Tuesday, July 27, 2010

மிரள வைக்கும் எந்திரன் பிரமாண்டம்… இன்ப ஜுரத்தில் ரசிகர்கள்!

பிரமாண்டம், ஆச்சர்யம் போன்ற வார்த்தைகளுக்கு எந்திரன் என்று அர்த்தம் போட்டுக் கொள்ளலாம்.

இந்தியாவில் வேறு எந்தப் படத்துக்கும் இல்லாத முக்கியத்துவம் எந்திரனுக்கு மட்டுமே. ஒரு இந்தியப் படத்த்துக்கு சர்வதேச அளவில் இப்படியொரு இசை வெளியீட்டு விழா நடப்பது இதுவே முதல் முறை.

எங்கெங்கும் எந்திரன் ஜுரம். குறிப்பாக இந்தப் படத்தின் இசை வெளியாகவிருக்கும் மலேசியாவில் நாளும் ஒரு எந்திரன் ஸ்பெஷல். சிறப்பு போட்டிகள், இசைவெளியீட்டுக்கு இலவச டிக்கெட்டுகளை வெல்ல விளம்பர நிகழ்ச்சிகள் என ஸ்பான்ஸர்கள் பரபரப்பைக் கூட்டிய வண்ணம் உள்ளன.

இசைவெளியீடு நடக்க உள்ள புட்ரஜெயா இன்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டரில் டிக்கெட்டுகள் பரபரப்பாக விற்றுத் தீர்ந்துள்ளன.

இந்த நிகழ்ச்சிக்காக சன் பிக்ஸர்ஸுடன் கைகோர்த்துள்ள அஸ்ட்ரோ வானவில் நிறுவனம் நிகழ்ச்சியின் விளம்பரம் தொடர்பான அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுள்ளது.

எந்திரன் விளம்பர டிசைன்கள், புத்தம் புதிய ஸ்டில்கள் மற்றும் 5 அசத்தல் ட்ரெயிலர்களை இந்த நிறுவனத்தின் வசம் அளித்துள்ளது சன் பிக்சர்ஸ். இசை வெளியீட்டுக்கு முன்பாக இந்த விளம்பர ஸ்டில்கள் ஒவ்வொன்றாக வெளியாகி எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கப் போகின்றன.

இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க இந்தியாவின் முன்னணி கலைஞர்கள் மலேசியா வருகிறார்கள். அமிதாப் பச்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. அஜீத், சிம்பு உள்ளிட்டோரும் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்.

இந்த விழாவைத் தொகுத்து வழங்கப் போவது யார் தெரியுமா? அறிந்தும் அறியாமலும் என்ற படத்தைத் தயாரித்தாரே… அந்த புன்னகைப் பூ கீதாதான்!



மலேசியாவில் இவர் நம்பர் ஒன் தொகுப்பாளினி. இவரது குரலின் வசீகரத்துக்காகக் கொடுக்கப்பட்ட பட்டம்தான் ‘புன்னகைப் பூ கீதா’.

விழா நிகழ்ச்சிகள் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அவ்வப்போது டிஸ்கஸ் செய்யும் ஷங்கர் இந்த விஷயத்தை அவரிடம் சொல்ல, ‘அந்த பொண்ணா குட் குட்..’ என்று பச்சைக் கொடி காட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார்.

விழாவுக்காக ஜூலை 30-ம் தேதி மலேசியா புறப்படுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

மேலும் எந்திரன் செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்... 

நன்றி : என்வழி

No comments:

Post a Comment