Thursday, May 20, 2010

"நடிகை குஷ்பு சொல்வது நொண்டிச்சாக்கு" – கொதிக்கிறார் திருமாவளவன்













தான் தி.மு.க.வில் சேர்ந்ததற்கு காரணமே விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியினரும் தன் மீது போட்ட பொய் வழக்குகள்தான்..” என்று நடிகை குஷ்பு கூறியிருப்பதற்கு விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பும், பாட்டாளி மக்கள் கட்சியும் கடுமையாக ஆட்சேபித்துள்ளது.

இது பற்றி பேட்டியளித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன், “நடிகை குஷ்பு ஓர் அரசியல்வாதியாகப் பரிணமித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இது அவரின் துணிச்சலான முடிவு. பெண்கள் பொதுவாழ்வில் ஈடுபடுவது மிகவும் அவசியமானது. ஆனால் தன் அரசியல் பிரவேசத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், பா.ம.க.வும் போட்ட பொய் வழக்குகள்தான் காரணம் என்று அவர் கூறியிருக்கிறார்.

இதில் ஓர் உண்மையைச் சொல்லியாக வேண்டும். குஷ்பு மீதான இந்த வழக்குகளில் ஒன்றிரண்டுதான் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தொடுத்தவை. மற்ற அனைத்து வழக்குகளுமே கட்சி சாராத தனி நபர்களால் தொடுக்கப்பட்டவைதான். இது தொடர்பாக என் கவனத்துக்கு வந்தபோது, இத்தகைய நடவடிக்கைகளில் சிறுத்தைகள் யாரும் ஈடுபட வேண்டாம் என்று தடுத்தேன்.

அரசியலில் அடியெடுத்து வைத்ததுமே குஷ்பு முழு அரசியல்வாதியைப் போல பேசத் தொடங்கியிருக்கிறார். அரசியலில் அவர் வெற்றிகரமாகச் செயல்படுவார் என்று இதன் மூலம் தெரிகிறது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment