Wednesday, April 21, 2010
பார்வதி அம்மாளின் வலியை புரிந்து கொள்ளாத கருணாநிதியும் மன்மோகனும்
86 வயதில் முதுகுத்தண்டு வலிக்கு இராமச்சந்திராவில் படுத்து உயர்தர சிகிச்சை பெற்றுக்கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் , அனைத்திந்திய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுத்து உயர்தர சிகிச்சை பெற்ற 78 வயது இந்தியப் பிரதமர் மன்மோகனுக்கும் தெரியாதா முதுமையில் வரும் உடல் உபாதையின் வலியும், அந்நேரத்து மருத்துவத்தின் அவசியமும் ?
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற ஒரே காரணத்துக்காக 80 வயது முதியவர் பார்வதியம்மாளை கொஞ்சமும் இரக்கமின்றி இந்த இருவரும் தலைமை ஏற்று இருக்கும் அரசுகளும் திருப்பியனுப்பியது எந்த விதத்தில் (அரசியல் லாபம் தவிர்த்து) நியாயம் என்று புரியவில்லை.
உங்களின் பார்வையில் பிரபாகரன் ஒரு தீவிரவாத இயக்கத்தின் தலைவர் என்றாலும் கூட, அவரை பெற்று எடுத்ததை தவிர பார்வதியம்மாள் என்ன தவறு செய்தார்? பிரபாகரன் பார்வதியம்மாளின் கருவில் இருந்தபோதே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவைராகவா இருந்தார்? அல்லது இப்படி ஒரு இயக்கம் வரும் , அதற்கு தலைமை ஏற்க ஒருவர் வேண்டும் என்பதற்காகவே கருவுற்று பார்வதியம்மாள் பிரபாகரனை பெற்றெடுத்தாரா?
ராஜிவின் கொலை , தமிழீழ விடுதலைப் புலிகள் , பிரபாகரனின் தாயார், சோனியாவின் ஆசை, அரசியல் லாபம் என்பதெல்லாம் விடுங்கள். ஒரு 80 வயது முதியவர், இராணுவ முகாமில் அடைக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டவர், கணவனை இழந்து வாடுபவர், உடலாலும் , உள்ளத்தாலும் சோர்ந்து போனவர் என்ற ஏதாவது காரணத்தை பார்த்தாவது அந்த அம்மையாருக்கு இங்கே சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதி கொடுத்திருக்கலாமே, நீங்கள் மனிதாபிமானம் உள்ளவர்களாக இருந்திருந்தால்.
உங்கள் பார்வையில் தவறு செய்தவர் குடும்பத்தை சேர்ந்த எவருக்கும் மன்னிப்பு கிடையாது, உதவி கிடையாது என்றால், இன்றைய அரசியல்வாதிகளில் 99 % பேரின் குடும்ப உறுப்பினர்கள் நாடு கடத்தப்பட்டிருக்க வேண்டும், குறைந்தப்பட்சம் மாநிலமாவது கடத்தப்பட வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து போயிருக்கவேண்டும். ஒரு பிரதமரை கொன்ற தவறை காட்டிலும், பல இலட்சம் மக்களை தினம் தினம் ஏதாவது ஒரு விதத்தில் அணு அணுவாக கொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் தவறு எந்த வகையில் சிறியது ?
86 வயதிலும் உங்களை ஆட்சி பொறுப்பில் அமர்த்தி இருக்கிறோமே கலைஞர் அவர்களே, உங்கள் மேல் பல விஷயங்களில் கருத்து வேற்றுமை இருந்தாலும், உங்களின் பல செய்கைகளில் உடன்பாடு இல்லாவிட்டாலும், உங்களை நடு இரவில் கைது செய்த போது எங்கள் மனம் பதைத்ததே, அரசியல் ரீதியாக உங்களை கடுமையாக எதிர்த்த பலரும் அப்போது உங்கள் பக்கம் நின்றது நிச்சயம் உங்கள் நினைவில் இருக்கும். உங்களின் நினைவாற்றலை அறிந்தவர்கள் நாங்கள். நீங்கள் உடல்நலமின்றி பெரிய மருத்துவமனைகளில் படுத்த போதும் கூட நீங்கள் உடல்நலம் பெற்று வரவேண்டும் என்று தானே நினைத்தோம். அப்போதெல்லாம் சொல்லப்பட்ட வாக்கியம் என்ன தெரியுமா ? "என்ன இருந்தாலும் பாவம் அந்த வயது தாண்டிய முதியவர்.. " .
அரசியலில், ஆட்சியில் தவறு செய்தவர் என்ற போதிலும், உங்களுக்காக ஏன் எங்கள் மனம் பதைத்தது? மனிதாபிமானம் தானே காரணம். முதியர் ஒருவர் இப்படி அலைக்கழிக்க படுகின்றாரே என்ற வருத்தம் தானே காரணம்? அந்த பதைபதைப்பு உங்களுக்கு இப்போது இருக்க வேண்டாமா?
சரி, நீங்கள் திருப்பியனுப்பவில்லை. நம்புகிறோம். இது முழுக்க முழுக்க மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்டது.. இந்த விஷயத்தில் மத்திய அரசு மாநில அரசுக்கு தகவல் தரவேண்டியதில்லை என்பதெல்லாம் சரி. ஆனாலும் உளவுத்துறையின் மூலம் ஒரு மாநில முதல்வருக்கு இந்த விஷயம் தெரியாமல் இருக்க முடியுமா? ஒருவேளை நீங்கள் சொல்வது போல , இந்த விஷயமே உங்களுக்கு மறுநாள் பத்திரிகை பார்த்து தான் தெரிந்தது என்றால், உளவுத்துறையில் இருக்கும் ஓட்டையை அடைக்கும் வேலையை முதலில் பாருங்கள்.
தேர்தல் நேரத்தில் இதைவிட பெரிய பிரச்சனையை நீங்கள் சந்திக்க வேண்டி வரும்..
அவர் வருவதும் , திருப்பி அனுப்பபடுகிறார் என்பதும் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இரண்டு காரணங்களுக்காக மட்டுமே நீங்கள் மௌனம் காத்திருக்க / அல்லது அமைச்சர் பதவிக்கு கொடுத்ததை போன்ற அழுத்தத்தை மத்திய அரசுக்கு தராமல் விட்டிருக்கவேண்டும்.
காரணம் 1. சோனியா , மத்திய அரசுடனான கூட்டு, தமிழக காங்கிரஸ் ஆதரவு
காரணம் 2. அந்த அம்மையார் வர ஏற்பாடுகள் செய்தது வைகோவும் , பழ நெடுமாறனும்
இந்த காரணங்களுக்காக மௌனம் சாதித்துவிட்டு பின்னர் சமாளித்து ஆகவேண்டுமே என்று , இரவு தான் தெரியும் , காலை தான் தெரியும் என்று அறிக்கை வாசிக்கின்றீர்கள் என்பது தெளிவாகவே புரிகிறது கலைஞரே.
இப்போதும் கெட்டுவிடவில்லை . அவர் கோரிக்கை வைத்தால், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக சட்டசபையில் சொல்லியதும், டி ஆர் பாலு அவர்களை பாராளுமன்றத்தில் பேச வைத்தது மட்டும் போதாது. நீங்களும் ஒரு முதியவர் என்ற வகையில் அவரின் வலியை உணருங்கள். அவர் கோரிக்கை வைக்க வேண்டும் என்று நீங்கள் காத்திருக்கலாம், ஆனால் அவரின் பக்கவாதம் காத்திருக்காது. உங்களின் இரவு கைதின் போது தங்கள் கண்டனங்களை தெரிவித்தவர்கள் உங்களின் கோரிக்கைக்கு காத்திருந்தார்களா?
2003 ல் முதல்வராக இருந்த அம்மையார் செய்துவிட்டு போன ஒரு தவறை திருத்தும் வாய்ப்பு இது. மத்திய அரசுக்கு நீங்களே கோரிக்கை விடுங்கள். 2009 ல் போரை நிறுத்துங்கள் என்று விளையாட்டு பிள்ளையாக வைத்த கோரிக்கையாக அல்லாமல், தி மு க விற்கு இன்னுமொரு மத்திய அமைச்சர் பதவி தரும் வாய்ப்பிருந்தால் , அதற்கு எப்படி , எந்த விதத்தில் , எவ்வளவு அழுத்தமாக "கோரிக்கை" வைப்பீர்களோ அதுபோல வையுங்கள். அந்த அம்மையாரின் பெயரை மட்டுமாவது முன்னால் முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய "ப்லாக் லிஸ்ட்" ல் இருந்து எடுத்திட வையுங்கள். குறைந்த பட்சம் இந்த சிகிச்சைக்காக மட்டும் பார்வதியம்மாள் வந்து போக அனுமதி வாங்கி கொடுங்கள்.
உங்களின் 1 ரூ அரிசியை விட, வண்ண தொலைகாட்சியை விட, காப்பிட்டு திட்டத்தை விட, இந்த விஷயத்தில் நீங்கள் வாங்கி தரும் அனுமதி எங்கள் உள்ளங்களில் நிலைத்து நிற்கும், பல காலம் உங்கள் பெயரை சொல்லும்.
Subscribe to:
Post Comments (Atom)
இந்த வந்தேறி பார்ப்பணீயம் தமிழர்களுக்கு செய்த கொடுமை அளவில்லாதது .பிராமணியம் மனித தன்மைக்கு ,சமத்துவத்துக்கு ,சுய மரியாதை க்கு எதிரானது என்று காலம் காலமாய் நிருபிக்க பட்டிருக்கிறது .இந்த டோண்டு ராகவன் என்கிற முட்டாளுடன் நான் விவாதம் செய்ய வரவில்லை. பார்ப்பனீயம் தங்களுடைய சித்தாந்தங்களுக்கு தொண்டு செய்கிறவர்களை தான் உயர்த்தி பிடிக்கும் . தந்திரம்,சூழ்ச்சி ,நயவஞ்சகம்,பசப்பு, ஆசை காட்டல் முதலிய பஞ்சமா பாதகங்களை பயன்படுத்தி தன்னுடைய நலன்களை காத்துக்கொள்ளும் .இங்கே ஒன்று கவனிக்க வேண்டும் டோண்டு என்கிற மட பாப்பான் என்ன சொல்ல வருகிறார் "புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள். தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார். பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்."
ReplyDeleteஇதில் எவளவு வஞ்சம் கலந்திருக்கிறது. இங்கே அந்த வயதான தாய் வந்தது தன்னுடைய பக்கவாத நோய்க்கு மருத்துவம் பார்க்க .அரசியல் செய்ய அல்ல.அவர் இதற்க்கு முன்பு திருச்சியில் வாழ்ந்திருக்கிறார் . அவரை வைத்து எப்போது யார் அரசியல் செய்தார்கள் .அவரை கவனிக்க இங்கே ஆள் தேவை .இங்கே அவரை கவனித்து அவருக்கு வேண்டியவை செய்ய மனித நேயம் உள்ள நல்லவர்கள் இருகிறார்கள்.அதனால் தான் அவர் இங்கே வந்தார்.அந்த தாய் எப்போதுமே அரசியல் யாரிடமும் பேசியது இல்லை.இங்கே வந்தேறி பார்ப்புகளும் ,சேட்டு களும் ,பணியாகக்களும் ,மலையாளிகளும் வசதியாக வாழும் போது ஒரு தாய்க்கு தன்னுடைய ரத்த சொந்தங்கள்
இருக்கும் நாட்டிற்கு வர உரிமைகள் மறுக்க படுவதும் அதை டோண்டு ராகவன் போன்ற வந்தேறி பார்ப்புகள் ஆதரித்து பேசுவதும் தமிழர்களுக்கு ஒரு கிழிந்து போன இத்தாலிய சேலையை தன்னுடைய துண்டாக ,கோவணமாக அணிந்து கொண்டிருக்கும் மற்றும் பணத்தால் உணர்விழந்து போன மட தலைவனால்தான். இங்கே காவி அணிந்து கொலை மற்றும் பல பஞ்சமா பாதகங்கள் செய்த காஞ்சிபுரம் சங்கராச்சாரி என்கிற ஒரு அய்யோக்கிய பார்ப்பான்கள் எல்லாம் நடமாடுகிற போது ஏன் என்னுடைய தாய் இங்கே வரகூடாது .
இப்போது சசி தரூர் என்கிற ஒரு மலையாள பாப்பான் செய்த காரியம் என்ன . ஒரு நாட்டின் அமைச்சு பதவியில் இருந்து கொண்டு அவன் செய்த காரியம் தன்னுடைய தாயை கூட்டி கொடுபதற்க்கு சமமானது .அதை இந்த வந்தேறி பார்ப்புகள் தான் செய்ய முடியும் .தாயே எங்களை மன்னித்து விடு .மீண்டும் ஒரு புத்தநும் ,ஒரு பெரியாரும் ,ஒரு நாராயண குருவும் ,ஒரு வேம்மன்நநாவும் ,ஒரு பிரபாகரனும் ஒரு அய்யா வைகுண்டரும் இந்த புனித பூமியில் பிறந்து பார்பனியத்தை வேரோடு கருவறுக்க ஆசி கூறு .