Monday, July 12, 2010

எந்திரன் படப்பிடிப்பு நிறைவடைந்தது : சங்கர்















எந்திரன் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு அந்த குழுவினருக்கு மறக்க முடியாத இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

படத்தின் பட்ஜெட்டைப் போலவே மிகப் பிரமாண்டமான கேக் ஒன்றை வரவழைத்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அதனை ரஜினி – ஐஸ்வர்யா ராயை வெட்ட வைத்து இறுதி நாளன்று பிரியா விடை கொடுத்தார்.

இயக்குநர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு உள்ளிட்ட கலைஞர்களுக்கு ரஜினி கேக் ஊட்டி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

இதுகுறித்து தனது இணையதளத்தில் ஷங்கர் இப்படிக் குறிப்பிடுகிறார்:

“எந்திரன் படப்பிடிப்பு கடந்த ஜூலை 7-ம் தேதியோடு நிறைவுக்கு வந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துப் பாடிய கடைசிப் பாடலுக்கு ரெமோ நடனம் அமைத்த, சன் ஸ்டுடியோஸில் படமாக்கினோம். அது ஒரு மிக மிக மகிழ்வான தருணம். என் வாழ்க்கையில் இந்தப் படத்துக்குத்தான் முதல் முறையாக கடைசி நாள் பூஜை (பூசணிக்காய் உடைக்கிறது) செய்தேன், நாயகன் ரஜினி, நாயகி ஐஸ்வர்யா ராயுடன்.

கிரிக்கெட் போட்டியின் இறுதி ஓவரில் வரும் உணர்வுதான் எல்லோருக்குமே! ஏதோ 2 வருட கல்லூரி வாழ்க்கையின் கடைசி தினங்களைப் போல மகிழ்ச்சியும், கனத்த மனதுமாக உண்ர்ந்தேன். எல்லோருக்கும் அதே உணர்வுதான் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஜூலை 9-ம் தேதி எந்திரன் குழுவுக்கு எங்கள் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பெரிய பார்ட்டி தந்தார். அதில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் பங்கேற்றார். ரஜினி சார், ஒளிப்பதிவாளர் ரத்தின வேலு, சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி, எடிட்டர் ஆன்டனி மற்றும் குழுவினருடன் நான் அந்த விருந்தில் பங்கேற்றேன்.

எந்திரன் படப்பிடிப்புத் தொடர்பான தகவல்கள், ஷூட்டிங்கில் நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் குறித்து கலாநிதி மாறனுடன் பகிரந்து கொண்டோம். மிக சந்தோஷமான நாள் அது.

இன்னொரு சந்தோஷ செய்தி…. நேற்றுதான் (ஞாயிறு) ஏ ஆர் ரஹ்மான் எந்திரன் தமிழ் பாடல்களின் மாஸ்டர் காப்பியின் இறுதி வடிவத்தை என்னிடம் தந்தார். கேட்டு விட்டு பரவசமடைந்தேன். ஒரு பிரமாண்ட படத்துக்கே உரிய கலக்கலான, துல்லியமான, அட்டகாசமான பாடல்கள். குறிப்பாக அந்த முதல் பாட்டு, ரஹ்மான் ஒரு ஆஸ்கர் வின்னர் என்பதை நிரூபித்துவிட்டது.

எங்கள் கூட்டணி உங்கள் எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன். இம்மாத இறுதியில் ஆடியோ ரிலீஸாகிறது!

-ஷங்கர்

மேலும் செய்திகளுக்கு...

No comments:

Post a Comment