Tuesday, May 25, 2010
சிறீலங்கா காட்டுமிராண்டி அரசும் அதன் பாதுகாப்பு படைகளும்; மற்றொரு போர்க்குற்ற ஆதாரம் வெளியாகியது
யுத்தகாலத்தில் ஊடகவியலாளர் முதல் தாமல்லாத அனைவரையும் யுத்தப் பிரதேசத்தில் இருந்து முற்றாக அகற்றியிருந்தது சிறிலங்கா அரசு. தான் கொலைசெய்வது வெளி உலகுக்கு தெரியக்கூடாது என்பதே, அதன் மைய நோக்கம்.
எந்த வழியிலும், புலிகளை கொல்லுகின்றோம் என்ற போர்வையில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கான சாட்சிகளான காணொளிகள் வெளி வராதவாறு மூடிமறைக்க விரும்பியது. இந்த வகையில், அரசு வெளியிட்ட யுத்தக்காட்சிகள் என்பது, உண்மைகளைத் குழிதோண்டிப் புதைப்பதாக இருந்தது. இப்படி அரசு வெளியிட்ட யுத்தக் காட்சிகள், மற்றும் அவர்களின் யுத்த ஆவணங்கள், அரச தரப்பு உண்மைகளை குழிதோண்டி புதைப்பதை அடிப்படையாக கொண்டு தங்கள் சொந்தப் பிரச்சாரத்துக்காக அதை வெளியிட்டனர்.
உண்மைகளோ இதற்கு வெளியில் இருந்தது. அந்தக் காட்சிகள் வெளிவரவில்லை. சாட்சிகள் முன்வைக்கப்படவில்லை. ஆனால் தனிப்பட்ட நபர்கள் மூலம், அவை சிறியளவில் கசிந்து வெளிவருகின்றது.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment