பிரபல தமிழ் வில்லன் நடிகரான பிரகாஷ்ராஜிற்கும், அவரது நீண்ட நாள் காதலியான பாலிவுட்டின் டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவுக்கும் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறுகிறது என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரகாஷ்ராஜ் போனிவர்மாவை கைப்பிடிப்பதற்காகவே தான் காதலித்து மணந்த நடிகை லலிதகுமாரியை சமீபத்தில்தான் முறைப்படி விவாகரத்து செய்தார்.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...
இந்த செய்தி எனது மனதை வெகுவாக பாதிக்கிறது. ஏனென்றால் நடிகர்களில் எனது மனம் கவர்ந்தவர் திரு.பிரகாஷ்ராஜ் மட்டுமே. மறுமணம் என்ற பழக்கம் சினிமாத்துறையினரிடம் சர்வ சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. மக்கள் சினிமா துறையினரையே தனது ரோல்மாடலாக நினைத்து வாழும் இழிவான நிலை பெறுகிவரும் நிலை உறுவாகியுள்ளது. இந்த நிலையில் சினிமாத்துறையின் பொது வாழ்க்கையிலும் ஒழுங்கு முறையினை பின்பற்றினால் நன்றாக இருக்கும். மனைவி என்ற ஒருத்தி நம் வாழ்வில் மனதிலும் உடலிலும் நிறைந்த ஒரு உன்னத சொந்தம். இதனை மற்றவர்பால் கொண்ட காமத்தினால் கைவிடுவதென்பது சற்றும் மனிதத்தன்மையற்ற செயல். இதனைப் போன்றவர்கள் குறங்கு மனம் கொண்டவர்கள். சிறிது காலம் சென்ற பிறகு மற்றோருவர் மீது தாவாது என்பது என்ன நிச்சயம். வெளி அழகு என்பது மாறக்கூடியது. தனது மனைவி தன்னை திருமணத்திற்கு பிறகு எப்படி கவணித்துக்கொண்டால் என்று நினைத்தால் மற்றவர்களைப்பற்றிய நினைப்பு எப்படி வரும்?. பிரகாஷ் அண்ணனைப் போன்றவர்கள் சற்று சிந்தியுங்கள்.
ReplyDelete