற்கு மேலாக அவர் கட்டிவளர்த்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது.

தமிழீழ மக்களும் ஒரு தேசிய இனக் கட்டமைப்போடு நிலைத்து நிற்கின்றனர். பிரபாகரன் இல்லாது போனால் விடுதலைப் புலிகள் அமைப்பும், தமிழ்த் தேசிய இனமும் பல வருடங்களுக்கு முன்னரே அழிக்கப்பட்டிருக்கும். புலிகளுடனான எனது வாழ்பனுபவத்திலிருந்தே நான் இதைக் கூறுகின்றேன். தமிழ் மக்களும் நிச்சயமாக இக் கருத்தையே கொண்டுள்ளனர். தமிழீழ மக்களின் அரசியல் இலட்சியங்களை அடைவதற்கு ஆயுதப் போராட்டத்தின் தேவையையும் அவசியத்தையும் முதன்மைப்படுத்தி திரு பிரபாகரன் செயற்பட்டபோது, அந்த ஆயுதப் போராட்டத்தின் அரசியற் பரிமாணத்தை மேலோங்கச் செய்வதற்காக பாலா உழைத்தார்.

ஒரு முகச் சிந்தனையுடைய இவ்விரு தனிப்பட்ட மனிதர்களது உறவு மிகவும் அபூர்வமானது. வரலாற்று இயக்கத்தின் ஒரு முக்கிய கால கட்டத்தில், வெவ்வேறு ஆளுமையுடைய இரு மனிதர்கள் ஒன்றாக இணைந்து முக்கிய பங்குகளை வகித்துச் செயற்படும் அபூர்வமான உறவுகளில் இதுவும் ஒன்று. திரு பிரபாகரனதும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினதும் ஆலோசகராகவும் தத்துவாசிரியராகவும் செயற்படுவதே தனது பங்கு என பாலா எப்பொழுதுமே கருதிக்கொள்வார். பாலாவுக்கு அதிகார அபிலாசைகள் எதுவும் கிடையாது. எழுதுவது, கற்பிப்பது, ஆலோசனை வழங்குவது போன்றவற்றுடன் தனது பங்களிப்பை அவர் வரையறுத்துக் கொள்வார். அத்தோடு உறுதி தளராத இலட்சியப் பற்றுள்ளவர். இவை காரணமாகவே திரு பிரபாகரனின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக அவரால் பணிபுரிய முடிந்தது.

உண்மை பேசும் நேர்மையான பண்பு பாலாவிடம் உண்டு. இப் பண்பியல்பு காரணமாகவே திரு. பிரபாகரன் பாலாவிடம் அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறார். விடுதலைப் போராட்டத்தினதும் திரு. பிரபாகரனதும் நலனைக் கருத்திற்கொண்டு, எப்பொழுதுமே எவ்விடயத்திலும் சரியான, உண்மை வழுவாத ஆலோசனை வழங்கவேண்டும் என்பதே பாலாவின் குறிக்கோள். தமது ஆலோசனைகளை பிரபாகரன் ஏற்றுக்கொள்வாரா அல்லது தாம் மனம் திறந்து நேர்மையுடன் கூறுவது அவருக்கு வெறுப்பூட்டுமோ என்பது பற்றியெல்லாம் பாலா கவலைப்படுவதில்லை. திரு பிரபாகரனின் ஆலோசகர் என்ற ரீதியில், எவ்வளவு கசப்பாக இருந்தபோதும் உண்மையை எடுத்துச் சொல்வதுதான் தனது கடமையென பாலா என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார்.

திரு. பிரபாகரனின் தனிமனித இயல்புகளைப் பார்க்கும்போது தான் அவரை ஆழமாக புரிந்து கொள்ள முடியும். வெளியுலகம் அவரை சித்தரிப்பதுபோல் அல்லாமல், அவர் ஒரு அன்புள்ளம் படைத்த மனிதர். மற்றவர்களுடன் எளிதில் பழகுவார். கூடிப் பழகி, உரையாடி மகிழ்கின்ற இயல்பு அவரது தனித்துவப் பண்பு. அவர் பல்வேறு விவகாரங்களில் ஆர்வமும் அக்கறையும் உள்ளவர். சில விடயங்களில் தீவிரமான நிலைப்பாடும் உடையவர். ஒரு சில விடயங்களில் எனக்கு அவருடன் கருத்து வேறுபாடு உண்டு. விஞ்ஞான அறிவியற் துறையில் அவருக்கு அலாதியான ஆர்வமுண்டு. விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் அடிக்கடி போராளிகளை ஊக்குவிப்பதுண்டு. தமிழ்க் கலாச்சாரத்திலும் அவருக்கு ஆழமான பற்றுண்டு.

போராட்ட வாழ்வு கலாச்சார வடிவங்களில் வெளிப்பாடு காணவேண்டும் என விரும்பும் அவர், இயக்கத்திலும் சமூக மட்டத்திலும் அதனை வலியுறுத்துவார். இராணுவ பயிற்சி முகாம்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு முக்கிய இடம் கொடுப்பார். இந் நிகழ்வுகளில் போராளிகள் நேரடியாகப் பங்களிக்க வேண்டும் என்பது அவரது அவா. விடுதலை விழுமியம் சார்ந்த கலை, இலக்கியப் படைப்புகள் தமிழீழத்தில் வளர்ச்சிகாண வேண்டும் என்பதில் ஆர்வம் உடையவர். இத்தகைய படைப்பு ஆக்கங்களை அவர் ஊக்குவித்தும் வருகிறார். சுவையான உணவு வகைகளை உண்பதிலும் அவற்றைத் தயாரிப்பதிலும் அவருக்கு ஒரு தனி விருப்பு. இதனால் அவர் விசேடமான சுவைத்திறனை வளர்த்துக்கொண்டார். சுவைத்து உண்பது வாழ்க்கையின் அடிப்படை இன்பங்களில் ஒன்று என்பதும், சமைப்பது ஒரு கலை என்பதும் அவரது கருத்து.

ஒருசில மரக்கறி வகைகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட எனது சுவையின்பத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் அவரது இருப்பிடத்திற்கு எம்மை விருந்திற்காக அழைக்கும் பொழுதெல்லாம் மிகவும் சுவையான மரக்கறி உணவுவகைகளை எனக்கென்று விசேடமாக ஏற்பாடு செய்வார். அவரது இருப்பிடத்திலிருந்து அடிக்கடி பாலாவுக்கு சுவையான உணவு வகைகள் தயாரித்து அனுப்பி வைப்பார். அப்பொழுது எனக்கும் மரக்கறி உணவு வரும். இப்படியான அவரது கவனிப்பால் எனது சமையல் சுமை குறைவதுண்டு. போர்க்கலையில் திரு பிரபாகரன் அபாரமான ஆற்றல் படைத்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆயுதப் போராட்ட வாழ்வில் அவரை ஆழமாக ஈர்ப்பது வெறும் ஆயுதங்களோ, சீருடைகளோ, இராணுவத் தொழில் நுட்பங்களோ அல்ல. சீரான வாழ்க்கையை நெறிப்படுத்தும் சில போர்ப் பண்புகளை அவர் பெரிதும் மதிக்கிறார் என்பதே எனது கருத்து.

அவரது சமூக தத்துவார்த்தப் பார்வையிலும், இந்தப் பண்புகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இந்தப் போர்ப் பண்புகளில் முக்கியமானது ஒழுக்கம். திரு. பிரபாகரனது பார்வையில், வாழ்க்கை நெறிக்கு மையமான கோட்பாடு ஒழுக்கம்தான். ஒழுக்கம், கட்டுப்பாடு போன்ற பண்புதான் அவரது தனிப்பட்ட வாழ்விலும், சமூகப் பார்வையிலும், இராணுவ - அரசியல் ரீதியான அவரது தலைமைத்துவத்திலும் மேலாண்மை செலுத்தி நிற்கின்றது. தனது சொந்த வாழ்க்கையின் சகல பரிமாணங்களிலும் பிரபாகரன் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்தவராக வாழ்ந்து வருகிறார். அவரது போராட்ட வாழ்வின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை அவர் மீது ஒழுங்கீனம் பற்றியோ ஏதாவது அவதூறு பற்றியோ சிறிய சிலு சிலுப்புக்கூட ஏற்பட்டது கிடையாது. பிரபாகரன் ஒருபொழுதும் புகைத்தது கிடையாது.

மதுபானம் அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட ஒருவரைப் பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அவர் பாலாவாக மட்டுமே இருப்பார். பாலாவின் வயதும் அவர் மீது வைத்துள்ள தனிப்பட்ட மரியாதையுமே இதற்கு காரணமாகும். எமது வீட்டுக்கு வரும் பொழுதெல்லாம் உடல்நலத்தைக் கெடுக்கும் இந்தத் துர்ப்பழக்கத்தை பிரபாகரன் கேலியும் கிண்டலும் செய்வார். பாலாவிடமிருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. இதனால் பிரபாகரன் முன்னிலையில் சிகரெட் பிடிப்பதை பாலாவும் நிறுத்திக்கொண்டார். மனிதர்களிடம் வீரத்தையும் துணிவையும் போற்றுதற்குரிய பண்பாக பிரபாகரன் மதித்தார்.

தனது போராளிகளிடம் மட்டுமன்றி, பொதுமக்களிடமிருந்தும் வீர உணர்வு வெளிப்பாடுகண்டால் அதனை அவர் போற்றிக் கௌரவிப்பார். வீரம் என்பது அவரது ஆளுமையில் ஆழப் பதிந்திருக்கும் ஒரு பண்பு. போராட்ட வாழ்வில் எந்தப் பெரிய சக்தியாக இருந்தாலும், எதைக் கண்டும் அஞ்சாத, கலங்காத குணாம்சம் பிரபாகரனிடம் ஊறிப்போயிருக்கிறது. எந்த ஒரு விடயத்திலும், எந்தவொரு இலட்சியத்திலும் மனதை ஆழமாகப் பதிய வைத்து, அக்கறையுடன் செயற்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதில் பிரபாகரனிடம் அசைக்கமுடியாத உறுதி இருக்கிறது.

துணிந்தவனுக்கு வெற்றி நிச்சயம் என்பது பிரபாகரன் அடிக்கடி கூறும் தாரக மந்திரம்.‘நீங்கள் பிரபாகரனிடம் கண்டுவியந்த குணாம்சங்களில் முக்கியமானது எது` என்று நான் பாலாவிடம் கேட்டேன்.

‘இன்னல்களும் இடர்களும் எழுந்த நெருக்கடியான காலகட்டங்களில் தளராத தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவதுதான் பிரபாகரனின் ஆளுமையில் நான் கண்டு வியந்த அபூர்வமான குணாம்சம்` என்று பாலா சொன்னார். தனது விடுதலை இலட்சியத்திற்காக அவர் செயற்படும் போது அவரிடம் காணப்படும் உறுதியான, தீர்க்கமான, தளராத தன்நம்பிக்கையை பல தடவைகள் பாலா அவதானித்திருக்கிறார்.

தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர் திரு பிரபாகரன். தனது மக்களின் போராட்ட இலட்சியம் சரியானது. நீதியானது, நியாயமானது, எனவே போராட்டத்தில் இறுதி வெற்றி நிச்சயம் என்பது பிரபாகரனின் அடிமனதில் ஆழவேரூன்றிய நம்பிக்கை என்பது பாலா தரும் விளக்கம். ஒரு அரசியல் தலைவனாகவும், எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகிவரும் பிரபாகரன் ஒரு தலைசிறந்த குடும்பத் தலைவருமாவார்.

தனது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், இருபத்திநான்கு மணிநேரமும் கடமையில் ஈடுபட்டிருந்தபோதும், போராட்டத்தின் பெரும் பொறுப்புகளுக்கும், கணவன், தந்தை என்ற நிலையில் தனது குடும்பக்கட்டுப்பாடுகளுக்கும் மத்தியில் ஒரு ஒத்திசைவான சமநிலையைப் பேணி அவர் செயற்பட்டு வருகின்றார். இந்த அபூர்வமான உறவில், பிரபாகரனின் மனைவியான மதிவதனி அதியுயர்ந்த தியாகத்தைச் செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். தாம்பத்திய வாழ்வில் கணவருடன் எந்த அளவிற்கு ஒன்றித்து வாழ அவர் விரும்பினாரோ அந்த அளவுக்கு வாழ்க்கையை நடந்த நேரமும் வாய்ப்புகளும் அவருக்குக் கிட்டுவதில்லை.

பிள்ளைகளைப் பேணிப் பராமரிக்கும் பொறுப்பில் அவர் எப்பொழுதுமே கண்ணும் கருத்துமாக இருப்பதால் அவரது செல்வாக்குத்தான் பிள்ளைகள் மீதுபடிமானமாக இருக்கிறது. பிரபாகரனது குடும்பத்தின் வாழ்க்கையை சாதாரண வாழ்க்கையாக கருதி விட முடியாது.

பிரபாகரனது மனைவி, பிள்ளைகள் என்பதால் அவர்களுக்கு தனித்துவமான சமூக அந்தஸ்து இருக்கிறது. இந்த சமூக தகைமையிலிருந்துதான் அவர்களது வாழ்க்கை முறையையும் உறவு முறையையும் ஆய்வுசெய்யவேண்டும். பெற்றோர் என்ற முறையில் பிள்ளைகளின் பாதுகாப்பு, அவர்களது எதிர்கால வாழ்க்கை பற்றிய கவலை பிரபாகரனுக்கும், அவரது துணைவியாருக்கும் இருக்கத்தான் செய்கிறது. யாழ்ப்பாணபெற்றோரின் அபிலாசைகளுக்கு ஏதுவான முறையில், பிரபாகரனும், மதியும் தமது பிள்ளைகளை கல்வி கற்கையில் ஊக்கப்படுத்திவருகின்றனர். கல்வியறிவை பிள்ளைகளிடம் விருத்தி செய்யவேண்டும் என்பதில் மதிக்கு ஆழமான அவா இருப்பதால், தனது பிள்ளைகளுக்கு, வீட்டில், தனியாக பலமணிநேரமாக அவர் பாடம் சொல்லிக்கொடுப்பார். பிரபாகரன் குடும்பப்பற்றுள்ளவர். அற வாழ்வும், அவரது வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கிறது.

பிரபாகரனுக்கு ‘ஓய்வு` கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தனது துணைவியாரையும் மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வருவார்.

1985ம் ஆண்டு பிறந்த அவரது மூத்த மகனின் பெயர் சார்ள்ஸ். சார்ள்ஸைவிட ஒரு வயது இளமையான மகள் துவாரகா.

1996ம் ஆண்டு எதிர்பாராத அதிசயமாக குடும்பத்திற்கு வந்து சேர்ந்த குழந்தை பாலச்சந்திரன்.

முதற் குழந்தையின் பிரசவத்தில் மதிக்கு நான் உதவி செய்தபோது, உரிச்சுப் படைச்சு தோற்றத்தில் மட்டு மன்றி குணாம்சத்திலும் தகப்பனைப் போலவே குழந்தை வளர்ந்து வருமென நான் நினைக்கவில்லை. ஒரே பெண் குழந்தையான துவாரகா படிப்பில் ஆழமான அக்கறையும் பொறுப்புணர்வும் உடையவர்.

பிரபாகரனின் கடைக்குட்டி பாலச்சந்திரன் குடும்பத்தில் எல்லோருக்கும் செல்லக் குட்டி. அச்சு வார்த்ததுபோல பிரபாகரனின் மறுதோற்றம்.

நான் வன்னியை விட்டு புறப்பட்ட வேளையில் குழந்தை பாலச்சந்திரன் குறிப்பிட்ட வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. அதனால் அவரது ஆளுமைபற்றி அதிகம் என்னால் சொல்லமுடியாது

-அடேல் பாலசிங்கம்-

மேலும் செய்திகளுக்கு...

Saturday, July 10, 2010

'தலைவன் இருக்கிறானா…? நமக்கெல்லாம் தெரியாத விடை உலகுக்குத் தெரியுமப்பா!' : சீமான்














ஐநா விசாரணைக் குழு, இலங்கைத் தமிழரின் இன்றைய நிலை, சீனாவால் உருவாகியுள்ள ஆபத்து, தலைவர் பிரபாகரன் பற்றியெல்லாம் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் இயக்குநர் சீமான் ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டி:

முள்ளி வாய்க்காலை முன்வைத்து உலகமே இன்று இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது.

இலங்கையில் நடந்திருக்கும் போர்க் குற்றங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள் ஒரு குழுவை அமைக்க… அதை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ஆதரிக்க… ரஷ்யாவும் சீனாவும் எதிர்த்து நிற்க… இந்தியா இன்னமும் கருத்துச் சொல்லாமல் மௌனமாக இருக்கிறது.

போர் முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்பட்ட நிலையிலும், இன்னமும் கொடூரங்களும் கொடுமைகளும் தொடர்வதாகவே செய்தி கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி ‘நாம் தமிழர்’ கட்சித் தலைவர் சீமானிடம் பேசினோம்.

“இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரிக்க, ஐ.நா. அவை மூவர் குழுவை நியமித்து இருப்பது வரவேற்கத்தக்க செய்திதானே?”

“எங்கள் சமூகத்தை நான்கு புறமும் சூழ்ந்து சுற்றி வளைத்துக் கொலை செய்த காலத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்ததும் இந்த அவைதான் என்ற வருத்தம் இருந்தாலும், இது ஆறுதலான ஆரம்பம். இந்த விசாரணையையும் எப்படியாவது தடுத்து முடக்கிவிட, இலங்கையும் அதனை ஆதரிக்கும் நாடுகளும் நினைக்கலாம். அப்பாவிகளை அங்குலம் அங்குல மாக நகர்த்திக்கொண்டு போய் கடலம்மாவின் காலடியில் வைத்து சுட்டுப் பொசுக்கிய சண்டாளர்களைப் பழிவாங்கும் தொடக்கப் புள்ளியாக இது அமையும்!”

முழுமையான பேட்டியைப் படிக்க...

Thursday, May 20, 2010

தமிழ் உறவுகளே, நம்புங்கள்! நாளை தமிழீழம் பிறக்கும்













தமிழீழத் தேசியத்தலைவர் ஈழ மக்களின் இதயங்களை வென்ற கதாநாயகனாக மூன்று தசாப்தமாக இருந்து வந்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கான பல காரணங்கள் முன்வைக்கலாம். எனினும் சுறுக்கமான விளக்கம் என்று சொன்னால் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்து சென்ற ஆண்டுகள் அனைத்திலுமே சிறந்த ஒரு வெற்றிக் கதாநாயகனாகத்தான் வாழ்ந்திருக்கிறார்.. எந்த ஒரு காலத்திலும் ஒருசில பின்னடைவுகளை தவிர தோல்வியென்று எதுவும் அவரை நெருங்கியதில்லை.

அதனால்தான் இன்றும்கூட விடுதலைப் புலிகளின் முழுமையான அழிவு என்று வர்ணிக்கப்படும் காலத்தின் பின்னும் தலைவர் அவர்களின் மரணம் சம்ப‌ந்தமான அறிக்கை முன்னுக்கும் பின் முரணான செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது. இறுதிகால வன்னி யுத்தத்தின் போது, இந்தியப் புலனாய்வுத் துறையினால் ஐம்பதுக்கு மேற்பட்ட "றோ" உளவாளிகள் இயக்கப்பட்டு வந்ததும் யாவராளும் அறிய முடிந்தது. அப்படியான ஒரு திறமை மிக்க இந்தியப் புலனாய்வுதுறையினரால் இன்று வரை கூட தமிழீழத் தேசியத்தலைவருக்கு இறுதி நேரத்தில் என்ன நடந்தது என்பதை அறியமுடியாது போயிற்று. அதனால்தான் " இதோ இப்போது முடிகிறது ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்று இருந்த கதை போய் இந்திய தினத்தந்திப் பத்திரிக்கையில் வரும் சிந்துபாத் கன்னித்தீவு போன்று நீண்டு கொண்டே போகிறது.

அரக்க குணம் கொண்ட இலங்கை அரசுக்கு, விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக எத்தனையோ விதமான தொழில்நுட்ப சாதனங்களையும். காட்டிக் கொடுப்புக்களையும் செய்து கொடுத்த இந்திய புனலாய்வுத்துறை இப்போது கொஞ்சம் தல்லாடத்தொடங்கியிருப்பது என்பதுதான் உண்மை. இல்லையேல் ஆயிரம் மையில்களுக்கு அப்பால் நின்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பலுக்கு கண் வைத்தவர்கள், இறுதி நேர ஐந்நூறு மீட்டர் சதுரப்பரப்பில் நடந்தது என்னவென்று தெரியாமல் ஏன் தலையை சொறிய வேண்டும். தலைவரின் தீர்க்கதரிசனம் பற்றி எலுத புறப்பட்டால் பந்தி பந்தியாக எழுதலாம். அவைகளில் ஒன்றிரண்டினைக் குறிப்பிடலாம் என விரும்புகிறேன்.


மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Saturday, May 15, 2010

தலைவனே உன் பாதம் பட்ட இடத்தில் நிற்கின்றேன்













செல்லரித்துப்போய் இருண்டு கிடக்கின்ற
என் வீட்டு முற்றத்தில்.
காட்டுப்பன்றிகளும் கரடிகளும்
இனந்தெரியாத வேறு பல விலங்குகளும்
மேச்சல் காடாக்கி
மலம் சலம் கழித்துக்கொண்டிருக்கின்றன,

என் உணவுக்கான ஆதாரங்கள்
அவைகளின் ஆக்கிரமிப்பால்
காலடிகளில் மிதிபட்டு
அழிந்து போகின்றன,

நேற்றுவரை
நீ எங்களோடு எங்களில் ஒருவனாக
பாதுகாவலனாக ஒன்றிக்கிடந்த தருணத்தில்
என் குழந்தைகள்
முற்றத்தில் விழையாடிக்கொண்டிருந்தபோது
ஒன்றிரண்டு காகங்கள் மட்டுமே
எச்சம் போட முடிந்தது,

அது கூட அவமானமென
அவ்வளவு கோபப்பட்ட நீ,
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Friday, May 14, 2010

பிரபாவின் சிறு மற்றும் இளமைப் ப‌ராயம் பாகம் இரண்டு













பிரபாவின் தாய் மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை பிரபாவின் வாழ்வைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான‌ நபர்.

பிரபா தனது 17வது வயதில் தனது குடும்பத்துடனான எல்லா உறவுகளையும் முறித்துக் கொண்டார். தனது புகைப்படமோ அல்லது புகைப்படத் தொகுப்போ வீட்டில் இல்லாதவாறு எல்லாவற்றையும் அகற்றினார் பிரபா. பிரபாவை தேடிய பொலிஸார் வைத்திருந்த ஒரே புகைப்பட ஆதாரம் அஞ்சலக அடையாள அட்டை ஒன்று மட்டுமே.

பிரபாவின் போராட்ட வாழ்விற்கு அவரது தகப்பனாரிடமிருந்து எந்தவிதமான உதவியோ ஆதரவோ கிடைக்கவில்லை. ஆனால் உதவிக்கரம் கொடுத்தவர்கள் வல்லிபுரம் வேலுப்பிள்ளையும் மூத்த சகோதரி ஜெகதீஸ்வரியின் கணவரும் மச்சினனுமாகிய மதியாபரணம் ஆகியோர்தான்.

பிரபா பிறந்ததன் பிற்பாடு திருவேங்கடம் வேலுப்பிள்ளை குடும்பத்துக்கும் வல்லிபுரம் வேலுப்பிள்ளை குடும்பத்துக்கும் எழுதப்படாத உடன்பாடு ஒன்று இருந்தது. அது என்னவென்றால் பிரபாவுக்கு தாய் மாமன் மகள்களில் ஒருவரை மணம் முடித்து வைப்பது. ஆனால் பிற்காலத்தில் பிரபா மதிவதனி ஈரம்பு மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்து கொண்டபோது தனது சங்கடங்களுக்கு நடுவிலும் பிரபாவிடம் தாலி எடுத்துக் கொடுத்ததும் இதே தாய் மாமன் வேலுப்பிள்ளை தான்.

1984 அக்டோபர் 1 அன்று திருப்போரூர் முருகன் கோயிலில் நடந்த அந்தத் திருமணத்திற்கு திருவேங்கடம் வேலுப்பிள்ளை வரவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

பார்வதியம்மாள் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை உண்மையில் எழுதியது யார்..? – உண்மை அம்பலம்













மலேசியாவில் இருந்து பார்வதியம்மாள் தனது சிகிச்சைக்காக கலைஞருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதனை தமிழக அரசு வெளியிட்டது.. ஆனால் அந்தக் கடிதம் பார்வதியம்மாளால் எழுதப்பட்டோ அல்லது தெரிவிக்கப்பட்டோ வெளியிடப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார் வைகோ.

சென்னையில் மே 11-ம் தேதி ம.தி.மு.க.வின் இலக்கிய அணி சார்பில் பாவேந்தர் விழா நடந்தது. அதில் பேசிய வைகோ, “மாவீரனைப் பெற்றெடுத்த தாய் எழுதியதாக கடிதம் ஒன்று வெளியிடப்பட்டதே.. அதை யார் தயாரித்தது..? நான் திருச்சியில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்து தரும்படி அன்போடு வேண்டுகிறேன்.. தங்கள் உதவியை என்றும் மறக்க மாட்டேன். நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன். நன்றியுடன்.. உங்கள் உடன்பிறப்பு.. திருவேங்கிடம் வேலுப்பிள்ளை பார்வதி என்று இருக்கிறதே..

பார்வதியம்மாள் என்ன தி.மு.க. வட்டச் செயலாளரா..? அவர் உடன்பிறப்பு என்று எழுதுவாரா..? இக்கடிதத்தை இங்கே தயாரித்தது யார்..? சில காரணங்களுக்காக நான் இதற்கு மேல் இது பற்றி பேச விரும்பவில்லை” என்றார்.

ஆனாலும் இது தொடர்பாக விசாரித்ததில் கிடைத்தத் தகவல்கள் வருமாறு :

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, May 12, 2010

பிரபாவின் சிறு மற்றும் இளமைப் ப‌ராயம் பாகம் ஒன்று













1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் நாளில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்தார். அன்று பிரபலமாயிருந்த இணுவில் மகப்பேற்று நிலையத்தில் இவர் அவதரித்தார்.

பிரபாவின் தாய் மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை தமிழரின் வரலாற்றை மாற்றப்போகும் அக்குழந்தைக்கு பிரபாகரன் என்னும் பெயரை இட்டார்.

1955 ஒக்டோபரில் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு வேலையின் நிமித்தம் மீண்டுமொருமுறை மட்டக்களப்பிற்கு மாற்றல் கிடைத்தது.

முன்னதாக இதே போன்றதொரு வேலை நிமித்தமான‌ மாற்றலில் தான் 1953 செப்டெம்பரில் மட்டக்களப்பிலிருந்து அநுராதபுரத்துக்கு சென்றார்கள் அவர்கள்.

அநுராதபுரத்திற்கு மூன்று குழந்தைகளுடன் மாற்றலாகிச் சென்ற வேலுப்பிள்ளை தம்பதியினர் நான்காவது மழலைப் பிரபாகரனுடன் மீண்டும் மட்டக்களப்பிற்குத் திரும்பினர்.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Sunday, May 9, 2010

மரணத்தை வென்ற மாவீரன்













இதோ தற்கொலை செய்து கொண்டார், அதோ சுனாமியில் இறந்தார், இதோ சுடப்பட்டார், அதோ உடல் கிடைத்தது, இதோ தப்பிக்க முயன்றார், அதோ கடலில் வாய்க்காலில் கிடந்தார், இதோ என் கனவில் வந்தார், அதோ என் வீட்டருகே வந்து விட்டார், ஐயகோ, உண்மையில் வந்து விடுவாரோ, வந்தால் என்ன செய்வது??????

இது தான் நண்பர்களே ஒரு மனிதனின், ஒரு மாவீரனின், ஒரு விடுதலைப் போராளியின் பொய்யான மரணம் உலகிற்கு உணர்த்திய பாடம், எதிரிக்குத் தருகின்ற அச்சம். உலகின் மிகப் பெருமை வாய்ந்த தமிழ் அறம் சார்ந்த வழியில் தன் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஒரு இனத்தின் சித்தாந்தமாக மாற்றிக் காண்பித்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற கட்டுக் கதையோ அல்லது உண்மையோ எனக்குள் ஒரு போதும் வருத்தத்தை விளைவிக்கவில்லை. அதற்கு அவர் செயற்கையாக மரணித்தது மட்டும் காரணம் இல்லை, அதைத் தாண்டி ஒரு தெளிவான பார்வையும் இருக்கிறது, உங்களுக்கும் அது இருக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தக் கட்டுரை எழுதுவதற்கான ஒரு தேவை உருவானது. மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Thursday, May 6, 2010

வன்னியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வாழ்ந்த வீட்டிற்கு வேறொருவர் உரிமை கோரல்












தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதியாக வாழ்ந்த வீட்டிற்கு நபரொருவர் உரிமை கோரியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

வவுனியா அகதி முகாமில் தங்கியிருக்கும் நபரொருவரே குறித்த வீட்டுக்கு உரிமை கோரியிருப்பதாக படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி, விஸ்வமடு தர்மபுரத்தில் அமைந்துள்ள இவ்வீடு தமது உடமை எனவும், இவ்வீட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் எட்டு வருடங்களுக்கு முன்னர் பலவந்தமாக சுவீகரித்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு ஏக்கரில் அமைந்துள்ள இவ்வீட்டைச் சுற்றி பாரிய பதுங்கு குழிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதியாக வாழ்ந்த வீடு குறித்த நபருக்கு சொந்தமானது என பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக படைத்தரப்பு குறிப்பிட்டுள்ளது.

தற்போது படைத்தரப்பின் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த மெய்ப்பாதுகாவலர், இவ்வீடு பணம் கொடுத்துக் கொள்வனவு செய்யப்பட்டது எனவும், பலவந்தமாகக் கைப்பற்றப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு சொத்துக்களை விற்பனை செய்வது சட்டத்திற்கு முரணானதென குறிப்பிட்டுள்ள படைத்தரப்பினர், குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வீட்டுக்கு அண்மித்த பகுதிகளில் 60 விடுதலைப் புலிகளின் முகாம்கள் அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ள படைத்தரப்பினர், தற்போதும் இவ்வீட்டை தமது கட்டுப்பாட்டின் கீழேயே வைத்துள்ளனர்.

இதேவேளை, பொதுமக்களது வீடுகள் விரைவில் உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என சிறிலங்காப் படைத்தரப்பினர் அறிவித்துள்ளனர்.

நன்றி : பொங்குதமிழ்

Sunday, May 2, 2010

தமிழனா பொறந்திருந்தா, எனக்கும் பிரபாகரன்தான் ஹீரோவாகி இருக்க முடியும் : பிரகாஷ்ராஜ்












`என் தேசத்துமண்ணே!

உனக்கு என் ரத்தத்தை தருவேன்.

இந்தக் கலவலரங்களுக்குப் பின் மிச்சமிருந்தால்...`

அலி சர்தாரியின் கவிதையை ஞாபகப்படுத்தினார் வேலுப்பிள்ளை பிரபாகரன். இறந்தாரா இல்லையானு மர்மம் ஈழத்தமிழர்களைத் தூங்க விடாம பண்ணிட்டிருக்கிற நேரத்தில் பிரபாகரன் எனக்கு எப்படி தொடுவானம் ஆனாருன்னு யோசிச்சேன். நாம தொடணும் நினைக்கிற, ஆனால் தொடமுடியாத வானமா இருக்கு, வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை. சரி, தவறு முடிவுகளைத் தாண்டி பிரபாரகனின் வாழ்வுக்கும் அர்த்தம் இருக்கு. மரணத்துக்கும் பெருமை இருக்கு.

கன்னடாதான் எனக்கு தாய்மொழி. இந்தியாதான் என் தாய்நாடு. இலங்கையில் தமிழனா பொறந்திருந்தா, எனக்கும் பிரபாகரன்தான் ஹீரோவாகி இருக்க முடியும். அடக்கு முறை உங்களை எந்தத் திசையில் செலுத்தும்னு யாருக்கும் தெரியாது. எல்லா வசதிகளோடும், வாய்ப்புகளோடும் வாழுற நமக்கு நம்பிக்கையான நாலுபேரை சேர்க்கிறது எவ்ளோ கஷ்டமா இருக்கு. ஆனா, பிரபாகரன் பின்னால் உயிரை துச்சமா மதிக்கும் பெரிய இளைஞர் கூட்டம் சேர்ந்ததுக்கு முக்கியமான காரணம், அவர்கிட்டே இருந்த அர்ப்பணிப்பு உணர்வுதான். ஒரு பேட்டியில் முதன்முதலா நான் அவரை கவனிக்க ஆரம்பிச்சேன்.

``புல்லைக்கூட மிதிக்கக்கூடாது நினைக்கிற அப்பாவுக்கு மகனா பிறந்து நீங்க, வன்முறையைக் கையில் எடுக்கலாமா?``னு கேள்வி கேட்கிறார் நிருபர். `புல்லும் துன்பப்படக்கூடாது`னு நினைக்கிறவருக்கு ஒரு பையன் எப்படி இருக்கணுமோ அப்படித்தான் நான் இருக்கிறேன்` என்பது பிரபாகரனின் பதில். சக மனிதர்கள் துன்பப்படும்போது அதைப் பொறுத்துக்கொள்ளாத இயல்புதான் அவரின் மாபெரும் கௌரவம். அதை சிந்தனையா மட்டும் வெச்சுக்காம உயிரைப் பணையம் வைத்து மக்களின் துன்பத்தை நீக்க போராடியது அவரின் பெருமிதம். குழந்தை இயேசுவை பிரதிபலித்த ஒரு முகம், முப்பது வருஷத்துக்குப் பிறகு, இயேசுவை சிலுவையில் அறைந்தவனின் கொடூர முகத்தை பிரதிபலித்ததுனு ஒரு கதை கேட்டிருக்கோம்.

துப்பாக்கி தூக்கி ஒரு வாழ்க்கை நடத்தணும்னு பிரபாகரனுக்கோ, ஆயுதம் தூக்கிய புலிகளுக்கோ பிறக்கும்போதே இலட்சியம் இருந்திருக்க முடியாது. என் அம்மா தீவிரமான கிறிஸ்டியன். இப்பவும் இயேசுவைத் தவிர அவளுக்கு வேற உலகம் தெரியாது. தலைவலி வந்தாலும் இயேசு கிறிஸ்துதான் முதல் டாக்டர். வாரம் தவறாம சர்ச்க்குப் போறதும், நாள் தவறாம பிரார்த்தனைப் பண்றதும் எனக்கு பழக்கமான விஷயம். நியாயமா நானும் தீவிரமான கிறிஸ்டியனா மாறி இப்ப வாரம் தவறாம சர்ச்சுக்கு போகவேண்டியவன். ஆனா, சின்ன வயசுல ஏற்பட்ட அனுபவங்களால், சர்ச் எனக்கு அலர்ஜியாகிடுச்சு. நான் படிச்ச கிறித்துவ பள்ளியில் எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த சிஸ்டரை எப்பவும் பெரிய மூங்கில் குச்சியோடுதான் பார்த்திருக்கேன்.

என்னுடைய சின்ன சின்ன தவறுகளுக்கு அவங்களுடைய முரட்டு அடி, என் பாதங்களில் பட்டி உயிர்ப்போகிற வலி தெறிக்கும். அடிச்சவங்ளே, `அன்பான இயேசுவும் தூரமாகிட்டார். ஜெபமும் தூரமாகிடுச்சு. எனக்கு ஏற்பட்ட சின்ன சின்ன கசப்பான அனுபவங்களே என் கடவுள் நம்பிக்கை தீர்மானித்து, இப்ப வரைக்கும் சர்ச் மேல அலர்ஜி இருக்கு. நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ எல்லாத்துக்குமே நாம சின்ன வயசில் கேட்டு வளர்கிற விஷயங்களுக்கு, நம்ம குணத்தைத் தீர்மானிக்கிற சக்தி உண்டு. காந்தி அதற்கு சிறந்த உதாரணம். துப்பாக்கி வெச்சிருந்த வெள்ளைக்காரங்களை காந்தி அகிம்சையால எதிர்க்கலையான்னு நிறையபேர் கேட்கிறாங்க. சின்ன வயசுல அரிச்சந்திரன் கதையைக் கேட்டு, `உண்மையை மட்டும் பேசுவது` என்று முடிவெடுத்தார் காந்தினு படிக்கிறோம்.

ஒவ்வொருத்தரோட பால்ய வயதில் எந்த விஷயம் பாதிக்குமோ அதுவாகவே மாறிப்போகிறதுதான் இயற்கை. உலகம் முழுக்க லட்சக்கணக்கான உதாரணம் இருக்கு. மனிதர்களை மாடுமாதிரி வேலிப்போட்டு அடைத்து கதற கதற அடித்து கொன்ற ஜாலியன் வாலாபாக் கொடுமையை நேரடியா பார்த்து வளர்ந்த ஒரு சின்னப் பையன் பகத்சிங்கா மாறத்தான் செய்வான்.

உலகத்துக்கு அது நியாயமா இல்லையானு விவாதிக்கலாமே தவிர, பகத்சிங் உருவாவதை யாரும் தடுக்க முடியாது. கேட்டு வளர்ந்த கதையே காந்தியைப் பாதிக்கும்போது, பிரபாகரன் பார்த்து வளர்ந்த துயரம் அவரைப் பாதிக்காதா? கண்ணுக்கு முன்னால ஒரு தவறும் செய்யாத கோயில் குருக்களை உயிரோடு எரித்ததைப் பார்த்த சின்னப் பையன் மனதில் வன்முறை விதைக்கப்படுவதை தடுக்க வேண்டியது யாருடைய பொறுப்பு? சாதாரண ஒரு ஃபுட்பால் மேட்சில் பிரான்ஸ் கால்பந்து வீரர் ஜிடேன், சக விளையாட்டு வீரரை தலையால் வன்மத்தோடு முட்டியதை நிறைய சின்னக் குழந்தைகள் பார்த்திருப்பாங்கன்னு அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டார்.

அந்த நிகழ்வால் பிள்ளைகள் மனதில் வன்முறை விதை விழும்னு உலகமே பதறுச்சு. `அக்கா, அக்கா`னு பேசிக்கிட்டிருந்த ஒருத்தியை சீரழித்து கொலை செய்கிற காட்சியை ஒரு சிறுவன் பார்த்தா என்னா ஆகுமோ, அதுதான் பிரபாகரன். ஒரு பிரபாகரனை ஜெயிக்கிறதுக்காக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிச்சிருக்கு இலங்கை அரசு. உலகமே வேடிக்கைப் பார்க்க, விலங்குகளைவிட மோசமாக வேட்டையாடப்பட்டார்கள் ஈழத்தமிழர்கள். அதை பல சின்னக் குழந்தைகள் நேர்ல பார்த்திருக்காங்களே நினைக்கும்போது ஈரக்குலை அதிருது.

இன்னும் நூறு பிரபாகரன்கள் உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிற அரசாங்கத்தின் அதிகார அறியாமையை என்ன சொல்றது? `ரொம்ப கொடூரமான சர்வாதிகாரி பிரபாகரன்`னு சொல்றாங்க. இனவெறியில் யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர் இல்லை அவர். இன மக்கள் துன்பப்படும்போது அவர்களுக்காக கடைசிவரை களத்தில் நிற்க நினைக்கிற போராளி. தாக்குதல் அல்ல பிரபாகரனின் நோக்கம். தற்காப்பு மட்டுமே. பாம்பின் விஷம்கூட தற்காப்புக்கான ஆயுதமா மாறும். விஷம் கொடுமையானது என்பதில் கருத்து வேறுபாடு யாருக்கும் இல்லை.

சம உரிமையை இலங்கை தமிழர்களுக்கு உறுதி செய்திருந்தால் எதற்காக இந்த வன்முறை? தனிப்பட்ட மனிதனின் கோபத்தில் நியாயம் இல்லாமல் இருக்க எல்லா வாய்ப்பும் இருக்கு. ஆனால், ஒரு சமூகத்தின் மொத்த கோபமும் ஒண்ணு சேருதுன்னா, அதில் நூறு சதவீதம் நியாயம் இருந்தே தீரணும். அதை ஆதாரங்கள் தேடி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் அடிமட்ட வேலைகள் செய்து சேர்க்கும் காசுல, பெரிய பங்கை தன்னுடைய போராட்டத்துக்கு அனுப்பறாங்கன்னா அதில் எப்படி நியாயம் இல்லாம இருக்கும்? ஆயுதம் தாங்கிய இயக்கம் எப்படி ராணுவம் மாதிரி எதிர்தாக்குதல் நடத்தலாம்னு கேட்கிறாங்க. அடிக்கிறதுதான் அராஜகம்.

திரும்பி அடிக்கிறது தற்காப்புதான். உலகம் முழுவதும் தன்னுடைய ராஜாங்கத்தை பரப்பி அதில் மன்னனா முடிசூடணும்னு நினைக்கிற வல்லரசு தோரணை பிரபாகரன்கிட்டயோ, அந்த போராட்டத்திலோ இல்லை. தன்னுடைய வேரை, அடையாளத்தைப் பாதுகாப்பதுதான் முதன்மை நோக்கம். அதில் வெறும் லட்சியவாதியாக மட்டும் இல்லாமல், தேர்ந்த செயல்வீரனாவும் இருந்தார் பிரபாகரன்.

சொந்த மண்ணில் வேரைக் காக்கும் போராட்டத்தில் இறந்து போறவங்களும் வேராகிடுறாங்க. கொள்கைக்காக, லட்சியத்துக்காக சாகவும் தயாரா கழுத்தில் எப்பவும் சயனைடு குப்பியோடு இருந்த பிரபாகரன் இப்பவும் எப்பவும் இளைஞர்களுக்கு ரோல்மாடல்தான். என்னுடைய மகன் உயிரோடு இருந்தால், பிரபாகரன் கதை சொல்லி, `உன்னுடைய ரோல்மாடலா அவ`னு சொல்ற அளவு நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்திருக்காரு. லட்சியத்துக்காக உயிரைத் துச்சமாக மதித்த சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சுகதேவ் எல்லாமே நாம கேட்டு வளர்ந்த ஹீரோக்கள், பிரபாகரன் நாம பார்த்து வளர்ந்த ஹீரோ, ஒரு வேளை அவர் இறந்திருந்தால், அவரைபோன்றவர்கள் நம் கண் முன் இறந்துபோக சம்மதிச்சோம் என்பது நம்முடைய அவமானமே தவிர அவருக்கு அது வீர மரணம்தான்.

முப்பது வருஷத்துக்கு மேல் ஒரு இயக்கத்தை, அதுவும் உலகமே தடைவிதித்த ஒரு இயக்கத்தை கட்டிக் காத்ததும், வெற்றி பெற்றதும் சாதாரண காரியம் இல்லை. பிரபாகரனைப் போன்ற அர்ப்பணிப்பு உள்ள தலைவர்கள் பெற்றெடுக்கிற ஈரம், ஈழத்தமிழ் மண்ணுக்கு இருக்கிறதே பெருமையான விஷயம்.



-உயிர் கண்மணி

Saturday, April 24, 2010

நீ எப்படி தலைவன் ஆனாய்? பிரபாகரனுக்கு ஒரு பகிரங்க மடல்














எங்கள் நாட்டில் ஒருவர் தலைவனாக வேண்டுமென்றால் அவர் ஒரு அரசியல் தலைவரின் வாரிசாக இருக்கவேண்டும், அல்லது அவரது குடும்பத்தில் ஒரு அரசியல் தலைவரின் விதவை இருக்கவேண்டும், குறைந்தபட்சம் இறந்துபோன ஒரு அரசியல் தலைவரோடு, உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமான உறவு கொண்ட ஒருவராக இருந்திருக்க வேண்டும்.

இவையெதுவும் இல்லாவிட்டால், ஒரு சில திரைப்படங்களிலாவது கதாநாயகனாக நடித்திருக்க வேண்டும்; மேலே சொல்லப்பட்டுள்ள எந்தவொரு தகுதியும் இல்லாத மனிதன் நீ. ஈழத்தமிழர் சுதந்திரமாக வாழ, சுயமரியாதையுடன் வாழ “தமிழீழம்” வென்றெடுப்பது ஒன்றுதான் தீர்வு என்பதை இலட்சியமாக ஏற்றுக் கொண்டு, அந்த இலட்சியத்தித்தை எந்தவொரு சூழ்நிலையிலும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவன் நீ.

இவ்வாறு ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் இன்றுவரை உறுதியாக, நேர்மையாக இருக்கின்ற காரணத்தினால் உன்னை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் “தமிழீழத் தேசியத் தலைவர்” என்று அன்போடு அழைக்கிறார்கள்.

இப்படி உலகத் தமிழர்களே ஏற்றுக் கொண்டாலும், எங்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு உரிய எந்தவொரு தகுதியும் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? பொதுவாக எங்கள் நாட்டில் நேர்மை, ஒழுக்கம் என்பதெல்லாம் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும்தான்.

அரசியலுக்கு வரும்போது அன்றாட உணவுக்கும், மாற்றுத்துணிக்கும் அல்லல் பட்டவர்கள்தான் எங்கள் தலைவர்கள் என்றாலும், இன்றைக்கு அவர்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகள். ஆனால் நீயோ 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவனாக இருந்து வந்தாலும், வெளிநாடுகளில் உனக்குச் சொத்துக்கள் இல்லை. ஆடம்பர மாளிகைகள் இல்லை. அட சுவீஸ் வங்கியில்கூட உனக்கு ஒரு கணக்கு இல்லையே. அதுதான் போகட்டும்! மது, புகை என்று உனக்கு ஒரு பழக்கமும் இல்லையாமே.

அதுமட்டுமல்ல! உன் இயக்கத்தில் இருப்பவர்களுக்கும் இந்தப் பழக்கங்கள் கூடாதென்று கட்டுப்பாடாமே! இதுவெல்லாம் பரவாயில்லை. உனக்கு ஒரேயொரு மனைவிதான் என்று உறுதியாகச் சொல்லுகிறார்களே! எங்களைப் பொறுத்தவரை தலைவன் என்றால், குறைந்தது இரண்டு மனைவிகள் ; அங்கங்கே பல தொடர்புகள் இருக்க வேண்டும்.

இவையெல்லாம் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? எங்கள் வாழும் வள்ளுவரின் மகளுக்கும், மகன்வழிப் பேரனுக்கும் ஒரே வயதுதான். எங்களுக்கு அதில் எவ்வளவு பெருமிதம் தெரியுமா? ஆனால் உனது மூத்த மகனுக்கும் அடுத்த மகனுக்கும் உள்ள இடைவெளி பத்து வருடங்கள் என்கிறார்கள்.

இந்த பத்து வருடங்களும், ஈழ விடுதலைப் போராட்டம் மிகவும் நெருக்கடியில் இருந்த காலகட்டம் என்றும், உனது பிள்ளைகளுக்கிடையே உள்ள இந்த வயது வேறுபாடு, அந்தக் காலகட்டத்தில், நீயும், உன் மனைவியும், சாதாரண கணவன், மனைவி என்ற உறவையும் கடந்து, போராளிகளோடு, போராளிகளாய் போர்க்களத்தில் நின்றதை உணர்த்துகிறது.

இப்படி தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து சொந்த சுகதுக்கங்களை மறந்து, போராட்டத்தில் ஈடுபடுபவன் ஒரு தலைவனா?
நீ எப்படி தலைவன் ஆனாய்?

சிங்கமே வா! புலியாய் புறப்படு! இருப்பது ஓர் உயிர்! அது தமிழுக்காக போகட்டும்! தமிழனுக்காக போகட்டும்! இப்படியெல்லாம் மேடையில் பேசுவதோடு நின்றுவிட வேண்டும். அதுதான் தலைவனுக்கு அழகு!

அதிகம் போனால், காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும் இடையே உண்ணாவிரதம் இருக்கலாம்! ஏன் ஆயுதப் போராட்டத்திற்கும் கூட ஒருவன் தலைமை ஏற்கலாம். ஆனால், போர் நடக்கின்ற இடத்தில் கூட அல்ல, நாட்டிலேயே இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு வெளிநாட்டில் சுகமாக மனைவி, பிள்ளைகளோடு இருந்து கொண்டு, போராட்டத்தை வழி நடத்த வேண்டும்.

அதுதான் ஒரு தலைவனுக்கு அழகு! ஆனால் பாவி நீ செய்தது என்ன? தாய்த்தமிழகத்தில் தங்கியிருப்பதுக்கூட, மற்றவர்கள் உனது விடுதலை இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க காரணமாகவிடும் என்று, களத்திற்கு சென்றுவிட்டாய். சென்றது சென்றாய்! தனியே செல்லக்கூடாதா? உன் மனைவியையும், பிள்ளைகளையும் கூட விட்டுசெல்லவில்லையே!

எங்கள் தலைவர்களை பார்! வாரிசுகள் என்று வந்துவிட்டால், சின்னவீடு, பெரியவீடு என்ற பேதமெல்லாம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரு பதவி! அனைவருக்கும் ஒரு அடைமொழி! இதையெல்லாம் கற்றுக்கொள்ளாத நீ எப்படித் தலைவன் ஆனாய்! தற்கொலைப் படையில் முதல் பெயர் உன் பெயர்! கழுத்தில் கட்டப்படும் நச்சுக் குப்பிக்கும் நீ விதிவிலக்கல்ல! காடுதான் உறைவிடம் என்று ஆன பிறகு, உணவிலும் கூட உனக்கும், இதர போராளிகளுக்கும் இடையே பாகுபாடு இல்லை.

இவையெல்லாம் போகட்டும்! வீட்டுக்கொருவரை இயக்கத்திற்கு தாருங்கள் என்றாய். தந்தார்கள் ஆயிரக்கணக்கில். தங்கள் பிள்ளைகளைத் தந்தவர்கள் எல்லாம் தாங்கள் போரில் ஈடுப்பட இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் தந்தார்கள். தமிழீழ விடுதலைக்காக தன்னையே அற்பணித்துக் கொண்ட உன்னிடம் யார் கேட்டார்கள்? பாவி! உன் மூத்தப்பிள்ளையை, இனித் திரும்பமாட்டான் என்று தெரிந்தும் களத்திற்கு அனுப்பினாயே! எப்படித் துணிந்தாய்? மொத்த ஈழத் தமிழினமும் இன்று முள்வேளிக்குள் அகதிகளாய் அடைப்பட்டு இருக்கிறது.

போகட்டும்! அதன் தலையெழுத்து அப்படி! ஆனால் உன் வயதான தந்தையையும், தாயையும் மற்ற அகதிகளோடு, அகதிகளாய் விட்டு வைத்திருக்கிறாயே? ஏனய்யா இப்படி! உன்னைப் போன்ற உறுதியும், வீரமும் மிக்க தியாக உள்ளம் படைத்த ஒருவன் பிறப்பதற்கு யோக்கியதை உடைய இனம் இந்தத் தமிழினம் அல்லவே!

எங்களுக்கு திரைப்படங்களே வாழ்க்கையாகிப் போயின! தேர்தல்களோ திருவிழாக்கள் ஆகிவிட்டன! உனது அருமை நமது மக்களுக்கு இன்றைக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ஆனால் உன்னைப் பற்றிய சரியான மதீப்பீட்டை வரலாறு சரியாகவேச் செய்யும். இன்றைக்கு உன்னையும் உனது இயக்கத்தையும் ஒழித்துக்கட்டி விட்டதாக இறுமாந்து நிற்கும் இனவெறி நாய்களும், அவர்களுக்கு உதவி செய்த குள்ளநரிக்கூட்டமும் இன்றைக்கு வேண்டுமானால், மனம் மகிழ்ந்து, தங்களைத் தாங்களே தட்டிக்கொடுத்துக் கொள்ளாலாம்.

ஆனால் எதிர்கால சரித்திரமோ, இந்த இனவெறியர்களையும், இணைந்து நின்ற குள்ளநரிகளையும், நயவஞ்சகர்கள், நாணயமற்றவர்கள் சொந்த இனத்தையே காட்டிக்கொடுத்த துரோகிகள் என்று பட்டியலிட்டு காறிஉமிழும்போது, தன் இன விடுதலைக்காய், தன் இனத்தின் சுதந்திரமான, சுயமரியாதைக்கான வாழ்க்கைக்காய் போராடிய உன்னை “மாமனிதன்” என்று என்றென்றும் பாராட்டும்.

ஏனென்றால் மரணம் என்பது தன் பெண்டு. தன் பிள்ளை, தன் குடும்பம் என்று வாழும் தற்குறிகளுக்குத்தான். உன்னைப்போன்ற மாமனிதர்களுக்கு மரணம் என்பது இல்லை. நீ இருந்தாலும், இல்லையென்றாலும், இனி, தன் இன விடுதலைக்காக உலகில் எந்த இனம், எங்கு போராடினாலும், அந்தப் போராட்டத்திற்கு அடையாளமாக இருக்கபோவது உன் முகம்தான்!

வாழ்க நீ எம்மான்!

கிளர்ச்சியாளன்
வழக்கறிஞர்-சேசுபாலன்

மற்றும் குழுமம்.

“தாய்த் தமிழ்நாடு"

பிரபாகரன் - சில குறிப்புகள்














* தம்பி` எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! [Prabakaran]

    * அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

    * வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், `தம்பி` என்றார்கள்.
எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

    * பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். ``போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்`` என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, ``எடுத்தால் எங்கே வைப்பது`` என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

    * பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் `ஏழு தலைமுறைகள்`. அதில் `இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்` என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

    * மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

    * ``ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?`` என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, ``யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.``

    * ``பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை`` என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

    * அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

    * எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. `தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது` என்பது அவரது அறிவுரை!

    * ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

    * `இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி` என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

    * போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், `பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு` என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

    * ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

    * பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!
    * பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். ``தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்`` என்பார்!

    * தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

    * பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

    * அநாதைக் குழந்தைகள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

    * `உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்` என்றார் பிரபாகரன்!

    * பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

    * பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

    * தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், ``நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!``

    * ``ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?`` என்றுஅடக்க மாகச் சொல்வார்!

    * `தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்` என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!

(நன்றி: ஆனந்த விகடன்)

எங்கிருந்தோ எங்கள் தலைவன் எங்களை வழிநடத்துகின்றான்














எங்கிருந்தோ எங்கள் தலைவன் எங்களை வழிநடத்துகின்றான். அவனது திசையிருந்து வருகின்ற காற்றை நாங்கள் எங்களது விடுதலை மூச்சாக மாற்றுவோம்.

தமிழீழம் நோக்கிய எமது விடுதலைப் போராட்டம் பல்வேறு வழிகள் ஊடாகத் தரிப்பிடம் இன்றி பயணித்துக்கொண்டிருக்கின்றது. உரிய உதவிகள் இன்மை, பயணத்திற்கான பாதை தொடர்பில் சர்வதேசத்திற்கு உரிய விளக்கமின்மை, சட்டச் சிக்கல்கள், துரோகங்கள் போன்ற இன்னபிற காரணங்களால் உகந்த தரிப்பிடமின்றி எமது விடுதலைப் போராட்டம் பல்வேறு காலகட்டங்களில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.

கடைசியாக எமக்கு முன்னால் கிடைத்திருக்கின்ற அரிய சந்தர்ப்பமாக நாடு கடந்த தமிழீழ அரசு விளங்குகின்றது. அடுத்த மாதம் இரண்டாம் திகதி நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பொதுத் தேர்தலின் பின்னர் தமிழீழத் தனிநாட்டிற்கான ஒரு அரசு நாடு கடந்து அமையப் போகின்றது என்பது ஈழத் தமிழினத்திற்கு ஒரு இனிப்பான செய்தியாக அமையப் போகின்றது.

நயவஞ்சகத்தனத்தால் எமது விடுதலை நோக்கிய ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஈழத் தமிழர்களிடத்தில் தனிநாட்டுக்கான அவா-விருப்பம்-தேவை அற்றுப் போய்விட்டது என்ற சிங்களத்தின் கபடத்தனமான பிரசாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் பங்குகொண்டு- அலைஅலையாக நீங்கள் அளிக்கும் வாக்குகள் சிங்களத்தின் உச்சிமண்டையை மீண்டுமொரு தடவை பிளந்தே தீரும்.

புலம்பெயர் தமிழர்களே….

சிறிலங்காவில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லையென சர்வதேசத்தின் முன் சிங்களம் செய்துவரும் பொய் பிரச்சாரங்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் மூலம் பதிலடி கொடுங்கள்.

சிங்களத்தின் கொடூர கரங்களிலிருந்து தப்பித்து நீங்கள் அடைக்கலம் புகுந்துள்ள நாடுகளில் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் ஒவ்வொருவரும் கட்டாயமாக வாக்களித்து உங்களது உரிமை அவாவை உலகிற்கு எடுத்துக் கூறுங்கள். முள்ளிவாய்க்காலுடன் எல்லாமே முடிந்துவிட்டதென்று சொன்னவர்களின் முகத்தில் ஓங்கி அறையுங்கள்.தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புதியதொரு பரிமாணத்தில் எடுத்துச் செல்லும் அண்ணன் உருத்திரகுமாருக்கு கைகொடுங்கள். அவரது உன்னதமான பணி எழுச்சிகொள்ள வழிசெய்யுங்கள்.

நாங்கள் பிரிந்து நிற்பது இனியும் வேண்டாம். புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் ஓரணியாகத் திரள்வோம். நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வடிவம் கொடுப்போம். எங்கிருந்தோ எங்கள் தலைவன் எங்களை வழிநடத்துகின்றான். அவன் நேரடியாக வராவிட்டாலும் அவனது திசையிருந்து வருகின்ற காற்றை நாங்கள் எங்களது விடுதலை மூச்சாக மாற்றுவோம்.

சிந்திப்போம்…விரைந்து செயற்படுவோம்..நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதன் மூலம் தனிநாட்டுக்கு சிறந்த அத்திபாரத்தை இடுவோம்.

நெதர்லாந்திலிருந்து
தர்சானா

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை வரலாறு பாகம் ஒன்று














திருவேங்கடம் வேலுப்பிள்ளை
(வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
10/01/1924 to 06/01/2010)

இந்த ஆண்டு தை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங்கு தருகிறோம்.

இது தமிழரின் போராட்ட வாழ்வோடு ஒன்றியது என்பதால் தொடராக வரவுள்ளது. வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கலாம். தலைப்பு மட்டும் மாற்றப்படும். இனி கட்டுரை.....

யாழ் மாவட்டம் வடமராட்சியில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசமே வல்வெட்டித்துறையாகும்.

வல்வெட்டித்துறை என்னும் பெயர் அப்பிரதேசத்துக்கு வந்ததே ஒரு சுவாரசியமான கதைதான். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்கள் இலங்கையை ஆண்டபோது `வெல்வெட்` என்னும் ஒரு வகை துணி அப்பிரதேசத்தில் இருந்த ஒரு துறைமுகம் மூலமாக ஏற்றுமதியானது.

வெல்வெட் + துறை தான் பிற்காலத்தில் மருவி வல்வெட்டித்துறையானது.

வல்வெட்டித்துறையில் வசித்த பெரும்பாலான மக்களின் பரம்பரைத் தொழிலாகவிருந்தது மீன் பிடியாகும். ஆனாலும் அங்கிருந்த மக்களில் சிலருக்கிருந்த கடல் பற்றிய அறிவு காரணமாக தூர நாடுகளுக்கான கப்பல் பயணத்தின் மாலுமிகளாகவும் செயற்பட்டனர். ஆரம்பகாலத்தில் கடத்தலுக்கும் பெயர் போன ஒரு ஊர் அது. ஆனாலும் துரதிஷ்டவசமாகவும் நியாயமற்ற வகையிலும் வல்வெட்டித்துறை கடத்தலுடன் மட்டுமே தொடர்பு படுத்தி பேசப் பட்டது.

வல்வெட்டித்துறையும் யாழ்ப்பாணத்தின் பிற பகுதிகளைப் போன்றே பெரும் எண்ணிக்கையிலான கல்வியாளர்களையும் அரசாங்க உத்தியோகத்தர்களையும் உருவாக்கிய ஒரு ஊராகும்.

அவ்வாறாக வல்வெட்டித்துறையில் மிக்க சிறப்போடு வாழ்ந்த ஒரு குடும்பம் தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையினதும் அவரது மூதாதையர்களினதும் குடும்பமாகும்.

`திருமேனியார் குடும்பம்` என்றுதான் வேலுப்பிள்ளை அவர்களது மூதாதையர்கள் வழி வந்தவர்களை மரியாதையோடு அழைப்பார்கள் அந்த ஊர் மக்கள்.

வல்வெட்டித்துறையிலிருக்கும் புகழ் பெற்ற சிவன் கோயிலின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்தவர்களும், இருப்பவர்களும் வேலுப்பிள்ளையின் தந்தை வழி வந்த குடும்பத்தினர்தான். அந்தக் கோயிலே பிரபாகரனின் முன்னோர்களால் தான் கட்டப்பட்டது.

பிரபாகரனின் மூதாதையர்களே சிவன் கோயிலை கட்டுப்படுத்தி வந்தவர்கள் என்ற காரணத்தால் எசமான் குடும்பம் என்றும்  அழைக்கப்பட்டார்கள்.

பிரபாகரனின் முன்னோர்களில் ஒருவரான ஐயம்பிள்ளை என்பவர் புகழ்பெற்ற வணிகராகத் திகழ்ந்தவர். புகையிலை மற்றும் சாயப் பொருட்களை கடல் வழியாகப் இந்தியாவின் கடற்கரையை அண்டிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்தவர்.

டச்சுக்காரர்கள் இலங்கையை ஆண்ட காலத்தில் இலங்கையின் புகழ்பெற்ற வணிகர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். அவருடைய மகனான வேலாயுதம் என்பவரும் அதேபோல வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்.

அவரது பிள்ளையான வெங்கடாசலம் காலத்தில் அந்தக் குடும்பத்தின் வியாபாரமும், செல்வ வளமும் பல மடங்கு பெருகியது. அவர் சொந்தமாக பன்னிரண்டு கப்பல்களை வைத்து வாணிபம் செய்தவர். இந்தியா, பர்மா, மலேசியா முதலான நாடுகளுக்கு அவர் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப் பெரிய வணிகராகத் திகழ்ந்தார். அத்துடன் ஒரு கொடை வள்ளல்.

அந்தக் காலத்தில் விவசாயக் காணிகளையும் பெரும் பண்ணைகளையும் சொந்தமாகக் கொண்டவர். அப்படியான ஒரு 90 ஏக்கர் காணி முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இருந்தது. இங்குதான் புலிகளும் இராணுவத்தினரும் இறுதி யுத்தத்தில் மோதிக் கொண்டனர் என்பது மிகவும் அதிசயத் தக்க ஒரு நிகழ்வு.

அவரை வல்வெட்டித்துறை மக்கள் `பெரிய தம்பி` என்று அன்போடு அழைப்பார்கள். 1822ல் வெங்கடாசலத்தின் மறைந்த தந்தை வேலாயுதம் ஒருநாள் அவரின் கனவில் வந்து சிவனுக்காக ஒரு கோயில் கட்டும்படி கேட்டுக் கொண்டாராம். ஏற்கனவே அந்தக் குடும்பத்துக்கு பிள்ளையார் மற்றும் அம்மன் கோயில்களுடன் தொடர்பிருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்றிலிருந்து அதை தனது வைராக்கியமாகவே கொண்டிருந்தார் அவர். சிறிது சிறிதாக கோயில் கட்டுவதற்கான பணத்தைச் சேர்க்கத் தொடங்கினார். விரைவிலேயே பெருந்தொகைப் பணத்தைச் சேர்த்துவிட்டார்.

முதன் முதலாக அம்மன் கோயிலுக்கு அருகாக 60 `பேர்ச்` அளவு கொண்ட காணி ஒன்றை வாங்கினார். தான் கொண்ட வைராக்கியம் காரணமாக அன்றிலிருந்து சிவன் கோயில் கட்டி முடியும்வரை தன் உடம்பில் மேலாடை உடுத்தாமல் ஒரு தவம் போன்று இருந்த காரணத்தால் `திருமேனியார்` என்று அவரையும், `திருமேனியார் குடும்பம்` என்று இவருடைய சந்ததியினரையும் மக்கள் அழைத்தார்கள்.

வீட்டுக்குக்கூடச் செல்லாமல், கோயில் கட்டும் இடத்திலேயே தங்கியிருந்து. அதை முழுமையாகக் கட்டிமுடித்து கும்பாபிஷேகம் நடத்திய பெருமைக்குரியவர் இந்தத் `திருமேனியார்` வெங்கடாசலம்!

வெங்கடாசலம் தன்னுடைய சொந்தப் பணத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டி முடித்தார். அத‌னால் அவர்களது குடும்பமே அந்தக் கோயிலின் பரம்பரை சொந்தக்காரர்களாகவும் தர்மகர்த்தாக்களாகவும் ஆனார்கள்.

ஒருவாராக 1867-ம் ஆண்டு சிவன் கோயில் கட்டப்பட்டு அந்த ஆண்டே குடமுழுக்கும் செய்யப்பட்டது.

வெங்கடாசலமும் அவரது சகோதரர் குழந்தைவேல்பிள்ளையும் சேர்ந்து கொழும்பு செக்குத் தெருவிலும் கீரிமலையிலும் ஏன் பர்மியத் தலைநகர் ரங்கூனிலும் கூட கோயில் கட்டினார்கள்.

வெங்கடாசலத்தின் மகனின் பெயரும் வேலுப்பிள்ளை தான். இந்த வேலுப்பிள்ளையாரின் மகனான‌ திருவேங்கடத்தின் மகன்தான் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளை. திருவேங்கடம் தனது ஒரே ஒரு மகனுக்கு தன் தந்தையின் ஞாபகார்த்தமாக வேலுப்பிள்ளை என்றே பெயரிட்டார்.

பிரபாகரனின் அப்பாவான வேலுப்பிள்ளையும் தமது முன்னோர்கள் போலவே கடவுள் பக்தி கொண்டவராகவும், பொது சேவையில் நாட்டம் கொண்டவராகவும் இருந்தார். அவருக்கு அரசியலில் எந்தவித விருப்பமும் இருந்தது கிடையாது. தம்முடைய பிள்ளைகள் நன்றாகப் படித்து உயர்ந்த பதவிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது.

இலங்கையை பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டு கொண்டிருந்த 1943-ம் ஆண்டில் தனது பத்தொன்பதாவது வயதில் இலங்கை அரசுப் பணியில் எழுத்தராகச் சேர்ந்தார் வேலுப்பிள்ளை. முதலில் ரயில்வே துறையில் அவருக்கு வேலை கிடைத்தது. அதன் பிறகு சில தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெற்று மாவட்ட நில அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார். முப்பத்தொன்பது ஆண்டுகள் கருத்தோடு வேலை செய்து, 1982-ம் ஆண்டில்தான் அவர் பணி ஓய்வு பெற்றார். 1982 ல் அவர் மாவட்ட நில அதிகாரியாக ஓய்வு பெற்றபோது இலங்கையின் காணி அமைச்சராக இருந்தது காமினி திசாநாயக்காவாகும்.

அவருக்கு சிங்களவர்கள் மீது எந்த வெறுப்பும் இருந்ததில்லை. சிங்கள மொழியிலும் நல்ல தேர்ச்சி கொண்டிருந்தார் அவர். அம்மொழியில் தேர்வும் எழுதி வெற்றி பெற்றவர். நேர்மையும் கறார்த்தன்மையும் கொண்ட அதிகாரியாக அறியப்பட்ட வேலுப்பிள்ளை, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

வேலுப்பிள்ளை தனது இருபத்து மூன்றாம் வயதில் அதாவது 1947ல் பார்வதி அம்மாளை மணம் முடித்தார்.

வேலுப்பிள்ளை பார்வதி தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள்.

மூத்தவர் மனோகரன் 1948ல் பிறந்தார். கப்பலில் வானொலி அதிகாரியாகப் பணியாற்றியவர். தற்போது டென்மார்க்கில் வசிக்கிறார்.

அடுத்தவர் ஜெகதீஸ்வரி 1949ல் பிறந்தார். பின்னாளில் அப்போதிக்கரியாக இருந்த மதியாபரணத்தை கல்யாணம் செய்தார். ஐரோப்பாவில் வசித்த இவர்கள் தற்போது தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கலைஞர் கருணாநிதி நகரில் வசிக்கிறார்கள்.

அடுத்தவர் வினோதினி 1952ல் பிறந்தார். பின்னாளில் வர்த்தகப் பட்டதாரியான ராஜேந்திரனை கல்யாணம் செய்து கொண்டவர். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்னர் கனடா சென்ற அவர் தற்போதும் அங்கேதான் வசிக்கிறார்.

கடைக்குட்டியாகப் பிறந்தவர் சாட்சாத் பிரபாகரனே தான். 1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் நாளில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்தார்.  அன்று பிரபலமாயிருந்த இணுவில் மகப்பேற்று நிலையத்தில் இவர் அவதரித்தார்.

அவருடைய தாய்மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை தமிழரின் வரலாற்றை மாற்றப்போகும் அக்குழந்தைக்கு பிரபாகரன் என்னும் பெயரை இட்டார்.

இக்குழந்தையின் பிறப்பின் பின்னாளும் முன்னாளும் ஒரு பெரும் வரலாறே அடங்கிக் கிட‌க்கிறது.

அதை வரும் வாரத்தில் பார்க்கலாம்.....

- சாணக்கியன்

Tuesday, April 20, 2010

புரியாத புதிர் பிரபாகரன் பிறந்த கதை














1963ம் ஆண்டு துரு துரு என்று சுழன்றுகொண்டிருக்கும் பார்வை. ஆனால் எதையுமே ஊடுருவிப் பார்க்கும் அழகான பெரிய விழிகள் ஏகாந்தமாக அக்கோயில்களின் வீதிகளினை அளந்து கொண்டிருக்கும் சிறிய கால்கள்.

ஆனால் ஏனைய சிறுவர்களுக்கு இருக்கும் அதீதமான குறும்புகள் அற்று யாரைப்பார்த்தாலும் வெட்கப்பட்டு அல்லது சங்கோசப்பட்டு அமைதியாக ஒதுங்கிப் போகும் சுபாவம்.

இதுதான் மட்டக்களப்பிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி வந்திருக்கும் உறவினரான வேலுப்பிள்ளையின் கடைக்குட்டிச் சிறுவனான பிரபாகரன்.

பார்க்கப் பார்க்க காரோடும் வெள்ளைச்சாமிக்கு (சோமசுந்தரம் சிவபாதசுந்தரம்) என்னவோ செய்தது.

ஆனால் எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லை!. ஏதோ ஒரு வித்தியாசம்?... தந்தை வழிச் சொத்தான வல்வை வைத்தீஸ்வரர் கோயில் உற்சவங்களிலும் மற்றும் விசேட தினங்களிலும் சாமி வீதிவலம் வரும்போது அர்ச்சகருக்கு முன்பாக கொடியுடன் நடந்து வருபவர்தான் சிறுவன் பிரபாகரன்.

வெள்ளைச்சாமிக்கு ஏனோ புரியவில்லை சாதாரண சிறுவர்கள் காரில் செல்லும்போது தம்மையே சாரதியாக எண்ணிக் கொண்டு முண்டியடித்து முன் சீற்றிலேயே ஏற விரும்புவார்கள்.

ஆனால் சிறுவன் பிரபாகரனோ கார் ஓடும்போது ஏற்படும் அந்தப் பெற்றோல் எரியும் மணம் பிடிப்பதில்லை எனக் கூறி பின் சீற்றிலேயே அமர்ந்து கொள்வதும் வெளியிலே அமைதியாகப் பார்த்துக் கொண்டு வருவதும் வழமையான நிகழ்ச்சியே.

ஆனால் வெள்ளைச்சாமிக்கு ஏனோ ஆச்சரியம் இவ்வாறான சந்தர்ப்பங்களில் வெள்ளைச்சாமி சிறுவனுக்கு வேடிக்கையாகக் கூறுவது “டேய் உன் மூக்கை வீட்டிலேயே கழற்றி வைத்து விட்டு வா.” அதேசமயம் தாய் தந்தையர்க்குக் கூறுவது “இவன் ஒரு வித்தியாசமான ஆள் என்னவென்று புரியவில்லையே”.

ஆம் அன்று அந்த ஒன்பது வயதுச் சிறுவனை வெள்ளைச்சாமிக்கு மட்டுமே புரியவில்லை. ஆனால் இன்று ஐம்பது வயது கட்நத அதே பிரபாகரனை முழு உலகத்திற்கும் புரியவில்லை.

ஏன் உலகின் உச்சமான வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கும் புரியவில்லை. ஏன் இவ்வாறு நடந்தது? யார் இந்தப் பிரபாகரன்?

இவர் வெறுமனே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரா? அல்லது தமிழீழ மக்களின் தேசியத் தலைவரா? பலரும் பலவாறாக எழுதுகின்றார்கள் பேசுகின்றார்கள்.

ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்னும் இவரது பெயர் வெற்றி பெற்ற விடுதலைப் போராட்ட வீரர்களான மாசேதுங், கோஷிமின், பிடல்கஸ்ரோ என்போரின் வரிசையில் சேர்க்கப்பட்டு விட்டது.

ஆனால் முன் கூறிய மூவருக்கும் இல்லாத தனிச்சிறப்பு இவருக்கு உண்டு.

இருபதாம் நூற்றாண்டிலும் இருபத்தியோராம் நூற்றாண்டிலும் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் போராட்டத் தலைமையை ஏற்று நடத்திய தொடர் போராட்ட வீரர். அல்லது விடுதலை இயக்கத் தலைவர் என்னும் தனிச்சிறப்பாகும்.

உலகின் ஏனைய விடுதலைப் போராட்டங் களுடன் ஒப்பிடும்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது நம்பமுடியாத பல உண்மைகளைக் கண்டு நகர்ந்து கொண்டிருப்பதாகும்.

கடலினால் சூழப்பட்ட தரைவழித் தொடர்புகளற்ற ஒரு தீவில் சிறுபான்மை இனமொன்று தன்னைவிடப் பலமடங்கு வலிமை கொண்ட அரச இயந்திரம் அதிலும் ஏகாதிபத்திய பிராந்திய மற்றும் உலக வல்லரசு களில் துணை கொண்டு இனம் மொழி நிலம் என ஆக்கிரமிப்பு மற்றும் அழிப்பு நடவடிக் கையில் ஈடுபடும் பொழுது அதனை எதிர்த்து வெற்றி கொள்வதாகும்.

இவ்வாறான நிலைமை எவ்வாறு சிறுபான்மை ஈழத்தமிழ் இனத்திற்கு சாத்தியமானது. இதுதான் இன்று உலகளாவிய ரீதியில் கேட்கப்படும் ஒரே கேள்வியாகும்.

அதற்கான விடை தலைவர் பிரபாகரன் நினைத்தால் எதுவும் சாத்தியமாகும் என்பதே.

இந்நிலையில்தான் யார் இந்தப் பிரபாகரன் என்னும் கேள்வி பூதாகரமாக எழும்புகின்றது.

இதற்கான விடையை பேனா முனை வீரர்கள் எனப்படும் பத்திரிகையாளர்கள் மற்றும் நூலாசிரியர்கள் என்போர் பேட்டிகள் மூலமும் தமது ஆய்வுக் கட்டுரைகள் மூலமும் எதிர்வு கூறல்கள் மூலமும் எழுத முற்படுகின்றார்கள். ஆனால் முழுமை காணமுடியவில்லை.

இதேபோலவே அவரோடு உடனிருந்த தளபதிகள் மற்றும் போராளிகள் என்போரும் அவரைப்பற்றி எழுத முற்படுகின் றார்கள். ஏனெனில் அவர் ஒரு சரித்திர புருஷ‌ர்.

அவர் வரலாறு சாகாவரம் பெற்றது. இன்று மட்டுமல்ல இன்னும் ஆயிரம் வருடங்கள் அல்ல இரண்டாயிரம் வருடங்கள் கழிந்தாலும் அவர் வரலாறு ஆய்வுக்கு உட்ப டுத்தப்படும்.

இந்நிலையில்

“இயற்கை எனது நண்பன்”
“வாழ்க்கை எனது தத்துவாசிரியன்”
“வரலாறு எனது வழிகாட்டி”

என வரலாறாய் வாழும் அவரைப்பற்றிக் கூற முற்படும்போது முதலாவதாக அவர் பிறந்தபோதினில், 1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் நாளில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்தார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பார்வதி தம்பதியினருக்கு அன்று பிரபலமாயிருந்த இணுவில் மகப்பேற்று நிலையத்தில் இவர் அவதரித்தார்.

அவருடைய தாய்மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை தமிழரின் வரலாற்றை மாற்றப்போகும் அக்குழந்தைக்கு பிரபாகரன் என்னும் பெயரை இட்டார் இது ஒரு சாதாரண நிகழ்ச்சியே. ஆனால் இதன்பின்பேதான் பெரும் வரலாறு மறைந்து கிடந்தது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை உத்தியோகம் நிமித்தம் அநுராதபுரத்திற்கு 1953 செப்டெம்பரில் மட்டக்களப்பிலிருந்து மாற்றலாகிச் சென்றார்கள்.

அவர்களுக்கான தங்கும் விடுதி குருநாகல் வீதியில் இருந்த ஏலாலசோண என்னும் இடத்திலேயே கொடுக்கப்பட்டிருந்தது. இவ்விடுதி அன்றைய குருநாகல் - புத்தளம் பிரதான வீதிகளை இணைக்கும் சிறு வீதி ஒன்றில் குருநாகல் அநுராதபுர வீதிக்கு சமீபமாக அமைந்தது.

இவர்களின் விடுதிக்கு அருகாமையில் நெல்லியடியைச் சேர்ந்த இராசையா என்ற அரசாங்க ஊழியருக்கு கொடுக்கப்பட்ட விடுதி அமைந்திருந்தது.

ஏலாலன், எல்லாளன், ஏலாரா என்னும் பெயர்கள் யாவுமே குறிப்பது ஈழாளன் என்னும் அரசனையே ஆகும். “ஈழம்” என்பது தூய தமிழ்ச் சொல்லாகும்.

ஈழாளனுடைய காலமான கி.மு 145 – 101 வரையான காலப்பகுதியில் இன்றைய இலங்கை முழுவதுமே ஈழம் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது.

ஈழம் என்னும் அடியாகப் பிறந்த பெயரே இலங்கா என்பதாகும் இதுவே பின்பு இலங்கை என தமிழில் மாற்றமடைந்தது. இங்கு குறிப்பிடத் தக்கது. இவ்வாறு ஈழம் என்னும் இடத்தைக் குறிப்பிடும் பல தொல்லியல் சான்றுகளை INSCRIPTIONஸ் OF CEYLON – VOLUME 1 என்னும் புத்தகத்திலும் ANNUAL RE-PORT ON SOUTH INDIAN EPIGRAPHY – VOLUME 1(1908) என்னும் புத்தகங்களிலும் நாம் காணமுடியும்.

இங்கு கூறப்பட்டவை யாவுமே 2000 வருடங்களுக்கு முற்பட்ட வையாகும். ஆரம்ப காலங்களில் முழு இலங்கையையும் குறிக்கப்பயன்பட்ட இச்சொல்லா னது இன்று இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களிற்குள் சுருங்கியது பெரு வரலாறாகும்.

“ஈழ” என்பதன் அடியாகப் பிறந்த “இலங்கா” என்பது முழு நாட்டினையும் குறிக்க அதன் மூலச்சொல்லான ஈழம் என்பது இலங்கையின் வட, கிழக்குப் பகுதியினையே இன்று குறித்து நிற்கின்றது.

இன்றைய உலகின் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகராக மெக்ஸிக்கோசிற்றி குறிக்கப்படுவதுபோல அன்றும் ஈழத்தில் “ஈழஊர்” என்னும் ஓரிடத்தை வரலாற்றில் நாம் காணமுடியும். இது இன்றைய பூநகரிப் பகுதியின் “வேரவில்”; எனப்படும் பகுதியாகும். அதன் அருகில் இருக்கும் குடா “ஈழவன் குடா” என அழைக்கப்பட்டது.

இவ்வாறு போர்த்துக்கேயர் காலம்வரை குறிப்பாக 1621ம் ஆண்டு இப்பகுதி ஈழ ஊர் என அழைக்கப்பட்ட வரலாற்றுக் குறிப்புகள் எம்மிடம் உண்டு. (THE TEMPRAL AND SPIRITUL CONQUEST OF CEYLON,FERNAO DE QUEYROZ) அநுராதபுரத்திற்கு வடக்கே இருந்து வருபவர்களை குறிக்கும் சொற்களாக சோழ, ஈழ என்பன பௌத்த இதிகாசங்களில் காணப்படுகின்றன. இதுபோலவே பௌத்த மத இலக்கியமான மகாவம்சத் திலும் மேற்கூறிய ஈழாளனை சோழ நாட்டிலிருந்து வந்ததாக குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூலநூலான தீபவம்சத்தில் இவனுடைய பெயர் (ஈ)ஏலார எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர சோழநாட்டில் இருந்து வந்தவன் என்ற குறிப்பேது மில்லை.

இவ்வாறு ஈழ ஊர்ப்பகுதியிலிருந்து அநுராதபுரத்தை வெற்றி கொண்ட காரணத்தால் இவனுடைய பெயர் ஈழாளன் அல்லது ஈழரா(சா) என அழைக்கப்பட்டுள்ளது. எனினும் மொழிமாற்றத்தில் ஏற்பட்ட தொடரான குளறுபடியால் பின்பு ஈழாளன், ஏலாலன் அல்லது எல்லாளன் என
மாற்றமடைந்தது. இவ்வரசன் 44 வருடங்கள் அநுராதபுரத்திலி ருந்து நல்லாட்சி செய்தபின் தனது வயோதிப வயதில் துட்டகைமுனு என்னும் இளையனான பௌத்தமத அரசானால் தனிச்சமரில் கொல்லப்பட்டார். இவ்வாறு இவன் வீரமரண மடைந்து அவனது இறுதிக்கிரியை நடைபெற்ற இடத்திலேயே துட்டகைமுனுவால் ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட்டு அது ஏழாளன் நினைவுத் தூபி (TOMB) எனவும் அழைக்கப்பட்டு வந்தது.

அப்பகுதி ஏழாளனின் நினைவுத் தூபிக்கு அருகா மையில் இருந்ததால் ஏழாளசோண என அன்று முதல் அழைக்கப்பட்டு வருகின்றது. “சோண” என்னும் வடமொழிச் சொல் அருகாமை என்னும் பொருள் கொண்டது.

இந் நினைவுத்தூபிக்கு முன் இருந்த ஒழுங்கையிலேயே பிரபாகரனின் தந்தையாரான திரு.வேலுப்பிள்ளைக்கு உரிய விடுதி வழங்கப்பட்டிருந்தது.  இவ்விடுதியிலிருந்து புறப்பட்டு வேலைக்கு அல்லது வெளியில் எங்கு செல்வதானாலும் ஈழாளனுடைய நினைவைத் தாங்கி நிற்கும் இச் சேதியத்தைக் கடந்துதான் செல்லவேண்டும். இது தினசரி நடைபெறும் சம்பவமாகும்.  இந்நிலையில் பவித்திரமான வேலுப்பிள்ளை பார்வதி தம்பதியினருக்கு கருவுண்டானது.

இக்கருவே பிரபாகரனாக பின்பு அவதாரமானது. தினம் தினம் ஈழாளனுடைய அந்த நினைவுத்தூபியினைத் தரிசித்து வாழ்ந்த அந்தத் தம்பதியினருக்கு தமிழ்ஈழம் என்னும் நாட்டைஉருவாக்க முயன்ற மகன் பிறந்தது ஆச்சரியமில்லை. கர்ப்பமுண்டாகிய பெண் தொடர்ச்சியாக எதனைக் கவனமாக மிக உள்ளுணர்வுடன் பார்க்கின்றாரோ அல்லது சிந்திக்கின்றாரோஅவ்வாறே குழந்தையின் உணர்வுகளும் உருவாகும் என்பது இக்கால நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பு. இதுவே 55 வருடங்களுக்கு முன் பிரபாகரன் உருவாகிய வரலாறு.

இதனையே திருமூலர் தனது திருமந்திரத்தில்

“ஏயங்கலந்த இருவர்தஞ் சாயத்துப்
பாயுங்கருவும் உருவாம் எனப் பல
காயங்கலந்தது காணப்பதிந்தபின்
மாயங்கலந்த மனோலயமானதே”

என தனது திருமந்திரம் முதலாம் பாகத்தில் 459ம் பாடலில் இவ்வாறு கூறியிருப் பதும் எமது முன்னைய தமிழர்களின் நுண்ணறிவிற்குச் சான்றாகும்.

நன்றி : வல்வை

http://www.valvai.com

Monday, April 19, 2010

கேணல் சங்கர்














வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம்
(வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
18.9.1949-26.9.2001)

யாழ் மாவட்டம் வடமராட்சிப் பகுதியின் கடற்கரைப் பிரதேசமான வல்வெட்டித்துறை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு பல தளபதிகளையும் தலைவர்களையும் தந்துதவிய ஒரு ஊராகும்.

அங்கு வாழ்ந்த வைத்தியலிங்கம் தம்பதிகளுக்கு ஆறு ஆண் பிள்ளைகள். இவர்களில் இரண்டாவது மகனாக 1949ல் அவதரித்தார் சொர்ணலிங்கம். இவர் தனது ஆரம்பக் கல்வியை வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்திலும் பின்னர் ஹாட்லிக் கல்லூரியில் 1959 முதல் 1969 வரையிலும் பயின்றார்.

பள்ளி நாட்களில் உதைபந்தாட்டத்தில் சிறந்து விளங்கிய சொர்ணலிங்கம் மிகவும் துடிப்பு மிகுந்த மாணவராவார். தாமோதரம் பிள்ளை இல்லத்தின் மூலம் ஹாட்லியில் பல விளையாட்டுக்களிலும் பங்கு பற்றியவர்.

பின்னர் சென்னையில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் விமான பொறியியல் பயின்ற அவர் அதில் சிறப்பு சித்தி பெற்று கனடாவின் `ஏர் கனடா`வில் வேலைக்குச் சேர்ந்தார். பணி நிமித்தம் கனடாவின் மொன்றியல் நகருக்குச் சென்று கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் வசித்தார்.

1981இன் ஆரம்பகாலங்களில் தனது சகோதரன் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப்பாதையில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சங்கர் அவர்கள் 1983 ஜூலை இனக்கலவரத்தின் பின்னர் தாயகம் திரும்பி தன்னை முழுமையாக போராட்டத்துடன் இணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து தனது இறுதி மூச்சுவரை தமிழீழ விடுதலைப் போராட்டப் பாதையில் விடுதலைப் புலிகளின் சகல நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டார்.

விடுதலைப் புலிகளுடனான அவரின் தொடர்பு உண்மையில் 1971ம் ஆண்டே தொடங்கி விட்டிருந்தது. சென்னையில் தங்கி படித்த காலத்திலேயே சாதுவான தொடர்புகளை ஏற்படுத்திய அவர் கனடா சென்றதும் விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கொள்வனவு சம்பந்தமான அலுவலகங்களை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

1985ம் ஆண்டு சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றின் மூலமாக புளொட் இயக்கத்திடமிருந்து பொட்டு அம்மானை மீட்டு தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானார்.

பின்னர் தலைவருடன் சேர்ந்து இயக்கத்துக்கு சொந்தமாக கப்பல் ஒன்றையும் ரோலர் ஒன்றையும் வாங்கினார். ரோலரில் புலிகள் இயக்க வரலாற்றில் முதல் முறையாக ரேடார் ஒன்றையும் பொருத்தினார்.

தேசியத் தலைவர் அவர்களது எண்ணப்படி விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய புதிய பரிமாணங்களுக்கும், கட்டுமானங்களிற்கும் செயல்வடிவம் கொடுத்து விடுதலைப் போராட்ட போரியல் வரலாற்றில் புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்தியவர் கேணல் சங்கர்.

ஈழப்போரில் கடற்பரப்பின் முக்கியத்துவம் கருதி தலைவரின் சிந்தனைப்படி `கடற்புறா` என்னும் பெயரில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, முதன்முதலில் சிறீலங்காக் கடற்படையின் பாரிய யுத்தக் கட்டளைக் கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்காக கடற்புலிகளான காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகியோரைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர்.

அதேபோன்று விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர். சகல போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களையும், ஆயுத, வெடிபொருட்பாவனையின் நுட்பங்களையும், காடுகளின ஒவ வொரு அங்குலங்களையும் அணுவணுவாகக் கற்பித்து, மரம், செடி, கொடி, விலங்குகள் என்பன பற்றிய தகவல்களை தெளிவுபடுத்தி பயிற்றுவித்த நல்லாசிரியர் கேணல் சங்கர்.

இறுதியாக தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற ஓயாத அலைகள் நடவடிக்கையில் தலைவருடன் அருகில் நின்று இராணுவ அசைவுகளுக்கேற்ப போராளிகளின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தி சமர்களை, வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உதவியவர்.

புலிகளின் விமான எதிர்ப்பு பிரிவை அமைத்ததும் சங்கர் அவர்களே. அதே போன்று 2001ல் நடைபெற்ற கட்டுநாயக்கா விமானநிலையம் மீதான தாக்குதல் திட்டத்தை உருவாக்கி அதை செம்மையாக வழி நடத்தியவரும் அவரே.

இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமன்றி, அரசியல் பேச்சுக்களிலும் பங்குபற்றி ஈழத் தமிழர்களது நியாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இறுதியாக நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருடனான பேச்சுக்களின் போதும் தலைவருடன் கூட இருந்து சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் சங்கர் அவர்கள். அமைதியாக இருந்தவாறு தனது ஆளுமையால், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர் கேணல் சங்கர் அவர்கள்.

இவர் மட்டுமன்றி இவரது குடும்பமும் தன்னை முழுமையாக விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்து நிற்கின்றது. கேணல் சங்கரின் மூன்று சகோதரர்களும் தங்களை விடுதலைப் போராட்டத்துக்காக அர்ப்பணித்துள்ளனர்.

1987இல் நாவற்குழி இராணுவ முகாம் மீதான தாக்குதல் முயற்சியில் இவரது சகோதரன் சித்தார்த்(வைத்தியலிங்கம் வசீகரன்), லெப். கேணல் பொன்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவரே சங்கர் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவருடன் தொடர்புபடுத்தியவர். இவரின் இன்னொரு சகோதரன் கப்டன் கரன்(வைத்தியலிங்கம் மனோகரன்) இந்திய-சிறீலங்கா கூட்டுச் சதியால் லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளில் ஒருவராக `சயனைட்` அருந்தி வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இவரின் இளைய சகோதரன் மன்னாரில் இராணுவத்துடன் இடம்பெற்ற ஒரு மோதலில் காணாமல் போனார். அதன் பின்னர் அவர் பற்றி எந்த செய்தியும் இல்லை.

2000ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைவீச்சில் மேலும் ஒரு சகோதரர் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டார்.  ஒரே ஒரு மருத்துவ சகோதரன் மற்றும் தற்போது ஐக்கிய ராஜ்ஜியத்தில் வசித்து வருகிறார்.

இவ்வாறு கேணல் சங்கர் அவர்களது குடும்பம் தமிழீழ விடுதலைக்காய் இரத்தம் சிந்தி தன்னை முழுமையாக அர்ப்பணித்து நிற்கிறது.

தியாகி திலீபனின் பதின்நான்காம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வுகளில் பங்கு பற்றுவதற்காக ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்தது. ஈழ விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

தலைவனுக்கு உற்ற தோழன். போராளிகளுக்கு நல்ல ஆசான். பழகுவதற்கு பண்பானவன். மக்களுக்கு அரசியல், இராணுவ அணுகுமுறைகளில், எதிரிக்கு ஒரு சவால் என இருபது வருடம் நன்கு செழித்து வேர்விட்டு விழுதெறிந்த ஆலமரம் கேணல் சங்கர்.

-சாணக்கியன்












































































அன்னை பூபதி














கணபதிப்பிள்ளை பூபதி
(கிரான், மட்டக்களப்பு
3 நவம்பர் 1932 - 19 ஏப்ரல் 1988)

தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய்  எரிந்து பகைவனை அழித்த போராளிகள்  உண்டு. அதேபோல எரி குண்டின்  நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும்  உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால்  நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா  என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள்  ஒருவர் தியாகி திலீபன் மற்றவர்  அன்னை பூபதி.

திலீபன் போராளி ! அன்னை பூபதி ஒரு தாய் ! போராளிக்கும் தாய்க்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. மாறாக போராளியும் தாயும் ஒன்றுபடுவதற்கும் ஓரிடம் இருக்கிறது.

தன் மக்களை அழிவிலிருந்து காக்க போராளி போர்க்கோலம் பூணுகிறான் ! அதேபோல தன் குஞ்சுகளுக்கு உயிராபத்தென்றால் தாய்க்கோழிகூட போர்க்கோலம் பூணும் ! எனவேதான் போர்க்கோலம் பூணுமிடத்தில் போராளியும்இ தாயும் பேதமின்றி ஒற்றுமைப் படுகிறார்கள்.

தமிழீழப் போராட்ட வரலாற்றில் அன்னை பூபதி என்ற பெயரைக் கேட்டவுடன் நிறையப்பேர் ஒரு தாயின் வடிவத்தில் அவரைக் கண்டு அன்னையாக வழிபடுகிறார்கள்.

ஆனால் அன்னை பூபதி என்பவர் வெறுமனே பிள்ளைகளுக்கு அன்னையானவர் அல்ல. போர்க் குணத்திற்கும்இ தமிழீழப் போராட்டத்திற்கும் அன்னையானவர் என்ற கோணத்தில் நோக்கப்பட வேண்டியவர். அவ்வாறு நோக்குவோரே அவரின் போராட்டத்தில் இருந்து தெறித்த அக்கினிப் பொறிகளை எளிதாக அடையாளம் காண முடியும்.

ஓர் சாதாரண அன்னையென்றால் தன் பிள்ளைகளுக்கே இறுதிவரை பாசமுள்ள அன்னையாக இருக்க ஆசை கொள்வாள். ஆனால் அன்னை பூபதி அப்படிப்பட்டவரல்ல ! அன்னைப் பாத்திரத்தின் கட்டுக்களை அறுத்து அநீதிக்கெதிராக போர்க்கோலம் பூண்டு வெளிவந்தவர். ஆகவேதான் அவரை போர்க்கோலம் பூண்ட அன்னை என்று நோக்குவதே சாலப் பொருத்தமானதாகத் தெரிகிறது.

நமக்கு போரில் வெற்றி வேண்டுமானால் வெற்றிக்கு வாய்ப்பான இடத்தில் நம்மை நிறுத்திக் கொண்டு போரைத் தொடங்க வேண்டும் என்பார் வள்ளுவர். யானையை முதலை வெல்ல வேண்டுமானால் அது நீருக்கு வரும்வரை முதலை காத்திருக்க வேண்டும். அதுபோல முதலையை யானை வெல்ல வேண்டுமானால் முதலை தரைக்கு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பது குறள் தரும் விளக்கம்.

இப்படி தன் பலத்தையும்இ மாற்றான் பலத்தையும் சீர் து}க்கி இறுதியாக இந்திய இராணுவத்திற்கு எதிராக சத்தியப் போரொன்றைப் புரிவதே சாலச் சிறந்தது என்னும் முடிவுக்கு வருகிறார் அன்னை பூபதி.

சத்தியம் நெருப்புப் போன்றது. அது உள்ளத்தில் மட்டும் இருப்பது ! நிராயுதபாணியாக நின்று நடாத்தப்படும் ஒரு போர். சத்தியத்தை ஓர் ஒப்பனைக்கான போர்வையாகப் போர்த்தியிருப்போர் நிஜமான சத்தியத்துடன் மோதினால் போலியான சத்தியப் போர்வை எளிதாகத் தீப்பற்றிக் கொள்ளும்.

இந்த உண்மையை நன்கு கண்டு கொண்டு 1988ம் ஆண்டு மார்ச் மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குகிறார் மட்டக்களப்பைச் சேர்ந்த பூபதி கணபதிப்பிள்ளை என்ற இந்த வீரத்தாய் ! அவருடைய உண்ணாவிரதப் போராட்டம் இரண்டு முக்கிய கோரிக்கைகளை மையமாகக் கொண்டிருந்தது. ஒன்று யுத்தத்தை நிறுத்த வேண்டும்இ இரண்டு இந்திய சிறிலங்கா அரசுகள் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் ! இதற்காகவே அவர் உயிர் கொடுத்துப் போராட முன்வந்தார்.

இந்திய சிறிலங்கா அரசுகள் அவருடைய கோரிக்கைகளுக்கு செவி கொடுக்க முன்வரவில்லை ! அன்னை பூபதியோ ஒன்றுக்குமே இணங்கி வராதவர்களுக்கு எதிராகப் போராடி தனது உயிரையே கொடுத்தார். அவரது போராட்டம் பல பல கட்டங்களாக தடைகளைச் சந்தித்தது ! ஆயினும் அவர் இறுதிவரை மனம் தளரவில்லை.

அவரது மரணம் பொறி தட்டி சமூக எழுச்சியாக மாறிவிடக் கூடாது என்பதில் இந்திய இராணுவ அதிகாரிகள் கவனமாக இருந்தார்கள். அன்னையின் இறுதி யாத்திரை நேரத்தில் கூட ஊரடங்குச் சட்டமிட்டனர். ஆனால் அதையெல்லாம் உடைத்தெறிந்து அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதை நினைத்தால் இன்றும் ஆச்சரியமே ஏற்படுகிறது!

அன்று நடந்த அன்னை பூபதியின் இறுதி ஊர்வலம் அந்த மண்ணில் நின்ற இந்திய அரசுக்கு சில செய்திகளைக் கூறியது ! ஆன்மாPதியான போராட்டத்தின் அதிர்வலைகள் கண்ணுக்குத் தெரியாமல் பரவிச் செல்பவை ! அவற்றின் சக்தி எந்தப் பலமுள்ள அரசையும் வேரோடு பிடுங்கி வீசிவிடும் சக்தி வாய்ந்தது. ரஸ்யர்களின் பட்டினி நெருப்பு உலகத்தை வெல்லத் துடித்த ஜேர்மனிய நாசிகளையே து}க்கி வீசியது ! காந்தியத்தின் பட்டினி நெருப்பு பிரித்தானிய அரசை இந்திய மண்ணிலிருந்து அகற்றியது ! இவைகள் ரஸ்யாவிலும்இ இந்தியாவிலும் மட்டுமே நடக்கும் அது தமிழீழத்திற்குப் பொருந்தாது என்று நினைத்தவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

பஞ்ச பூதங்களில் அழுக்கில்லாதது நெருப்பென்று கூறுவார்கள். ஆனால் அந்த நெருப்பிடமும் ஒரு குறை இருக்கிறது. மற்றவைகளை எரிப்பதன் மூலம் தான் மட்டும் வாழும் சுயநலம் கொண்டது நெருப்பு. எரிந்து போகும் அப்பாவிகள் இல்லாத இடத்தில் நெருப்புக்கும் இடமில்லை.

இந்த நெருப்புப் போலத்தான் இன்று உலகில் உள்ள அரசுகளின் இயல்பும். தம்மிடம் அழுக்கில்லை என்று புனிதம் பேசுவதில் அவற்றிற்கு இணையான புனித நெருப்புக்கள் இந்த உலகிலேயே கிடையாது. ஆனால் மற்றவர்களை எரித்து தாம் மட்டும் வாழ்வதில் அவை கொண்டுள்ள சுயநலம் இருக்கிறதே அதுவும் இந்த நெருப்பைப் போன்றதுதான்.

ஈழத் தமிழினத்தை ஏமாற்றி அவர்களை எரிந்து போகும் விறகுகளாக்கி அதில் தான் நிலைபெற ஆசை கொண்ட சிறிலங்காவின் சுயநலம் நெருப்பு போன்றதுதான். அந்த நெருப்பு அணைந்து போகாமலிருக்க அடிக்கடி காற்றாக வீசி உதவிக் கொண்டிருக்கிறது இந்திய இராஜதந்திரமும் அதே வகையான நெருப்புத்தான்.

இந்த இரு நெருப்புக்களுடனும் தனியாக நின்று போராடியதுதான் அன்னை பூபதி என்னும் சத்திய நெருப்பு ! இந்த நெருப்பு மற்றவர்களை எரித்து தான் மட்டும் வாழும் சுயநலம் கொண்டதல்ல ! அது தன்னைத்தானே அழித்து மற்றவர்களுக்கு ஆத்ம ஒளி கொடுப்பது. மற்றவர்களை அழிக்க வந்திருக்கும் ஆதிக்க நெருப்பை அடையாளம் போட்டுக் காட்டும் வல்லமை கொண்டது. அந்த வல்லமைதான் இந்திய இராணுவமே கட்டம் கட்டமாக தழிழீழ மண்ணிலிருந்து வெளியேற நேர்ந்தது.

எப்போதுமே தேசங்கள் இரண்டு வகையாக இருக்கும் ஒன்று கண்ணுக்குத் தெரியும் தேசம்! மற்றது கண்ணுக்குத் தெரியாத தேசம்! கண்ணுக்குத் தெரியும் தேசத்தை பகைவர்கள் ஆக்கிரமிக்கலாம் ஆனால் கண்ணுக்குத் தெரியாத தேசத்தை எந்தப் பகைவரும் ஆக்கிரமிக்க முடியாது. இந்தக் கண்ணுக்குத் தெரியாத தேசம் மக்களின் இதயங்களில் உருவாவது ! உலகில் உள்ள தேசங்கள் எல்லாமே முதலில் உருவானது மக்கள் இதயங்களில்தான். அதன்பின்புதான் அவை கண்ணுக்குத் தெரியும் தேசங்களாக உருவெடுத்தன.

அன்னை பூபதியின் மரணம் சம்பவித்தவுடன் ஏற்பட்ட அதிர்வலைகள் தமிழீழ மக்களை எல்லாம் ஒட்டு மொத்தமாகப் பாதித்தது. இந்திய அரசையும்இ அதன் எண்ணங்களுக்கு உட்பட்ட தீர்வையும் நிராகரித்து தமிழீழமே இனி எங்கள் தேசம் என்ற உறுதியான எண்ணத்தை மக்கள் மனதில் து}க்கிப் போட்டது.

அன்னை பூபதி கண்களை மூட தமிழ் மக்கள் இதயக் கண்கள் அனைத்தும் ஒரு நொடி ஒற்றுமையாக அகலத் திறந்தன. ஆம் ! அந்த நொடியிலேயே கண்ணுக்குத் தெரியாத தமிழீழம் மலர்ந்து விட்டது.

சுதந்திர தமழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய்!

Sunday, April 18, 2010

இந்தியா இனி நமக்கு நீ மகா பாரதம் அல்ல! மகா பாதகம்














மகா பாரதமே! நீ இந்த மகா  பாதகத்தைச் செய்தது தான் ஏனோ? இந்தியா - பெரிய தேசம்; சிறிய  இதயம் :

உயர்ந்த கோயிற் கோபுரங்கள், தாழ்ந்த உள்ளங்கள்! காந்தி தேசம், கருணையற்ற இராஜாங்கம்!! அன்னை இந்திரா தேசமே!!! இது தான் உன் தாய்மையா? ஓ! பாரத மாதாவே!!!

உன் மைந்தர்கள் இராஜதந்திரிகளா? இல்லை இராட்சதர்களா? - ஒரு கொலைக் குற்றவாளிக்குக் கூட சிகிச்சை அளிப்பது தான் தர்மம்.

வந்து தங்கிப் போக இது தர்மசாலை இல்லை என்கிறார் சுவாமி.

ஆம், இந்த நாராயண சிவசங்கர் சுவாமிகள் தான் முள்ளிவாய்க்காலில் நர மாமிசத்தை உண்டு, தமிழ் மக்களின் இரத்தத்தையும் குடித்தனரா?

இந்த அன்னை பிரபாகரனைப் பெற்றது தான் குற்றமா? அவரைத்தான் கொன்று விட்டோம் என்கிறீர்களே! அப்படியானால் இன்னுமேன் அச்சம்?

கிறிஸ்தவர்களிற்கு ஜெருசலெம் மீது ஒரு பக்தி! இஸ்லாமியர்களிற்கு மக்கா மீது ஒரு மதிப்பு!! ஈழ இந்துக்களிற்கு இந்தியா மீது ஒரு அபிமானம்!!!

ஏகபத்தினி விரதனின் இராமேஸ்வரமும், சிவசக்தி “பார்வதிக்” கயிலையும், திரிபுரசுந்தரி சீர்காழியும், நான்மறைக் கூடல் மதுரை மீனாட்சியும், ஐங்கரனின் அருள்மிகு ஆலயங்களும், ஆறுமுகத்தானின் ஏழு படை வீடுகளும், அட்ட பாலகரின் அணையாத தீபங்களும், எட்டுத் திக்கும் ஒலிக்கும் ஆலய மணிகளும்,

நவக்கிரகங்களிற்கும் கோவில் கொண்ட மகா பாரதமே! நீ இந்த மகா பாதகத்தைச் செய்ததது தான் ஏனோ?

இப்போது புரிகிறது நீ சிறீலங்கா நமோ நமோ தாயிலும் கொடியவள் என்று. அன்று அவள் விடுவித்தாள் இன்று நீ துரத்துகிறாயா?

ஆம் சிங்களம் பங்காளிப் பகையாளி இந்தியா தான் நிஜமான நிரந்தரப் பகையாளியா?

நிரூபன் சென் சொன்னார் பருத்தித்துறையில் நின்று அன்று இராம கிருஷ்ணரும், விவேகானந்தரும், காந்தியும், நேதாஜியும் பகவத்சிங்கும் பிறந்த மண் பாரத மண் என்று.

எங்கள் நேதாஜி பிரபாகரன் தான். காந்தி தேசத்தால் ஒழிந்த தலைவன் தான் தமிழ்ப் பகவத்சிங்.

சிறீலங்காவில் ஒரு சிங்கள ஒன்லி இந்து சமுத்திரத்தில் இந்தியா ஒன்லிப் பொலிசியா? ராஜீவ் காந்தியைப் பார்த்து ஜே ஆர் சொன்னார் நீ ஆசியாவின் பொலிஸ்காரனாய் இரு என்று.

நீ இராட்சதியாய் மாறியது எப்போது? காஞ்சியும் திருப்பதியும் பழனியும் இன்னுமாக எத்தனையோ திருத்தலங்களும், புண்ணிய நதிகளும் இமயமாய் உயர்ந்த பல்வேறு மலைக் கோயில்களும்

தரிசிக்க மட்டுந் தானா? இவைகள் எல்லாம் வெறும் கல்லும் மண்ணுமாகியது எப்போது? சிறிய ஈழம் வளரந்திருந்த போராட்டம், பெரிய இந்தியா சிறிய இதயம்.

சிறிய பிரதேசம், அதிக பிணங்கள் ஆறு முன்னே அடுத்த காயம்

முடிவாக இந்தியா இனி நமக்கு நீ மகா பாரதம் அல்ல! மகா பாதகம்.

மனித இனத்துக்கே நேர்ந்த அவமானம்!














வார்த்தைக்கு வார்த்தை தமிழே, என் உயிரே, தமிழ்ப் பெருங்குடி மக்களே, உலகத் தமிழினமே என்றெல்லாம் பசப்பு வார்த்தை பேசி பதவி நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களின் முகத்திரை நேற்று நள்ளிரவு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கிழிந்து தொங்கியது.

80 வயதான ஒரு மூதாட்டி-

ஓலைச் சுவடிகளிலும் ஏடுகளிலும் மட்டும் தமிழன் பார்த்த வீரத்தையும் கம்பீரத்தையும் வாழ்க்கையாய் வாழ்ந்து காட்டிய ஒரு தமிழ் மகனைப் பெற்றெடுத்த பெருமைக்குரிய தாய்-

பக்கவாதம் தாக்கி, பாதி மயக்கத்தில் சிகிச்சை வேண்டி, தாயகத்து உறவுகளை நம்பி வந்த ஒரு தமிழச்சிக்கு நேர்ந்த அநீதியை மானமுள்ள தமிழன் தான் வாழுமட்டும் மறக்க முடியாது!

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாவை அவர் வந்த விமானத்திலிருந்து கூட கீழே இறங்க அனுமதிக்காமல், விமானத்திலேயே இருத்தி வைத்து, மீண்டும் அதே விமானத்தில் மலேஷியாவுக்குத் துரத்தி தங்கள் இறையாண்மையையும் விசுவாசத்தையும் காப்பாற்றிக் கொண்டதாக பீற்றிக் கொண்டுள்ளன இந்திய – தமிழக அரசுகள்.

பக்கவாதத்தால் சோர்ந்த மனமும் உடலும் கொண்ட ஒரு மூதாட்டி தொடர்ந்து எட்டு மணி நேரம் பயணம் செய்தால் என்ன ஆவார் என்பதை இதயம் உள்ள மனிதர்கள்- பிரபாகரனை விமர்சிப்பவர்களாகவே இருந்தாலும்- சிந்தித்துப் பார்க்கட்டும்.

பார்வதி அம்மா இந்தியாவுக்கு வர மறைமுகமாகவோ பின் வாசல் வழியாகவோ விசாவுக்கு விண்ணப்பிக்கவில்லை. நேர்மையான முறையில், தான் பிரபாகரனின் தாயார் என்ற உண்மையைச் சொல்லியே விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்தை நன்கு பரிசீலித்த பிறகே ஆறுமாத காலம் இந்தியாவில் தங்கியிருக்க விசா அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த பாழாய்ப்போன விசாவை நம்பித்தான் அந்தத் தாய் சென்னை விமானத்தில் பயணித்தார்கள்.

சென்னை விமான நிலையத்துக்குள் மலேஷிய விமானம் நுழையும் போதுதான் இந்த விசாவும் மருத்துவ சிகிச்சை ஏற்பாடுகளும் செய்திருப்பது வைகோவும் நெடுமாறனும் என்ற உண்மை தெரிந்ததோ… அதன் பலன்தான் இந்த அனுமதி மறுப்பும் திருப்பி அனுப்பலுமா, அல்லது அதையும் தாண்டிய நிர்பந்தங்களா!

கருணாநிதி என்ற மனிதர் மீது தமிழ் உணர்வாளர்களுக்கு கொஞ்ச நஞ்சம் எங்கோ ஒட்டிக் கொண்டிருந்த மரியாதை கூட காற்றில் பறந்துவிட்டது, சோனியா என்ற ஒரு பெண்மணிக்காக, அவர் தயவில் தனது குடும்பத்துக்குக் கிடைக்கும் அல்ப ஆதாயங்களுக்காக அவர் எதையும் செய்யத் துணிவார் என்ற உண்மை உரைத்தபோது. தனது இனத்தின் மதிப்பு மிக்க ஒரு பெண்மணிக்கு நேர்ந்த இந்த அவமானத்தை அவர் வேடிக்கைப் பார்த்தது மட்டுமல்ல, அதன் பகிரங்க பங்காளியாகவும் அவர் காட்சி தருகிறார்… மத்திய அரசின் செயலுக்கு கருணாநிதி என்ன செய்வார், பாவம் என்று சொல்பவர்கள், நிச்சயம் இந்தியாவில் வசிக்கவே தகுதியற்றவர்கள்!

இந்திய அரசில் நேரடியாக எந்தப் பதவியிலும் இல்லாத ஒரு பெண்மணிக்காக, வீல்சேரிலேயே மீனம்பாக்கம் விமான நிலையம் வரை போய் காத்திருந்து மலர்ச்செண்டு அளித்து வரவேற்கும் முதல்வர் கருணாநிதிக்கு பிரபாகரன் தாயாரெல்லாம் ஒரு பொருட்டாகத் தெரியாததில் வியப்பில்லை. அவருடன் கூட்டணி வைத்துக் கொள்ள முடியுமா அல்லது குறைந்தபட்சம் தேர்தல் ஆதாயமாவது கிடைக்குமா!

உலகின் மூன்றாவது பெரிய ராணுவம், அணுசக்தியில் அமெரிக்காவுக்கு சமமாய் பேசும் பவிசு, தென்னாசியாவின் பெரியண்ணன் என்றெல்லாம் தன்னை வர்ணித்துக் கொள்ளும் இந்தியா, இந்த வயதான தாயைத் திருப்பி அனுப்ப சொன்ன காரணம் – ‘உள்நாட்டு பாதுகாப்புக்கு பங்கம் வந்துவிடும்!’

பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்பதையெல்லாம் கூட விடுங்கள்… பிரபாகரனின் வயதான தாயைப் பார்த்தாலே கழிகிறார்களே.. இதுவா இந்த பெரியண்ணனின் வீரம்?

நேரடியாக அதிகாரத்தில் இல்லாமல் ஒட்டுண்ணிகளைப் போல அதிகாரத்தை உறிஞ்சி வாழும் நேரு வம்சத்தின் மிச்சத்திடம் இதற்குமேல் வேறெதை இப்போதைக்கு எதிர்பார்க்க முடியும்!

பாகிஸ்தான் உள்பட உலகின் எந்தப் பகுதியிலிருந்து, எந்த இனத்தைச் சேர்ந்தவர் வந்தாலும், அவர்களுக்கு ஒரு கஷ்டமென்றால் எதையும் பார்க்காமல் உதவும் இந்த தமிழர்களுக்கு, தன் சொந்தத்தை வைத்துப் பராமரிக்கும் உரிமை கூட மறுக்கப்படுவது நியாயமா?

ஈழத் தமிழனுக்கு ஆதரவுக் கரம் நீட்டுபவன் எல்லாம் பிரிவினைவாதி என்ற குருட்டுத்தனத்தை எப்போது விடப்போகின்றன இந்திய – தமிழக அரசுகள்…?

எல்லையையும் இறையாண்மையும் மதித்துக் கொண்டுதான், எமது மனிதநேயத்தையும் காட்டுகிறோம். அதற்கும் தடையா? என்றோ வெட்டிக் கொண்டு போன சிங்களத்துடன் ஒட்டி உறவாடும் இந்திய அரசு, இன்னும் தொடரும் எமது தொப்புள்கொடி உறவை வெட்ட நினைப்பது நியாயமா?

ஈழத்துத் தமிழர்களுக்கு நாங்களே எல்லாம்… எங்களால்தான் அவர்களைப் பாதுகாக்க முடியும் என்று மார்தட்டிய முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது தொண்டரடிப்பொடிகள் எங்கே போய்விட்டார்கள் இப்போது? பார்வதி அம்மா ஈழத் தமிழரில்லையா… எப்போதும் பீரங்கியும் துப்பாக்கியுமாகவா காட்சி தருகிறார் அவர்?

அவரை இந்த அளவு கொடுமைப்படுத்தியதற்கு இந்திய – தமிழக அரசுகள் பொருத்தமான ஒரு காரணத்தைச் சொல்ல முடியுமா?

போரில் நேருக்கு நேர் மோதும் எதிரிக்கும் கூட, மனிதாபிமான உதவிகள் அளித்த தேசம் என்று என்று பழம்பெருமை பேசும் இந்தியா, தனது சொந்த குடிகளின் சோதரர்களிடம் காட்டும் இந்த துவேஷம், மனிதாபிமானம் என்ற வார்த்தையையே கேலிக்குரியதாக்கியுள்ளது. பதவி வெறியும் சுயநலமும் கொண்ட தமிழ்நாட்டு அரசியல் வியாதிகள் இதற்குத் துணைபோவது இந்த இனத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குரியதாக்கியுள்ளது.

பெருமைக்குரிய இந்தியன் என்றோ, தயவுள்ளம் கொண்ட தமிழன் என்றோ சொல்லிக் கொள்ள முடியாத தலைகுனிவு, பார்வதி அம்மாவை திருப்பி அனுப்பிய மனிதாபிமானமற்ற செயலால் நேர்ந்திருக்கிறது!

இனியும் ஒருமுறை வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், பகைவனுக்கும் அருளும் நெஞ்சம் கொண்டவர்கள் போன்ற பசப்பு வார்த்தைகளை ஆட்சியாளர்கள் – அவர்களின் அடி வருடிகள் பேசாமல் இருக்கட்டும். தேடிவந்த சொந்த உறவை வா என்று கூப்பிடக் கூட வக்கில்லாதவர்களுக்கு இந்த வாக்கியங்களை உச்சரிக்கவும் அருகதையில்லை!

இந்த விஷயத்தில் அச்சு மற்றும் இணையதள ஊடகங்கள் தங்கள் உணர்வை முடிந்தவரை சரியாகவே வெளிக்காட்டின. ஆனால் தொலைக்காட்சி ஊடகம் நடந்துகொண்ட விதம் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!

-வினோ

நன்றி : என்வழி

Saturday, April 17, 2010

இன்றைய தேவைகளையும் - நீண்டகால நலன்களையும் முன்னிறுத்தி செயற்பட வாருங்கள்














கடந்த 2010 ஏப்பிரல் 08 ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் விட்டுக்கொடுக்க முடியாத அடிப்படை அரசியல் கொள்கைகள் தொடர்பாக பரவலான விழிப்பினை ஏற்படுத்தும் நோக்குடனும், வளர்ச்சி பெற்று வந்த தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டினைப் பலவீனப்படுத்திட முற்பட்ட சில அரசியல் சக்திகள் தொடர்பில் எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் நோக்குடனும் திருமலை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் போட்டியிட்ட எமக்கு வாக்களித்த மக்களுக்கும், எமது பொதுக்கூட்டங்கள் - கலந்துரையாடல்கள் - சந்திப்புக்களில் பங்கேற்ற மாணவர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், ஊடகத்துறையினர் மற்றும் அனைத்துத்தரப்பு மக்களிற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன், எமது கொள்கைகளை முழுமையாக ஆதரித்து குரல் கொடுத்த புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், புலம்பெயர் ஊடகத்துறையினர் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

இந்தத் தேர்தலானது தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டு, இறுதிப் போரின் போது இடம் பெற்ற பெரும் மனித அவலங்களின் தாக்கத்திலிருந்து மக்கள் மீண்டிடாத காலகட்டத்தில் எம் மீது திணிக்கப்பட்டுவிட்டது. அனைத்துவித சனநாயக நடவடிக்கைகளும் தோல்வியடைந்து, ஆயுதம் தரித்த உரிமைப் போராக அது மாற்றங் கண்ட வரலாற்றினைக் கொண்டிருந்த எமது தேசம் மீளவும் சிறீலங்காவின் சனநாயக அமைவுக்குள் நம்பிக்கை வைப்பதற்கான எதுவித நியாயமான காரணங்களும் இல்லாத காலகட்டத்தில் இந்தத் தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ளது.

இது பெருமளவு மக்கள் தேர்தல் நடவடிக்கைகளினையும், தேர்தலினையும் புறக்கணித்ததன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு முன்னோக்கி செல்வதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முடியாத சூழல் ஏற்பட்டது.

அதிகாரப்பகிர்வு, மிகவும் பலவீனமான சமஸ்டி ஆட்சி என்கின்ற நிலைப்பாடுகளின் தோல்வியே எமது மக்களை 1977 பொதுத்தேர்தலில் தமிழீழத் தனியரசு என்கின்ற அரசியல் இலக்கிற்கு வாக்களிக்கும் நிலைமைக்குத் தள்ளிமையும் - தொடர்ச்சியாக இடைக்கால தன்னாட்சி அதிகார சபை நிலைப்பாட்டிற்கான 2004 பொதுத் தேர்தல் ஆணையும் எம் முன்னே உள்ள கொள்கை வழிகாட்டல்களாகும்.

இந்தப் பின்னணியில் மீளவும் நாங்கள் 1977ற்கு முற்பட்ட நிலைப்பாட்டிற்குச் செல்வது மிகவும் ஆபத்தான - தற்கொலைக்கொப்பான அரசியல் பாதை என்பதை வலியுறுத்தியே நாங்கள் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை நிறுவினோம். நாங்கள் இந்தத் தேர்தல்களை பாரளுமன்றத்திற்கான ஆசனங்களைப் கைப்பற்றுதல் எனும் குறுகிய நோக்குடன் அணுகவில்லை என்பதை நாங்கள் ஆரம்பம் முதலே தெளிவாக சொல்லி வந்தோம்.

தமிழ் மக்களின் நீண்டகால நலன்களும், பாதுகாப்பும் இன்று ஏற்பட்டுள்ள குறுங்கால அச்ச நிலையினால் தோற்கடிக்கப்படாது இருப்பதற்கான விழிப்பினை ஏற்படுத்துவதே எமது முதன்மை நோக்கமாக இருந்தது. எமது தேர்தல் விஞ்ஞாபனம் இந்த அடிப்படையிலேயே எழுதப்பட்டது. தமிழர் தேசம் எனும் நிலைப்பாட்டினை தெளிவாகவும், துணிச்சலுடனும் நாங்கள் வரைவு செய்தோம்.

இந்த தமிழ்த்தேசம் சிங்கள தேசத்துடன் இணைந்து கூட்டாக செயற்படுவதற்கான நவீனத்துவமான வழிமுறைகள் பற்றி நாங்கள் விவாதித்தோம். எங்களால் இயன்றவரை திருமலை மற்றும் யாழ் மாவட்டங்களில் நாங்கள் பொதுக் கூட்டங்கள் வாயிலாகவும், சந்திப்புக்கள் வாயிலாகவும் இவற்றினை தெளிவுபடுத்தி வந்துள்ளோம். நாம் இத்தேர்தல்களில் பலத்த சவால்களைச் சந்தித்தோம். எமது கருத்துக்கள் மக்களைச் சென்றடைவதற்கான ஊடக சூழல் யாழ் மற்றும் திருமலை மாவட்டங்களில் நிலவவில்லை.

அதனை மீறி மக்களை நேரிடையாக சென்றடைவதற்கான கால அவகாசமோ, வளங்களோ எமக்குக் கிடைக்கவில்லை. அத்துடன், சில பகுதிகளுக்குச் சென்று நாங்கள் கருத்துக்களை கூறுவதற்கான வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டன. எனினும், நாங்கள் தேசம் என்பது தொடர்பான சிந்தனைகளையும், இலங்கைத் தீவின் அரசு, சிங்கள - தமிழ்த் தேசங்களின் கூட்டாக இருக்கும் வகைகள் பற்றிய எண்ண ஓட்டங்களையும் இயன்றளவு மாணவர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் தேசியப்பற்றுக் கொண்ட செயற்பாட்டாளர்கள் முன்பாக வைத்துள்ளோம்.

மேலும், புதிய இளம்வீச்சுக்கொண்ட ஆர்வலர்களையும் நாங்கள் இந்ததத் தேர்தல் மேடைகளைப் பயன்படுத்தி மக்கள் முன்பாக அறிமுகம் செய்துள்ளோம். இந்தத் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்ற மக்களின் வெளிப்படையான கருத்துக்களைக் கேட்டதன் மூலமும், தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்காத மக்களின் மௌனமான சமிக்கைகளை புரிந்து கொண்டதன் அடிப்படையிலும் நாங்கள் எமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை வடிவமைத்துச் செயற்படுத்தவுள்ளோம்.

எங்கள் நடவடிக்கைகள் அடுத்துவரும் காலகட்டங்களில் மக்களின் குறுங்கால மனிதாபிமான நலன்களை பிரதிபலிக்கும் அதேவேளையில் தமிழ் மக்களின் நீண்டகால நலன்களைப் பாதுகாப்பாதற்கான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலும் அமையும். தமிழர் தாயகத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் விரிவுபட்ட மக்கள் கட்டமைப்புக்களை நிறுவுவதையும், மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை அதிகரிப்பதையும் எம்முன்னுள்ள அவசர உடனடிப் பணிகளாக கருதுகின்றோம்.

இதற்கான ஆதரவினை அனைத்துத் தரப்பிடமிருந்தும் எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள், கற்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் துணிச்சலுடன் எம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு அழைக்கின்றோம். அத்துடன் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்டமைப்புக்களும் புலம்பெயர் ஊடகங்களும் தொடர்ந்தும் எம்முடன் கரம்கோர்த்து செயற்பட வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம்.

அதே வேளை நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல. 150000 திற்கும் அதிகமான மக்களும் 40000 திற்கும் அதிகமான இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்து வலிமை பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கொள்கை நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேர்மையாக முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென நாம் விரும்புகின்றோம்.

அவ்வாறான ஓர் சூழ் நிலை ஏற்படும் பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராக உள்ளோம். அத்துடன் ‘தனித்துவமான இறைமை கொண்ட தமிழ்த் தேசம்` என்ற நிலைப்பாட்டை உறுதியாக முன்னெடுத்துச் செல்லும் சகல தரப்புக்களுடனும் எதிர்காலத்தில் இணைந்து செயற்பட நாம் தயாராகவே உள்ளோம்.

நன்றி

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி

17.04.2010