Thursday, July 8, 2010

பாலிவுட்டுக்குள் நுழையும் விஜய்


ஏற்கனவே இரண்டு படங்களை இயக்கியுள்ள இயக்குனர் விஜய்யின் மூன்றாவது படமான மதராஸப்பட்டணம் இன்று வெளியாகிறது.

அதன் பின்னர் விஜய் பாலிவுட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறார்.


மேலும் படிக்க இங்கே அழுத்தவும்..

ஈழம், நேபாளம் - இரு மகத்தான போராட்டங்களின் படிப்பினைகள்















இந்திய நிலவியலரசியல் (Geopolitics) எல்லைக்குட்பட்ட இவ்விரு பகுதிகளிலும் இரு மகத்தான போராட்டங்கள் நடைபெற்றன. ஒன்று நேபாளத்தில் தேசிய சனநாயகத்திற்கான போராட்டம். மற்றொன்று ஈழத்தில் தேசிய விடுதலைக்கான போராட்டம். நம்மை சாட்சியாகக் கொண்டு நடைபெற்ற இப்போராட்டங்களில் நேபாளம் 250 ஆண்டுகளாக மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி வெற்றி கண்டது; ஈழம் சிங்கள இனவெறி அரச பயங்கரவாதத்திடம் வரலாறு காணாத தோல்வியைத் தழுவியது. இவ்விரண்டு வெற்றி தோல்விகளையும் நமது வெற்றி தோல்விகளாகக் கருதி படிப்பினைகளைப் பெறுவதே அவற்றின் விலைமதிப்பற்ற தியாகத்திற்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும். இரண்டையும் ஒப்பிடுவதற்கான ஒரே காரணம் அவை இந்திய விரிவாதிக்க அரசின் ஆதிக்க பரப்புக்குள் உள்ளன என்பதும் இந்திய அரசின் தலையீட்டால் அவை வெவ்வேறு முடிவுகளை எட்டியுள்ளன என்பதும்தான்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்..

செப் 3-ல் சௌந்தர்யா திருமணம்;வருகிறார் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்














ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா – அஸ்வின் குமார் திருமணத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி – தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடக்கவிருப்பதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், அவரது மனைவி ஜெயாபச்சன், மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது















கரும்புலிகள் என்பது தற்கொடைப்பிரிவைச்  சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப்  புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை  முன்னெடுக்கும் எல்லோருமே தன்னுடைய  அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு  எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர். இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சயனைட்  குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு  இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில்  எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை  பாதிப்படைய விடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள்  எத்தனையோ பேர்.

ஆனாலும் கரும்புலிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அரிதாக, மிக அரிதாக அவர்கள் தப்பி திரும்பி வரும் சந்தர்ப்பங்களும் உண்டு.

எப்படியிருந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பர். இப்படியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் முதலில் வீரச்சாவடைந்த கப்டன் மில்லரால் நடாத்தி முடிக்கப்பட்ட தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை பற்றி சற்றுப் பார்போம்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

Tuesday, July 6, 2010

இலங்கைக்கு சென்றதில் குற்றமெதுவுமில்லை; அசின் பதிலடி


அசின் என்று அறியப்படும் அசின் தொட்டும்கல் கேரளாவிலிருந்து தமிழுக்கு வந்து பிரபலமாகியவர். பின்னர் அமீர்கானுடன் சேர்ந்து இவர் நடித்த ஹிந்தி கஜினி சூப்பர் ஹிட்டாகியது. அதன் மூலம் அகில இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகையாக மாறினார் அசின்.

சிறீதேவிக்குப் பின் தென்னிந்தியாவிலிருந்து சென்று வெற்றிக் கொடி நாட்டிய நடிகை என்ற பெயர் பெற்றார்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

பிரகாஷ்ராஜ்-போனிவர்மா திருமணம் ஆகஸ்ட் 24-ல் நடக்கிறது..?















பிரபல தமிழ் வில்லன் நடிகரான பிரகாஷ்ராஜிற்கும், அவரது நீண்ட நாள் காதலியான பாலிவுட்டின் டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவுக்கும் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறுகிறது என்று  சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரகாஷ்ராஜ் போனிவர்மாவை கைப்பிடிப்பதற்காகவே தான் காதலித்து மணந்த நடிகை லலிதகுமாரியை சமீபத்தில்தான் முறைப்படி விவாகரத்து செய்தார்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

Monday, July 5, 2010

செப்டம்பர் 10ல் எந்திரன்?


தமிழ் சினிமா வரலாற்றில் மிக அதிக பட்ச செலவில் எடுக்கப்பட்ட படமான இயக்குனர் சங்கர் மற்றும் ரஜினியின் எந்திரன் படம் ரம்சான், விநாயக சதுர்த்தி வார விடுமுறை நாட்கள் வரும் செப்டம்பர் 10ல் ரிலீசாகும் எனத் தெரிய வருகிறது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

‘பக்கா’ ரஜினி படமாக உருவாகிறது சுல்தான்!















அனிமேஷன் படமாக எடுக்கப்பட்டு வந்த ரஜினிகாந்த்தின் சுல்தானை முழு நீள ரஜினி படமாக மாற்றியுள்ளனராம். இதனால் பட்ஜெட்டும் பல கோடிகள் கூடியுள்ளதாம்.

செளந்தர்யா ரஜினிகாந்த் தனது ஆக்கர் ஸ்டுடியோஸ் மூலமாக தயாரித்து வரும் அனி்மேஷன் படம்  சுல்தான். இப்படத்தை முழு நீள அனிமேஷன் படமாக எடுத்து வந்தார் செளந்தர்யா.

ஆனால் படம் முடிவடைவதாக தெரியவில்லை.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

அசினின் 'ரெடி' படத்துக்கு தமிழகத்தில் சிக்கல்?


சல்மான்கான் கதாநாயகனாக நடிக்கும் ‘ரெடி’ என்ற இந்தி படத்தில், அவருக்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடக்கிறது. அதில் கலந்துகொள்வதற்காக, அசின் இலங்கை சென்று இருக்கிறார்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

Friday, July 2, 2010

யார் விரும்பினா​லும் அரசிய​லுக்கு வர​லாம்...​ கருணாசின் கலக்கல் பேட்டி














மேடைப் பாடகர், பின்ன​ணிப் பாடகர், இசைய​மைப்பாளர், நகைச்​சுவை நடிகர், விநியோகஸ்தர், கதாநாயகன் எனப் பல்​வேறு பரிமாணங்களை வெளிப்ப​டுத்​திய கருணா​ஸின் தற்போ​தைய அவதாரம் -  தயா​ ரிப்பாளர்.
 
"திண்​டுக்கல் சாரதி` வெற்​றிப் படத்​துக்​குப் பிறகு அவர் கதாநாயக​னாக நடிக்​கும் "அம்பாச​முத்திரம் அம்​பானி` படத்தை அவரே தயா​ரிக்கி​றார். படத்​தின் ரிலீஸ் வேலைக​ளில் மும்முர​மாக இருந்த கருணாஸச் சந்​தித்த​போது... பரபரப்பு ஏது​மின்றி இயல்பாகப் பேசி​னார். இனி கரு​ணாஸ்...

இன்​றைய சினி​மாத்​துறை இருக்​கும் சூழ்நிலை​யில் பல பெரிய தயா​ரிப்பாளர்களே படம் எடுக்கத் தயங்​கும்​போது நீங்கள் எப்படி தயா​ரிப்​புத் துறைக்கு வந்​தீர்கள்?

கதை ​யின் மீது இருந்த நம்​பிக்கை​தான். "திண்​டுக்கல் சாரதி` படத்​துக்​குப் பிறகு 15 கதைகள் கேட்டு இந்தக் கதை​யைத் தேர்ந்தெ​டுத்​தேன். இதை என் படங்க​ளுக்கு காமெடி டிராக் எழு​தும் ராம்​நாத்.பி இயக்குகி​றார். ஒரு சாமானியன் உழைப்​பால் பெரிய மனிதனாவது​தான் கதை. கிட்டத்தட்ட என்னு​டைய வாழ்க்கையை​யும் கதை பிர​திப​லித்த​தால் தைரியமாகப் படத்​தைத் தயா​ரித்​துள்​ளேன்.

பதி​னைந்து வருடங்க​ளுக்கு முன்பு சென்​னைக்கு வந்த​போது... மோட்​டார் பைக்கி​லும் கார்களி​லும் மக்கள், நின்று பேசக் கூட நேர​மில்​லாமல் பரபரப்பாகச் சென்று​கொண்டி​ருக்கி​றார்களே - இவர்கள் எங்கு செல்கி​றார்கள்? என்ன செய்​வார்கள்? என அதிசயமாக​வும் அதிர்ச்சியாக​வும் பார்த்​தேன். அப்ப​டிப்பட்ட நான் இன்று இதே ஊரில் ஒரு தயா​ரிப்பாளர் ஆகி​விட்​டேன் என்று ​நினைக்​கும்​போது ஏதோ சாதித்த திருப்தி ஏற்பட்​டுள்ள​தாக உணர்கி​றேன்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

ரஜினியும் அஜீத்தும் சேர்ந்து நடிக்கவுள்ளனர்.


கன்னடப்படமான ஆப்தமித்ராவின் தமிழ் மொழி மாற்றப்படத்தில் ரஜினியும் அஜீத்தும் சேர்ந்து நடிக்கவுள்ளனர் என்பது இருவரது ரசிகர்களுக்குமே மிகவும் இனிப்பான செய்தியாகவிருக்கும் என்பதில் ஐயமில்லை.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

ஈழப் போராட்ட வரலாறு - 4: சூரியமால் இயக்கம்















கொழும்பு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சூரியமால் இயக்கம் மிகப்பெரிய –புகழ்வாய்ந்த இயக்கமாக ‍ இடதுசாரி மாணவர்கள் முன்னெடுத்த முதலாவது பெரிய இயக்கமாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்து இராணுவத்தில் காயமுற்றவர்கள் மற்றும் இறந்தோர் குடும்பங்களுக்கு உதவும் முகமாக பொப்பி நிதியம்(Poppy fund) என்ற நிதியம் உருவாக்கப்பட்டு வருடா வருடம் நிதி சேகரிக்கப்பட்டு வந்தது.

பொப்பி மலரை விற்று நிதி சேகரிக்கப்பட்டதால் பொப்பி நிதியம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இச்சேமிப்புக்கு அக்காலத்தில் உலகிலேயே அதிகளவு பணத்தை இலங்கை வழங்கி வந்தது. மாணவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக சூரிய காந்தி மலரை விற்று வறிய மக்களுக்கு நிதி சேகரிக்கும் முறையை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் சேர்க்கப்பட்ட பணம் வறுமையில் வாடிய மக்களுக்கு உதவவும் அவர்தம் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கும் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சூரிய காந்தி இயக்கம் (சூரிய காந்தி சிங்களத்தில் சூரியமால் என்றழைக்கப்பட்டது) வேகமாகப் பற்றிப் பரவியது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

Thursday, July 1, 2010

இலங்கை பாராளுமன்றத்தில் தூங்கி வழிந்த அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள்















பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் தூங்குவது தொடர்பில் சுவாரஸ்யமான விவாதமொன்று ஏற்பட்டதால் சபையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அரச, எதிர்க்கட்சித் தரப்பு உறுப்பினர்கள் பலர் தமது ஆசனங்களில் மெய்மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், பிரதியமைச்சர் டிலான் பெரேரா உரையாற்றிக் கொண்டிருந்த போது நன்றாக தூங்கிக் கொண்டிருந்த எதிர்க்கட்சி பிரதம கொறடா ஜோன் அமரதுங்க திடீரென எழுந்து அங்குமிங்கும் பார்த்து விட்டு ஏதோ சொல்வதற்கு எழுந்தார். அப்போது டிலான் பெரேரா நீங்கள் இப்போதுதான் தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளீர்கள். எனது பேச்சை முழுமையாகக் கேட்டிருக்க மாட்டீர்கள். அதனால் ஒன்றையும் கூறாதீர்கள் என்றார்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

விஜய் பற்றிய பத்து விடயங்கள்


இளைய தளபதி என்று அவரது ரசிகர்களாலும் சினிமா வட்டாரங்களிலும் அழைக்கப்படும் விஜய் பற்றிய பத்து சமாச்சாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

சாப்பாட்டு விசயத்தில் எந்த வரையறையும் விஜய் வைத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது, என்ன உணவு வழங்கப்படுகிறதோ அதை உட்கொள்ளும் வழக்கமுடையவர்.


மேலும் படிக்க இங்கே அழுத்தவும்..

ஈழப் போராட்ட வரலாறு – 3: இந்தியாவுக்கும் இலங்கைக்குமான வித்தியாசம்















மதவெறி பிடித்த மதத்தலைவர்கள் மதப்பிரச்சாரம் மூலமாக மக்களைத் திரட்டினாலும் பெரும் மக்கள் இயக்கத்தை வழிநடத்த முடியாதளவு குறுகிய பார்வை கொண்டவர்களாக இருந்தமையால் அவர்களின் செல்வாக்கு மங்கி, காலனியாதிக்கத்துக்கு எதிரான மதம்சார் இயக்கம் மடியத்தொடங்கியது. இவர்தம் வன்முறை நடவடிக்கைகளைக் காரணம் காட்டி காலனித்துவ ஆளும் வர்க்கம் இவர்களை இலகுவாக ஒடுக்கக் கூடியதாகவும் இருந்தது. இந்தியாவிலும் இந்துமதம் சார்ந்த குறுகிய அரசியல் செய்து வந்த இந்திய காங்கிரஸ் கட்சி பெரும் மக்கள் கட்சியாக வடிவெடுக்க முடியாமல் திணறியது. இதை மாற்றியமைத்தவர்களில் மகாத்மா காந்தி முக்கியமானவர். காங்கிரஸ் கட்சியை பெருமக்கள் இயக்கத்துக்கு தலைமை தாங்கும் கட்சியாக அகில இந்தியக் கட்சியாக மாற்றியமைக்க காந்தி உட்படப் பல புதிய காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு உத்திகளைக் கையாண்டனர்.

பிரித்தானியக் காலனியாதிக்கம் இத்தருணம் இந்தியாவில் எதிர்கொண்ட நெருக்கடியை இலங்கையில் எதிர்கொள்ளவில்லை. காந்தி இந்தியாவில் ஏற்படுத்திக் கொண்டிருந்த மாற்றத்தை ஒரு சொட்டும் காப்பியடிக்க வக்கற்ற நிலையிலேயே இலங்கை மதம்சார் உயர்வர்க்கம் இருந்தது. அவர்கள் பிரித்தானியக் காலனியாதிக்கத்தைச் சந்தோசமாக ஏற்றுக்கொண்டு தமது விசுவாசத்தைக் காட்ட முண்டியடித்தனர்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

இணையத்தளம் ஆரம்பித்த கரீனா கபூர்..!


இந்தி கவர்ச்சி நடிகை கரீனா கபூர் புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

ட்வீட்டரில் பிசியாக உள்ள பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மத்தியில், கரீனா கபூர் தனது புதிய அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கியுள்ளார். இதை தினசரி முடிந்தவரை அப்டேட் செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து கரீனா கூறுகையில், இது எனது சொந்த இணையதளம், எனக்கே எனக்கானது. ரசிகர்களுக்காக நிறைய செய்திகளை அதில் போடவுள்ளேன். எனக்கு ரசிகர்கள் நேரடியாக கருத்துக்களை எழுதும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளேன் என்றார் கரீனா.

கரீனா கபூரின் இணையதளத்தின் பெயர் இதுதான் - www.kareenakapoor.me

கரீனா குறித்த இன்னொரு செய்தி. சர்வதேச அளவில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா நடத்தும் பிரசாரக் குழுமத்தில் கரீனாவும் இணைந்துள்ளார். இந்தப் பட்டியலில் ஜெஸிகா ஆல்பா, கெவின் ஸ்பேஸி, மாட் டமோன், ஹில்லாரி கிளிண்டன் ஆகிய பிரபலங்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்......

டிவிட்டரில் இணைந்த அமீர் கான், இரண்டு மணி நேரத்தில் 47,019 விசிறிகள்


பாலிவுட் நடிகரான அமீர் கான் இன்று அதிகாரபூர்வமாக டிவிட்டரில் இணைந்தார்.

டிவிட்டரில் இணைந்த இரண்டு மணி நேரத்தில் அவர் 47,019 விசிறிகளை சம்பாதித்துக் கொண்டார். இது அமிதாப்பச்சனின் இரண்டு மணி நேர சாதனையைவிட அதிகமாகும்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்..

ஈழப் போராட்ட வரலாறு - 2: தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் வருகை















பிரித்தானிய ஏகாதிபத்தியம் ஏன் தோட்ட வேலைகளுக்காக இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து தொழிலாளர்களைக் – குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதியினரைக் கொண்டு சென்றார்கள் அல்லது அடிமைகளைப் போல கூட்டிச் சென்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ள பிரித்தானிய ஏகாதிபத்தியம் அக்காலப்பகுதியில் சந்திக்க நேர்ந்த நெருக்கடிகள் பற்றி நாம் சுருக்கமாகப் பார்த்தல் அவசியம்.

இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து கிடைத்த பெரும் இலாபம், ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தனது கட்டுப்பாட்டை அங்கே தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள மிக முக்கிய காரணமாக இருந்தது. உலகெங்கும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கிளர்ச்சிகள் வெடிக்கத் தொடங்கியிருந்த காலப் பகுதியது.

1789ல் வெடித்த பிரெஞ்சுப் புரட்சி நிலப்பிரபுத்துவ காலத்துக்கு முடிவுகட்டி உலகெங்கும் இருந்த அதிகார மையங்களுக்குப் பெருங் கிலியை உருவாக்கியது. வறிய பிரெஞ்சு மக்களும் சான் குளோட்டுகளும் (sans culottes) சம உரிமைகளைக் கோரி பிரெஞ்சு அரசை ஒரு உலுப்பு உலுப்பினர். பிரான்சில் வெடித்த புரட்சி பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஆட்சியின் கீழிருந்த கரீபியன் நாடுகளிலும் எதிரொலித்தது. மார்ட்டினிக், கோடலூப், டொபாகோ ஆகிய நாடுகளில் அடிமைகளாக வேலை வாங்கப்பட்ட ஆப்பிரிக்கர்களும் கலப்பினத்தவர்களும் கிளர்ச்சிகளில் இறங்கினர். விடுதலை, சகோதரத்துவம், சமத்துவம் (Liberty,Fraternity,Equality) என்ற பிரெஞ்சுப் புரட்சியின் முழக்கங்களாற் கவரப்பட்ட அடிமைத் தொழிலாளர்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். 1791ல் சென்.டொமினிக்கில் அடிமைகளின் புரட்சி வெடித்தது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

ஈழப் போராட்ட வரலாறு - 1















ஆயிரக்கணக்கில் தமிழ்பேசும் மக்களை இலங்கை இனவாத அரசு படுகொலை செய்ததைத் தொடர்ந்து உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் இளையோர் பலர் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைய முன்வந்துள்ளனர். இந்த போராட்ட உணர்வை தமக்கு சாதகமாகப் பாவித்து பலம்பெற முயற்சிக்கின்றன இந்திய-இலங்கை வலது சாரிக் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் பல. இது மீண்டும் ஒடுக்குமுறைக்கு எதிரான பலம்பொருந்திய சக்தி உருவாகுவதைத் தடுக்கும் முயற்சி. ஆனால் இதை நாம் ஒரு வசனத்திற் சொல்லி இளையோருக்குப் புரியவைத்துவிட முடியாது. அதிகாரம் சார்ந்து இயங்குபவர்களை சரியானபடி எதிர்கொள்ள நாம் பல்வேறு விவாதங்களை பொதுத் தளத்தில் நிகழ்த்தி போராட முன்வருபவர்களின் அறிதலை-தேடலை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

விஜய்யின் வேலாயுதம் படத்தை தொடக்கி வைக்கும் ஜாக்கி சாண்


தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஏற்கனவே தசாவதாரம் படத்தை ஜாக்கி சாண் மூலம் தொடங்கி வைத்தது நினைவிருக்கலாம்.

அவர் தற்போது விஜய்யை வைத்து தயாரிக்கும் வேலாயுதம் படத்தையும் ஜாக்கி சாண் தொடங்கி வைக்கிறார்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்..