Saturday, July 10, 2010

'கருணாஸ் எப்பவும் எனக்கு அண்ணையா தான்' - 'அம்பாசமுத்திரம் அம்பானி' சங்கர்















`அம்பாசமுத்திரம் அம்பானி` படத்தில் கருணாஸ் கூடவே இருக்கும் சிறுவனாக நடித்து இருப்பவர் சங்கர். குழந்தை முகத்தையும், குறுகுறு பார்வையையும் வைத்துக்கொண்டு இவர் பல படங்களில் வடிவேலுடன் சேர்ந்து வால்தனம் பண்ணியவர். `அம்பாசமுத்திரம் அம்பானி` படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடையாளம் பெற்ற ஒரு நடிகராகி இருக்கிறார் இவர்.

இதுவரை காமெடியில் மட்டும் கலைகட்டிய சங்கர் `அம்பாசமுத்திரம் அம்பானி` படத்தில் சிறிது வில்லத்தனம், செண்டிமென்ட் என ஒரு புதிய பரிணாமத்தை எடுத்திருக்கிறார். இவரின் வருகைக்கு வாழ்த்துகளைக்கூறி நாம் பேசியபோது, சங்கர் நடிகரான கதையை நம்முடன் பகிர்ந்துக்கொண்டார்.

"எனக்கு 21 வயது சார். என் சொந்த ஊர் மதுரை, திருமங்கலம். அப்பா, அம்மா, ஒரு அக்கா என அளவான அழகான குடும்பம். கம்யூட்டர் டிப்ளோமோ முடித்துவிட்டு, பி.சி.ஏ பட்டப்படிப்பை அஞ்சல் வழியில் படித்துக்கொண்டிருக்கிறேன். பள்ளியில் படிக்கும்போது மேடை நாடகம், டான்ஸ் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுவேன். இந்த ஆர்வம் எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்..

No comments:

Post a Comment