Showing posts with label எந்திரன். Show all posts
Showing posts with label எந்திரன். Show all posts

Saturday, October 2, 2010

'அஞ்சானா அஞ்சானி' இந்திப்படத்தை ஓரங்கட்டிய எந்திரன்


‘எந்திரனின்’ பாக்ஸ் ஆபிஸ் வசூலினை பார்க்கும் எவருமே, ‘ஆ’வென வாயை பிளக்கின்றனர். செவ்வாய் அன்று வழக்கமாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளியிடப்படும் என்பதால், அனைவரும் செவ்வாய்க்கிழமைக்காக ஆவலுடன் காத்திருகின்றனர்.

அதே சமயம் ‘எந்திரனுக்கு’ மிகுந்த போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட, ‘அஞ்சானா அஞ்சானி’ என்ற இந்திப் படம், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ‘எந்திரனுக்கு’ எவ்வித போட்டியையும் அளிக்கவில்லை.

மேலும்...

தொடர்ந்து மூன்று தடவை "எந்திரன்" பார்த்த தனுஷ்


நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனுமான தனுஷ் எந்திரன் வெளியான முதல் நாளே அப்படத்தை மூன்று தடவைகள் பார்த்து தான் ஒரு தீவிர ரஜினி ரசிகன் தான் என்பதை நிரூபித்துள்ளார்.

மேலும்...

Tuesday, September 28, 2010

போட்டி அறிவிப்பு : இலவச "எந்திரன்" டிக்கட்டுகள்


accesskollywood இணையத்தளம்(http://www.accesskollywood.com/) தனது இணைய வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் "எந்திரன்" திரைப்படத்தின் இலவச டிக்கட்டுகளை வழங்க உள்ளது.

போட்டியில் பங்குபற்றி "எந்திரன்" திரைப்படத்திற்கான‌ இலவச டிக்கட்டுகளை பெறுங்கள்.

வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு சென்னை "PVR Cinemas" திரையரங்கில் "எந்திரன்" படத்தை காண்பதற்கான இலவச டிக்கட்டுகள் வழங்கப்படும்.

இந்தப் போட்டி சென்னை வாசிகளுக்கு மட்டுமே பொறுத்தமானது.

இது ஒன்றும் ஏமாற்று வித்தை இல்லை. நீங்கள் நம்பி போட்டியில் பங்கு பெறலாம்.

போட்டியில் பங்கு பெறுவத‌ற்கு இங்கே அழுத்தவும்....

இலவச "எந்திரன்" டிக்கட்டுகள் பெறுவதற்கான போட்டி அறிவிப்பு


accesskollywood இணையதளம்(http://www.accesskollywood.com/) தனது இணைய வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் "எந்திரன்" திரைப்படத்தின் இலவச டிக்கட்டுகளை வழங்க உள்ளது. போட்டியில் பங்குபற்றி "எந்திரன்" திரைப்படத்திற்கான‌ இலவச டிக்கட்டுகளை பெறுங்கள்.

வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு சென்னை "PVR Cinemas" திரையரங்கில் "எந்திரன்" படத்தை காண்பதற்கான இலவச டிக்கடுகள் வழங்கப்படும்.

இந்தப் போட்டி சென்னை வாசிகளுக்கு மட்டுமே பொறுத்தமானது.

போட்டியில் பங்கு பெறுவத‌ற்கு இங்கே அழுத்தவும்....

Friday, September 24, 2010

"எந்திரன்" நிச்சயம் ரஜினி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் : எடிட்டர் ஆண்டனி


கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப்படத்துக்காக வேலை செய்தவன் என்ற காரணத்தால் எனக்கு நிச்சயமாகத் தெரியும். எந்திரன் படம் ரஜினி ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாகவே அமையும்.

இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டும் சுமார் 4,000 உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஆண்டனி பேட்டியை முழுதாகப் படிக்க...

Thursday, September 23, 2010

இந்தியா வருகிறது "எந்திரன்" ரோபோட்


இதுவரை ஹாலிவுட் பட உலகுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த இந்த ஆன்ட்ரொய்ட் வகை ரோபோக்கள் எந்திரன் ப‌டத்தில் நடித்ததோடு மட்டுமில்லாமல் அப்படத்தை மேலும் விளம்பரப்படுத்தவும் பிரபலப்படுத்தவும் பயன்படும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க....

எந்திரன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்


எந்திரனுக்கு இந்திய திரையுலகில் கிடைத்திருக்கும் முக்கியத்துவம், சர்வதேச அளவிலான வெளியீடு, ஆடியோ விற்பனை சாதனை போன்றவற்றை மையமாக வைத்து, `இந்தியாவின் அவதார்` என வர்ணித்து சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியுள்ளது பிரபல டிவி சேனல். அதில் எந்திரன் மூலம் ரூ 1600 கோடிக்கும் மேல் வசூல் குவியும் என புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளனர்.

எந்திரன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் பார்க்க...

சென்னையில் ஒரு வாரம் நடக்கும் ‘ரஜினி திரைத் திருவிழா’!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அவரை கவுரவப் படுத்த கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் சினிமாஸ் ரஜினி திரைத் திருவிழாவை நடத்துகிறது.

இது தொடர்பாக ஏஜிஎஸ் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பு:

ரஜினிகாந்த்-

அறிமுகம் தேவையில்லாத அதிசயப் பிறவி அவர்.

இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார், தனது ஸ்டைல் மற்றும் வித்தியாசமான நடிப்பால் நான்கு தசாப்தங்களாக இந்திய சினிமாவில் ஆட்சி செலுத்தும் பாக்ஸ் ஆபீஸ் ‘பாட்ஷா’ !

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்..

Wednesday, August 4, 2010

எந்திரன் : புத்தம் புதிய படங்கள்


சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யா ராய் அகீயோர் நடிப்பில் வெளிவரக் காத்திருக்கும் எந்திரன் திரைப்படத்தின் கண்கவர் வண்ணப்படங்களின் புகைப்படத்தொகுப்பு. மொத்தம் 20 படங்கள். எளிதில் காணக்கிடைக்காத‌ புகைப்படங்கள் அவை. இங்கே அழுத்துவதன் மூலம் அவற்றை நீங்கள் காணலாம்

Tuesday, August 3, 2010

தெலுங்குப் படத்தயாரிப்பாளர்களை அலர வைக்கும் எந்திரன்

எந்திரன் படம் தெலுங்குப் படத்தயாரிப்பாளர்களை அலர வைக்கிறதா? அப்படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் அப்படத்தின்  தெலுங்கு உரிமையை 30 கோடி ரூபாக்களுக்கு குறைவாகக் கொடுப்பதில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

Monday, August 2, 2010

எந்திரன் படத்தின் உத்தியோகபூர்வ டிரைலர்

எந்திரன் படம் தொடர்பாக இதுவரை பல‌ டிரைலர்கள் வெளிவந்துள்ளன. அவை பல பாகங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. ஆனால் நீங்கள் இங்கே அழுத்துவதன் மூலம் உத்தியோகபூர்வ டிரைலரைக் காணலாம்.

Saturday, July 31, 2010

எந்திரன் திரைப்படத்தின் அசத்தல் டிரைலர்கள்


எந்திரன் படம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த டிரைலரும் வந்ததில்லை. மலேசியாவில் நேற்று ஆடியோ வெளியிடப்பட்டபோது டிரைலர்களும் சேர்த்தே வெளியிடப்பட்டது. அவற்றை நீங்கள் கீழே காணலாம்.



எந்திரன் படத்தின் கண்கவர் வால்பேப்பர்கள்


எந்திரன் திரைப்படத்தின் எமக்குக் கிடைத்த அட்டகாச ஸ்டில்களை நாங்கள் வண்ணமிகு வால்பேப்பர்களாக மாற்றியுள்ளோம். அவற்றைக் காண இங்கே அழுத்தவும். நீங்கள் அவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள‌லாம்.

Friday, July 30, 2010

எந்திரன்… புத்தம் புதிய அட்டகாச ஸ்டில்கள்!


பொழுதுபோக்கு சினிமாவின் உச்சம் என்று அனைவராலும் குறிப்பிடப்படும் எந்திரன் திரைப்படத்தின் அதிரடி ஸ்டில்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஸ்டில்லும் ரசிகர்களைப் புதிய பரவசத்துக்கு உள்ளாக்கும் வண்ணம் உள்ளன. எதிர்ப்ப்பார்ப்பு என்ற சொல்லின் உச்சத்தைத் தாண்டிய நிலையில் ரசிகர்கள் படத்துக்காக ஏங்கத் துவங்கியுள்ளனர்.

இன்று வெளியாகியுள்ள புகைப்படங்களில் ரோபோ சிங்கக் குட்டிகளைப் பிடித்துக் கொண்டு எந்திரன் ரஜினி கம்பீர நடைபோட்டு வரும் ஸ்டில் ஒன்று போதும்… ரசிகனின் நாடி நரம்புகளை முறுக்கேற்ற!

ரஜினிக்கு ஜோடியாக எப்பேர்ப்பட்ட உலக அழகி நடித்தாலும், ரசிகர்களுக்கு அது இரண்டாம்பட்சம்தான். ரஜினியின் தோற்றம், அவரது ஸ்டைல்தான் முக்கியம். எம்ஜிஆருக்குப் பிறகு, திரையில் ஒரு ஆணின் அழகு, கம்பீரம் பற்றி ஆண் ரசிகர்களே அதிசயத்துப் பேசுவது ரஜினி விஷயத்தில்தான்!

இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஐஸ்வர்யா ராய் தனது அழகிய தோற்றத்தில் ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக அசத்தியிருந்தாலும், வசீகரன் – எந்திரனின் கம்பீரம்தான் கண்களை நிறைக்கிறது!

புகைப்படங்களைக் காண இங்கே அழுத்தவும்...

எந்திரன் படத்தின் கதை?


எந்திரன் படத்தின் கதை அரசல் புரசலாக வெளியாகியுள்ளது. நமக்கு கிடைத்த தகவல்களின்படி விஞ்ஞானியான கலாநிதி ரஜினி தன்னைப் போலவே உருவ ஒற்றுமை உள்ள ஒரு இயந்திர மனிதனை(ரோபோவை) உருவாக்குகிறார். அந்த இயந்திர மனிதன் கொஞ்ச நாட்களில் சாதாரண மனிதனைப் போன்று பழக ஆரம்பித்து ஐஸ்வர்யாவைக் காதலிக்கிறது....

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்..

Thursday, July 29, 2010

எந்திரன்… முதல் அதிகாரப்பூர்வ விளம்பரம்!


எந்திரன் படம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளம்பரமும் வந்ததில்லை. இப்போதுதான் ஆடியோ வெளியீடு தொடர்பாக அனைத்து தமிழ், ஆங்கில நாளிதழ்களிலும் அசத்தலான, மிரட்டலான முதல் விளம்பரம் வந்துள்ளது.

ரஜினியின் ஸ்டில்லைப் போட்டு, படத்தின் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் இல்லாமல் வெறுமனே ‘இசை வெளியீடு 31.07.2010′ என்ற சின்ன அறிவிப்புடன் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. தலைவர் முகத்தைக் காட்டினாலே போதும்… அது என்ன படம், என்ன விவரம் என்று ரசிகர்களுக்குத் தெரிந்துவிடும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்!

நாளையும் நாளை மறுநாளும் இன்னும் விதவிதமான விளம்பரங்கள் வெளியாகக் கூடும்.

ரோபோ ரஜினி இடம்பெற்றுள்ள இந்த ஸ்டில்லைப் பார்க்கும்போதே இதன் சர்வதேசத் தரம் மற்றும் அசத்தல் உருவாக்கம் கண்முன் விரிகிறது.

அடுத்து நாளை எந்திரன் ஸ்பெஷல் ஸ்டில்கள் வெளியாகவிருக்கின்றன, தினகரனில். பிரிண்ட் ஆர்டர் இப்போதே எகிறிவிட்டதாம்!

Monday, July 26, 2010

"எந்திரன்" திரைப்படத்தின் அழகான "வால்பேப்பர்ஸ்"


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிப்பில் வெளியாகவிருக்கும் எந்திரன் திரைப்படத்தின் அழகான "வால்பேப்பர்ஸ்" ஐ இங்கே சொடுக்குவத‌ன் மூலம் நீங்கள் கண்டு மகிழலாம், தரவிறக்கம் செய்யலாம்.

Friday, July 23, 2010

"எந்திரன்" ரஜினியின் எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் படத்தின் மிகச்சமீபத்திய வெளிவராத புகைப்படங்கள். படங்களில் ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் காணப்படுகின்றனர். அப்புகைப் படங்களை இங்கே சொடுக்கவத‌ன் மூலம் காணலாம்

Tuesday, July 20, 2010

எந்திரன் ரிலீசின் பின் ஆறு மாதம் ஓய்வு; ரஜினி முடிவு

கடந்த இரண்டு வருடங்களாக சங்கரின் எந்திரன் படத்தில் நடித்து வரும் ரஜினி அப்படத்தின் ரிலீசின் பின்னர் ஆறு மாத காலம் ஓய்வெடுக்கவுள்ளார்.

அதன் பின்னரே தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்.

மேலும் படிக்க...

Monday, July 12, 2010

எந்திரன் படப்பிடிப்பு நிறைவடைந்தது : சங்கர்















எந்திரன் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு அந்த குழுவினருக்கு மறக்க முடியாத இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

படத்தின் பட்ஜெட்டைப் போலவே மிகப் பிரமாண்டமான கேக் ஒன்றை வரவழைத்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அதனை ரஜினி – ஐஸ்வர்யா ராயை வெட்ட வைத்து இறுதி நாளன்று பிரியா விடை கொடுத்தார்.

இயக்குநர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு உள்ளிட்ட கலைஞர்களுக்கு ரஜினி கேக் ஊட்டி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

இதுகுறித்து தனது இணையதளத்தில் ஷங்கர் இப்படிக் குறிப்பிடுகிறார்:

“எந்திரன் படப்பிடிப்பு கடந்த ஜூலை 7-ம் தேதியோடு நிறைவுக்கு வந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துப் பாடிய கடைசிப் பாடலுக்கு ரெமோ நடனம் அமைத்த, சன் ஸ்டுடியோஸில் படமாக்கினோம். அது ஒரு மிக மிக மகிழ்வான தருணம். என் வாழ்க்கையில் இந்தப் படத்துக்குத்தான் முதல் முறையாக கடைசி நாள் பூஜை (பூசணிக்காய் உடைக்கிறது) செய்தேன், நாயகன் ரஜினி, நாயகி ஐஸ்வர்யா ராயுடன்.

கிரிக்கெட் போட்டியின் இறுதி ஓவரில் வரும் உணர்வுதான் எல்லோருக்குமே! ஏதோ 2 வருட கல்லூரி வாழ்க்கையின் கடைசி தினங்களைப் போல மகிழ்ச்சியும், கனத்த மனதுமாக உண்ர்ந்தேன். எல்லோருக்கும் அதே உணர்வுதான் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஜூலை 9-ம் தேதி எந்திரன் குழுவுக்கு எங்கள் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பெரிய பார்ட்டி தந்தார். அதில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் பங்கேற்றார். ரஜினி சார், ஒளிப்பதிவாளர் ரத்தின வேலு, சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி, எடிட்டர் ஆன்டனி மற்றும் குழுவினருடன் நான் அந்த விருந்தில் பங்கேற்றேன்.

எந்திரன் படப்பிடிப்புத் தொடர்பான தகவல்கள், ஷூட்டிங்கில் நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் குறித்து கலாநிதி மாறனுடன் பகிரந்து கொண்டோம். மிக சந்தோஷமான நாள் அது.

இன்னொரு சந்தோஷ செய்தி…. நேற்றுதான் (ஞாயிறு) ஏ ஆர் ரஹ்மான் எந்திரன் தமிழ் பாடல்களின் மாஸ்டர் காப்பியின் இறுதி வடிவத்தை என்னிடம் தந்தார். கேட்டு விட்டு பரவசமடைந்தேன். ஒரு பிரமாண்ட படத்துக்கே உரிய கலக்கலான, துல்லியமான, அட்டகாசமான பாடல்கள். குறிப்பாக அந்த முதல் பாட்டு, ரஹ்மான் ஒரு ஆஸ்கர் வின்னர் என்பதை நிரூபித்துவிட்டது.

எங்கள் கூட்டணி உங்கள் எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன். இம்மாத இறுதியில் ஆடியோ ரிலீஸாகிறது!

-ஷங்கர்

மேலும் செய்திகளுக்கு...