சர்வதேச இந்தியத் திரைத்துறை அகாடமியான ஐஃபா விருது விழா இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஜூன் முதல் வாரம் நடக்க இருக்கிறது. இதைத் தமிழ்த் திரையுலகம் புறக்கணித்திருக்கிறது. இதற்குப் பின்னணியில் இருந்த முக்கியமானவர்களில் ஒருவர் கவிஞர் தாமரை. அது பற்றிய முழு விபரங்களை அறிய அவரைச் சந்தித்தோம்..!
கொழும்பு விழாவைக் கண்டித்து கடந்த 23-ம் தேதி கமலஹாசனின் அலுவலகம் முன்பு மே 17 இயக்கத்தினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். தமிழ்த் திரையுலகில் என்னதான் நடக்கிறது..?
தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரையில் இனப்படுகொலை செய்த சிங்கள அரசின் மீது கடும் கோபத்தில் இருக்கிறோம். தமிழீழத்தில் போர்க்குற்றத்தைச் செய்தவனைத் தண்டித்தே ஆக வேண்டும் என்ற நிலையில், அங்கு சர்வதேச இந்தியத் திரை விருது விழா நடத்துவதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.
பெப்ஸி தலைவர் குகநாதன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம.நாராயணன், நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோரிடமும் வெளிநாட்டில் இருந்து திரும்பிய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடமும் பேசினேன். அவர்களும் அதே உணர்வுடன் கூட்டம் நடத்தி கடுமையான வாசகங்களுடன் கண்டனத் தீர்மானம் இயற்றினர். அதோடு, வட இந்தியத் திரையுலகமும் இந்த விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என அவர்களுக்கு முறைப்படி கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
முற்றிலுமாக சிங்கள தேசத்தை புறக்கணிக்க வேண்டுமெனில் புதியத் தமிழ்ப் படங்களை கொழும்புக்கு அனுப்பவே கூடாது..! இதை தமிழ்த் திரையுலகம் எடுக்குமா..?
ReplyDelete