Monday, July 19, 2010
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா முன்றல் வரை நடைபயணம்
பிரித்தானியாவில் இருந்து கால்நடைப் பயணமாக சுவிஸ், ஜெனீவாவரை செல்ல சிவந்தன் என்ற இளைஞர் முன்வந்துள்ளார். 23ம் திகதி லண்டனில் நடைபெறும் இரவு நேரப் போராட்ட முடிவில் இந்தக் கால் நடைப் பயணம் ஆரம்பிக்க இருப்பதாக அறியப்படுகிறது. சுமார் 12 நாட்கள் தொடர்பயணம் மேற்கொள்ள இருக்கும் இவர் 6ம் திகதி ஜெனீவாசென்று அங்கு ஐ.நா முன்றலில் நடைபெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்கேற்று, ஐ.நா பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுவைக் கையளிக்க உள்ளார்.
போராளிகளின் விடுதலை குறித்து ஐ.நா துரித நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மற்றும் இன அழிப்பு தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கக்கோரியும், இந்த நடைபயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 1983ம் வருடம் ஜூலை 23ம் நாள் சிங்கள காடையர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டு, சொத்துக்கள் சூறையாடப்பட்ட நாள். ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் ரத்தவெள்ளத்தில் மிதந்த நாள் கறுப்பு ஜூலை ஆகும்.
தமிழன் ரத்தம் குடிக்க புறப்பட்ட சிங்கள காடையரின் அடக்குமுறைகளை உலகிற்கு நாம் பறைசாற்றும் நாள் கறுப்பு ஜூலை. எனவே பிரித்தானியா வாழ் மக்களே அன்று இரவு 9.00 மணிக்கு நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களும் கலந்துகொள்ள வேண்டும். அத்தோடு அங்கு இளையோர்களால் ஆரம்பிக்கப்பட இருக்கும் நடை பயணத்திற்கும் மக்கள் தமது ஆதரவை வழங்கவேண்டும். ஜூலையில் கொல்லப்பட்ட அனைத்து தமிழர்களின் ஆத்மசாந்திக்காக நாம் ஒன்றுகூடுவோம்!
நன்றி : அதிர்வு
Labels:
அனுபவம்,
ஈழம்,
நடைபயணம்,
நிகழ்வுகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment