Saturday, June 5, 2010
தியாகி சிவகுமாரன்
(பொன்னுத்துரை சிவகுமாரன்,
உரும்பிராய், யாழ்ப்பாணம்,
26/08/1950 - 05/06/1974)
யாழ் மாவட்டம் உரும்பிராயை சேர்ந்த பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளுக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். அவர்களுக்கு மூன்றாவது மகவாக 1950ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26 அன்று ஒரு ஆண் குழந்தை பிறந்த போது அவர்கள் அப்பிள்ளைக்கு சிவகுமாரன் என்று வாஞ்சையோடு பெயர் வைத்தனர்.
உரும்பிராய் பகுதியானது தமிழர் விடுதலைப் போராட்டத்தோடு மிகவும் பிண்ணிப் பிணைந்த ஒரு பகுதி. பல புரட்சியாளர்களையும் போராளிகளையும் பல்வேறு விடுதலைப் போராட்டக் குழுக்களுக்கு தாராளமாக அள்ளி வழங்கிய ஒரு பிரதேசம் அது. ஆகவே அப்பகுதியில் பிறந்த சிவகுமாரன் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியாக மாறியதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை.
இவரது பெற்றோர் இருவரும் தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் மட்டுமல்லாது அதன் உறுப்பினர்களும் ஆவர். அதே போன்று தமிழர் விடுதலைக் கூட்டணியோடும் அவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது.
சிறு பராயத்திலிருந்தே அநீதிகளைக் கண்டு கொதித்தெழுகின்ற, அவற்றைத் தட்டிக்கேட்கின்ற இயல்புடையவராக இருந்தார் சிவகுமாரன்.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
Labels:
அரசியல்,
அனுபவம்,
ஈழம்,
தியாகி சிவகுமாரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment