Friday, July 2, 2010
யார் விரும்பினாலும் அரசியலுக்கு வரலாம்... கருணாசின் கலக்கல் பேட்டி
மேடைப் பாடகர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், நகைச்சுவை நடிகர், விநியோகஸ்தர், கதாநாயகன் எனப் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்திய கருணாஸின் தற்போதைய அவதாரம் - தயா ரிப்பாளர்.
"திண்டுக்கல் சாரதி` வெற்றிப் படத்துக்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடிக்கும் "அம்பாசமுத்திரம் அம்பானி` படத்தை அவரே தயாரிக்கிறார். படத்தின் ரிலீஸ் வேலைகளில் மும்முரமாக இருந்த கருணாஸச் சந்தித்தபோது... பரபரப்பு ஏதுமின்றி இயல்பாகப் பேசினார். இனி கருணாஸ்...
இன்றைய சினிமாத்துறை இருக்கும் சூழ்நிலையில் பல பெரிய தயாரிப்பாளர்களே படம் எடுக்கத் தயங்கும்போது நீங்கள் எப்படி தயாரிப்புத் துறைக்கு வந்தீர்கள்?
கதை யின் மீது இருந்த நம்பிக்கைதான். "திண்டுக்கல் சாரதி` படத்துக்குப் பிறகு 15 கதைகள் கேட்டு இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தேன். இதை என் படங்களுக்கு காமெடி டிராக் எழுதும் ராம்நாத்.பி இயக்குகிறார். ஒரு சாமானியன் உழைப்பால் பெரிய மனிதனாவதுதான் கதை. கிட்டத்தட்ட என்னுடைய வாழ்க்கையையும் கதை பிரதிபலித்ததால் தைரியமாகப் படத்தைத் தயாரித்துள்ளேன்.
பதினைந்து வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தபோது... மோட்டார் பைக்கிலும் கார்களிலும் மக்கள், நின்று பேசக் கூட நேரமில்லாமல் பரபரப்பாகச் சென்றுகொண்டிருக்கிறார்களே - இவர்கள் எங்கு செல்கிறார்கள்? என்ன செய்வார்கள்? என அதிசயமாகவும் அதிர்ச்சியாகவும் பார்த்தேன். அப்படிப்பட்ட நான் இன்று இதே ஊரில் ஒரு தயாரிப்பாளர் ஆகிவிட்டேன் என்று நினைக்கும்போது ஏதோ சாதித்த திருப்தி ஏற்பட்டுள்ளதாக உணர்கிறேன்.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment