Saturday, April 3, 2010
சிவதீபனுக்கோர் சபதம் கேள்
வன்னித் தீவின் தளபதியே
நெஞ்சுக் கூடெரித்து நஞ்சுண்ட தீபமே
ஆணையிரவில் ஆணையிட்டு -
புலிக்கொடி நாட்டிய பகிரதா – கேட்கிறதா???
எல்லி நகைத்தவரிடம்
சொல்லி அடித்த வீரமே
இருபத்தைந்து ஆண்டில்
புலிகளின் வளர்ச்சியோடு வளர்ந்த போர்புயலே – கேட்கிறதா???
சிங்களனாயிரம் சங்கருத்து
முல்லைத் தீவுபிடித்து
புலித்தலைவனின் படைக்கு மீண்டுமிரண்டு
பீரங்கி பரிசளித்த சிவதீபமே – கேட்கிறதா???
ஈழ கனவு சுமந்து
போராட்ட நெருப்பு குழைத்து
வீரமறவர் குருதிகளந்த மண் அணை கட்டி
கிளிநொச்சியை காத்த மாவீரா – கேட்கிறதா???
அர்ப்பணிப்பு, வீரம், உறுதிக்கு வலு கூட்ட
வடப்போர் முனையில் நின்று
பரிசளிப்பு விழா நடத்தி – வீரர்களின் நெஞ்சுக்கு
பேச்சுரம் பாய்ச்சிய கட்டளை தளபதியே – கேட்கிறதா???
அறுபதாண்டு காலம் ஈழம் சுமந்த
விடுதலையென்னும் ஒற்றை வார்த்தையை
இருபத்தைந்தாண்டு காலம் நீ சுமந்து
திருப்பித் தருகையில் உயிரையும் தந்த தீபனே;
இதயம் முழுதும் ரத்தமின்றி
பெற்ற உற்ற உறவுகளின்றி
ஒற்றை மரமாகவேனும் நிற்போம்,
நினைவில் எமை மறந்தும் ஒழிப்போம் -
உனை மறவோம் கேள்;
ஈழமுள்ளவரை நீயிருப்பாய்
உன் நினைவற்று போகும் முன்
ஈழம் படைப்போம்!
வெள்ளையப் படைக்கு சிக்குண்டு மாய்ந்த
இந்திய மரணங்களை மறந்து
ஈழத்தில் – அடிமை சங்கிலி பூட்ட புகுந்த
அமைதிப் படையென்ன -
ஆயிரம் படை வரட்டும்;
எப்படை வரினும் எம் படை வெல்லும் தினம்
உனக்கே உனக்கே உரித்த-தெம் சபதம் கேள்!!!
———————————————————————-
—- வித்யாசாகர்
———————————————————————–
நன்றி : மீனகம்
Subscribe to:
Post Comments (Atom)
வாருங்கள் தோழா முள்ளி வாய்க்காலில் முற்றுப்பெற்ற பாசிசத்துக்காக சேர்ந்து ஒப்பாரி வைப்போம் சிந்துவோம், ஒப்பாரி வைப்போம், தூற்றுவோம் சாபமிடுவோம். ... சேர்ந்து குரல் கொடுப்போம்.இன அழிவுப்படுகொலைகளை தடுத்து??அமைதிபோராட்டம் செய்வோம் தோழா. அருகே எங்கள் பக்கம் வாருங்கள் தோழா. அனைவரும் சேர்ந்து ஒப்பாரி வைப்போம் mullaimukaam.blogspot.com
ReplyDeletelets all join and fight against the srilankan Terrior Govt.
ReplyDeleteசுறா ரெட்டைச்சுழி என எல்லா புதுப் படங்களையும் இலவசமாக பார்க்க...
ReplyDeletehttp://sagotharan.wordpress.com/2010/05/07/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%ae%be/