1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் நாளில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்தார். அன்று பிரபலமாயிருந்த இணுவில் மகப்பேற்று நிலையத்தில் இவர் அவதரித்தார்.
பிரபாவின் தாய் மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை தமிழரின் வரலாற்றை மாற்றப்போகும் அக்குழந்தைக்கு பிரபாகரன் என்னும் பெயரை இட்டார்.
1955 ஒக்டோபரில் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு வேலையின் நிமித்தம் மீண்டுமொருமுறை மட்டக்களப்பிற்கு மாற்றல் கிடைத்தது.
முன்னதாக இதே போன்றதொரு வேலை நிமித்தமான மாற்றலில் தான் 1953 செப்டெம்பரில் மட்டக்களப்பிலிருந்து அநுராதபுரத்துக்கு சென்றார்கள் அவர்கள்.
அநுராதபுரத்திற்கு மூன்று குழந்தைகளுடன் மாற்றலாகிச் சென்ற வேலுப்பிள்ளை தம்பதியினர் நான்காவது மழலைப் பிரபாகரனுடன் மீண்டும் மட்டக்களப்பிற்குத் திரும்பினர்.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment