Saturday, July 10, 2010

உலகக்கிண்ண உதைபந்தாட்டம்; தங்கக் கிண்ணமும் 30 மில்லியன் அமெரிக்க டொலரும் யாருக்கு?















தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டி நாளை இடம்பெறும்.

இதில் ஸ்பெயின் - நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன.

இதேவேளை மூன்றாவது அணியைத் தெரிவு செய்யும் அணிக்கான போட்டி இன்று உருகுவே - ஜெர்மன் அணிகள் மோதவுள்ளன.

இதேவேளை உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்கு உத்தியோகபூர்வ பாடலைப்பாடிய கொலம்பிய பாடகி சஹிரா இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்காவில் கடந்த ஜுன் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமான போட்டி இறுதிப் போட்டியுடன் நிறைவு பெறவுள்ளது. ஒரு மாதகாலம் நடைபெற்ற இப்போட்டியில் கிண்ணத்தை சுவீகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பல அணிகள் மண் கவ்வின. எதிர்பார்க்காத இரு அணிகள் களத்தில் மோதுகின்றன.

ஸ்பெயின் அணி நடப்பு ஐரோப்பிய கிண்ண சம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு கிண்ணத்துடன் 30 மில்லியன் அமெரிக்க டொலரும், இரண்டாமிடம் பெறும் அணிக்கு 24 மில்லியன் அமெரிக்க டொலரும், மூன்றாம், 4 ஆம் இடம்பெறும் அணிக்கு முறையே 20, 18 மில்லியன் அமெரிக்க டொலரும் பரிசாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு...

No comments:

Post a Comment