துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், மங்களூர் விமான நிலையத்தில் தரை இறங்கும்போது, ஓடு தளத்தில் நிலை தடுமாறி ஓடி விபத்திற்குள்ளானது.
உடனே விமானம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. விமானத்தில் 169 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் பலர் உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இக்கோரவிபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிகிறது.போயிங் 737 என்ற இந்த விமானம் 169 பயணிகள் மற்றும் சிப்பந்திகளைக் கொண்டிருந்தது.
விமானத்தில் நான்கு குழந்தைகளும் இருந்துள்ளனர். 9 பேர் வரையானோர் உயிர் பிழைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தலத்துக்கு விரைந்த 25 வரையான நோயாளர் காவு வண்டிகளும் தீயணைப்பு வண்டிகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
மேலதிக தகவல்கள் எதிபார்க்கப்படுகின்றன...
No comments:
Post a Comment