Sunday, July 11, 2010

விஜய் தொடர்பான முடிவு – 13-ம் தேதி தியேட்டர் உரிமையாளர்கள் அவசரக் கூட்டம்















விஜய்யின் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருவதால், தியேட்டர்காரர்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தொடர்ந்து விஜய் படங்கள் ஓடாமல் இருப்பதால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வேட்டைக்காரன், சுறா படங்களால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இதற்கு அவர் நஷ்ட ஈடு தர வேண்டும். முன்பு ரஜினிகாந்த், மணிரத்தினம் ஆகியோர் இதுபோல நஷ்டஈடு தந்துள்ளனர் என்று தியேட்டர்காரர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக பஞ்சாயத்தும் பேசப்பட்டது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து வருகிற 13-ம் தேதி அவசர செயற்குழுக் கூட்டத்தை தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டியுள்ளனர்.

அக்கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுவதால் உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் மேலும் சினிமா செய்திகளுக்கு...

No comments:

Post a Comment