Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Tuesday, September 28, 2010

போட்டி அறிவிப்பு : இலவச "எந்திரன்" டிக்கட்டுகள்


accesskollywood இணையத்தளம்(http://www.accesskollywood.com/) தனது இணைய வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் "எந்திரன்" திரைப்படத்தின் இலவச டிக்கட்டுகளை வழங்க உள்ளது.

போட்டியில் பங்குபற்றி "எந்திரன்" திரைப்படத்திற்கான‌ இலவச டிக்கட்டுகளை பெறுங்கள்.

வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு சென்னை "PVR Cinemas" திரையரங்கில் "எந்திரன்" படத்தை காண்பதற்கான இலவச டிக்கட்டுகள் வழங்கப்படும்.

இந்தப் போட்டி சென்னை வாசிகளுக்கு மட்டுமே பொறுத்தமானது.

இது ஒன்றும் ஏமாற்று வித்தை இல்லை. நீங்கள் நம்பி போட்டியில் பங்கு பெறலாம்.

போட்டியில் பங்கு பெறுவத‌ற்கு இங்கே அழுத்தவும்....

Friday, September 24, 2010

"எந்திரன்" நிச்சயம் ரஜினி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் : எடிட்டர் ஆண்டனி


கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப்படத்துக்காக வேலை செய்தவன் என்ற காரணத்தால் எனக்கு நிச்சயமாகத் தெரியும். எந்திரன் படம் ரஜினி ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாகவே அமையும்.

இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டும் சுமார் 4,000 உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஆண்டனி பேட்டியை முழுதாகப் படிக்க...

Thursday, September 23, 2010

சென்னையில் ஒரு வாரம் நடக்கும் ‘ரஜினி திரைத் திருவிழா’!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அவரை கவுரவப் படுத்த கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் சினிமாஸ் ரஜினி திரைத் திருவிழாவை நடத்துகிறது.

இது தொடர்பாக ஏஜிஎஸ் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பு:

ரஜினிகாந்த்-

அறிமுகம் தேவையில்லாத அதிசயப் பிறவி அவர்.

இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார், தனது ஸ்டைல் மற்றும் வித்தியாசமான நடிப்பால் நான்கு தசாப்தங்களாக இந்திய சினிமாவில் ஆட்சி செலுத்தும் பாக்ஸ் ஆபீஸ் ‘பாட்ஷா’ !

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்..

Monday, August 2, 2010

ஆன்லைன் விற்பனையில் சாதனை படைக்கும் எந்திரன் பாடல்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் பாடல்கள் வெளியான தினத்திலிருந்து ஆடியோ மார்க்கெட்டே கோலாகலமாக உள்ளது. 10 ரூபாய்க்கே எம்பி 3 சிடி கிடைக்கும் இன்றைய பைரஸி யுகத்தில் ரூ 125 கொடுத்து எந்திரன் ஒரிஜினல் சிடிக்களை வாங்கிச் செல்கின்றனர் மக்கள்.

இந்திய சினிமா சரித்திரத்தில் காணாத அளவு, விற்பனையில் பெரும் சாதனை படைத்து வருகின்றன எந்திரன் இசைத்தட்டுகள்.

அதேபோல ஆன்லைன் ஸ்டோர்களில் உலக அளவில் அதிகம் வாங்கப்பட்ட இசை எந்திரன்தான். இதனை ஆப்பிள் நிறுவனத்தின் ஐடியூன்ஸ் வெளியிட்டுள்ளது. இதுவரை எந்த தமிழ்-இந்திய படத்துக்கும் கிடைத்திராத சிறப்பு இது.

விபரமாகப் பார்க்க இங்கே அழுத்தவும்...

எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழாவின் அசத்தல் படங்கள்

மலேசியாவில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரம் மாலை 7.30 மணிக்கு நடைபெற்ற எந்திரன் ஆடியோ வெளியீட்டின்போது எடுக்கப்பட்ட அசத்தல் படங்களின் படத்தொகுப்பை இங்கே அழுத்துவதன் மூலம் நீங்கள் காணலாம்.

Saturday, July 31, 2010

மலேசியாவில் ரஜினி!


எந்திரன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு மலேசியா விமானநிலையத்தில் இறங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடன் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யாவும் வந்துள்ளனர்.

இயக்குநர் ஷங்கர் தனது குடும்பத்துடன் மலேசியா வந்துள்ளார்.

இந்திய திரை வரலாறு காணாத பிரமாண்ட முறையில் எந்திரன் இசை இன்று இரவு மலேசியாவில் வெளியாகிறது. இதில் பல இந்திய திரைப் பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.

ரஜினியின் வருகை மலேசிய தமிழ் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கெனவே இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் பெரும் விலைக்கு விற்றுத் தீர்ந்துள்ளன. மலேசியாவில் எந்திரன் ஆடியோ உரிமையை லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.

தமிழ் நாளிதழ்கள் இந்த நிகழ்வுக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்துள்ளன. மக்கள் ஓசை நாளிதழில் ரஜினியின் வருகைதான் முதல்பக்கச் செய்தி.

மேலும் சினிமா செய்திகளுக்கு..

விறு விறு விற்பனையில் எந்திரன் பாடல்கள்…


சொன்னது போலவே சனிக்கிழமை காலையே விற்பனைக்கு வந்துவிட்டது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் இசைத் தட்டுகள். இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் கடைகளில் கிடைத்தது எந்திரன் ஆடியோ சிடிக்கள்.

சர்வதேச அளவில் சனிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு பாடல் சிடிக்கள் விற்பனைக்கு கிடைக்கும் என திங்க் மியூசிக் அறிவித்துள்ளது.

சென்னையில் ரேடியோ மார்க்கெட் எனப்படும் ரிச்சி தெரு, பர்மா பஜார், தி நகர் மற்றும் வட பழனி பகுதிகளில் பெரும் வரவேற்புக்கிடையே எந்திரன் ஆடியோ சிடி விற்பனை துவங்கியது.

புற நகர் பகுதிகளில் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எந்திரன் ஆடியோ சிடிக்களை வாங்கிச் சென்றனர்.

திங்க் மியூசிக் வெளியிட்டு இந்த சிடியின் விலை ரூ. 125. மொத்தம் 7 பாடல்கள்.

பாடல்கல் அனைத்துமே கேட்ட மாத்திரத்தில் ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொள்ளும் ரகமாக அமைந்துள்ளன. குறிப்பாக ‘கிளிமாஞ்சாரோ…’ பாட்டு பட்டையைக் கிளப்ப ஆரம்பித்துள்ளது.

எந்திரன் பாடல் சிடியுடன், பாடல் வரிகள் அடங்கிய ஒரு அட்டகாச புக்லெட்டும் வெளியிடப்பட்டுள்ளது. பாடல் விமர்சனம் விரைவில்…

மேலும் சினிமா செய்திகளுக்கு..

Friday, July 30, 2010

எந்திரன்… புத்தம் புதிய அட்டகாச ஸ்டில்கள்!


பொழுதுபோக்கு சினிமாவின் உச்சம் என்று அனைவராலும் குறிப்பிடப்படும் எந்திரன் திரைப்படத்தின் அதிரடி ஸ்டில்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஸ்டில்லும் ரசிகர்களைப் புதிய பரவசத்துக்கு உள்ளாக்கும் வண்ணம் உள்ளன. எதிர்ப்ப்பார்ப்பு என்ற சொல்லின் உச்சத்தைத் தாண்டிய நிலையில் ரசிகர்கள் படத்துக்காக ஏங்கத் துவங்கியுள்ளனர்.

இன்று வெளியாகியுள்ள புகைப்படங்களில் ரோபோ சிங்கக் குட்டிகளைப் பிடித்துக் கொண்டு எந்திரன் ரஜினி கம்பீர நடைபோட்டு வரும் ஸ்டில் ஒன்று போதும்… ரசிகனின் நாடி நரம்புகளை முறுக்கேற்ற!

ரஜினிக்கு ஜோடியாக எப்பேர்ப்பட்ட உலக அழகி நடித்தாலும், ரசிகர்களுக்கு அது இரண்டாம்பட்சம்தான். ரஜினியின் தோற்றம், அவரது ஸ்டைல்தான் முக்கியம். எம்ஜிஆருக்குப் பிறகு, திரையில் ஒரு ஆணின் அழகு, கம்பீரம் பற்றி ஆண் ரசிகர்களே அதிசயத்துப் பேசுவது ரஜினி விஷயத்தில்தான்!

இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஐஸ்வர்யா ராய் தனது அழகிய தோற்றத்தில் ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக அசத்தியிருந்தாலும், வசீகரன் – எந்திரனின் கம்பீரம்தான் கண்களை நிறைக்கிறது!

புகைப்படங்களைக் காண இங்கே அழுத்தவும்...

எந்திரன் படத்தின் கதை?


எந்திரன் படத்தின் கதை அரசல் புரசலாக வெளியாகியுள்ளது. நமக்கு கிடைத்த தகவல்களின்படி விஞ்ஞானியான கலாநிதி ரஜினி தன்னைப் போலவே உருவ ஒற்றுமை உள்ள ஒரு இயந்திர மனிதனை(ரோபோவை) உருவாக்குகிறார். அந்த இயந்திர மனிதன் கொஞ்ச நாட்களில் சாதாரண மனிதனைப் போன்று பழக ஆரம்பித்து ஐஸ்வர்யாவைக் காதலிக்கிறது....

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்..

Thursday, July 29, 2010

எந்திரன்… முதல் அதிகாரப்பூர்வ விளம்பரம்!


எந்திரன் படம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளம்பரமும் வந்ததில்லை. இப்போதுதான் ஆடியோ வெளியீடு தொடர்பாக அனைத்து தமிழ், ஆங்கில நாளிதழ்களிலும் அசத்தலான, மிரட்டலான முதல் விளம்பரம் வந்துள்ளது.

ரஜினியின் ஸ்டில்லைப் போட்டு, படத்தின் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் இல்லாமல் வெறுமனே ‘இசை வெளியீடு 31.07.2010′ என்ற சின்ன அறிவிப்புடன் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. தலைவர் முகத்தைக் காட்டினாலே போதும்… அது என்ன படம், என்ன விவரம் என்று ரசிகர்களுக்குத் தெரிந்துவிடும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்!

நாளையும் நாளை மறுநாளும் இன்னும் விதவிதமான விளம்பரங்கள் வெளியாகக் கூடும்.

ரோபோ ரஜினி இடம்பெற்றுள்ள இந்த ஸ்டில்லைப் பார்க்கும்போதே இதன் சர்வதேசத் தரம் மற்றும் அசத்தல் உருவாக்கம் கண்முன் விரிகிறது.

அடுத்து நாளை எந்திரன் ஸ்பெஷல் ஸ்டில்கள் வெளியாகவிருக்கின்றன, தினகரனில். பிரிண்ட் ஆர்டர் இப்போதே எகிறிவிட்டதாம்!

Monday, July 26, 2010

எந்திரன் இசை வெளியீடு… மலேசியாவிலிருந்து நேரடி ஒளிபரப்பு!


வரும் 31-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மிகப் பிரமாண்ட விழாவில் எந்திரன் இசைத் தகடு வெளியாகவிருப்பது தெரிந்திருக்கும்.

கிட்டத்தட்ட இந்தியத் திரையுலகமே திரண்டு வரும் இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பகிறது சன் டிவியும் மலேசியாவின் அஸ்ட்ரோ வானவில் சேனலும்.

உலகம் முழுவதும் சன் நெட்வொர்க் தெரியும் அனைத்து நாடுகளிலும் இந்த நேரடி ஒளிபரப்பைக் கண்டு ரசிக்கலாம்.

இது தொடர்பில் அஸ்ட்ரோ வானவில் வெளியிட்டுள்ள விளம்பரம் இது.

முதல் முறையாக எந்திரன் (ரோபோ) ரஜினியின் ஸ்டில்லை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

ஆங்கிலத்தில் மேலும் எந்திரன் பற்றிய செய்திகளுக்கு..

Friday, July 23, 2010

"எந்திரன்" ரஜினியின் எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் படத்தின் மிகச்சமீபத்திய வெளிவராத புகைப்படங்கள். படங்களில் ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் காணப்படுகின்றனர். அப்புகைப் படங்களை இங்கே சொடுக்கவத‌ன் மூலம் காணலாம்

Tuesday, July 20, 2010

எந்திரன் ரிலீசின் பின் ஆறு மாதம் ஓய்வு; ரஜினி முடிவு

கடந்த இரண்டு வருடங்களாக சங்கரின் எந்திரன் படத்தில் நடித்து வரும் ரஜினி அப்படத்தின் ரிலீசின் பின்னர் ஆறு மாத காலம் ஓய்வெடுக்கவுள்ளார்.

அதன் பின்னரே தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்.

மேலும் படிக்க...

Thursday, July 8, 2010

செப் 3-ல் சௌந்தர்யா திருமணம்;வருகிறார் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்














ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா – அஸ்வின் குமார் திருமணத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி – தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடக்கவிருப்பதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், அவரது மனைவி ஜெயாபச்சன், மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

Monday, July 5, 2010

செப்டம்பர் 10ல் எந்திரன்?


தமிழ் சினிமா வரலாற்றில் மிக அதிக பட்ச செலவில் எடுக்கப்பட்ட படமான இயக்குனர் சங்கர் மற்றும் ரஜினியின் எந்திரன் படம் ரம்சான், விநாயக சதுர்த்தி வார விடுமுறை நாட்கள் வரும் செப்டம்பர் 10ல் ரிலீசாகும் எனத் தெரிய வருகிறது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

‘பக்கா’ ரஜினி படமாக உருவாகிறது சுல்தான்!















அனிமேஷன் படமாக எடுக்கப்பட்டு வந்த ரஜினிகாந்த்தின் சுல்தானை முழு நீள ரஜினி படமாக மாற்றியுள்ளனராம். இதனால் பட்ஜெட்டும் பல கோடிகள் கூடியுள்ளதாம்.

செளந்தர்யா ரஜினிகாந்த் தனது ஆக்கர் ஸ்டுடியோஸ் மூலமாக தயாரித்து வரும் அனி்மேஷன் படம்  சுல்தான். இப்படத்தை முழு நீள அனிமேஷன் படமாக எடுத்து வந்தார் செளந்தர்யா.

ஆனால் படம் முடிவடைவதாக தெரியவில்லை.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...

Friday, July 2, 2010

ரஜினியும் அஜீத்தும் சேர்ந்து நடிக்கவுள்ளனர்.


கன்னடப்படமான ஆப்தமித்ராவின் தமிழ் மொழி மாற்றப்படத்தில் ரஜினியும் அஜீத்தும் சேர்ந்து நடிக்கவுள்ளனர் என்பது இருவரது ரசிகர்களுக்குமே மிகவும் இனிப்பான செய்தியாகவிருக்கும் என்பதில் ஐயமில்லை.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்...