Friday, June 4, 2010
ஈழ மண்ணின் கொலைக் களத்தில் கலை விழாவா?
இலங்கையின் மன்னார் பகுதியில் தோண்டத் தோண்டத் தமிழர்களின் பிணங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் அவை, முறையான விசாரணையைத் தொடங்குமானால், அங்கே நடைபெற்றுள்ள போர்க் குற்றங்களுக்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் கிடைக்கும்.
மற்ற சட்டங்களைப் போலல்லாமல், ஒரு நூற்றாண்டு காலம் ஆனாலும் போர்க்குற்றச் சட்டம் தூங்காது என்பர். அக்குற்றங்களை மெய்ப்பிப்பதற்கும், போர்க் குற்றவாளிகளான ராஜபக்சே சகோதரர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதற்கும் உரிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த உண்மைகளை உணர்ந்து கொண்ட சிங்கள இனவெறி அரசு, இப்போது இரண்டு செயல்களில் ஈடுபட்டுள்ளது. ஒன்று, தன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீசை வெளிநாடு களுக்கெல்லாம் அனுப்பித் தன் குற்றங்களை மறைக்க முயற்சி செய்வது. இன்னொன்று, கலாச்சார விழாக்களைப் பெருமளவுக்கு நடத்தி, தன் கோர முகத்துக்குக் கலை முகமூடி அணிந்து கொள்வது.
இரண்டாவது முயற்சிக்கான அடிப்படைதான், ஜுன் 2 - 4 தேதிகளில்,
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
Labels:
அரசியல்,
அனுபவம்,
இனப்படுகொலை,
கலை விழா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment