Tuesday, June 1, 2010

யுத்தத்தின் இறுதி மாதங்களில் நடந்தது என்ன? இந்திய மருத்துவர் கூறுகிறார்













யுத்தத்தின் இறுதி மாதங்களில் பொதுமக்கள் மத்தியில் அதிகளவு இழப்புகள் ஏற்பட்டதாக இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த ஒரு வருடத்தின் பின்னர் தமிழ் அகதிகளுக்கு சிகிச்சையளித்த இந்திய மருத்துவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

பொதுமக்கள் எவரும் இலக்கு வைத்துக் கொல்லப்படவில்லையென்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. மோதலின் இறுதிக்கட்டத்தில் 7 ஆயிரம் பொதுமக்கள் மரணமடைந்திருப்பதாக ஐ.நா. புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

முகாமை நாங்கள் சென்றடைந்தபோது நாங்கள் ஆயத்தமாக இருந்திருக்கவில்லை...(எதனை நாங்கள் பார்த்தோம் என்பது பற்றி)...அதிகளவிலான காயங்கள்... நீண்ட வரிசையில் மக்கள் என்று இந்தியாவிலிருந்து மருத்துவர் ஒருவர் இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

தன்னை அடையாளம் காட்டிக்கொள்வதில்லையென்ற நிபந்தனையின் பேரில் அவர் இதனைத் தெரிவித்ததாக இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment