Thursday, May 13, 2010

பிரபுதேவா-நயன்தாரா ஜோடியாக வருகை













பிரபல மலையாள - தமிழ்ப் பட இயக்குநர் சித்திக் மகள் திருமணத்துக்கு தனது நயன்தாராவுடன் பகிரங்கமாக வந்து சிறப்பித்தார் பிரபு தேவா.

சித்திக் மகள் சுமையா திருமண வரவேற்பு கொச்சியில் நடந்தது. மலையாள நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபுதேவாவும், நயன்தாராவும் கலந்து கொண்டனர். காரில் இருந்து இறங்கிய பிரபு தேவா, ஒரு கையால் நயன்தாராவை அணைத்தபடி மண்டபத்துக்கு வந்தார். மேடைக்கு சென்று மணமக்களை ஜோடியாகவே வாழ்த்தினார்கள். பின்னர் முன் இருக்கையில் அருகருகே உட்கார்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

தமிழ் நாட்டின் தமிழ்ச் சொந்தங்களே! எங்கள் கையை கொஞ்சம் பற்றிக்கொள்ளுவீர்களா?













தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் அன்னையார் பார்வதி அம்மா அவர்கள் 10,05,2010, திங்கள் மலேசியாவிலிருந்து திரும்பி இலங்கை சென்று சேர்ந்திருக்கிறார்கள்.

16,04,2010, மலேசியாவிலிருந்து இந்திய தமிழ் நாட்டின் தலைநகர் சென்னைக்கு, வைத்தியத்தின் நிமித்தமும் எங்கள் சொந்தங்கள் நீங்கள் இருக்கின்றீர்கள் என்ற நம்பிக்கையுடனும் வந்து விமானத்திலிருந்து இறங்க முயன்றபோது, சட்டவிரோதமாக உங்கள் நாட்டின் காவல்த்துறையினர் அம்மாவை கீழே இறங்க அனுமதிக்காமல் அதே விமானத்தில் திருப்பி அனுப்பியிருந்தனர்.

அது பற்றி அரசியல் மட்டங்களிலிருந்தும், ஊடகங்களின் பார்வையிலும், மக்கள் கருத்துக்களாகவும் பல கண்டனங்களும் வெளிவந்துள்ளன. அவைகளில் "தமிழகத்து உறவுகளான" உங்களின் அப்பழுக்கற்ற காட்டமான பல குமுறல்கள் இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியாகி எங்களை ஆற்றி, மனம் நெகிழவைத்ததுடன் முடிவுக்கு வந்திருந்தது.

ஊடகங்களில் எழுதுவதற்கு எமது சமூகம் சார்ந்த ஆக்கபூர்வமான பல்வேறு தேவைகள் நிறையவே எனக்கு இருந்தும் நடந்து முடிந்த அந்த கசப்பான விடயத்தை திரும்பத் திரும்ப தூசி தட்டிக்கொண்டிருப்பது தேவையில்லை என்றும் எரிச்சலடைய வைக்கிறது.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, May 12, 2010

பிரபாவின் சிறு மற்றும் இளமைப் ப‌ராயம் பாகம் ஒன்று













1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் நாளில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்தார். அன்று பிரபலமாயிருந்த இணுவில் மகப்பேற்று நிலையத்தில் இவர் அவதரித்தார்.

பிரபாவின் தாய் மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை தமிழரின் வரலாற்றை மாற்றப்போகும் அக்குழந்தைக்கு பிரபாகரன் என்னும் பெயரை இட்டார்.

1955 ஒக்டோபரில் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு வேலையின் நிமித்தம் மீண்டுமொருமுறை மட்டக்களப்பிற்கு மாற்றல் கிடைத்தது.

முன்னதாக இதே போன்றதொரு வேலை நிமித்தமான‌ மாற்றலில் தான் 1953 செப்டெம்பரில் மட்டக்களப்பிலிருந்து அநுராதபுரத்துக்கு சென்றார்கள் அவர்கள்.

அநுராதபுரத்திற்கு மூன்று குழந்தைகளுடன் மாற்றலாகிச் சென்ற வேலுப்பிள்ளை தம்பதியினர் நான்காவது மழலைப் பிரபாகரனுடன் மீண்டும் மட்டக்களப்பிற்குத் திரும்பினர்.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

ரஞ்சிதா பற்றி பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளரிடம் கர்நாடக போலீஸ் விசாரணை













நித்தியானந்த சாமியார் வழக்கில் நேரில் ஆஜராக வருகிறேன் என்று சொல்லியே ஒரு மாதம் வரையிலும் இழுத்தடித்திருக்கும் நடிகை ரஞ்சிதாவின் வாக்குறுதியை இனியும் நம்ப முடியாது என முடிவு செய்திருக்கும் கர்நாடக போலீஸ் அவரைத் தீவிரமாகத் தேடத் துவங்கிவிட்டது.

ரஞ்சிதா கிடைத்துவிட்டால், நித்யானந்தாவுக்கு எதிராக பல முக்கிய தகவல்களைப் பெற முடியும் என்பதில் போலீசார் உறுதியாக உள்ளனர்.

எனவே ரஞ்சிதாவுக்கு நெருக்கமான நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரஞ்சிதா எங்கே பதுங்கி இருக்கிறார் என்று அவர்களிடம் கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

பார்வதியம்மாள் மீது தினமலர் அவதூறு; கண்டனத்தைப் பதிவு செய்யுங்கள்













காலையில் தினமலர் செய்தித் தாளைப் பிரித்ததும் எனக்கேற்பட்ட உணர்வுகளை என்னவென்று சொல்வது! தினமலரின் வக்கிரத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பார்வதியம்மாள் வருகைக்கு நிபந்தனைகள் விதிக்கவில்லை (அடப்பாவிகளா?) என்ற ரீதியில் முதல்வர் கருணாநிதி பேரவையில் பேசிய செய்தி வெளியாகியிருந்தது. அந்தச் செய்தியில் தலைப்பு முதற்கொண்டு செய்தியில் எல்லா இடத்திலும் ‘பார்வதி‘ என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

அதுவும் கருணாநிதி பேச்சிலும் பேர‌வை உறுப்பின‌ர்கள் பேசியதாக வெளியான கருத்துகளிலும் ‘பார்வதி’ என்றே குறிப்பிட்டிருந்தார்களாம் என்று சப்பை கட்டு கட்டுகிறது தினமலர். உண்மையில் அவர்கள் அப்படி சொல்லவில்லை. பார்வதியம்மாள் என்றுதான் குறிப்பிட்டார்கள்.

‘பார்வதி என்ற குறிப்பிட்டால் போதும் அம்மாள் என்று குறிப்பிட அவறொன்றும் நமக்கெல்லாம் அம்மா இல்லை’ என்ற ரீதியில் தினமலர் நிர்வாகம் நிருபர்களுக்கு உத்தரவிட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை (எல்லாம் அங்கிருப்பவர்கள் சொல்லும் தகவல்கள்தான்).

ஒருவருடைய பெயரை மாற்றி குறிப்பிடும் அளவுக்கு அவர் மீது வெறுப்பு இருக்கும் பட்சத்தில் அவரைப் பற்றிய செய்தியை வெளியிட வேண்டிய அவசியம் என்ன வந்தது?
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, May 11, 2010

தேர்தலில் இருந்து விலகியது நாடு கடந்த தமிழீழ அரசின் நன்மைக்கே : வைத்தியர் மூர்த்தி













நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலிலிருந்து விலகிக் கொண்டுள்ள போதிலும் அதன் செயற்பாட்டிற்கும் நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் இங்கிலாந்தில் போட்டியிட்டு பின் அதிலிருந்து விலகிக் கொண்டவரும் வெண்புறா அமைப்பின் தலைவருமான மருத்துவர் திரு. நமசிவாயம் சத்திய‌மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தமிழ் ஸ்டார் வானொலிக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேட்டியின் விபரம் வருமாறு:

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் இருந்து நீங்கள் விலகிக் கொண்டதற்கான காரணங்களைக் கூறுவீர்களா?

மீண்டும் ஒரு முறை இந்தத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்படக் கூடிய பணச் செலவைக் கருத்தில் கொண்டும் இதன் காரணமாக மக்கள் மத்தியில் இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து எழக் கூடிய அவநம்பிக்கையைத் தவிர்ப்பதற்காகவும் இந்த மீள் தேர்தல் சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தக் கூடிய பாதகமான கண்ணோட்டத்தையும் தவிர்ப்பதற்காகவே இந்தத் தேர்தலிலிருந்து விலகிக் கொள்வதென நான் தீர்மானித்தேன்.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

சே.ஜெயானந்தமூர்த்தி அவர்களுக்கு ஒரு திறந்தமடல்













தமிழீழத்தின் மீன்பாடும் தேனாட்டின் மைந்தனே!

சிங்கத்தின் நாடாளுமன்றக் குகையில் நின்று சீறிய சிறுத்தையே!

வணக்கம்!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் வடமேற்கு இலண்டனில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நீங்கள் வெற்றியீட்டிய செய்திகேட்டு அகமகிழ்ந்தோம்.

அதற்கு மேலாக தமிழீழ மக்களின் விடிவிற்காக அயராது உழைப்பதற்கு திடசங்கற்பம்பூண்டு நீங்கள் விடுத்த அறிக்கை கண்டு உள்ளம் பூரித்தோம்.

தமிழீழ தேசியம் என்ற பாசறையில் வளர்ந்த சிறுத்தை நீங்கள். கருணா என்ற பெயரில் பிரதேசவாதப் பூதம் கிளம்பிய பொழுது அதனை எதிர்த்து மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களோடு தோள்கொடுத்துக் கிளர்ந்தவர் நீங்கள்.

தமிழீழ தேசியத்தின்பால் நின்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் சந்தித்த சோதனைகளுக்கு கையெறி குண்டுகளால் தகர்க்கப்பட்ட உங்கள் வீட்டின் கற்களே சாட்சி. உங்கள் முற்றமே ஆவணம். விடுதலைக்காக உடன்பிறப்பை உயிர்ப்பலியாகப் பறிகொடுத்தவர் நீங்கள். மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட உங்களுக்கு விடுதலையின் விலை நன்கு தெரியும்.

அதை நியூயோர்க்கின் உப்பரிகை மாளிகையில் ஒய்யாரமாய் சஞ்சாரம் செய்பவர்களால் விளக்கிவிட முடியாது என்பது உண்மைதான். அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது என்பதும் மெய்மைதான்.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

செத்த தாய் முலை கொடுத்தாள்













விண்முட்ட விஞ்ஞானம்
வினைத்திறனாய் ஆராய்ச்சி
கண் மாற்ற கால் மாற்ற
கலர் மாற்ற- தலை
மயிர்மாற்ற
கணக்கில்லா பெரு சிகிச்சை.

புல்லுக்கு வயதென்ன
பூண்டுக்கும் உயிர் உண்டோ
நத்தைக்கும் எறும்புக்கும்
சித்தங்கலங்காமல்
மெத்தப்படித்த பலர்
சுற்றி நின்று நடைப்பயிற்சி,
நில்லாமல் நெடு வழியும்
நீண்ட நேய மனம்.
நல்லோர் புதிய யுகம்
நாம் காண்போம் என்று குரல்.

நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை, மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

லெப். கேணல் பொன்னம்மான்













(யோகரத்தினம் குகன்
கலட்டி, யாழ்ப்பாணம்
23-12-1956 14-02-1987)

அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே சந்தோசம் குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது.

தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா.... என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது.

எமது இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய சோகத்தை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும்.

ஆனால் அந்த அத்தனை பேருக்கும் தாயாக, தந்தையாக, அண்ணனாக, அம்மானாக, நின்ற பொன்னம்மானே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே சந்தோசம் குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

எமது இயக்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான். மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Monday, May 10, 2010

அமீரகத்திலிருந்து சுப.வீ.க்கு ஒரு கடிதம்













ஐயா சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு,

வணக்கம். நான் விசயகுமார், அமீரகத்திலிருந்து எழுதுகிறேன். வயது- 30. பொருளாதாரக் காரணம் தமிழகத்தில் இருந்து அரபு நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்கிறேன்.

பெரியார் திடலில் ஆற்றிய தங்களின் உரையின் காணொளியினை குமுதம் தளத்தில் கண்டேன். கீற்று தளத்தில் விஜயகுமார் என்பவர் எழுதிய கட்டுரைக்கு சில மளுப்பல்களை சொல்லி இருந்தீர்கள். என் பெயரும் விசயகுமார்தான். கட்டுரையையும் காணொளியையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் எனக்கு ஏற்பட்ட வினாக்களை உங்களிடம் பகிர்கிறேன்.

நான் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 94 -95 காலகட்டம், ஈழம் என்றால் என்னவன்றே தெரியாத வயது. தினசரிகளில் தமிழ்த் திரைச்செய்திகள் வானொலிகளில் திரைப்பாடல்கள் மட்டுமே பார்க்கும் கேட்கும் இளைஞர்களில் நானும் ஒருவன். அன்று ஒருநாள் தவறி ஒரு அரசியல் செய்தியை பார்த்து விட்டேன்.

வைகோ-ஈழத்தமிழர்களுக்கு இரத்தம் கொடுத்தார் என்பதுதான் அந்தச் செய்தி. அப்பொழுது என்னுள் ஒரு கேள்வி எழுந்தது அது என்ன ஈழத்தமிழர்? பல பெரியவர்களிடம் வினவினேன் அதைப்பற்றி அவர்களுக்கு தெரியவில்லை, தெரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை. பின்பு விடுப்பு முடிந்து பள்ளி சென்றபோது விடுதிக் காப்பாளரிடம் வினவியபோது, அந்த மெத்தப்படித்த மேதாவி, ராமேசுவரத்திற்கு தெற்கே கடலுக்குள் உள்ள இலங்கையை பிரபாகரனும் இங்கிருந்து சென்ற பிழைப்பு தமிழர்களும் துண்டாடுகிறார்கள் என்று ஒரு தவறான தகவலை சொன்னார். மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

பார்வதி அம்மாளுக்கு இந்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் என்னென்ன..?














பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்த கோரிக்கை மனுவை பரிசீலிக்கும்படியும், சில நிபந்தனைகளுடன் அவர் தமிழ்நாட்டில் சிகிச்சை பெற அனுமதிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் தெரிவித்திருந்தார்.

பார்வதி அம்மாளுக்கு விதிக்கப்படவுள்ள நிபந்தனைகள் என்னென்ன என்பது பற்றியத் தகவல்கள் இப்போது கசிந்துள்ளன. மேலும் படிக்க இங்கே படிக்கவும்

Sunday, May 9, 2010

நாடு கடந்த தமிழீழ அரசிற்கான கனேடியப் பிரதிநிதி பொன் பாலராஜனுடனான பேட்டி













நடந்து முடிந்த தேர்தல் வெற்றி குறித்து உங்கள் கருத்து...

முதலில் என்னை வெற்றி பெறச் செய்தமைக்காக வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை சொல்லிக் கொள்கிறேன். பல்வேறு சவால்களைத் தாண்டி இவ் வெற்றியினை எனக்குப் பெற்றுத் தந்துள்ளீர்கள். உங்கள் பரப்புரைகளும் பரிந்துரைகளும் இவ் வெற்றிக்கு உறுதுணையாகின.

உங்களில் பலர் நான் போட்டியிட்ட தேர்தல் மாவட்டத்தில் இல்லாத போதும் எனது வெற்றியை உறுதிப் படுத்துவதற்காகப் பாடுபட்டீர்கள். நான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சந்திக்காதவர்கள் பலர் என்னை அழைத்து எனக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டமையும், அதற்கு அவர்கள் சொன்ன காரணங்களும் என்னை நெகிழ்வித்துக் கண்களைக் கலங்க வைத்தன.

நீங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது என்ற உறுதியுடன் மீண்டும் மனமார்ந்த நன்றியினை உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

கருணாநிதியிடம் கருணை இல்லை; நிதி மட்டுமே இருக்கிறது : ஈழவேந்தன்













கடந்த 2ம் திகதி நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் கனடாவிலிருந்து வெற்றி பெற்றுள்ள திரு. ஈழவேந்தன் அவர்களை ஈழம்வெப் இணையத் தளத்திற்காக பேட்டி கண்டோம். தேர்தல் வெற்றி, அடுத்த கட்ட நடவடிக்கைகள், இந்திய நிலைப்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் அவர் தெரிவித்த கருத்துக்கள் இவை:

உங்கள் வெற்றி குறித்து உங்கள் கருத்து

மிகக் குறுகிய காலமாகக் கனடாவில் வாழும் என் மீது அன்பைப் பொழிந்து எனது கருத்துக்களிலும் கொள்கையிலும் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கே இந்த வெற்றி சென்றடைய வேண்டும். என்மீது நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ் மக்களின் பிரதிநிதியாய் பணி செய்வேன். நான் பணி செய்யும் காலத்தில் கூர்மையாக இருந்தால் பாவிக்கலாம், என்னை மொட்டையெனக் கருதினால் தீட்டிப் பயன்படுத்தலாம், கறள் என்றால் தூக்கி வீசலாம் என என் வாக்காளார்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

நாடு கடந்த அரசின் முன்னால் இருக்கும் முக்கிய பணிகள் பற்றி…

நாடு கடந்த அரசின் முன்னால் உள்ள பணிகளைப் பற்றிக் கதைக்க முன்னர் நாடு கடந்த அரசு அமைக்கப்பட்டுள்ளது என்பதே ஒரு பெரிய வெற்றி எனக் கருதுகிறேன்.மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

மரணத்தை வென்ற மாவீரன்













இதோ தற்கொலை செய்து கொண்டார், அதோ சுனாமியில் இறந்தார், இதோ சுடப்பட்டார், அதோ உடல் கிடைத்தது, இதோ தப்பிக்க முயன்றார், அதோ கடலில் வாய்க்காலில் கிடந்தார், இதோ என் கனவில் வந்தார், அதோ என் வீட்டருகே வந்து விட்டார், ஐயகோ, உண்மையில் வந்து விடுவாரோ, வந்தால் என்ன செய்வது??????

இது தான் நண்பர்களே ஒரு மனிதனின், ஒரு மாவீரனின், ஒரு விடுதலைப் போராளியின் பொய்யான மரணம் உலகிற்கு உணர்த்திய பாடம், எதிரிக்குத் தருகின்ற அச்சம். உலகின் மிகப் பெருமை வாய்ந்த தமிழ் அறம் சார்ந்த வழியில் தன் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஒரு இனத்தின் சித்தாந்தமாக மாற்றிக் காண்பித்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற கட்டுக் கதையோ அல்லது உண்மையோ எனக்குள் ஒரு போதும் வருத்தத்தை விளைவிக்கவில்லை. அதற்கு அவர் செயற்கையாக மரணித்தது மட்டும் காரணம் இல்லை, அதைத் தாண்டி ஒரு தெளிவான பார்வையும் இருக்கிறது, உங்களுக்கும் அது இருக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தக் கட்டுரை எழுதுவதற்கான ஒரு தேவை உருவானது. மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Saturday, May 8, 2010

8000 பேரை பலி கொண்ட போபால் கொடுமையும் ராஜீவ் மரணமும்












ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தாயார் 80 ஆவது வயதில் கடும் நோயால் பாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு சிகிச்சைக்கு வந்தால் ‘விடமாட்டோம்’ என்கிறார்கள். தமிழ்நாடு என்ன, கண்டவர்கள் நுழையும் ‘தர்ம சத்திரமா’ என்று பார்ப்பனத் திமிரோடு கேள்வி கேட்கிறார், சுப்ரமணியசாமி. இந்த எதிர்ப்புகளுக்கு முன் வைக்கப்படும் காரணம் என்ன? ராஜீவ் கொலை!

ஈழ விடுதலைப் போராட்டத்தையே ராணுவத்தால் ஒடுக்கிட அனைத்து உதவிகளையும் செய்தது சோனியா, மன்மோகன் ஆட்சி! காரணம் என்ன சொல்லப்பட்டது? அதே ராஜீவ் சாவுதான்! 19 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்த பிறகும் நளினியை விடுதலை செய்யக் கூடாது. அவர் மரணத்தை சந்திக்கும் வரை சிறைக்குள்தான் இருக்க வேண்டும் என்று டெல்லி சோனியா வட்டாரமும், தமிழக போலி கதர்ச்சட்டை ‘கனபாடிகளும்’ கூப்பாடு போடுகிறார்கள். கலைஞர் கருணாநிதியின் தி.மு.க. ஆட்சி அதற்கு தண்டனிட்டு பணிந்து போய் கிடக்கிறது. சொல்லப்படும் காரணம் என்ன? ராஜீவ் கொலை செய்யப்பட்டார் என்பதுதான்!

ராஜீவ் கொலை 1991 ஆம் ஆண்டு நடந்தது. 20 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ராஜீவ் ஈழத்துக்கு அனுப்பி வைத்த இந்திய ராணுவம், அங்கே பல்லாயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது. ராஜீவ் அனுப்பிய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களும் ராஜீவ் உயிரைப் போல் முக்கியமானதுதான். ராஜீவ் மரணத்துக்குப் பிறகு அவரது மனைவி சோனியா, இந்தியாவின் அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டார். ராஜீவின் மகனை அடுத்த பிரதமர் பதவிக்கு தயார் செய்து வருகிறார்.

ராஜீவ் கால காங்கிரசில்கூட அவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பு அணிகள் இருந்தது உண்டு. சோனியாவோ ராஜீவையும் மிஞ்சி தனது கட்சியை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். அமைச்சரவை முடிவுகள் ஏதுமின்றியே தன்னிச்சையாக தனது ஆணைக்குட்பட்ட ‘மலையாள அதிகாரக் கும்பல்’ ஒன்றை அமைத்துக் கொண்டு, அதன் வழியாக ஈழத்தில் இனப்படுகொலைகளுக்கு திட்டம் தீட்டித் தந்து ஒரு விடுதலைப் போராட்டத்தையே சீரழித்து விட்டார். கேட்டால் ராஜீவ் கொலை செய்யப்பட்டாரே என்று கூறுகிறார்கள்.

ஆனால், இதே காங்கிரஸ் ஆட்சியில், போபாலில் என்ன நடந்தது? யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க நிறுவனத்தின் ரசாயன தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய விஷவாயுவால் பல்லாயிரம் மக்கள் பிணமானார்களே; லட்சக்கணக்கான மக்கள் உடல் ஊனமானார்களே; அவர்களின் கதி என்ன? ராஜீவ் உயிருக்காக மட்டும் குடம் குடமாக 20 ஆண்டுகளாக கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ் கட்சி, பாதிக்கப்பட்ட அந்த ஏழை எளிய மக்களுக்கு, 25 ஆண்டுகாலத்துக்குப் பிறகாவது நிவாரண உதவிகளைப் பெற்றுத் தந்ததா? ராஜீவ் உயிர் மட்டும்தான் உயிரா? மற்ற மனித உயிர்கள் எல்லாம் இவர்களுக்கு மயிருக்குச் சமமா? மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

“தீவிரவாதிகளை தூக்கலிடக் கூடாது. உயிருடன் வைத்திருந்து சித்ரவதை செய்ய வேண்டும்” – நடிகை மீனாட்சி ஆவேசம்..!


“நாட்டில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகளை உடனேயே தூக்கில் போட்டு விடக்கூடாது.. அவர்களை உயிருடன் வைத்திருந்து சிறுகச் சிறுகச் சித்ரவதை செய்ய வேண்டும்” என்று நடிகை மீனாட்சி கருத்து தெரிவித்துள்ளார்.




‘கருப்பசாமி குத்தகைதாரர்’, ‘டாக்ஸி நம்பர் த.நா.4777’, ‘ராஜாதிராஜா’, ‘அகம்புறம்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை மீனாட்சி. தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் ‘மந்திரப்புன்னகை’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மும்பையில் கடந்தாண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின்போது உயிருடன் பிடிபட்ட கசாப்பிற்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து தனது `பேஸ்புக்` பக்கத்தில் மீனாட்சி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Friday, May 7, 2010

ராஜீவ் கொலை - நளினி விடுதலை - தடை என்ன?













ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்க வேண்டும் என்ற சட்ட நடவடிக்கை தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான இந்தியர்கள், நளினியை விடுதலை செய்யக்கூடாது என்ற கருத்துடையவர்கள் என்று மீடியாக்கள் கூறுகின்றன.

நளினியை விடுவிப்பதில் அரசியல் ரீதியான தடையைவிட, சட்டரீதியான தடையைவிட உளவியல் ரீதியான தடையே மிகுந்த முக்கியத்துவம் வகிக்கிறது. நளினியை விடுதலை செய்யவேண்டும் என்று கருத்து தெரிவிப்பவர்களுக்கு தேசவிரோதி, தீவிரவாதி என்பது போன்ற முத்திரைகள் குத்தப்படலாம் என்பதாலேயே இந்த பிரச்சினையில் கருத்து கூறுவதற்கு பலரும் தயங்குகின்றனர்.

ராஜீவ் காந்தியை கொலை செய்ததை நியாயப்படுத்தியும், நளினியை தண்டித்தது தவறு என்றும் நாம் வாதிடுவதாக பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்கவே கூடாது என்று கருதுவதிலும், அக்கருத்தை பரப்புவதிலும் உளவியல் ரீதியான சிக்கல்கள் இருக்கின்றன.

இந்த உளவியல் ராஜீவ் காந்தி கொலை வழக்கு மற்றும் நளினி ஆகியோர் மட்டுமே தொடர்புடையது அல்ல. இந்த உளவியல் சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளிலும் பிரதிபலிக்கும்போது அது அனைத்து இந்தியர்களின் மனித உரிமைகளுக்கும் எதிராக செயல்படுகிறது. அதாவது பொதுமக்களின் நலன்களுக்கு எதிரான உளவியல் பொதுமக்களிடமே இருக்கிறது என்பது சுவாரசியமான ஆனால் கவலைக்குரிய உண்மை.

விரிவாகப் பார்ப்போம். மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Thursday, May 6, 2010

தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

வங்கக் கடல் மீது

தங்கத் தமிழ் மகனை

சிங்களத்து வெறிநாய்

சங்கறுத்துக் கொல்கிறது

தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

வலைவீசி மீன்பிடிக்க

அலைமீது சென்றவனின்

தலைமீது குண்டுவீசும்

கொலைச் செயலும் நடக்கிறது.

தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?



நாவாய் படைநடத்தி

நாடுகளை வென்ற இனம்

நாள்தோறும் அகதிகளாய்

நாடிழந்து வருகிறது.

தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

ஆடையை உலகுக்கு

அறிமுகம் செய்தவனை

ஆடையவிழ்த்து அம்மணமாய்

அடித்து சுட்டுக் கொல்கிறான்

தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?



-சிப்பிக்குள் முத்து, கடையநல்லூர்

நடிகர் சிம்புவின் தங்கை தமிழ் இலக்கியாவுக்கு ரகசியத் திருமணம்













நடிகரும், இயக்குநருமான விஜய டி.இராஜேந்தர் தனது மகள் தமிழ் இலக்கியாவிற்கு காதும், காதும் வைத்தாற்போல் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து வைத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் ஹாட் நியூஸ் பரவியுள்ளது.

டி. இராஜேந்தரின் ஒரே பெண்ணான தமிழ் இலக்கியாவின் திருமணம் இப்படி ரகசியமாக நடந்து முடிந்திருப்பதைக் கேள்விப்பட்டு திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறது. டி.ஆரா இப்படிச் செய்தார் என்று..? கொண்டாட்டமாக நடந்திருக்க வேண்டியதாச்சே.. டி.ஆர். இதற்கு எப்படி ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை..மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தனது 38-வது அகவையைத் தொட்டது













தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களை தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு கடந்த மே 5-ம் தேதியன்று 38-வது அகவையில் கால் பதித்தது. 1972-ம் ஆண்டு மே 5-ம் தேதிதான், புலிகள் இயக்கம் தொடங்கப்பட்டது.

தமிழர்களிற்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின்போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதரணமாகத் திகழ்ந்தவர்கள்.

உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் ஓயாத அலைகள் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

அத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின்படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில் தமக்கெனத் தனி அங்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள்.

அத்தோடு பல முறியடிப்புச் சமர்கள் குறிப்பாக யாழ். தேவி முறியடிப்புச் சமர், சூரியக்கிரன முறியடிப்புச் சமர், ஜெயசிக்குறு எதிர்ச்சமர், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல முறியடிப்புச் சமர்களின் மூலம் தமது தற்காத்தல் போராட்ட முறையை உலகிற்குப் பாடவிதானமாக்கிய விடுதலைப்புலிகளின் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் 18 மாதங்களாக நீடித்த ஒரு பாரிய சமராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

முப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அவற்றிற்கான தனிச்சீருடைகள், முகாம்கள் என அவற்றைப் பராமரித்ததோடு அவற்றின் சண்டையிடும் திறன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்கே படைபல அச்சமேற்படுத்தும் படையணிகளாக அவற்றை சிறீலங்கா மற்றும் அவற்றின் நேச நாடுகள் நோக்குமளிவிற்குப் பேணிப் பாதுகாத்தனர்.

இராணுவப் படைக் கட்டுமாணத்தின் கீழ் பல சிறப்புப் படையணிகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சார்லஸ் அன்ரணிப் படையணி, மோட்டார்ப் படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என இன்ன பல பிரிவுகளையும் திறம்படச் செயற்படுத்தி வந்தனர்.

குறிப்பாக ஈழப் போர் நான்கில் தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வான்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியாக தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது.

போராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்த தமிழீழ விடுலைப்புலிகளின் போராட்ட வரலாற்றின் பின்னடைவிற்கான காரணகர்த்தாவாக பேச்சுவார்த்தைக் காலத்திலான சர்வதேச மயப்படுத்தலும். உள்ளக சதிகளும் இடம்பெற்றிருந்தன.

ஆயுதங்களை மௌனிப்பதாக முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் அறிவிக்கும்வரை கொண்ட கொள்கை மீதான பற்றுறுதியுடன் போராடிய தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகும்.