Tuesday, April 6, 2010

தமிழ் மக்கள் ஒன்றுபட்டுத் தீர்ப்புக் கூற வேண்டிய வேளை இது











இலங்கையின் புதிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை மறுதினம் நடை பெறப் போகின்றது. பிரசார நடவடிக்கைகள் நேற்றிர வுடன் முடிவடைந்து விட்டன.

சுமார் 48 மணி நேர ஓய் வுக்குப் பின்னர் மக்கள் தங்களின் நாடாளுமன்றப் பிரதி நிதிகளைத் தெரிவு செய்வதற்காக நாளை மறுதினம் காலை முதல் வாக்களிக்கத் தொடங்குவார்கள்.

தென்னிலங்கை மக்களைப் பொறுத்தவரை இது அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தம்மை ஆட்சி செய்யப் போகும் அரசுப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான ஒரு வாக்களிப்பு மட்டுமே. அதுவும் நாட்டின் அடுத்த ஆறரை ஆண்டுகால நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியில் நீடிக்கப் போகின்றவர் மஹிந்த ராஜபக்ஷவே என்பது உறுதியாக்கப்பட்ட நிலையில் இந்தப் பொதுத் தேர் தலில் அவர்களது தீர்மானம் அதிகம் சர்ச்சைக்குரியதாக இருக்க மாட்டாது.

ஆனால், வடக்கு  கிழக்குத் தமிழர்களைப் பொறுத்த வரை, தமிழ்த்தேசத்தைப் பொறுத்தவரை, இத்தேர்தல் வெறு மனே அடுத்த ஆறு ஆண்டுகளுக்கான தமது நாடாளு மன்றப் பிரதிநிதிகளை அவர்கள் தேர்வு செய்யும் தேர்தல் மட்டுமல்ல. வரலாற்றுத் திருப்புமுனையில் தடுமாறித் துவண்டு, எதிர்காலப் பாதை குறித்து தெளிவற்று, அவ லப்பட்டுக் கிடக்கும் ஈழத் தமிழினத்தின் எதிர்காலத் தலை விதியைத் தீர்மானிக்கப் போகும்  அதன் தடத்தையே நிச்சயிக்கப்போகும்  ஒரு தேர்தலாகவே இது கட்டவிழ்கின்றது.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திலும், பிற தமிழர் தாய கப் பிரதேசங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிப் பெரும் கட்சியாக  சக்தியாக மேலெழுந்து வருவதற்கான தன்மை காணப்படுவதாக "இந்துஸ்தான் ரைம்ஸ்`  பத்தி ரிகை ஞாயிறன்று தெரிவித்திருக்கின்றது.

தமிழ்த் தேசிய வாதத்தை வரித்துக் கொண்டிருக்கும் கட்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே நம்பகத் தன்மை அதிகளவு உள்ளது என்றும் அப்பத்திரிகை தெரி வித்திருக்கின்றது.

தமிழ்த் தேசியத்தின் தலைவிதியை  செல்நெறியை  எதிர்காலத் தடத்தை  நிர்ணயிக்கப்போகும் இந்தத் தேர்தலில், எந்தத் தரப்புக்கு வாக்களிப்பதன் மூலம் தங்க ளின் அரசியல் போக்கைச் சரியான பாதையில் நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்பதைத் தீர்மானிக்க வேண் டியவர்களாக இருக்கும் தமிழர்கள், "இந்துஸ்தான் ரைம்ஸ்` போன்றவற்றின் மேற்படி கருத்தை உள்வாங்கிக் கொள்வதும் அவசியமாகும்.

இதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனும் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

"தமிழ் மக்கள் இன்றைய கால கட்டத்தில் தமது வாக் குரிமையை முழுமையாகப் பயன்படுத்தி, தமது அரசி யல் தீர்மானம் எதுவென்பதை இந்த நாட்டின் ஆட்சியா ளர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஐயப்பாடின்றி  ஏகோபித்த குரலில்  தெளிவாக  வெளிப்படுத்த வேண் டும், எமது மக்கள் இதைக்கட்டாய, புனித கடமையாகக் கருதி நிறைவேற்ற வேண்டும். எமது மக்களுடைய தீர்ப்பு பலம் வாய்ந்ததாக  தெளிவானதாக  இருக்குமானால் அதனை மதிக்க வேண்டிய  கடப்பாடு அரசுக்கும் சர்வ தேச சமூகத்திற்கும் ஏற்படும். அத்தகைய தாக்கத்தை  ஏற்படுத் தக்கூடிய தீர்ப்பை இத்தேர்தலில் நமது மக்கள் முன்வைக்க வேண்டும்``  என்று சம்பந்தன் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

இந்த தேர்தலில் தமிழர்களின் ஐக்கியத்தைச் சிதற டிக்கச் செய்வதன் மூலம்  அவர்களின் உரிமைக் குரலை அடக்க வேண்டும் என்று ஆட்சிப்பீடம்  கங்கணம் கட்டிச் செயற்படுகின்றது என்பது வெளிப்படை.

அதற்காகவே, தமிழர் தாயகத்தின்  ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் பல டசின் சுயேச்சைக் குழுக்களும் அணி களும், தென்னிலங்கையின் ஆசீர்வாதம்  மற்றும்  அனுசர ணையுடன்  களம் இறங்கப்பட்டுள்ளன என்பது வெளிப் படையான இரகசியம்.

தென்னிலங்கையின் இந்த சாணக்கிய தந்திரோ பாயத்தை  சதியை  முறியடிப்பதாயின், இலங்கைத் தமி ழர்கள் மத்தியில் அவர்களின் தேசிய உறுதியை வெளிப் படுத்தியபடி, மக்கள் செல்வாக்குப் பெற்று மிளிரும் தரப்பை வலுப்படுத்துவதே ஒரே வழியாகும். அதைவிடுத்து உதி ரித் தரப்புகளுக்கு தமது வாக்குகள் சிதறிப்போகத் தமி ழர்கள் இடமளிப்பார்களாயின், அது தமிழர்கள் தம் தலை யில் தாங்களே மண்ணை அள்ளிப் போடுவதாகிவிடும்.

முப்பது ஆண்டுகாலப் போரின் முடிவில்  பேரனர்த்தங் களை எதிர்கொண்டு,  பேரிழப்புக்களைச் சந்தித்து,  அவ லப்பட்டு, அல்லற்பட்டு,  எதிர்காலம் பற்றிய தெளிவின்றி, துவண்டு கிடக்கும் ஈழத்தமிழினத்துக்கு இன்று தேவை ஐக்கியம். அதன் மூலம் கிட்டும்  ஒன்றுபட்ட தலைமை. அந்த ஒளிக்கீற்றே நொடித்துக்கிடக்கும் தமிழினத்தை நிமிர்ந்து நிற்க வழிகாட்ட முடியும்.

அதற்கு, ஏற்கனவே வலுப்பெற்று நிற்கும் சக்தியை  தரப்பை  மேலும் வலுப்படுத்தி நமது ஐக்கிய உறு தியைக் காட்டுவதே ஒரே மார்க்கம்.
இந்த விடயங்களை கவனத்தில் எடுத்து உதிரிகளை ஓரங் கட்டி தீர்ப்புக்கூற வேண்டிய வேளை நெருங்கிவிட்டது.

நன்றி : உதயன்

No comments:

Post a Comment