ஐயா சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு,
வணக்கம். நான் விசயகுமார், அமீரகத்திலிருந்து எழுதுகிறேன். வயது- 30. பொருளாதாரக் காரணம் தமிழகத்தில் இருந்து அரபு நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்கிறேன்.
பெரியார் திடலில் ஆற்றிய தங்களின் உரையின் காணொளியினை குமுதம் தளத்தில் கண்டேன். கீற்று தளத்தில் விஜயகுமார் என்பவர் எழுதிய கட்டுரைக்கு சில மளுப்பல்களை சொல்லி இருந்தீர்கள். என் பெயரும் விசயகுமார்தான். கட்டுரையையும் காணொளியையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் எனக்கு ஏற்பட்ட வினாக்களை உங்களிடம் பகிர்கிறேன்.
நான் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 94 -95 காலகட்டம், ஈழம் என்றால் என்னவன்றே தெரியாத வயது. தினசரிகளில் தமிழ்த் திரைச்செய்திகள் வானொலிகளில் திரைப்பாடல்கள் மட்டுமே பார்க்கும் கேட்கும் இளைஞர்களில் நானும் ஒருவன். அன்று ஒருநாள் தவறி ஒரு அரசியல் செய்தியை பார்த்து விட்டேன்.
வைகோ-ஈழத்தமிழர்களுக்கு இரத்தம் கொடுத்தார் என்பதுதான் அந்தச் செய்தி. அப்பொழுது என்னுள் ஒரு கேள்வி எழுந்தது அது என்ன ஈழத்தமிழர்? பல பெரியவர்களிடம் வினவினேன் அதைப்பற்றி அவர்களுக்கு தெரியவில்லை, தெரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை. பின்பு விடுப்பு முடிந்து பள்ளி சென்றபோது விடுதிக் காப்பாளரிடம் வினவியபோது, அந்த மெத்தப்படித்த மேதாவி, ராமேசுவரத்திற்கு தெற்கே கடலுக்குள் உள்ள இலங்கையை பிரபாகரனும் இங்கிருந்து சென்ற பிழைப்பு தமிழர்களும் துண்டாடுகிறார்கள் என்று ஒரு தவறான தகவலை சொன்னார். மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment