Friday, June 4, 2010
ஹிருத்திக் ரோஷனின் 'கைட்ஸ்' திரைப்படம் சென்னை திரையரங்குகளில் ரத்து
கடந்த மாதம் வெளியிடப்பட்டு சென்னையிலுள்ள ஐந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனின் புதிய திரைப்படமான "கைட்ஸ்"ன் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்றுவரும் ஐஃபா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அதேவேளை, தமது கடும் எதிர்ப்பையும் மீறி சிங்கள இனவாதத்திற்கு துணைபோகும் வண்ணம் கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்த எந்தப் படங்களையும் திரையிடக் கூடாது என்று நாம் தமிழர் இயக்கம் தமிழக திரையரங்க உரிமையாளர்களைக் கேட்டுக் கொண்டிருந்தது.
அதனை வலியுறுத்தி முதற்கட்டமாக சென்னை சத்யம் திரையரங்க உரிமையாளர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மனு கொடுக்கவும் முடிவு செய்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களையும் நடத்த முடிவு செய்துள்ளனர் நாம் தமிழர் இயக்கத் தொண்டர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment